ஞாயிறு, 16 ஜனவரி, 2011

ஹிஜ்ரா கமிட்டியின் இரட்டை வேடம் - 1
அஸ்ஸலாமு அலைக்கும்


பிறையை கணிப்பது எந்த அளவிற்கு குர் ஆன் , ஹதீசுக்கு எதிரானது என்பதையும், கணித்து முடிவு செய்யலாம் என்று வாதம் செய்வோரது வாதத்தில் எந்த அளவிற்கு ஆதாரங்கள் இல்லாமல் இருக்கின்றன என்பதையும் நாம் தொடர்ச்சியாக கண்டு வந்தோம்.

இதை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை தயாரிக்கும் இவ்வேளையில், எனது கவனத்திற்கு வந்த ஒரு நூலை பற்றி இங்கு அறிய தருகிறேன்.

"பிறை பார்த்தல் - ஒரு ஆய்வு"'
என்ற நூல்., ஏர்வாடி ஹிஜ்ரா கமிட்டியின் ஆதரவுடன், Er .அப்துஸ்ஸமத் அவர்களால் எழுதப்பட்ட ஒரு நூல்.

இந்த நூலில்பக்கம் 19 , 20 இல் எழுதப்பட்டிருப்பதை உங்கள் கவனத்திற்கு தருகிறேன்..

அதாவது, அந்த பாடத்தின் தலைப்பு : "கண்ணால் பார்த்தே முடிவெடுத்த காலமும் கணக்கிட திறனில்லா சூழலும்"

இதில், நாம் ஆதாரமாக வைத்திருந்த குறைப் ஹதீஸ், வாகனக்கூட்டம் ஹதீஸ், நீட்டப்படும் மாதங்கள் என்ற ஹதீஸ், ஆகிய ஹதீஸ்களை அவர்கள் எடுத்து வைத்து, விளக்கம் கொடுக்கிறார்கள்.

குறைப் ஹதீசுக்கு அவர்கள் கொடுத்த விளக்கம் பக்கம் 19 இல் இடம்பெற்றுள்ளது..!.

""பிறையை பார்த்தல் சம்மந்தமாக அன்றும் வேறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்தன என்பதை இந்த நபி மொழி விளக்குகிறது.
சிரியாவில் ஒரு நாளும் மதினாவில் பிறிதொரு நாளும் நோன்பு நோற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அது போல், சிரியாவில் ஒரு நாளும் மதினாவில் வேறொரு நாளும் நோன்பை முடித்து பெருநாள் கொண்டாடியிருக்கிறார்கள். ""
- பக்கம் 19 !

இது குறைப் ஹதீஸுக்கு அவர்கள் கொடுத்த விளக்கம்.


குறைப் ஹதீஸின் தமிழக்கத்தில் அவர்கள் எழுதியதை படிக்க வேண்டுமா?

அதே பக்கத்தில்..

""......... முஆவியா அவர்களும் பார்த்து நோன்பு வைத்தார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள், நாங்கள் சனிக்கிழமை இரவு தான் பார்த்தோம். எனவே நாங்கள் முப்பது நாட்களை நிறைவு செய்வது வரை அல்லது (ஷவ்வால் மாத)பிறையை பார்க்கும் வரை நோன்பு நோர்ப்போம்.................."

அடைப்புக்குறியில் அவர்கள் போடப்பட்டுள்ளது என்ன என்பதை கவனித்தீர்களா?

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் துவங்கி விட்டதா என்பதை முடிவு செய்ய, ஷவ்வால் மாதப்பிறையை தான் பாக்க வேண்டும், என்று அவர்கள் கூறுவதை பார்த்து விட்டீர்களா?
நம்மோடு விவாதிக்கும் போது என்ன சொன்னார்கள், என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று!


அடுத்து,

நீட்டப்படும் மாதங்கள் குறித்த ஹதீஸை இவர்கள் விளக்குவதை பாருங்கள்.."""மேலே எடுத்துரைக்கப்பட்ட நபி மொழிகள் யாவும், தலைப்பிறையை கண்ணால் நேரடியாக பார்த்தே மாததொடக்கதை கணிதுக்கொண்டார்கள் என்றே கூறுகின்றன என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. """"
பக்கம் 20

நம்மோடு நடந்த விவாதத்தின் போது இதை இவர்களால் ஒப்புக்கொள்ள இயன்றதா?
இதை அறிவித்தால் இவர்களால் தொடர்ந்து தனது கொள்கையை எடுத்து சென்று விவாதத்தை தொடர முடியாது என்பதால், இவர்களின் நயவஞ்சகத்தனத்தை இவர்களே அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

தொடர்ந்து இவர்களின் வண்டவாளங்கள் அனைத்தும் வெளிச்சம் போட்டுக்காட்டப்படும்..

மின்னஞ்சல் மூலமாக என்னோடு நடந்த விவாதத்தின் முழு தொகுப்பும் சில நாட்கள் கழித்து வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக