வியாழன், 20 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : (ரலி) என்று சொல்வது கட்டாயமா?ரஹ்மதுல்லாஹி அலைஹி என்று பெரியார்களின் பெயருக்கு பின்னால் சொல்ல வேண்டும் என்பது கட்டாய கடமை போல ஆகி விட்டது ஆக்கப்பட்டு விட்டது, பலரும் அர்த்தமே தெரியாமல் ஷாபி (ரஹ்) ,அபு ஹனீபா (ரஹ்) என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

அவர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும் என்கிற துஆ தான் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்கிற வாசகத்தின் அர்த்தம் எனும் போது இதை யாருடைய பெயருடனும் சொல்லலாம், யாருடனும் சொல்லாமலும் இருக்கலாம். 

இமாம்கள் பெயரை சொல்கிற போது இதை கூடவே சேர்த்து சொல்வது கட்டாயம் போல் ஆக்குவது வழிகேட்டுக்கு கொண்டு செல்லும் பித்அத் ஆகும். மார்க்கம் கட்டாயமாக்காததை கட்டாயம் ஆக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை !

இது போல் சஹாபாக்களின் பெயருடன் ரலியல்லாஹு அன்ஹு (ரலி) என்று சேர்த்து சொல்வதும் கட்டாயம் போல கருதப்படுகிறது. இதுவும் மார்க்கம் கட்டாயமாக்காத ஒரு காரியமாகும். சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என்கிற அளவோடு நிறுத்திக்கொள்வது தான் ஈமானுக்கு பாதுகாப்பானது.

- சகோ. பிஜே கேள்வி பதில் உரையிலிருந்து புரிந்தெடுத்தது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக