சனி, 22 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுமா?
அல் குர்ஆன் 2:102 வசனத்தில் அல்லாஹ் நாடாமல் இந்த சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்கிறான். 
இதன் மூலம், சூனியம் என்பது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கும் என்று நம்ப வேண்டும் என்று சிலர் வாதம் வைக்கிறார்கள்.

இது நுனிப்புல் மேய்வதால் வெளிப்படக்கூடிய சிந்தனை தான்.

அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூனியத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றால் சூனியம் என்கிற ஒன்றே இல்லை என்பதற்கு தான் அது சான்று !!!

சூனியம் என்பதே பொய், அது ஒரு கற்பனை, அதனால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாது என்கிற செய்தியை சொல்வதற்கு அல்லாஹ் அருளிய வசனத்தை எப்படி அல்லாஹ்விடமே திருப்பி விடுகிறார்கள் பாருங்கள் இவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக யுத்தம் செய்பவர்கள் அல்லாமல் வேறு யார்???

ஒரு உதாரணத்தை பார்ப்போமே. பூனை குறிக்கே சென்றால் சகுனம் சரியில்லை, அன்று உனக்கு ஏதேனும் துர்பாக்கியம் நிகழும் என்று ஒருவர் சொல்கிறார். அவருக்கு பதில் சொல்கிற நாம், அட முட்டாளே இப்படி எல்லாம் நம்பாதே, உனக்கு அல்லாஹ் நாடியதை தவிர வேறு எதுவும் யாராலும் செய்ய முடியாது என்று நம்பு.. என்று சொன்னால் இதன் பொருள் என்ன?

பூனை குறுக்கே செல்வதற்கும் உனக்கு துர்பாக்கியங்கள் நிகழ்வதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பொருளாகுமா?? அல்லது அல்லாஹ் நாடினால் பூனை குறிக்கே செல்வதன் மூலம் உனக்கு துர்பாக்கியம் ஏற்படும் என்று பொருளாகுமா???

அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் வாதம் வைப்பவர்கள் தான இந்த சூனியத்தை நம்பிய முஷ்ரிக்குகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

சரி, இது தான் இவர்கள் வாதம் என்றால், குர் ஆனில் வரக்கூடிய இன்னொரு வசனத்தை இதே போல இவர்கள் பொருள் செய்வார்களா??

அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். 'அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?' (6:80)

இந்த வசனத்தில், சிலை வணங்கிகள் இப்ராஹீம் நபியிடத்தில் தங்கள் சிலைகளை அவர்கள் உடைத்ததால் ஆத்திரப்பட்டு இந்த சிலை உமக்கு தீங்கு செய்யும் என்று கூறினார்கள். அதற்கு மறுப்பு சொன்ன இப்ராஹிம் நபி, இந்த சிலை ஒன்றும் எனக்கு தீங்கு செய்யாது, என் இறைவன் நாடினாலே தவிர எதுவும் எனக்கு தீங்கீழைக்காது என்று சொன்னார்கள்.

இந்த வசனத்தின் படி, சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அதனால் இப்ராகிம் நபிக்கு தீங்கிழைக்க முடியாது என்று இவர்கள் சொல்வார்களா? அல்லது அல்லாஹ் நாடினால் சிலைகள் இப்ராஹிம் நபிக்கு தீங்கு செய்யும், சிலைகளுக்கும் சக்தி உண்டு என்று பேசுகிற வசனம் இது என்று கூறுவார்களா??

ஆக, எந்த வகையிலும் சூனியம் என்பது மாய மந்திரங்கள் தான் என்பதற்கு இவர்கள் வைக்கும் வாதங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்பதை விளங்கலாம்.

2 கருத்துகள்:

  1. ஆஹா..ஆஹா..ஆஹா...என்னே ஆய்வு..என்னே ஆய்வுத்திறன். நடத்துங்கள் உங்கள் ஆய்வுகளை.

    பதிலளிநீக்கு
  2. நாஷித் அவர்களுக்கு: நீங்கள் ஆய்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். சிறிய கோரிக்கை: நீங்கள் கண்டுபிடிக்கும் Brandnew ஷிர்குகளை தய்வு கூர்ந்து ஆறுமாதத்திற்கு ஒருமுறை அல்லது குறந்த்தபட்சம் வருடாந்திர அப்டேட்ஸ்களாக தங்களது பிளாக்கில் வெளியிடவேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் (பி.கு: நீங்கள் கி.பி. 2010லேயே கண்டுபிடித்துவிட்ட ஷிர்க்கான கண் திருஷ்டி பற்றி இங்கு ஷார்ஜாவில் மஜாஸ் பகுதியில் வாழும் ததஜவினருக்கே தெரியாமல் இருந்தது. நான் தான் கண் திருஷ்டி ஷிர்க் என ததஜவின் அதிஉன்னத ஆய்வு முடிவை ததஜவினருக்கு தெரிவிக்க வேண்டி இருந்தது. அவர்களில் ததஜவின் ஒரு ”முன்னாள்” தெருமுனை பிரச்சாரகும் அடக்கம்). எனவே நிரந்த நரகத்தில் ஒருவரை வீழ்த்தி, முஷ்ரிக் என்ற நிலைக்கு தள்ளும் இது போன்ற கொடும் பாவங்களை தாங்கள் ஆய்வு/மறு ஆய்வு மூலம் கண்டுபிடிக்கும் போது தயைகூர்ந்து Please keep posted on the updates.

    பதிலளிநீக்கு