திங்கள், 24 ஜூன், 2013

கேள்விக்கு பிறந்த ஞான சூனியங்கள்
சில வருடங்களுக்கு முன்பு, தப்லீகில் ஊறிப்போன சகோதரர் ஒருவரிடம், இதுவெல்லாம் மார்க்கத்தில் இல்லாதது என்று விளக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு பதிலை சொன்னார் அவர்.
தப்லீக்கை நியாயப்படுத்தி எதையும் சொல்லி விட்டாரா?  நான் எடுத்து வைத்த வாதங்களுக்கு தக்க பதிலை சொல்லி விட்டாரா??
எதுவும் இல்லை அவர் சொன்ன பதில் " பிஜே முன்பு பீடி குடித்தார் தெரியுமா??? ""

இது உதாரணத்திற்கு நான் மேற்கோள் காட்டும் ஒரு உண்மை சம்பவம். எடுத்து வைக்கப்படும் வாதங்களுக்கு பதில் இல்லாத நிலை வரும் போது நாம் சார்ந்திருக்கும் இயக்கத்தையோ அதன் ஸ்தாபகர் சகோ. பிஜெவையோ விமர்சனம் செய்வது என்கிற போக்கு இது போன்ற பெயர்தாங்கி முஸ்லிம்களிடம் பெருமளவு காண முடிகிறது.

இதே நிலையை தான் சுய இன்பத்திற்கு வக்காலத்து வாங்கக்கூடிய சலபு கும்பலிடமும் காண முடிகிறது. நேரடியாக விவாதத்தில் சந்தித்து நம் வாதங்களுக்கு பதிலடி தருகிற முதுகெலும்பு அற்ற இந்த பேடிக்கும்பல், ஒளிந்திருந்து கொண்டு வழக்கம் போல் பிஜே காலை கழுவி குடித்து அதில் இன்பம் கண்டு வருகிறது. 
சுய இன்பத்தில் கிடைக்கும் ஆனந்தத்தை விட பிஜேவை கழுகி குடிப்பதினால் கிடைக்கும் இன்பம் சலபுகளுக்கு அதிகம் தான் போல..

சூனியத்தை நம்ப வேண்டும் என்றும் நம்ப கூடாது என்று சொல்கிற பிஜே ஒரு காபிர் என்றும் அவரது தரஜாவை உயர்த்துவதற்கு பாடுபடும் இந்த பேடிக்கும்பல், தாங்கள் நியாயபடுத்தி வரும் சூனியம் என்றால் உண்மையில் என்ன என்பதை தெளிவாக கூறுவதற்கு முக்கி மோதுகிறது என்பது தான் வேடிக்கை.

சமீபத்தில் இந்த கும்பலை சேர்ந்த ஒருவரிடம், சரி சூனியத்தை நம்பலாம், எந்த சூனியத்தை நம்ப வேண்டும் என்கிறீர்கள்?? சிலர் கை கால்களை கூட சூனியத்தால் முடமாக்க முடியும் என்கிறார்களே, அதை நம்பலாமா? என்று கேட்டதற்கு, இதற்கெல்லாம் எனக்கு விடை தெரியாது என்று வெளிப்படையாகவே (?) கூறி தமது அறிவாற்றலை வெளிக்காட்டினார்.

ஆக, சூனியத்தை நம்ப வேண்டும் என்று சொல்பவர்களிடம் சூனியத்திற்கான முழு அர்த்தம் தான் என்ன? அதன் பரிணாமங்கள் என்ன? எதையெல்லாம் செய்ய முடியும் எதையெல்லாம் செய்ய இயலாது என்கிற அனைத்து கோணங்களிலான விளக்கம் அறவே கிடையாது.
   
முன்னோர்கள் நம்பினார்கள், ஆகவே நாங்களும் நம்புகிறோம் என்று, எந்த கூட்டத்தின் தகுதிக்கு ஆடு மாடை அல்லாஹ் உதாரணத்திற்கு சொல்கிறானோ, அந்த உதாரண புருஷர்கள் நாங்கள் தான் என்று வெட்கமில்லாமல் கூறி திரிபவர்கள் தான் இவர்கள்.

அப்பன் பாட்டன்மார்கள் எதை நம்பினார்களோ அதையே நாங்களும் நம்புவோம், 
அதன் மூலம் பெரும் பாவத்தை மலக்குமார்கள் செய்தார்கள் என்று கூற வேண்டி வந்தாலும் பிரச்சனையில்லை, 
நபிகள் (நாயகம் ஸல்) அவர்கள் சில காலம் பைத்தியமாக இருந்தார்கள் என்று நம்ப வேண்டி வந்தாலும் பரவாயில்லை, 
அதன் மூலம் இந்த நபிக்கு யாராலும் சூனியம் செய்யவே முடியாது என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது அதையும் அனாயாசமாக மறுக்க வேண்டி வந்தாலும் பிரச்சனையில்லை, 
மூஸா நபிக்கு எதிராக எதிரிகள் செய்தவை அனைத்தும் வெறும் கபட நாடகம் எனவும் அவை பொய் எனவும சொன்ன அல்லாஹ்வின் வார்த்தைகளை காலால் மிதித்து, இல்லை எதிரிகளும் சில அற்புதங்களை தான் நிகழ்த்தி காட்டினார்கள் என்று நா கூசாமல் அல்லாஹ்வுக்கு எதிராக போர் செய்ய வேண்டி வந்தாலும் பரவாயில்லை, 
எங்களுக்கு எங்கள் மூதாதையர் தான் முக்கியம் என வெட்கமில்லாமல் அறிவிப்பும் செய்கிறது இந்த சல்லாப கூட்டம்.

மார்க்கத்தின் ஆணி வேரையே அசைத்து, நரக படுகுழிக்கு ஆயுத்தமாகி இருக்கும் இந்த கும்பலுக்கு, தங்கள் மீது தொடுக்கப்படும் கேள்விகள் எதையும் எதிர் கொள்ள திராணி இல்லது போவதால், பிஜேவை கழுவி குடிப்பது என்கிற உயரிய (?) பணியில் இறங்கி இருக்கிறார்கள். 
ஒன்றரை டன் மனித கழிவுகளை சுமக்க முடியுமா? நாங்கள் பிஜேவை விமர்சனம் செய்கிறோம் என்று யாராவது இந்த சல்லாபிகளிடம் முன் வந்தால், என்னது பிஜேவை விமர்சனம் செய்ய போகிறீர்களா?? ஒன்றரை டன் என்ன ஏழரை டன் கூட சுமப்போமே அதையும் ஓசியிலேயே சுமப்போமே என தங்களது கொள்கை உறுதியை காட்டும் வீரமிக்கவர்கள் தான் இந்த சல்லாபிகள்.

சூனியம் தொடர்பாக சில அரைவேகாட்டுதனமான கேள்விகளை இந்த கும்பல் முன் வைக்கிறது.. அவற்றை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

முதலில் இவர்கள் எடுத்து வைக்கும் கேள்வி.. நபியே தனக்கு சூனியம் வைக்கப்பட்டதை சொல்லி இருக்கும் போது இவர்கள் சூனியத்தை மறுத்தால் நபியின் சொல் பொய் என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று பொருள் வருகிறது என்கிற அறிவுப்பூர்வமான (??) வாதத்தை முன் வைக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த பைபிள் இறை வேதமா என்கிற விவாதத்தில், அது இறை வேதமில்லை என்பதற்கு நம் தரப்பில் அடுக்கடுக்கான சான்றுகள் முன் வைக்கப்பட்டன. அவற்றுக்கெல்லாம்  அசராத கிறிஸ்தவ கூட்டம், பைபிள் இறை வேதம் என்று பைபிளிலேயே வசனம் இருப்பதை பாருங்கள் என்று எடுத்துக்காட்டி மொத்த சபையையும் சிரிக்க வைத்தனர். 
அடேய்.. எந்த நூல் இறைவன் பேசியது இல்லை என்கிறோமோ அந்த நூலில் இது இறை வேதம் என்று எழுதி இருக்கிறது என்று எடுத்துக்காட்டுவது எந்த அறிவுக்காவது பொருந்துகிறதா? என்று நாம் திருப்பி கேட்டோம்.
இந்த சல்லாப ஞான சூனியங்களிடமும் இதே மெய் சிலிர்க்கும் ஞானத்தை தான் நாம் காண்கிறோம்.

எந்த ஹதீஸை இட்டுக்கட்டப்பட்டது, நபியின் பெயரால் பொய்யுரைக்கப்பட்டது என்று நாம் கூறுகிறோமோ அந்த ஹதீஸில் நபி சொல்கிறார்களாம், தமக்கு சூனியம் செய்யப்பட்டது என்று. 
இது போன்ற அறிவுசார் வாதங்களை ஊடகங்களில் எடுத்துக்கூறினால் நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பார்கள்.

இவர்கள் எழுப்பும் மற்றுமொரு வாதம்,  இந்த ஹதீஸை பதிவு செய்த புஹாரி இமாம் இணை வைத்தவர்களா? என்பதாகும். இதற்கும் பல முறை நாம் பதில் சொல்லியாகி விட்டது. 

புஹாரி இமாமும் மனிதர் தான் அவரும் கவனக்குறைவாக இருக்கத்தான் செய்வார். இதிலுள்ள் நுணுக்கமான தவறு அவருக்கு புலப்படாமல் இருந்திருக்கலாம், எப்படி காபாவின் மீது சத்தியமாக என்று சொல்லப்பட்டதில் உள்ள நுணுக்கமான தவறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டதோ அது போல..
இதை கூறுகையில் இவர்கள் இதற்கு பதிலாக, வஹி எப்போது இறங்குகிறதோ அப்போது முதல் தான் அந்த சட்டமே துவங்கும், இந்த இடத்தில, அந்த யூதன் மூலம் தான் அல்லாஹ் அது தவறு என்கிற அந்த சட்டத்தையே இறக்குகிறான்  ஆகவே இதற்கு முன் அவர்கள் அந்த ஷிர்க்கை அறியவில்லை என்று கூற கூடாது என்கிறார்கள்.

இதுவும் அரைவேக்காட்டுத்தனமான பதிலே. 
அந்த யூதன் மூலம் தான் அல்லாஹ் இந்த  முதன் முதலாக உணர்த்துகிறான் என்று இருக்குமானால், "நீங்களும் ஷிர்க் செய்து கொண்டு தானே இருக்கிறீர்கள்" என்று அந்த யூதன் கேட்கும்படி அல்லாஹ் செய்திருக்க மாட்டான். ஏனெனில், அதற்கு முன்பு தான் அது ஷிர்கே இல்லையே, அதுவரை ஷிர்கே இல்லாத ஒரு காரியத்தை முதன் முதலாக நபியிடம் சுட்டிக்காட்டும் போது இதுவரை நீங்கள் ஷிர்க் தானே செய்து வந்துள்ளீர்கள் என்று கூறும்படி அல்லாஹ் செய்ய மாட்டான், இது முதல் காரணம்.

இரண்டாவது அப்படியே அந்த யூதன், "நீங்களும் ஷிர்க் செய்து கொண்டு தானே இருக்கிறீர்கள்", என்று கூறினாலும், அதை கேட்ட நபி அவனது அந்த வாசகத்தை திருத்தி இருப்பார்கள். 
"உன் மூலமாக தான் இந்த சட்டமே எனக்கு வருகிறது, ஆகவே இது நாள் வரை நாங்கள் செய்தது தவறல்ல, ஆகவே நீங்களும் இவ்வளவு நாள் ஷிர்க் செய்து கொண்டு தானே இருந்தீர்கள் என்று சொல்லாதே" என்று விளக்கம் கொடுத்திருப்பார்கள்., கண்டித்திருப்பார்கள்.

இந்த இரண்டுமே நடக்காத போது அது நாள் வரை, அந்த யூதன் கூறிய அந்த நுணுக்கமான விஷயத்தை நபி அவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளார்கள் என்பது தான் உறுதியாகிறது. கவனக்குறைவுக்கு அப்பர்ப்பட்டவன் அல்லாஹ் மட்டும் தான். நபியும் பலகீனங்களை கொண்ட மனிதர் தான் என்பதற்கு இந்த சம்பவத்தை அல்லாஹ் சான்றாக நிற்க செய்கிறான்.

ஆக, இதிலும் இவர்களது நுனிப்புல் ஆய்வு வெளிப்படுகிறது.

அடுத்து, பிஜே சமீபத்தில் உம்ரா சென்ற போது அங்குள்ள இமாம் பின்னால் நின்று ஏன் தொழுதார்? என்கிற உலக மகா ஞானோதயத்தை கேள்வியாக வடிக்கிறார்கள். அதாவது, இவர்களை போல நுனிப்புல் மேய்பவர்களாக மற்றவர்களும் இருப்பார்கள் என்று எண்ணுவதால் தான் இது போன்ற ஞானோதய கேள்வி எழுகிறது..

சூனியத்தை நம்புவது எப்படி இணை வைப்போ அது போல, தர்கா மீது நம்பிக்கை வைப்பதும் அப்பட்டமான இணை வைப்பு தான். இதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். 
இப்போது, தர்காவிற்கு செல்பவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்றால் அதன் பொருள் என்ன?? வெளிப்படையாக ஒரு நபரை பற்றி இவர் தர்கா நம்பிக்கையாளர் என்று நமக்கு தெரியும் பட்சத்தில், அவர் தான் தொழுகையில் இமாமாக நிற்கிறார்  என்றும் தெரிகிற பட்சத்தில், அந்த தொழுகையை நாம் புறக்கணித்து தனியாக தொழ வேண்டும்.

இது தான் இணை வைப்பவர்களுக்கு பின்னால் நின்று தொழக்கூடாது என்பதன் அர்த்தமேயொழிய, ஒவ்வொரு இமாமையும் அழைத்து உங்கள் தர்கா நம்பிக்கை என்ன? இஸ்லாம் என்றால் என்ன என்று பேட்டி எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது பொருளல்ல!

நாம் பயணத்தில் இருப்போம், பேருந்து நிற்கும் இடத்தில பள்ளிவாசலை கண்டதும் தொழலாம் என்று செல்கிறோம், அங்கே ஒரு ஜமாஅத் நடந்து கொண்டிருந்தால் அதில் சேர்ந்து விட வேண்டும், இந்த இமாம் எப்படிப்பட்டவராக இருப்பார், ஒரு வேளை அந்த தர்க்காவில் இவரை பார்த்திருக்கிறோமோ, அன்று மொவ்லூத் வசூலுக்கு இவர் தான் வந்தாரோ?? என ஆய்வு செய்து கொண்டிருப்பது அந்த நேரத்தின் வேலையல்ல. 

மார்க்கத்தில் எதையுமே துருவி துருவி ஆராய வேண்டியதில்லை. அது போல, பிஜே சவுதிக்கோ குவைதிற்கோ சென்றார் என்றால் அங்குள்ள இமாம்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள், அவர்களது நம்பிக்கை என்னன்ன என்கிற ஆராய்சிகளை எல்லாம் செய்து கொண்டிருப்பது அவரது வேலையல்ல. 
பொதுவாக அனைவருமே சிஹ்ரை நம்புபவர்களாக அறியப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட இமாம், மனதளவில் அதை நம்பாதவராக கூட இருக்கலாம், அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரியும். இதை தொண்டு துருவிக்கொண்டிருப்பது உம்ராவிற்கு சென்று கடமையை முடிக்க நாடும் பிஜேவின் வேலையல்ல. 
தாம் யார் பின்னால் நின்று தொழ போகிறோமோ அவரை பற்றி ஏற்கனவே தனிப்பட்ட முறையில் பிஜேவிற்கு தெரிந்து, அவர் இணை வைக்ககூடியவர் என்றோ சூனியத்தை நம்பக்கூடியவர் என்றோ பிஜேவிற்கு ஏற்கனவே அறியும் பட்சத்தில், அப்போது அவர் பின்னால் நின்று தொழுவது கூடாது தான்.
இதை அறிய வேண்டியது பிஜேவின் வேலையல்ல. இதை புரிகிற சாதாரண அறிவும் இந்த சல்லாபிகளுக்கு இல்லாததால் இது போன்ற சப்பை கேள்விகள் இவர்கள் புறத்தில் இருந்து எழுகிறது. அல்லாஹ்வை போல எந்த குப்பனும் சுப்பனும் அற்புதம் செய்வான் என்று எப்போது ஒருவன் நம்பி விடுகிறானோ அந்த நிமிடமே அவன் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிற ஆடு மாடுகளாக ஆகி விடுகிறான். ஆடு மாடுகள் சிந்திக்காததில் ஆச்சர்யம் கொள்ள வேண்டியதில்லை.

 இந்த கும்பல் எழுப்பும் மற்றொரு கேள்வி, பிஜேவின் தமிழ் ஆய்வுகள் யாருக்கெல்லாம் சென்றடைந்ததோ அவர்கள் தொடர்ந்து சூனியத்தை நம்பி கொண்டிருப்பது தவறு, பிஜேவின் ஆய்வுகள் சென்றடையாத மற்ற மொழி வாசிகளுக்கு மறுமையில் கேள்வி கணக்கு இல்லை, இது என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள்.

இங்கே பிஜேவின் ஆய்வு சென்றடைந்ததா, தமிழ் தெரிந்தவர்களா இல்லையா என்பதல்ல பிரச்சனை. சூனியம் பற்றிய அந்த நுணுக்கமான செய்தி அந்த மக்களிடம் சென்றடைந்ததா இல்லையா என்பது தான் விஷயம். 

சூனியம் என்றல் உண்மையில் என்ன? அதன் ஆற்றல்கள் என்று சொல்லப்படுபவை என்ன? அதை நம்புவது எப்படி அல்லாஹ்வின் சிபத்துடன் மோதும் வகையில் உள்ளது என்பதை அறியாமல் பல்லாயிரக்கணக்கனோர் நபிக்கு சூனியம் செய்யப்பட்ட அந்த ஹதீஸை இன்று நம்புகிறார்கள். 

அவர்கள் எல்லாம் தர்காவிற்கு செல்வது போன்றதான பிழையை செய்யக்கூடியவர்கள் இல்லை. 

அந்த செய்தியை நம்பும் போது ஒரு நுணுக்கமான் பிழையையும் சேர்த்தே நம்புகிறோம் என்கிற விஷயம் அவர்கள் கவனத்திற்கு செல்லவில்லை என்பது தான் பிழை. 
இந்த பிழையை அல்லாஹ் பொறுக்ககூடியவன். அதே சமயம், அடேய் சூனியம் என்றால் இவர்கள் சொல்வது என்ன தெரியுமா? அதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும்  யார் வேண்டுமானாலும் வேறு யாரை வேண்டுமானாலும் எந்த புற சாதனமின்றி வீழ்த்தலாம், அவர்களது கை கால்களை முடமாக்கலாமாம் , இது அல்லாஹ்வின் தன்மையுடன் இனையாகிறது, இதற்கு எந்த இறை வசனமும் சான்றாக நிற்காது இப்படி நாம் நம்ப கூடாது என்று எடுத்து சொல்லப்பட்ட பிறகும் எவரெல்லாம் இந்த சல்லாப கும்பல் போல் முரண்டு பிடிக்கிறதோ, அப்போது, எதையுமே அறியாத நிலையில் சூனியம் பற்றி வருகிற ஹதீச நம்புகிற அந்த முஸ்லிமும் இவனும் எப்படி சமமாவான்?? 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் இருவரும் சமமேயல்ல. இங்கே பிஜே சொல்கிறாரா, தமிழ் தெரிந்த மக்களிடம் சொல்கிறாரா என்பது, இந்த பிரச்சனையின் ஆழத்தை குறித்து எந்த சிந்தனையையும் செலுத்த இயலாத குறைமதியாளர்களின் கேள்வியாகும்..

இன்னும் சொல்லப்போனால், இன்று சூனியம் என்பதை நம்ப கூடாது என்று பிஜே மட்டும் சொல்லவில்லை பிஜெவிற்கோ தவ்ஹீத் ஜமாதிற்கோ சம்மந்தமில்லாத மலையாளிகள் என்னிடம் சொல்லி நான் கேட்டிருக்கிறேன் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பேசி கேட்டிருக்கிறேன். 
அல்லாஹ் யார் மூலமும்  மக்களுக்கு ஹக்கை கொண்டு செல்வான். 

கொண்டு வரப்படும் செய்தியின் உள்ள நம்பகத்தன்மை என்ன? அதில் உள்ள உண்மைகள் என்ன என்பதை சிந்தித்து அதனடிப்படையில் முடிவு செய்வது தான் ஒரு மார்க்க பற்றுள்ளவனின் போக்காக இருக்க வேண்டுமே தவிர, இதை தமிழன் தானே சொல்கிறான், இவனது பேச்சுக்கள் சென்றடையாத மக்களின் நிலை என்ன? என்றெல்லாம் வறட்டு வாதம் பிடிக்க கூடாது.

இது போன்ற ஏளனக்காரர்கள் பற்றி அல்லாஹ் சொல்வதை கூறி இந்த ஆக்கத்தை நிறைவுக்கு கொண்டு வருகிறேன். அல்லாஹ், 16:34 வசனத்தில் கூறுவதை பாருங்கள்.

அவர்கள் செய்த தீமைகள் அவர்களைப் பிடித்தன. அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது (தண்டனை) அவர்களைச் சுற்றி வளைத்தது 

தமிழ் கண்டுபிடிப்பு, ஆங்கிலத்தில் எடுபடுமா சவுதியில் எடுபடுமா என்றெல்லாம் ஏளனம் பேசுபவர்களை நோக்கி அவர்கள் பேசுகிற ஏளனமே நாளை மறுமையில் அவர்களை சுற்றிக்கொள்ளும், சூழ்ந்து கொள்ளும், அந்த நொடிக்கு இவர்கள் அஞ்சட்டும். 

அந்த நேரத்தில் புஹாரி இமாம் ஷிர்க் வைத்தார்களா? ஹதீஸை  தவறு செய்து விட்டார்களா?  தமிழ் பேசக்கூடிய பிஜே சொல்லை கேட்க வேண்டுமா என்றெல்லாம் அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது.

எனது ஆற்றலை போல வேறு எவராலும் செய்ய முடியும் என்று நீ எப்படியடா நம்புவாய்?? என்று அல்லாஹ் கேட்கும் அந்த அதி பயங்கரமான கேள்விக்கும், அவனது கோபப்பார்வைக்கும் அஞ்சுகிறவர்கள் ஏளனத்தை விடுத்து சிந்தினையை செலுத்த வேண்டும்.

யாருடைய தயவும் பலனளிக்காத நாள் அது !!1 கருத்து: