செவ்வாய், 25 ஜூன், 2013

சூனியம் - சில கேள்விகள்


சூனியம் தொடர்பாக நாம் பல கேள்விகளை முன் வைக்கிறோம்.

1. சூனியத்தால் கை கால்களை முடமாக்க முடியுமா??

2. சூனியத்தின் அதிகபட்ச தாக்கம் / ஆற்றல் என்று குர்ஆன் என்ன கூறுகிறது?

3. சூனியத்தின் அதிகபட்ச தாக்கம் / ஆற்றல் என்று ஹதீஸ் என்ன கூறுகிறது?

4. ஹாரூத் மாரூத் மலக்கு இல்லை ஷைத்தான் தான் என்பதற்கு பிஜே தரும் விளக்கத்தில் உள்ள குறைகள், தவறுகள் என்னன்ன?

5. சூனியம் என்றால் என்ன என்பதற்கு நாங்கள் தரும் விளக்கத்திற்கும் நீங்கள் தரும் விளக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடாக நீங்கள் கருதுவது எதை??

6. அல்லாஹ்வின் உதவியுடன் சூனியம் செய்யலாம் என்று புரிய வேண்டும் என்றால், அல்லாஹ்வின் உதவியுடன் சிலைகளால் தீங்கு செய்ய முடியும் என்று இப்ராஹிம் நபி சொன்னார்கள் (6:80) என்றும் புரியலாமா? 

7. மூஸா நபியின் எதிரிகள் செய்ததும் சூனியம் தான்,  அதை பற்றி அல்லாஹ் பேசும் எல்லா இடங்களிலும் அது ஒரு கண் கட்டி வித்தை, அது பொய் என்று தானே சொல்கிறான்? நீங்களோ அவர்கள் செய்ததும் அற்புதம் என்று எப்படி சொல்கிறீர்கள்?

8. நான் உண்மையை கொண்டு வருகிறேன்,நீங்கள் அதை சூனியம் என்கிறீர்களா?? என்று மூஸா நபி 10:77 கேட்பதாக வசனம் சொல்கிறது. மூஸா நபி காட்டிய அற்புதம் உண்மை, அதை பொய் என்று மறுப்பதற்கு எதிரிகள் பயன்படுத்திய வார்த்தை சூனியம். அற்புதத்தை மறுப்பதற்கு தான் சூனியம் என்கிற வார்த்தை  பயன்படுதப்பட்டது என்று இருக்கும் போது, நீங்களோ சூனியம் என்றாலே அற்புதம் என்று எப்படி குர் ஆனுக்கு மாற்றமாக பேசுகிறீர்கள்??

9. நபிமார்களை ஷைத்தானால் தீண்ட முடியாது என்று 15:40 வசனம் கூறும் போது, அதற்கு எதிராக நபிக்கு சூனியம் செய்யப்பட்டது என்று எப்படி சொல்கிறீர்கள்.?

10. அப்படியே ஒரு வாதத்திற்கு நபிமார்களை ஷைத்தான் தீண்டுவான் என்றாலும் முஹம்மது நபிக்கு யாரும் சூனியம் செய்ய முடியாது என்று அல்லாஹ் தனியாக வேறு சொல்கிறானே (17:47,48), நீங்களோ, இந்த வசனத்தையும் பொய்யாக்குகிறீர்களே ??

11. சூனியம் என்றாலே அது அற்புதம் என்று இருக்குமானால், நபிமார்கள் அற்புதங்களை கொண்டு  போது  இது ஒரு சூனியம் (அற்புத செயல்) என்று எதிரிகள் சொல்வார்களா?

12. முகமது நபி (ஸல்) அவர்களுக்கு பைத்தியம் பிடிக்குமா?

13. அப்படியானால் இந்த வேதத்தை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதற்கு இந்த நம்பிக்கை முரணாக நிற்கிறதே?

14. நபிக்கு சீப்பிலும் முடியும் சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ் பல முரண்பாடுகளை கொண்டதாக இருக்கிறதே, இதை எப்படி முரணில்லாமல் புரிவது?

15. நபியை மறுப்பதற்கும் , அவர்களது நபித்துவத்தை மறுப்பதற்கும்  எதிரிகளுக்கு இந்த ஒரு சம்பவமே போதுமே ஆனால் ஏன் எவருமே இதை பெரிதுப்படுத்தவில்லை ? இது பற்றி எதிரிகள் வெளியே செய்தி பரப்பி முஹம்மது சூனியம் செய்யபட்டு படுத்து கிடக்கிறார், அவர் ஒரு பொய்யர், பைத்தியக்காரர் என்று இத்தனை காலமாக நாங்கள் சொல்லி வந்தது மெய்யாகி விட்டது பாருங்கள் என்று எவருமே பேசவில்லையே ஏன்? 


  இன்னும் ஏராளமான கேள்விகள் கைவசம் இருந்தாலும் அடிப்படையாக மேலே உள்ள 15 கேள்விகளை சூனியம் குறித்த கேள்விகளாக உங்கள் முன் வைக்கிறேன். 

இவற்றுக்கு நீங்கள் தரும் சப்பை கட்டுகள்  என்னவாக இருக்கும் என்பதெல்லாம் நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம் என்பதால் அத்தகைய சப்பை கட்டுகளையே வழக்கம் போல பதிலாக தராமல் ஆக்கப்பூர்வமான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக