வெள்ளி, 21 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : மத்ஹபில் உள்ள அசிங்கத்தை எடுத்து சொல்லக்கூடாதா?


மத்ஹபில் இன்னின்ன அசிங்கங்கள் உள்ளன என்று நாம் எடுத்துக்காட்டும் போது ஏன் பாய் கண்ணியக்குறைவாக பேசுறீங்க?? இஸ்லாம் அழகிய முறையில் பேச தானே சொல்கிறது? என்று நமக்கு அறிவுரை கூற புறப்படுகின்றனர் சிலர்.
கண்ணியமாக பேச வேண்டும் என்று குர்ஆன் கூறுவது, மத்ஹபில் உள்ள அசிங்கங்களை எடுத்துக்காட்டுவதை விட்டும் நம்மை தடுக்காது. 

இந்த நூலில் அசிங்கமாக எழுதப்பட்டுள்ளது பாருங்கள் என்று எடுத்துக்காட்டுவது, இஸ்லாம் கண்ணியமாக தான் பேச சொல்கிறது என்கிற சட்டத்தை மதிப்பதாக தான் ஆகும்.
நானே சுயமாக கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது தான் தவறே தவிர, ஒரு சமுதாயத்தை நரகத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் நம்பும் நூலில் உள்ள அபத்தங்களை எடுத்து சொல்வது குற்றமாகாது மட்டுமல்ல, அது தான் சரியான வழியும் கூட.

ஒருவர் தம் மனைவியிடம் பின் பக்கத்தில் இருந்தவாறு இல்லறத்தில் ஈடுபட்டால் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே 'உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். ஆகவே உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்!' என்ற (2:223வது) வசனம் இறங்கியது. அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 4528

இந்த ஹதீஸில் யூதர்களின் கருத்து தவறானது என்பதை அல்லாஹ் தனது திருமறையில் வசனம் இறக்கி மக்களுக்கு அறிவிக்கின்றான். இந்தச் செய்தி ஹதீஸ் நூற்களிலும் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் ஆபாசம் என்று கருதி இஸ்லாம் விட்டு விடவில்லை.

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 5:94)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக