புதன், 13 பிப்ரவரி, 2013

சங்கை ரித்வானும் "புறம்" நாடகமும்








அஸ்ஸலாமு அலைக்கும் 

அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மண்டல தலைவரை பற்றி இவர் வைத்துள்ள விமர்சனங்களை பற்றி சில விளக்கங்கள்.

சங்கை ரித்வான் என்கிற இவர், தமது முகநூல் பக்கத்தில் எழுப்பி வரும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன், 
முதலில் இவர் முகமத் ஷேக் செய்ததாக கூறுவது என்ன என்று பார்க்கையில், ஷேக் எழுதியதாக இவர் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட ஒரு செய்தி என்பதை புரியலாம்.

ரித்வானின் எழுத்துக்களை நியாயப்படுத்தி கமண்டுகள் இடுகிறவர்கள், பிரச்சனைகளை உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதற்கு முன், தர்க ரீதியில், சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த ஆள் ஏன் இப்படி பண்ணுகிறார்?
கண் பரிசோதனைக்கு ஒரு இணையதளம் இருக்கிறது அப்படின்னு ஒரு தகவல் கொடுக்க ஏன் இவ்வளவு பெரிய விளம்பரம்? ஒன்னுமே புரியவில்லை.. 

என்பது தான் ஷேக் எழுதியது. இவர் எழுதியது தவறா, என்பதை பற்றி பேசுவதற்கு முன், இவர் இதை எழுதியதற்கு தகுந்த மறுப்பை தான் ரித்வான் எழுதியுள்ளாரா? அல்லது மிகைப்படுத்தி இவரை விமர்சனம் செய்துள்ளாரா? என்பதை ஒவ்வொரும் சிந்தியுங்கள்.

ஷேக் புறம் பேசியுள்ளார் என்பதாக இவர் வைக்கும் குற்றச்சாட்டை அடுத்து விளக்குகிறேன். அதற்கு முன், 

புறம் பேசினார் என்பது தான் அவர் மீதான ரித்வானின் ஒரே குற்றச்சாட்டு என்றால் விமர்சனம் செய்கிற போது அதையல்லவா முதலில் எடுத்து சொல்லியிருக்க வேண்டும்?? ஷேக் செய்ததில் எது தவறு என்று இவர் நினைக்கிறாரோ, அதை சொல்லி விமர்சனங்களை வைத்திருந்தால் 
நியாயத்திற்காக நிற்பவராக இவரை கருதியிருக்கலாம். 

ஆனால் ஷேக் Facebook TNTJ வில் வைத்த விமர்சனத்திற்கு பதில் தரப்போவதாக சொல்லி எழுதியவர்,

நான் விளம்பர பிரியர் என்று எனது உள்ளதை அவர் அறிந்தாரா?
எனது பக்கத்தில் உள்ள நல்ல விஷயங்களை அவர என்றைக்காவது பாராட்டினாரா?
என்னை பற்றி பேச இவர் என்ன எனது தந்தையா அல்லது சகோதரனா?

என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, அதிகமாக கேள்விகள் எழுப்பி விமர்சனம் வைத்து விட்ட ஒரு தோரணையை காட்ட முயற்சிக்கிறார். 

இவர் கேள்விகளை இவர் பக்கமே நாம் திருப்பி கேட்கிறோம்.

1. ஆயிரக்கணக்கான நல்ல விஷயங்களை ஒருவர் செய்தால் அவர் செய்யும் தவறான விஷயங்களை சுட்டிகாட்ட கூடாது என்பது தான் இவரது நிலையா??

2. ஒருவரது தளத்தில் உறுப்பினராக இல்லாத எவரும் அவரது தளத்தை பற்றி விமர்சிக்க கூடாது என்பது இவரது நிலையா??

3. ரித்வான் விளம்பர பிரியர் என்று ஷேக் எங்கே சொன்னார்? அதற்கு என்ன ஆதாரம்?  
எதற்கு இந்த விளம்பரம் என்று கேட்பதும் இவர் ஒரு விளம்பர பிரியர் என்று சொல்வதும் ஒன்றா? சம்மந்தமில்லாதவற்றை இணைத்து பேசிய இவர் பொய் சொல்பவர் இல்லையா?

சரி, பிறரை விளம்பர பிரியர் என்று யார் சொன்னாலும் அப்படி சொன்னவரின் நியாயமான கூற்றையும் ஏற்க மாட்டேன் என்பது தான் இவரது நிலையா?

4. பிறரது தவறுகளை சுட்டிக்காட்ட அவரது மாமனாகவும் மச்சானாகவும், தந்தையாகவும் சகோதரனாகவும் தான் இருக்க வேண்டுமா? அப்படி எந்த உறவும் இல்லாத ஒருவர் மற்றவரை விமர்சிக்க கூடாது என்பது தான் இவரது நிலையா?


மேற்கண்ட கேள்விகளுக்கு இவர் தரப்பு பதிலை சொல்லி, ஆமாம் எனது நிலை அப்படிதான் என்று சொல்வாரானால், ஷேக் பற்றி இவர் அடுக்கிய கேள்விகளில் அர்த்தமிருக்கும். 
எந்த நிலைபாட்டை தான் கொள்ளவில்லையோ, அதை நியாயப்படுத்தி பேசுவது சந்தர்ப்பவாதம். அதை தான் ரித்வான் செய்கிறார்.

மேலும், சகோ. ஷேக் அந்த விமர்சனத்தை இவரது பக்கத்தில் பதியாமல் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் மட்டுமே உள்ள குழுமத்தில் பதிந்த விஷயம் இவருக்கு எப்படி தெரிந்தது என்பதை சிந்திக்கையில், அதில் கூட இவர் நாடகம் தான் ஆடுகிறார் என்பது தெரிகிறது. நானே அதை பார்த்தேன் என்று சொல்வதில் ஓன்று பொய் சொல்பவராக இருக்க வேண்டும், அல்லது வேறொரு நபர் உதவியுடன் இவர் உள்ளே நுழைந்து உளவு பார்த்திருக்க வேண்டும்.
இரண்டில் எதை செய்திருந்தாலும் இவர் உண்மைக்கு புறம்பானவர் என்று தெரிகிறது.

இவர் வைக்கும் கேள்விகளில் அர்த்தமுள்ள ஒரே கேள்வி என்பது, ஏன் தன்னிடம் சொல்லாமல் பொதுவில் தன்னை பற்றி விமர்சிக்க வேண்டும் என்பது தான்.

இந்த பிரச்சனைக்காக என்று இல்லை, பொதுவாகவே நாம் அனைவரும்  புறம் என்றால் என்ன என்பதை புரியாமல் போட்டு குழப்பிக் கொள்கிறோம்.

ஒருவரை பற்றிய குறையை வேறோருவரிடத்தில் சொல்வது புறம் என்பது பொதுவான சட்டம். 

ஆனால் அந்த பொதுவான சட்டத்தை வைத்து மட்டும் சிந்தித்தால் இஸ்லாத்தின் அனேக கடமைகளை நம்மால் செய்ய முடியாது, சுருங்க சொன்னால் நாம் முஸ்லிமாகவே இருக்க முடியாது.

ஒருவரது குறையை பற்றி இன்னொருவரிடத்தில் சொல்வது அனைத்துமே புறம் என்றால் நம்மால் மார்க்க பயான்கள் செய்ய இயலாது, நன்மைகளை ஏவி தீமையை தடுப்பது தான் சிறந்த அறம் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையை பேண முடியாது, சமுதயத்திற்காக குரல் கொடுக்க முடியாது, தவறுகளை தட்டி கேட்க முடியாது, வியாபாரம் செய்ய இயலாது, கொடுக்கல் வாங்கல், திருமணங்கள் செய்ய முடியாது, சுருங்க சொன்னால் அடிப்படை முஸ்லிமாக வாழ கூட முடியாது.

அதே சமயம், ஒருவரது குறையை பிறரிடம் சொல்லாதீர்கள் என்று சட்டமும் இஸ்லாமிய சட்டம் தான், அதையும் பின்பற்றத்தான் வேண்டும்.

இப்போது இந்த வேறுபாட்டை எப்படி புரிய வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வாங்குவதற்காக அனுப்பிய ஒரு சஹாபி, தவறான ஒரு நிலையை கொண்டிருக்கிறார் என்பதற்காக, அவர் செய்த தவறை அவருக்கு மட்டும் உணர்த்தாமல், சமுதாயம் முழுவதையும் அழைத்து வெளிக்காட்டினார்கள்.
இது புறம் என்று நாம் சொல்வது கிடையாது.

கடைதெருவில் இருந்த திருடனை பிறருக்கு எச்சரிப்பதற்கு அவனை சுட்டிக்காட்டி பிறரிடம் சொன்னார்கள், இதை புறம் என்று நாம் யாரும் சொல்ல மாட்டோம். 

ஒரு சஹாபிய பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்ள இரு சஹாபிகள் விருப்பம் தெரிவிக்கிறார்கள், என்ன செய்வது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கும் போது, அந்த இருவரிடம் இருந்த சிறு சிறு குறைகளை இந்த பெண்ணிடம் நபி அவர்கள் சுட்டிக்காட்டியதாக ஹதீஸ்கள் உள்ளன.  நபி (ஸல்) அவர்கள் புறம் பேசி விட்டார்கள் என்றா நாம் சொல்வோம்? நிச்சயமாக இல்லை.

ஆக, ஒருவரது குறையை இன்னொருவரிடம் சொல்வது ஒன்றே புறம் என்பதற்கான அளவுகோல் கிடையாது, மாறாக, சொல்லப்பட்டவரின் நோக்கம் தான் பிரதானம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ்கள் சான்று.

சங்கை ரித்வான் என்பது ஒரு தனி நபராக இருந்து, அவர் புகை பிடித்தார், மது அருந்தினார் என்கிற விஷயங்களை ஷேக் வேறு நபர்களிடம் சொன்னால், அந்த செய்தி பொய் என்றால் அது அவதூறு என்றோ உண்மை என்றால் புறம் என்றோ கருதப்படும்.

புறம் என்று இஸ்லாம் சொல்கிற எல்லா சட்டங்களுமே இந்த வகை புறத்தை தான் சொல்கின்றன. 

ஆனால் இங்கு பேசப்படுவது என்பது சங்கை ரித்வான் என்கிற தனி மனிதரின் தனிப்பட்ட செயல்களை குறித்ததல்ல. 

இது ஒரு குழுவை பற்றிய விஷயம். 
இவரே சங்கை ரித்வான் (பக்கம்) என்று சொல்லி ஒரு குழுவாக (community) தான் அவரது முக நூல் பக்கத்தை உருவாக்கி உள்ளார் எனும் பொது அங்கு செய்யப்படும் எந்த காரியமும் தனி மனிதனின் தனிப்பட்ட காரியமாக கருதப்படாது. 

இவரே இதை பொதுவான தளம் என்று பிரபல்யப்படுத்தும் வகையில், பொய்க்கு எதிராக உண்மையை சொல்வோம் , அணி திரள்வோம் என்று கூறி சமுதாயத்திற்காக குரல் கொடுக்க ஒரு தளம் என்று பிரகடனப்படுத்தி இது ஒரு சமூக தளம் என்று தானே ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்..

அந்த வகையில், பொது வாழக்கையில் தன்னை ஈடுபடுத்தி வருபவர் என்றால் அவரை பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்கத்தான் வேண்டும். அப்போது தான் சமுதாயம் நன்மையின் பால் செல்லவும்  தவறுகளில் இருந்து மீளவும் முடியும். 

தவிர, இவரது பக்கத்தில் தவ்ஹீத் சகோதரர்கள் பலர் இணைந்திருக்கிறார்கள். இது போன்ற தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் அடைபவர்களிடம் தவ்ஹீத் சகோதரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனில் அந்த சகோதரர்கள் இணைந்திருக்கும் முகநூல் TNTJ வில் இது குறித்து விளக்கம் தருவது அவசியமாகிறது, அதுவும் தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாக பொறுப்பில் இருப்பவருக்கு இது கூடுதல் அவசியம்.

ஆக சகோ. ஷேக் செய்ததில் எந்த தவறும் இருக்க முடியாது, மாறாக, இதுவும் நபி வழியே என்பதை நடுநிலையுடன் சிந்திப்பவர்கள் புரிய வேண்டும். ரித்வான் செய்ததாக ஷேக் வைக்கும் விமர்சனங்கள் நியாயமான விமர்சனமா இல்லையா என்பதற்கு தன அவர் விளக்கமளிக்க வேண்டுமே தவிர, அவர் புறம் பேசுகிறார் என்று சொல்வது அர்த்தமில்லாத வாதம் என்பது தெளிவாகிறது.

ஷேக் செய்தது புறம் என்றால் ரித்வானிடம் சில கேள்விகள்..

தூத்துக்குடியில் ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்தான் என்று உங்கள் பக்கத்தில் போட்டுள்ளீர்கள். இது புறம் இல்லையா?? அவன் கற்பழித்து உண்மை என்றாலும் கூட இதை பொதுவில் சொல்லி அவனது மானத்தை சேதப்படுத்தியது எந்த வகையில் நியாயம்??

கோக கோலா நிறுவனத்தை பற்றி உங்கள் பக்கத்தில் விமர்சனம் செய்திருக்கிறீர்களே, இது புறம் இல்லையா?? அவர்கள் நிறுவனத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டார் என்றால் முதலில் கோக கோலா நிறுவனத்திடம் அல்லவா அதை நீங்கள் சொல்ல வேண்டும்?? எங்கே எப்போது சுட்டிக்காட்டினீர்கள்?? அதை செய்யாமல் எப்படி பொதுவில் வைத்து அந்த நிறுவனத்தின் மானத்தோடு விளையாடலாம்??

இலங்கை தமிழர் விஷயத்தில் கலைஞர் இரட்டை வேடம் செய்கிறார் என்றால் அதை கலைஞரிடம் நேரடியாக சுட்டிக்காட்டினீர்களா? அதை செய்யாமல் அவரின் தவறை பொது மேடையில் அம்பலப்படுத்தியது புறம் இல்லையா??

இது போன்று இன்னும் ஏராளமான செயல்களை நீங்களும் நீங்கள் ஒப்புக்கொள்ள கூடிய அனைவருமே செய்கிறோமே இவையெல்லாம் புறம் இல்லையா??
இதற்கெல்லாம் என்ன பதில்??

இதற்கெல்லாம் என்ன பதிலை நீங்கள் சொல்வீர்களோ, அதுவே சகோ. ஷேக் உங்களது பக்கத்தை விமர்சித்தது பற்றிய உங்கள் கேள்விக்கும் பதிலாய் அமையும் என்பதை சிந்திப்பவர்கள் புரியாமல் இல்லை.


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
(அல் குர்ஆன் 61:2,3)

3 கருத்துகள்:

  1. இந்த பிரச்சினையில் பலரும் பல்வேறு விதமாக கருத்துக்களை பதிந்து வரும் வேளையில் தகுந்த உதாரணங்களோடு கருத்திட்டு இருக்கும் உங்களின் பனி தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. அல்ஹம்துலில்லாஹ் சரியான விளக்கம்

    பதிலளிநீக்கு