திங்கள், 18 பிப்ரவரி, 2013

மாற்று மத நண்பருடன் ஒரே தட்டில் சாப்பிட தடையா?


ஹிந்துக்களுடன் ஒரே தட்டில் சாப்பிட தடை போட்டவர் தானே உங்கள் முகமத்
- நளினன்.(ஹிந்து சகோதரர் ஒருவருடன் பேசிய போது அவர் கூறிய சில குற்றச்சாட்டுகள்  ஒவ்வொன்றிற்கும் பதில் அளிக்கப்படுகிறது)


அரைகுறையாக செய்திகளை தரக்கூடிய ஒரு சிலரின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.


வேதக்காரர்கள் விஷயத்தில், அவர்கள் பாத்திரம் அல்லாத வேறு பாத்திரம் உங்களுக்கு கிடைத்தால் அவர்கள் பாத்திரத்தில் உண்ணாதீர்கள் கிடைக்கவில்லை என்றால் கழுவி விட்டு உண்ணுங்கள்.
என்று புஹாரி 5478 இல் இருக்கும் ஹதீஸ், மாற்று மதத்தவரோடு ஒரே தட்டில் உணவு உண்பதை தடுப்பதாக பொருள் கொள்ள முடிகிறது.

இதை வைத்து இந்த கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள் அல்லது உங்களுக்கு சொல்லி தந்தவர் சொல்கிறார். 

ஆனால், இஸ்லாமிய சட்டங்கள் பலவும் ஒரே ஹதீஸை அடிப்படையாக வைத்து முடிவு செய்யத்தக்கதாக இருக்காது. ஒரு ஹதீசுக்கு இன்னொரு ஹதீஸ் விளக்கமாகவும் , அல்லது ஒரு இறை வசனத்திற்கு ஒரு ஹதீஸ் விளக்கமாகவும் , ஒரு ஹதீஸ் ஒரு கால சூழலுக்கும் இன்னொரு ஹதீஸ் வேறு கால சூழலுக்கும் பொருந்துகிற வகையிலும் தான் சட்டங்களை அளிக்கும்.
அனைத்தையும் உள்ளடக்கி தான் நாம் முழு சட்டத்தையும் புரிய வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸில், வேதக்காரர் உண்ணும் தட்டை கழுகாமல் பயன்படுத்தக்கூடாது என்று பொதுவாக சொல்லப்பட்டிருந்தாலும் கீழ்காணும் இன்னொரு ஹதீஸில் அதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது.


நாங்கள் வேதக்கரர்களை கடந்து செல்கிறோம், தங்களுடைய பாத்திரத்தில் பன்றி கறியை சமைக்கிறார்கள், தங்கள் பாத்திரத்தில் மதுவை குடிக்கிறார்கள் என்று அபு சலபா கேட்கிறார்கள். அதுவல்லாத வேறு பாத்திரம் உங்களுக்கு கிடைத்தால் அதில் உண்ணுங்கள், வேறு பாத்திரம் கிடைக்கவில்லை என்றல் இதை கழுவி விட்டு உண்ணுங்கள் என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.

அபூதாவூத் 3342


மாற்று மதத்தவர்கள் பயன்படுத்தும் உணவு பாத்திரங்களை கழுவ சொன்னதாக முதல் ஹதீஸில் சொல்லப்பட்டதற்கு, காரணம் மேற்கண்ட ஹதீஸில்,சொல்லப்படுகிறது.

பன்றி கறியோ மதுவோ பயன்படுத்தாத பாத்திரங்கள் என்றால் அதை நாம் பயன்படுத்துவதற்கு எந்த தடையுமில்லை. 
மாற்று மதத்தவர்களுடன் ஒரே தட்டில் உண்ணுவதற்கும் எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக