திங்கள், 18 பிப்ரவரி, 2013

பூமியின் எடையும் மனிதன் ஒப்படைக்க வேண்டியவையும்

பூமியில் எத்தனை மனித உயிர்கள் தோன்றினாலும் அதன் மூலம் பூமியின் எடையில் மாற்றம் வருவதில்லை. காரணம், பூமியில் இருந்தே தான் மனிதன் தமது எடையை பெற்றுக்கொள்கிறான். 

விஞ்ஞான ஆய்வால் மட்டுமே சொல்ல முடிந்த இந்த பேருண்மையை 1400 வருடங்களுக்கு முன் குர்ஆன் சொல்லியுள்ளது.

அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். (அல் குர் ஆன் 50:4)

இதை இன்னும் தெளிவாகவும், ஆச்சர்யம் கொள்ளத்தக்க வாசகங்களை பயன்படுத்தியும் இறைவன் வேறொரு வசனத்தில் விளக்குகிறான்.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைதான். (பூமியில்) தங்கும் இடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. சிந்திக்கும் சமுதாயத்திற்கு சான்றுகளை விளக்கியுள்ளோம். (அல் குர்ஆன் 6:98)

தங்குமிடம் என்றால் புரிகிறது - இந்த பூமி.

ஒப்படைக்கப்படும் இடம் என்றால்?? சாதாரண அறிவை கொண்டு பதில் சொல்வதாக இருந்தால் மீண்டும் மண்ணுக்குள் செல்கிறோமே, அதை சொல்கிறது என்று சொல்லலாம்.

அப்படியானால், செல்லும் இடம் என்று தானே அந்த வசனத்தில் வார்த்தை இருக்க வேண்டும்?? ஒப்படைக்கப்படும் இடம் என்கிற முற்றிலும் மாறுபட்ட வார்த்தையை இறைவன் ஏன் இங்கே பயன்படுத்துகிறான்??

சிந்தித்து பார்க்கையில், பூமியின் எடை என்பது மனிதர்கள் மற்றும் இன்னபிற பொருட்களின் எடை தான். ஒரு மனிதன் இந்த மண்ணில் பிறக்கிறான் என்றால் அவனுக்கு தேவையான எடையை இந்த பூமியில் இருந்து பெற்றுக்கொள்கிறான் என்பது பொருள்.

உதாரணத்திற்கு, பூமியின் எடை 100 கிலோ என்றால், 3 கிலோ குழந்தை இந்த பூமியில் பிறக்கும் போது பூமியின் முந்தைய எடையான 100 கிலோ என்பது 97 கிலோவாக குறைந்து விட்டது என்று பொருள்.

அந்த 97 கிலோவும் குழந்தையின் 3 கிலோவும் சேரும் போது பூமி தமது பழைய எடையை தக்க வைக்கிறது.

ஆக, ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து, 70 கிலோ 80 கிலோ என்று தமது உடலை வளர்கிறான் என்றால் இந்த பூமியில் விளையக்கூடியவைகளில் இருந்து தான் அந்த எடையை பெறுகிறான். இறுதியில், பூமியிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்த எடையை மரணத்திற்கு பிறகு இந்த பூமிக்கே கொடுத்தும் விடுகிறான்..!! 
மனிதன் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனாலும் கூட, அவன் "ஒப்படைத்த" அந்த அமாநிதத்தின் மூலம் பூமி அதன் எடையை சீராகவே வைத்துக்கொண்டிருக்கிறது !!!


சிந்திக்கும் சமுதாயத்திற்கு சான்றுகளை விளக்கியுள்ளோம். (அல் குர்ஆன் 6:98)
இதை பற்றியும் இது போன்ற  ஏராளமான அதிசயங்களையும் முழுமையாக விளக்கம் நூல் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் ஆக்கத்தில் உருவான "வருமுன் உரைத்த இஸ்லாம்".

இணைப்பில் காணலாம் 
http://onlinepj.com/books/varu-mun-uraitha-islam/
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக