சனி, 9 பிப்ரவரி, 2013

உண்மையை தானே படமாக எடுத்தான்? என்று சொல்பவர்களுக்கு ..
அது உண்மையா பொய்யா என்பதை அடுத்து விளக்குகிறேன். அதற்கு முன், 

அடிப்படையான முதல் விஷயம், உண்மையான செய்திகளாக கூட அது ஒரு இனத்தையோ சமூகத்தையோ ஒட்டு மொத்தமாக பாதிக்கும் என்றால்
அப்படியொரு படத்தை எடுக்க கூடாது.
இது அணைத்து நடுநிலைவாதிகளும் ஒப்புக்கொள்ளகூடியது தான்.

விடுதலை புலிகள் செய்யும் அட்டூழியங்கள் ஏராளம் உண்டு. ஆனால் அதை நிஜப்படமாக எடுத்து ""குற்றப்பத்திரிக்கை"" என்று காண்பிக்கும் போது நாம் தடை போடுகிறோம். குற்றபத்திரிக்கை படம் தடை செய்யப்பட்டதை நானும் வரவற்கிறேன்.

உண்மை என்கிற போதிலும் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. அதனால் அனைத்து தமிழர்களுக்கும் ஒரு பாதுகாப்பற்ற நிலை உருவாகலாம்.
விடுதலை புலிகள் என்கிற ஒரு இயக்கம் செய்யும் தவறுகள் ஏதோ இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த தமிழர்களும் செய்யும் தவறுகளாக சமூகத்தின் கண்களுக்கு புலப்படும், அத்தகைய நிலையை நாம் உருவாக்க கூடாது, உண்மையை சொல்கிறோம் என்றாலும் சரியே !!

ஆக, விடுதலைபுலிகள் விஷயத்திலேயே நாம் இத்தனை கவனமாக செயல்படுகிறோம் என்றால், உலகளாவிய மதம் ஒன்றை பற்றி படம் எடுக்கையில் இதில் பாதி அக்கறையை கூட காட்ட வேண்டாமா??

சரி, அது உண்மையை தான் சொல்கிறது என்று யார் நிரூபித்தார்கள்?? குர் ஆன் வசனம் ஓதி தான் ஆப்கானில் ஒருவன் கொலை செய்யப்படுகிறான் என்பதற்கு என்ன ஆதாரம் நம்மிடம் உள்ளது?? மீடியாக்கள் சொல்வது தானே ஆதாரம்???

தவிர, சம்மந்தப்பட்ட காட்சியில் அவன் ஓதும் குர் ஆன் வசனம், கொலை செய்வதற்கோ, ஜிஹாத் என்று போவதற்கோ தூண்டும் வசனமே அல்ல, அந்த வசனத்திற்கும் அவன் செய்யும் செயலுக்கும் சம்மந்தமேயில்லை இதுவே, அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதற்கு சான்று.

சம்மந்தமேயில்லாமல் ஒரு காட்சியை புகுத்தி, அல்லாஹு அக்பர் என்றோ லா இலாஹா இல்லலாஹ் என்றோ சொல்லி விட்டால் இதன் மூலம் அவன் உலகிற்கு சொல்ல விரும்பும் கருத்து என்னவாக இருக்கும்? உலகம் இதை எப்படி எடுத்துக்கொள்ளும்??

ஓஹோ, லா இலாஹ இல்லல்லாஹ் என்றால் அவர்கள் ஜிஹாத் செய்ய அழைக்கும் வார்த்தையோ?
அல்லாஹு அக்பர் என்று ஒவ்வொரு நாளும் ஐந்து முறை நம் தெருக்களில் உள்ள பள்ளிவாசல்களில் அழைக்கிறார்களே இதுவெல்லாம் அவர்களது மத வெறியின் வசனங்கள் தானோ?? என்கிற எண்ணம் பாமரனுக்கு ஏற்படாதா?? இது மத துவேஷத்தை உருவாக்காது என்று நெஞ்சின் மீது கை வைத்து தான் சொல்கிறீர்களா??

அகவே அவன் உண்மையை படமாக எடுக்கவில்லை அதற்கு ஆதாரமும் இல்லை.

சரி உண்மையை தான் எடுத்தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால் கூட, அமெரிக்காவை நல்ல பிள்ளையாகவும் ஆப்கானை கொடியவனாகவும் காட்டுவது தான் உண்மையா??
ஆப்கானியர்கள் தவறிழைப்பவர்கள் என்றே வைப்போமே, அவர்கள் செய்யும் தவறுகளை விட நூறு மடங்கு அதிக தவறுகளை அமெரிக்கா அல்லவா செய்தான்?
அமேரிக்கா படையெடுத்து நாட்டை அபகரிக்க வந்தவன், ஆப்கானியர்கள் அதற்கு எதிராக போராடியவர்கள். இது தானே நிதர்சனமான உண்மை??

இருவரிடத்திலும் தவறுகள் இருக்கின்றன என்றே வைத்துக்கொண்டால் கூட, படம் எடுக்க கூடியவன் எப்படி அதை காட்ட வேண்டும்???
படை எடுக்க வந்தவனையல்லவா கொடியவனாக காட்ட வேண்டும்?? அது தானே நியாயம்??

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் படை என்பது பல வெள்ளையர்களை கொன்று வீசியுள்ளது உயிருடன் தீயிட்டு கொளுத்தியுள்ளது காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வெள்ளையர்களின் வீடுகள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி அங்குள்ளவர்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. இதுவும் வரலாறு.
ஆனால் நாம் யாராவது இவராய் தீவிரவாதி என்போமா? மாட்டோம். காரணம், படையெடுக்க வந்தவன் வெள்ளையன். மிகப்பெரிய கொடுமைகாரன் அவன் தான். அவனை விரட்ட இவர்கள் செய்யும் தவறுகள் பொருட்டல்ல அது தேச தியாகம் என்போம் !!

இது தானே நியாயமாக சிந்திப்பவன் சொல்ல வேண்டியது???

இதே கமல்ஹாசன், விஸ்வரூபம் part 2 என்று சொல்லி இந்திய விடுதலையை மையமாக வைத்து படமெடுகிறான் என்று வைப்போம்.

அதில் வெள்ளையர்கள் என்றால் மிகவும் நல்லவர்கள் போலவும், எந்த தவறுகளுமே செய்யாதவர்கள் போலவும், பெண்கள் எல்லாம் அவனது ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதாகவும் படம் எடுத்து,
நேதாஜியின் படையை காட்டும் போது பலரையும் கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்வது போலவும், வெள்ளையர்களின் வீடுகளில் தீ வைத்து அவர்களை கொலை செய்வது போலவும், கொலை செய்யும் போதெல்லாம் பாரத் மாதா கீ ஜெ என்று கோஷம் போடுவதாகவும் காட்டினால் இதை 
வ்வொரு இந்தியனும் எப்படி எடுத்துக்கொள்வான்???

என்பதை உங்களின் நடுநிலை சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக