புதன், 13 பிப்ரவரி, 2013

மாற்று மத அன்பருக்கு ஒரு அழைப்பு





அஸ்ஸலாமு அலைக்கும் 

முகநூலில் இஸ்லாத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் விமர்சனம் செய்து எழுதி வருபவர்களில் ஒருவரான டாக்டர்.ஜெயப்ரகாஷ் என்பவர் பல இடங்களில் நமக்கு எதிரான விமர்சனங்களை பதிந்து வந்தார். 

சகோ. இம்ரான் ஷெரிப் சுட்டிக்காட்டியதன் பேரில், அனைத்தையும் ஒரே தளத்தில் பேசுவதற்கு ஏதுவாக எழுத்து மூலம் கலந்துரையாட முன் வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


இரு தரப்பிலும் செய்யப்படும் கலந்துரையாடல்கள் கீழே பதியப்பட்டு வருகின்றன.






நாஷித் அஹமத் 



அன்பு சகோதரர் ஜெயப்ரகாஷ் அவர்களுக்கு, இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும்.

முகநூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கருத்துக்களை நீங்கள் இடுவதும் அதற்கு நாம் சில பதில்களை சொல்கிற போது வேறு ஏதேனும் கருத்துக்கள் வேறு சிலரால் பதியப்படுவதன் காரணமாக தலைப்பு திசை மாறி சென்று விடுவதும் நமது நோக்கங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல தடையாக உள்ளன. அசில நரங்களில் பதியப்படும் பதிவுகள் நம்மால் கவனிக்கப்படாமல் செல்வதாலும் பதில்கள் தர இயலாமல் போகின்றன.

கருத்து பரிமாற்றம் சமமாக நடத்தப்பட முகநூலை விட மின்னஞ்சல் மூலமாக இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்று சில முன் அனுபவங்கள் மூலம் நாம் உணர்வதால் அத்தகைய வழியில் நமது கருத்து பரிமாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
விவாதம் முடிந்த பிறகு அதை பொதுவில் எங்கும் அனுப்பி விடுவதற்கோ, இணையதளங்களில் இடுவதற்கோ நமக்கு ஆட்சேபனை கிடையாது. அதன் மூலம் பலருக்கும் நம் கருத்துப் பரிமாற்றம் சென்றடையும்.

உங்கள் புறத்தில் நீங்கள் 4 தலைப்புகளை குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை நான் கவனித்தேன்.

அந்த தலைப்புகளை வெறும் கேள்விகளாக வைத்துள்ளீர்கள். அதை சற்று மாற்றி, இந்த விஷயத்தில் இது எனது நிலை, ஆனால் முஸ்லிம்களாகிய நீங்களோ இப்படி சொல்கிறீர்கள் இது தவறு ! என்று வாதமாக வைத்தால் அது விவாதப்பொருளாக மாற்றம் பெறும்.

உதாரணத்திற்கு, புத்தர் சிலையை இஸ்லாம் உடைக்க சொல்கிறதா? தலிபான்களுக்கு பத்வா வேலை செய்யாதா? என்று கேள்வியாக கேட்பதற்கு பதிலாக, தாலிபான்கள் புத்தர் சிலைகளை உடைத்தார்கள் அது தவறு என்பது எனது நிலை, தாலிபான்கள் பத்வாக்களை அடிப்படையாக கொள்ளாமல் செயல்படுகிறார்கள் இதை மறுக்கும் முஸ்லிம்களாகிய உங்களுடன் விவாதிக்க வேண்டும்..

இப்படி வாதமாக வையுங்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள 4 விஷயங்களையும் மேலே உள்ளது போன்று திருத்தி வெளியிட்டால் அந்த நான்கை குறித்தும் விரிவாக கலந்துரையாடல் அல்லது விவாதம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்த 4 அல்லாத வேறு சில தலைப்புகளையும் நான் முன் வைக்கிறேன் நீங்கள் உடன்படும் பட்சத்தில் அவற்றையும் விவாதப்பொருள் ஆக ஆக்கி கொள்ளலாம்.

  • தூக்கு தண்டனை கூடாது என்கிற உங்கள் நிலை தவறு. இது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
  • ரிசானா தூக்கிலிடப்பட்டது தவறு என்கிற உங்கள் நிலை பற்றி விவாதிக்க வேண்டும்.
  • விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பது தவறு என்கிற நிலையில் நீங்கள் இருந்தால் அது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
  • பெண்ணுரிமை புர்காஹ் பற்றி உங்களுக்கு இஸ்லாத்தில் மாற்றுக்கருத்து இருந்தால் அது பற்றி விவாதிக்க வேண்டும்.
  • ஹிந்து மதம் அது சொல்லும் கடவுள் கொள்கை, இஸ்லாமிய மதம் , அது சொல்லும் கடவுள் கொள்கை, இது பற்றியும் விவாதிக்கலாம்.

மேற்கண்ட அனைத்து தலைப்புகளையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு தலைப்புக்கும் குறைந்த பட்சம் தலா 5 வாய்ப்புகள் தேவை. 

அதாவது, நான் எனது முதல் பதிவை மின்னஞ்சல் மூலம் அனுப்பினால், அது கிடைத்து 24 மணி நேரத்தில் நீங்கள் உங்கள் முதல் பதிவை மின்னஞ்சல் செய்ய வேண்டும். இப்படியாக இருவருக்கும் 5 வாய்ப்புகள் என்றால் 10 நாட்களில் ஒரு தலைப்பு முடியும்..
ஒரே விவாதத்தில் இரண்டு தலைப்புகள் கூட வைத்துக்கொள்ளலாம். 

நாளை மாலை (அதாவது புதன்) ஆறு மணிக்கு பதில் தருவதாக நீங்கள் சொல்லியுள்ளதால் இந்த மின்னஞ்சலுக்கான பதிலை அப்போது எதிர்பார்க்கிறேன். 
தொடர்ந்து, என்றைக்கு விவாதத்தை ஆரம்பிப்பது, ஒரு வாய்ப்பு என்றால் என்ன அளவு, இரு தரப்பிலும் வேறு யாரேனும் உள்ளார்களா? என்பதையெல்லாம் பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

மேலே சொல்லப்பட்டதில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் அதையும் நீங்கள் தெரிவிக்கலாம். 
இது அல்லாத வேறு ஏதேனும் தலைப்புகளில் உங்களுக்கு எங்களிடம் மாற்றுக்கருத்து இருந்தால் அதையும் தெரிவிக்கவும்.

மின்னஞ்சலை விட முகநூல் தான் உங்களுக்கு இயலும் என்றால் அதை காரணம் காட்டி நாம் விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டாம் என்பதையும் நான் உங்கள் கவனத்திற்கு தருகிறேன்.

கருத்துப்பரிமாற்றங்களும் விவாதங்களும் சகோதரத்துவத்தை அதிகரிக்கவே செய்ய வேண்டும் என்பதில் என்றைக்கும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------



Mani Jayaprakashvel



உங்களது சார்பில் முன்வைக்கப்பட்ட விவாதங்களைப்பற்றிய என் ஒப்புதல் நிலைப்பாடு.
  • தூக்கு தண்டனை கூடாது என்கிற உங்கள் நிலை தவறு. இது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
கண்டிப்பாக இதை விவாதிக்கலாம்.
  • ரிசானா தூக்கிலிடப்பட்டது தவறு என்கிற உங்கள் நிலை பற்றி விவாதிக்க வேண்டும்.
தனிப்பட்ட விவாதம் இதற்கு தேவை இல்லை. மேலுள்ள முதல் விவாதப் பொருளின் உள்ளேயே இதையும் பொதுவாக்கி விவாதிப்போம்.
  • விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பது தவறு என்கிற நிலையில் நீங்கள் இருந்தால் அது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
இது தேவை அல்ல. எதிர்ப்பதை தவறு என்று நான் சொல்லவில்லை. எதிர்க்கும் வழிமுறையத்தான் விமர்சித்தேன்.
  • பெண்ணுரிமை புர்காஹ் பற்றி உங்களுக்கு இஸ்லாத்தில் மாற்றுக்கருத்து இருந்தால் அது பற்றி விவாதிக்க வேண்டும்.
இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கைகள் உண்டு. அது மிக நீண்ட விவாதமாக போகும். இதை விவாதைக்க அருகதை அற்றதாக நான் என்னுகிறேன்.
  • ஹிந்து மதம் அது சொல்லும் கடவுள் கொள்கை, இஸ்லாமிய மதம் , அது சொல்லும் கடவுள் கொள்கை, இது பற்றியும் விவாதிக்கலாம்
இதுவும் தேவை இல்லை. ஏனெனில் நான் எந்த மதத்தினையும் ஆதரிப்பதில்லை. எல்லா மதங்களும் கற்பிதமான கதைகளின் அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்டவை என்பது என் மாறாத கருத்து. அறிவியலுக்கு புறம்பான கதைகளைக் கொண்ட கடவுள் என்ற கற்பிதத்தை நான் விவாதிக்க விரும்பவில்லை.

நான் விவாதிக்க விரும்புபவை

1. 1. இஸ்லாம் சினிமா முதலான கேளிக்கைகளை விலக்கி வைக்கிறது. இரானில் அரபு நாடுகளில் பொழுதுபோக்கு அரசியல் சினிமாவே இல்லை. மஜீத் மஜீதி போன்ற உன்னத கலைஞர்கள் குழந்தைப்படங்களில் தம் கலையுன்னதங்களை படைத்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இந்த ”இஸ்லாமிய அறிஞர்கள்” என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள்? கேளிக்கைகளை இஸ்லாம் விலக்க வேண்டியதில்லை. அரசியல் பட்ங்களை இஸ்லாமிய நாடுகளில் அனுமதிப்பதில்லை. இதெல்லாம் தவறு என்கிறேன். நீங்கள் சரி என்ற கருத்தில் இருந்தால் விவாதிப்போம்

2. இஸ்லாமிய மார்க்கவாதிகள் பலருக்கும் ஃபத்வா விதிக்கிறார்கள். மிகவும் அராஜகமான வகையில் பாமியானில் புத்தை சிலைகளை உடைப்பது, பெண்ண் கல்வியை நசுக்குவது, பிணைக் கைதிகளை  கொடூரமாக தலையை வெட்டிக் கொல்வது போன்றவற்றை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இந்தக் கொடுமைக்கெல்லாம் ஃபத்வா பிறப்பிக்க மாட்டார்களா? இதை அவர்கள் கண்டிக்காதது இஸ்லாம் ஒரு ப்ழமைவாத ராணுவ மார்க்கம் என்பதை சுட்டுகிறது என்பது என் கருத்து. மாற்றுக் கருத்து இருக்குமானால் விவாதிப்போம். 

3. எதிராளி தப்பு செய்தால் அவனை நாகரீக வரம்புக்கு கீழே வந்தும் தாக்கலாம் என்பது தப்பு. (கமல்-மகள் விவகாரம்). எந்த நிலைமையிலும் சான்றான்மை தவறுதல் கூடாது. இஸ்லாம் அத்தகைய நாகரீகத்தை போதிக்கவில்லை. மாற்றுக் கருத்து இருந்தால் பேசுவோம்.

எனது மற்ற ஒரு கேள்வி மேலுள்ள விவாதபொருளில் அடங்குவதால் இதோடு நான் நிற்கிறேன். 

24 மணி நேரம் என்ற கட்டாய வரையறை சற்று கடினம். எனக்கு வேறு வேலைகளும் உள்ளன. பல தளங்களிலும் மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளேன். எனக்கு நேர்மையுணர்ச்சி அதிகம். கூடுமானவரை விரைவில் பதில் சொல்வேன். கட்டாயப்படுத்திக் கொள்ள முடியாது. அது பெரும் நெருக்கடி. அப்படி நெருக்கடியில் விவாதிக்க நான் விரும்பவில்லை. உங்கள் நிலைப்பாட்டை கொஞ்சம் தளர்த்தினால் பேசலாம்.


என் தரப்பில் வேறு யாரையும் சேர்த்துக்கொள்ள எனக்கு விருப்பமும் அவசியமும் இல்லை.

குறைந்தது ஒன்று அல்லது இரண்டை மட்டும் எடுத்து விவாதிப்போம். எந்த ஒன்று அல்லது இரண்டு என்பதை உங்கள் பொறுப்பில் விடுகிறேன். எதுவானாலும் எனக்கு சம்மதம். வாழ்த்துக்கள்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நாஷித் அஹமத்




அஸ்ஸலாமு அலைக்கும் 

முதல் தலைப்பு

பொத்தாம் பொதுவாக சினிமாவை இஸ்லாம் எதிர்க்கிறது என்று சொல்ல முடியாது. ஆபாசங்கள் ஏதும் இன்றி பெண்களை கூட இஸ்லாம் சொல்லக்கூடிய ஆடை (அதாவது முகம் மற்றும் முன்னங்கை தெரியும் வகையில் ) மற்றும் இதர கட்டுபாட்டுடன்(இசை,  ஆடல் பாடல் கூத்து கும்மாளம்மற்றும்  பெண்களை ஆண்கள் ரசிக்கும் வண்ணம் சித்தரித்தல் போன்றவைகள் இல்லாமல் ) காட்டப்படும் சினிமாக்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை என்பது தான் எங்கள் நிலை.
அந்த அடிப்படையை மீறக்கூடிய திரைப்படங்கள் என்றால் இஸ்லாம் ஆதரிக்காதுஅது இரானிய படமாக இருந்தாலும் சரிஇந்திய படங்கள் என்றாலும் சரி.
இதில் விவாதப்பொருள் ஏதும் இல்லை என்று நினைக்கிறோம். மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லவும்.

இரண்டாம் தலைப்பு :


தூக்கு தண்டனையே கூடாது என்கிற நிலை தவறு. விவாதம் செய்யலாம்.

மூன்றாம் தலைப்பு :

இஸ்லாம் ஒரு பழமை வாய்ந்த ராணுவ மார்க்கம் என்கிற உங்கள் கருத்து தவறு. விவாதிக்கலாம்.


நான்காம் தலைப்பு (உங்கள் கருத்தை இரண்டு தலைப்பாக பிரிக்கிறோம்)


 விஸ்வரூபத்திற்கு பதிலடியாக கமல் - சுருதி உறவை பற்றி பேசியது தவறா இல்லையாதவறில்லை என்பது எங்கள் நிலை. விவாதிக்கலாம்.

ஐந்தாம் தலைப்பு

இஸ்லாம் நாகரீகத்தை போதிக்கவில்லை என்கிற உங்கள் கூற்று தவறு - விவாதிக்கலாம்.


ஆறாம் தலைப்பு :

விஸ்வரூபம் படத்தை எதிர்த்த வழிமுறையை விமர்சிப்பதாக சொன்னீர்கள். எதிர்த்த வழிமுறையில் எந்த தவறும் இல்லை என்பது எங்கள் நிலை - விவாதிக்கலாம்.


ஏழாம் தலைப்பு :

புர்கா பற்றி பேசலாமாஎன்று கேட்டதற்கு அது ஒரு மூட நம்பிக்கை என்பதாக கருத்து தெரிவித்துள்ளீர்கள். புர்காஹ் அணியாதவர்கள் அல்லது அணிய தேவையில்லை என்று சொல்பவர்கள் பிற்போக்குவாதிகள் என்பதும் அணிய வேண்டும் என்கிற நிலையில் இருப்பவர்கள் தான் மூட நம்பிக்கைகளை விட்டும் அப்பாற்பட்ட முற்போக்குவாதிகள் என்பதும் எங்கள் நிலை. உங்கள் கருத்து முற்றிலும் தவறு - விவாதிக்கலாம்.


எட்டாம் தலைப்பு :

இஸ்லாம் சொல்லும் கடவுள் நம்பிக்கை பற்றி விவாதிக்க அழைத்ததற்கு பதில் சொன்ன நீங்கள்,, அறிவியலுக்கு புறம்பானது தான் கடவள் நம்பிக்கை என்பதாக சொல்லியிருந்தீர்கள். இது தவறான கருத்து என்பதும்இஸ்லாம் அறிவியலுக்கு உகந்த மார்க்கம் என்பதும் எங்கள் நிலை - விவாதிக்கலாம்.


விவாதம் சீரான வகையில் செல்வதற்கு சில நிபந்தனைகள் :

  1. மேற்கண்ட எட்டு தலைப்புகளை இரண்டிரண்டாக இணைத்து விவாதிக்கலாம்..
  2. ஒவ்வொரு விவாதத்திற்கும் தலா ஐந்து வாய்ப்புகள். அதாவதுநீங்கள் ஒரு மெயில் இடஅடுத்து நாங்கள் ஒரு மெயில் இடும் போது இருவருக்கும் ஒரு வாய்ப்பு நிறைவு பெறும்)
  3. ஒவ்வொரு மெயிலும் அதிக பட்சம்  75 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (உதாரணத்திற்கு மேலே நான் முதலில் எழுதிய மெயில் கிட்டத்தட்ட  50 வரிகளை கொண்டதுநீங்கள் எழுதியது கிட்டத்தட்ட  40 வரிகளை கொண்டது)
  4. வேறு இணையதளங்களின் லிங்குகளை பதியக்கூடாது.
  5. நீங்கள் ஒரு மெயிலை எழுதி  24 மணி நேரத்திற்குள் அடுத்த மெயிலை நான் எழுத வேண்டும். (24 மணி நேரம் குறைவு என்றால்  48 ஆக்கி கொள்ளலாம்)
  6. வார்த்தைகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தனி நபர் விமர்சனங்கள் இருக்க கூடாது.



விவாதத்தை நீங்கள் துவக்குகிறீர்களா அல்லது நாங்கள் துவக்கவா என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறோம்.
யார் துவங்குவது என்பதை பொறுத்து எந்த தலைப்பை முதலில் எடுத்துகொள்வது என்பதை தீர்மானிக்கலாம்.
வெள்ளிக்கிழமை  முதல் துவங்கலாம்.

உங்கள் இறுதி பதிலுக்காக காத்திருக்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Mani Jayaprakashvel


நாஷித் 
48 மணி நேரங்கள் என்று வைத்துக்கொள்வோம். நிறைய கண்டிப்புகள் அயற்சியைத்தருகின்றன. என்றாலும் விவாதிப்போம். ஏழு எட்டு என்ற விவாதப் பொருட்களில் எனக்கு விவாதிக்க எதுவும் இல்லை. அதை விவாதிப்பது நேர விரயம் என்றே கருதுகிறேன்.விவாதத்தை இயல்பாக கொண்டு செல்ல இரண்டாம் மற்றும் நான்காம் பொருட்களை முதலில் எடுத்துக்கொள்வோம். நீங்களே ஆரம்பியுங்கள். நான் எனது பதிலை சனிக்கிழமை வைக்கிறேன். நாளை எனக்கு நேரம் ஒதுக்குவது சிரமம். வாழ்த்துக்கள்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக