ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நௌஷாத் அலி - 4




09/09/2012



அஸ்ஸலாமு அலைக்கும்,

குழப்பம் தேவை இல்லை. சில விசயங்களை தெளிவாக்க நீட்டும் போது இது போன்ற குழப்பங்கள் ஏற்ப்படுவது சகஜம் என்றாலும் நாம் சொல்ல வருகின்ற கருத்து மிக எளிமையானது. 

மரணம், தூக்கம் இந்த இரண்டு சம்பவங்களின் போது மட்டுமே உயிர் கைப்பற்றப்படும். 
நான் சொல்வது உயிர் கைபற்றபடுவது அல்லாஹ்வால் என்றால் அது மரணம் அல்லது தூக்கம் என்ற இரண்டு நிலை தான் இருக்க முடியும் தவிர வேறில்லை என்பது தான். குரானும் அதை தான் சொல்கிறது.
கைபற்றபடுவது என்பதற்கு அகராதி பொருள் மரணம் இல்லை. கைபற்றபடுவது உயிராக இருக்கும் போது தான் அதை மரணம் என்று சொல்கிறோம். 

உதாரணம் :
புண்படுதல் என்பதன் அகராதி பொருள் காயம் அடைதல்.
மனம் புண்பட்டது என்று வரும் போது அதன் பொருள் துயரமடைந்தது என்பது தானே தவிர வேறில்லை.

எங்கெல்லாம் மனம் என்ற சொல்லோடு புண்படுதல் என்ற வார்த்தை வருகிறதோ அங்கெல்லாம் துயரம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். இதற்க்கு நீங்கள் கூறும் மறுப்பும் சரியானது அல்ல.

உயிர்கள் மரணத்தின் போதும் அது அல்லாத போது அதன் தூக்கத்தின் போதும் கைபற்றபடுகிறது. என்ற வசனத்தை காட்டி,
உயிர்கள் மரணத்தின் போதும் அது அல்லாத போது அதன் தூக்கத்தின் போதும் மரணமடைகிறது. என்று பொருள் கொடுத்து பார்க்கிறீர்கள்.
அதாவது 
மனம் துக்கப்படும் போது , அது புண்படுகிறது.  என்ற வசனத்தை காட்டி , 
மனம்  துக்கப்படும் போது , அது துக்கபடுகிறது.  என்று வருவது பொருளற்றது என்று கூறுகிறீர்கள்.
இது தான் தவறான புரிதல் மற்றும் குழப்பம் அடைய செய்யும்.

நான் சொல்வது,
மனம் எப்போதெல்லாம் புண்படுகிறது என்று இந்த வசனம் சொல்கிறது  -  துக்கத்தின் போது 
உயிர் எப்போதெல்லாம் கைபற்றபடுகிறது - மரணத்தின் போது, தூக்கத்தின் போதும்.

மனம் புண்படுகிறது என்று யாரும் சொன்னால் அது எப்போது நேரும் என்று இதன் மூலம் தெரிகிறது. ஒருவரின் துக்கத்தின் போது.
உயிர் அல்லாஹ்வால் கைபற்றடுகிறது என்று சொன்னால் அது எப்போது நேரும் என்று இதன் மூலம் தெரிகிறது. ஒருவரின் மரணத்தின் போதும் அவரது தூக்கத்தின் போதும்.

கூடுதல் விளக்கம் இன்றி இது மிக எளிதாகவே புரிவது தான். 

அடுத்ததாக,
4 :159 இன் வசனத்தை முழுவதுமாக படிக்கும் போது அதில் வரும் ரபா (உயர்த்துதல்) என்ற வார்த்தை உடலோடா அல்லது கண்ணியத்திலா என்பது தெளிவாக சொல்லும் என்று சொல்கிறீர்கள். நானும் அதை தான் சொல்கிறேன். சொல்லபடுகிற சம்பவத்தை முக்கியபடுத்தி படித்து பாருங்கள்,

நீங்கள் சொல்லுகின்ற மூன்று காரணங்களும் எந்த விதத்தில் தவறென்பதை பாருங்கள்,
முதல் காரணம், அந்த வசனத்தின் வாசகமும் அவரையே உயர்த்துவதாக பொருள் கொள்ளும்படி தான் அமைந்துள்ளது. அந்தஸ்தை உயர்த்தியதாக சொல்ல வேண்டுமானால் அந்தஸ்து, பதவி, தகுதி போன்ற வாசகங்கள் அங்கே வர வேண்டும்.
அப்படி ஏதேனும் வாசகங்களை சொல்லி உயர்த்தினேன் என்று சொன்னால் அந்தஸ்து உயர்வு எனலாம்.
இதற்கு உதாரணமாக 19 :57 வசனத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில் இத்ரீஸ் நபியை பற்றி அல்லாஹ் இதே போன்ற வாசகத்தை சொல்கிறான், அவரை உயர்த்தினேன், என்று. 
ஆனால், அங்கே அந்தஸ்து உயர்வு தான் என்று நாம் மொழியாக்கம் செய்கிறோம் - காரணம், அந்தஸ்து, தகுதி என்கிற பொருள் பட வரபாநா மகானன் என்று அல்லாஹ் சொல்லி விட்டான்.

இங்கே அந்தஸ்த்து என்ற நேரடி பொருள் எதுவும் இல்லை. ஒரு உயர்ந்த இடம் என்று தான் உள்ளது. இருந்தும் அதை தர்ஜா, கண்ணியம் என்று பொருள் தருகிறோம். இதுவரை சரி. இதை ஈஸா நபியின் வசனத்திற்கு பொறுத்த முடியாது என்று சொல்கிறீர்கள். ஏனெனில் ஈஸா நபி வசனத்தில் எந்த துணை சொல்லும் இல்லை என்று சொல்கிறீர்கள். நான் உள்ளது என்று சொல்கிறேன். இல்லை என்று சொல்லி விட்டு நீங்கள் அதையே உங்கள்  இரெண்டாம் காரணத்தில் சொல்கிறீர்கள்.

இரண்டாவது காரணம், அந்த வசனத்தில் தன்னளவில் அல்லாஹ் உயர்த்தியதாக சொல்கிறான்.  தன்னளவில் உயர்த்துவது அந்தஸ்து உயர்வு என்று சொல்ல முடியாது. அப்படி பொருள் வைத்தால் அல்லாஹ்வின் அந்தஸ்து என்னவோ அந்த அளவிற்கு ஈஸா நபியையும் உயர்த்தினான் என்கிற இணை வைப்பு கருத்து தான் கிடைக்கும். ஆகவே அந்த வகையிலும் இது பொருந்தாது.
இதுவும் தவறான கருத்து என்பதை எளிதாகவே புரியலாம். மொழி வழக்கப்படி, 
"நான் என்னளவில் உன்னை நல்லவனாக நம்புகிறேன்."
"என்னளவில் நீ உயர்ந்து நிற்கிறாய்."
என்ற வாக்கியங்கள் எல்லாம்,  சொல்பவரின் சம நிலையை சொல்லுமா அல்லது தன்னை பொறுத்த மட்டில் என்ற கருத்தை சொல்லுமா ?

தன்னை பொறுத்த மட்டில் என்ற கருத்தை தான் சொல்லும்.  எனவே இது ஏற்று கொள்ள முடியாத ஒரு வாதம்.

அடுத்ததாக ,
4 :157 வசனத்தை வாசிக்கிற போது அதில் ஈஸா நபியை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள் சபிக்கப்பட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லி விட்டு, தொடர்ச்சியாக அவர்கள் நம்புவது போல ஈஸாவை யாரும் கொலை செய்யவில்லை என்கிறான்.
சிலுவையில் அறையப்படவுமில்லை என்று சொல்கிறான்.
சொல்லி விட்டு, இந்த விஷயத்தில் சந்தேகம் கொள்பவர்கள் அல்லது கருத்து வேறுபாடு கொண்டுள்ளவர்கள் அனைவரும் தவறான வழியிலேயே இருக்கிறார்கள்  என்று சொல்கிறான்.
அத்துடன் நிறுத்தாமல், மீண்டும், ஈஸாவை அவர்கள் கொல்லவில்லை என்று அதே வசனத்தில் சொல்கிறான்.
சொல்லி விட்டு "ஆனால் அல்லாஹ் அவரை உயர்த்தினான்" என்று சொல்கிறான்.

நீங்கள் எதை பிரதானபடுத்தாமல் சொல்கிறீர்களோ அதை தான் நான் முக்கியத்துவம் கொடுத்து பார்க்க சொல்கிறேன்.
நீங்களே சொல்வது போல் "ஆனால் அல்லாஹ் அவரை உயர்த்தினான்"  என்று மட்டும் சொல்லியிருந்தால் கூட நீங்கள் சொல்வதை போல சிந்திக்கலாம். அல்லா தன்னளவில் என்ற வார்த்தையை போடுகிறான். இதன் முக்கியத்துவம் என்ன ?  அல்லாஹ்வின் அளவில் அவரை தூக்கி கொண்டான் என்பதா ? இதற்க்கு தான் பொருள் இல்லை.

உங்களது மூன்றாவது காரணம்,
அல்லாஹ் வல்லமை மிக்கவன், ஞானமுடையவன் என்று சொல்கிறான் என்பது.
ஒரு விசயத்தில்  இருந்து காப்பாற்றி விட்டு இது போன்ற வார்த்தைகளை அல்லா சொல்லும் போது அது  நம் இருவரின் கருத்துக்கும் பொருந்தும் வாசகம் தான். எனவே இது பெரு பெரும் காரணமாக எல்லாம் சொல்ல முடியாது.

முழுவதுமாக பார்க்கையில்,
ஈஸா நபியை கொல்ல சதி செய்கிறார்கள்.
அல்லாஹ்வும் சதி செய்கிறான்.
ஈஸா நபியை நாங்கள் தான் கொன்றோம் என்று அவர்கள்(யூதர்கள்) சொல்வதால் அவர்கள் சபிக்கபடுகின்றனர். 
இதுவும் கவனிக்க பட வேண்டிய ஒரு விஷயம் தான். குர்ஆனில் பல சமூகத்தவர்கள் எத்தனையோ நபி  மார்களை கொலை செய்தது போல் ஈஸா நபியையும் கொலை செய்திருக்க முடியும் ஆனால் அவர்களது(யூதர்களது) நோக்கம் அவர் மீது பலி சுமத்தி சிலுவை மரணத்திற்கு அவரை ஆளாக்க வேண்டும் என்பது தான். சிலுவை மரணத்தை தண்டனையாக பெற்றவர்கள் இறைவனால் சபிக்க பட்டவர்கள் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது தான் இதற்க்கு காரணம்.
ஈஸா நபியை அப்படி செய்து விட்டால் அவர் ஒரு பொய்யர் என்று மக்கள் நம்புவார்கள் என்பது தான் சிலுவை மரணம் தருவதற்கு அவர்களது முதல் நோக்கம்.

பொதுவான நம்பிக்கையின் படி ஈஸா நபிக்கு பதிலாக ஒருவர் உரு மாற்றபட்டிருந்தால், யூதர்கள் நாங்கள் தான் அவரை கொன்றோம் என்று சொல்வது அவர்களது அறியாமையாக தான் இருக்க முடியும். எனவே குர்ஆனில்,  யூதர்கள் அவரை கொல்ல முற்பட்டதால் அவர்கள் சபிக்கப்பட்டனர் என்று சொல்வது தான் சரியானதாக இருக்குமே தவிர யூதர்கள் "நாங்கள் தான் கொன்றோம் என்று சொல்வதால் "அல்ல. ஏனெனில் அல்லா ஒருவரை உரு மாற்றம் செய்திர்க்கும் போது யாராக இருந்தாலும் அவர்கள் ஈஸா வை தான் கொன்றதாக நினைப்பார்கள். தாங்கள் செய்த ஒன்றை சொல்வதால் அவர்கள் சபிக்கபட்டிருக்க மாட்டார்கள், மாறாக அவர்கள் செய்ததற்கு தான் சபிக்க பட்டிருக்க வேண்டும். 

ஆனால் இங்கே செய்ததாக சொன்னதற்கு சபிக்கிறான் என்றால் யூதர்களுக்கு தாங்கள் கொன்றது ஈஸா நபி அல்ல என்றோ அல்லது அந்த யூத கூட்டத்தில் தண்டனை நிறைவேற்ற சென்ற காவலர்கள் அல்லா ஈஸா நபியை காப்பாற்றியது தெரிந்திருந்தும் தாங்கள் கொன்று விட்டதாக வந்து மக்களிடம் பொய் சொல்லியிருக்க வேண்டும். உண்மையை வேண்டுமென்றே மறைத்திருக்க  வேண்டும் என்ற நெருக்கமான முடிவிற்கு தான் வர முடிகிறது. 

எனவே அவர்கள் ஈஸா நபிக்கு தரவிருந்த கேவலத்திலிருந்து அவரை கண்ணியபடுத்தினான் என்றே இந்த வசனத்திற்கு பொருள் கொடுப்பது பொருந்தி போகும்.
அவர்கள் ஈஸா நபியை கொன்று விட்டதாக சொல்கின்றனர்.
அது தவறு, உண்மையில் அவர்கள் அவரை கொல்லவில்லை.
சிலுவையில் அறையவுமில்லை.
இது வரையில் சொல்வது அந்த சிலுவை தண்டனையை நிறைவேற்றும் போது இருந்த அந்த யூதர்களை குறிக்கிறது.

இதில்(இவ்விசயத்தில்) முரண்பட்டோர் அல்லது அபிப்பிராய பேதம் கொண்டவர்களுக்கு எந்த அறிவும் இதில் கிடையாது.
அவர்கள் செய்வது வெறும் யூகம் தான்.
நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை.
மாறாக அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான்.
அல்லாஹ் வல்லமைமிக்கவன்  , மற்றும் ஞானமுடையவன்

இது பொதுவாக அதை நம்புபவர்களுக்கு சொல்லபடுகிறது. அவர்களால் அவரை சிலுவையில் கொல்ல முடியவில்லை அவர்கள் கொல்லவும் இல்லை, அவர்கள் தரவிருந்த கேவலத்திலிருந்து அவரை அல்லா கண்ணியபடுத்தி கொண்டான்.அல்லாஹ் வல்லமைமிக்கவன்  , மற்றும் ஞானமுடையவன்.
இதை சரி காணும் விதமாக குரானும் 3 : 55 இல் 
ஈஸா வே உம்மை கைப்பற்றுவேன். இன்னும் என்னளவில் உன்னை உயர்த்தி கொள்வேன். நிராகரிபோரிடமிருந்து உன்னை தூய்மை படுத்துவேன்.

கைப்பற்றுவேன் என்பதே உடலோடு தூக்கி கொள்வேன் என்று இருக்குமானால், உன்னை என்னளவில் உயர்த்தி கொள்வேன் என்ற சொல் எதை முக்கியபடுதுகிறது ? அவரை அல்லா உடலோடு தூக்கி பின்னர் அவனது உயரத்திற்கு உயர்த்துவதா ? அதாவது,வபாத் என்றாலும் ரபா என்றாலும் ஈஸா நபி விசயத்தில் உங்களை பொறுத்த மட்டில் ஒரே அர்த்தம் தான். உடலோடு உயர்த்துவது. இதற்கு ஏன் வபாத் என்றும் ரபா என்றும்  சொல்ல படுகிறது என்பது சிந்தித்தால் விளங்க போதுமானது.
உடலோடு உயர்த்துவதை குறித்து இந்த ரபா பேசவில்லை  என்பது இந்த வசனமே சொல்லும்.
ஆனால் நிராகரிப்போர் முற்படுத்திய கேவலத்திலிருந்து அவரை தூய்மை படுத்தவே அவர் கண்ணியத்தை உயர்த்துவதாக அல்லா தெளிவாகவே இங்கு பதிலும் சொல்லி விடுகிறான். அவரை மட்டும் இன்றி அவரை பினபற்றுவோரையும் கியாம நாள் வரை மேலோங்க ( அந்தஸ்த்தில், கண்ணியத்தில் ) செய்வதாக சொல்கிறான்.

ஈஸா நபி மறுமையில் தனது கூடத்திற்கு எதிராக பேசும் வசனத்தில் கூட,
"அப்பால் என்னை நீ கைப்பற்றிய(வபாத்) பிறகு...." தான் சொல்கிறார்.
"அப்பால் நீ என்னை உயர்த்திய(ரபா)  பிறகு "...என்று சொல்லி இருக்கலாம்.

ஆகவே உயர்த்தப்பட்டார் என்று சொல்வது அவரது கண்ணியத்தை தான் என்பது எள்ளளவு சந்தேகத்திற்கு இடமின்றி புரிகிறது.

அடுத்ததாக 5 :75 வது வசனத்திற்கு நீங்கள் சொல்வது,
ஈஸா நபியை இறைவனின் மகன் என்று ஏற்று கொள்பவர்களுக்கு அவரது மரணத்தை குறித்து நேரடியாக சொல்லி இருக்க வேண்டும் ஆனால் அவருக்கு முன்னாலும் தூதர்கள் பலர் இறந்து போனதாக சொல்வது ஏன் என்பதாக சொல்கிறீர்கள், அதே சமயம் இதற்கான எனது பதிலையும் தெரியும் என்றே சொல்கிறீர்கள் எனவே எனது பதிலை சொல்கிறேன் பின்னர் இதை குறித்து உங்கள் மறுப்பை பார்த்து விட்டு பேசுவம்.

ஈஸா நபி இறந்து போய் விட்டார்கள் என்பதால் கிருத்துவர்கள் ஒன்றும் அவரை மனிதர் என்று நம்ப போவதில்லை. இன்னும் சொல்ல போனால் அவர் சிலுவையில் இறந்து போனார் என்ற நம்பிக்கை தான் கிருஷ்துவர்களுக்கு அவர் இறைவனின் மகன் என்ற பலத்தையே கொடுக்கிறது. அவரது இறப்பு தான் கிருத்துவம் உண்டாக காரணமே. அதை சொல்வதால் எந்த பலனும் இல்லை. அவர் இறந்தார் பின்னர் உயிர்தெழுந்தார் என்பது தான் அவர்களது கொள்கையின் அடிப்படையே.
எனவே ஈஸா நபி இறந்து போனதை சொல்லி அவரை எப்படி இறைவனின் குமாரராக முடியும் என்று சொல்வது பொறுத்த மற்றது அது கிருத்துவர்களை சிந்திக்க தூண்டாது.

இந்த வசனம் இன்னும் அழுத்தமாக சொல்கிறது, ஈஸா நபிக்கு முன்னரும் தான் தூதர்கள் இறந்து போயுள்ளனர் அவர்கள் யாரும் உயிர்த்தெழவும் இல்லை அவர்கள் இறைவனின் குமாரர் என்றும் சொல்லவில்லை. அதை போலவே தான் ஈஸா நபியும் பின்னர் அவர் எப்படி மற்ற தூதர்களிடம் இருந்து வித்தியாச படுகிறார் என்ற சிந்தனைக்கு தான் இந்த வசனம் சொல்லபடுகிறது.

மரியமின் குமாரர் மசிக் இறை தூதரே அன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டனர். இவரின் தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தனர். 
தாயார் மரியமின் மரணம் நிகழ்ந்தஒன்று தானே.  ஏன் இறைவன் அவரது மரணம் குறித்து  சொல்லாமல் உணவருந்தியதை கூறுகிறான் ? இருவரின் மரணமும் கிருத்துவ கொள்கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை மாறாக அவர்கள் மற்ற தூதர்களை போன்றவர்கள் தான் என்பதை தான் அழுத்தமாக சொல்லி புரிய வைக்க வேண்டும். 

எனவே இதில் அவரது மரணம் குறித்து பேச ஒன்றும் இல்லை. அதை விட மற்ற தூதர்களை போலவே தான் இவரும் இவரது தாயாரும் இருந்தனர் என்று சொல்வது தான் பொருத்தம். அதை தான் இது சொல்கிறது.

சம்பவத்தை வைத்து கொண்டு அதன் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து பார்க்கும் போது அனைத்தும் தெளிவாக புரிகிறது.
ரசூல் ஸல் அவர்கள் கொல்லபட்டதாக நினைக்கும் போது அவரது தோழர்கள் பின் வாங்குகின்றனர். இதை கண்டித்து அல்லா இதே போன்று ஒரு வசனத்தை இறக்குகிறான். அதில் இவரை போன்று பல தூதர்கள் வந்து சென்று விட்டனர் எனவே இவர் இறந்து போனால் இவரது கூற்று பொய்யாகி விடுமா என்று சிந்திக்க சொல்கிறான்.
 இதை ரசூல் ஸல் அவர்கள் உயிருடன் இருக்கும் போது தானே இறக்கினான் என்றால் அது போலவே ஈஸா நபியும் உயிருடன் தான் உள்ளார் இனிமேல் இறப்பர் என்று எடுத்து கொள்வது தான் பாமரத்தனம். வார்த்தைக்கு வார்த்தை ஒன்ற கூடிய வசனத்தின் பொருள் ஒன்று தான் என்றாலும் அதன் முக்கியத்துவம் சொல்லபடுபவர்களின் நம்பிக்கைக்கு பேச வேண்டும்.

ஈஸா நபியும் மற்ற நபி மார்களை போன்று தான் இருந்தார்கள் , இறந்தார்கள். மற்ற நபி மார்கள் யாரும் அல்லாஹ்வின் குமாரராக இல்லாத போது எப்படி ஈஸா நபியை மட்டும் நீங்கள் குமாரராக்கி கொள்ளலாம் என்பது அதன் கருத்து.
மற்ற நபி மார்கள் இறந்து போனது போலவே முஹம்மது நபி ஸல் அவர்களும் மரணிப்பவர்கள் தான். இரண்டுமே மற்ற நபி மார்களை போன்று தான் இருவரும் என்ற ஒரு கருத்தின் நோக்கத்திற்கே சொல்லபடுகிறது.

வார்த்தைக்கு வார்த்தை என்றால் யஹ்யா அலை அவர்களுக்கு ஈஸா அலை அவர்களுக்கும் குர்ஆனில் ஒரே மாதிரியான வார்த்தை பிரயோகத்துடன் வரும் வசனத்தின் பொருள் படி  யஹ்யா அலை அவர்களை போன்றே ஈஸா அலை அவர்களும் மரணித்தார் என்று தான் சொல்ல வேண்டும். 
ஒரு வேளை இந்த வசனத்தை  நீங்கள் விளக்கினால் உங்களுக்கு ஒரு நியாயம் அதையே 5 :75 குறித்து நான் விளக்கினால்  எனக்கு ஒரு நியாயமா ? என்பது போல் ஆகி விடும் என்பதையும் முன்னரே சொல்லி கொள்கிறேன். 

அடுத்ததாக ,
ஹதிஷை தந்து அதை மறுப்பதாக சொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள். 
ஒரு ஹதிஷின் சனத் குறித்து கேள்வி எழுப்பினால் இதை செய்யலாம்.
அல்லது அந்த ஹதிஷை நான் வேறு மாதிரி மொழி பெயர்த்து அதற்கு வேறு ஒரு அர்த்தம் கொடுத்தால் அதை செய்யலாம்.
நான் சொல்லும் காரணம் அது குரானோடு முரண் படுகிறது என்பதற்கு தான். இதற்கு எதற்க்காக ஹதிஷை பதிய வேண்டும் ? என் நிலையில்  ஈஸா நபியின் வருகை குறித்து வருகின்ற ஹதீஸ் அனைத்தையும் தான் மறுக்க வேண்டும். இது உங்களுக்கு தெரியாதா ? 

அதே சமயம் சனத் குறித்து சில கருத்து வேறுபாடுகளை நான் படித்திர்க்கிறேன் அதற்கு பதில் வேண்டுமானால் அந்த ஹதிஷை பதிந்து உங்களிடம் கேள்வியாக எனது அடுத்தடுத்த வாய்ப்புகளில் வைக்கிறேன். இது ஒரு கூடுத்தல் தகவலாக இருக்கும் என்பதற்க்காகவே தவிர அதுவல்ல நான் ஈஸா நபி வருகையை குறித்த ஹதிஷை மறுப்பதற்கு காரணம்.

ஒரு வேளை ஈஸா நபி மரணித்து விட்டார் ஆனால் மீண்டும் வருவார் என்று சொன்னால் அதில் என்ன முரண் என்று கேள்வி கேட்பது எதற்கெனில் அதற்க்கான பதில் தரும் போது நீங்கள் எப்படி உங்கள் கொள்கையில் நியாயம் கற்ப்பிக்கிறீர்கள் என்பது தெரிய வெறும் என்பதற்காகவே.
உங்கள் பதிலை போன்று சொல்வதென்றால் தாமாக செத்தவை ஹராம் என்று சொல்லி விட்டு கடல் வாழ் உயிரினங்கள் தவிர என்று ஹதீஸ் சொல்வது விதி விலக்கு என்று சொல்வது போல மேலே உள்ள நம்பிக்கைக்கும் சொல்லலாம்.

கடலில் செத்து மிதந்தாலும் அது ஹலால் என்றால் , எண்ணை கலந்து பல மீன்கள் கடலில் செத்து மிதந்ததே அது ஹலாலா ? அதை நீங்கள் உண்பீர்களா ? இதை எப்படி புரிகிறீர்கள் ?
இது போன்ற சட்டத்தில் விதி விலக்குக்கும் , நம்பிக்கையில் விதி விலக்குக்கும் புரிவதில் வேறு பாடுகள் நிறைய உள்ளன. அது மட்டுமே தனியாக விவாதிக்க பட வேண்டியது. அதனால் அதை இங்கே விவாதிக்க விரும்பவில்லை.

தவிர இறந்தவர் மீண்டும் வருவது இயற்க்கை நியதிக்கு முரண் என்பதால் ஈஸா நபி உடலுடன் தான் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று நம்புவதாக சொல்கிறீர்கள். உடலுடன் ஈஸா நபி உயர்த்தப்பட்டார் என்று சொல்வது தான் அதை விடவும் இயற்க்கை நியதிக்கு முரணானது. இறந்தவர்கள் கூட சில அத்தாட்சிகளுக்காக உயிர் கொடுத்து எழுப்பப்பட்டதுண்டு, ஆனால் இந்த பூத உடல் அந்த உலகத்தில் வாழவும் முடியாது என்ற போது அவரை உடலோடு அழைத்தான் என்று சொல்வது தான் இயற்கை நியதிக்கு நேர் எதிர்.

இவையெல்லாம் புரிவது உங்களுக்கு குழப்பம் என்றால் இதை படிபவர்களுக்காக தருகிறேன். அவர்களது சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

இன்னும் அடுத்த வாய்ப்புகளில் குர்ஆனில் எங்கும் ஈஸா நபி மீண்டும் வருவது குறித்து சொல்ல வில்லை என்பதை குறித்து பேசுவோம்.

1 கருத்து:

  1. //தவிர இறந்தவர் மீண்டும் வருவது இயற்க்கை நியதிக்கு முரண் என்பதால் ஈஸா நபி உடலுடன் தான் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று நம்புவதாக சொல்கிறீர்கள். உடலுடன் ஈஸா நபி உயர்த்தப்பட்டார் என்று சொல்வது தான் அதை விடவும் இயற்க்கை நியதிக்கு முரணானது. இறந்தவர்கள் கூட சில அத்தாட்சிகளுக்காக உயிர் கொடுத்து எழுப்பப்பட்டதுண்டு, ஆனால் இந்த பூத உடல் அந்த உலகத்தில் வாழவும் முடியாது என்ற போது அவரை உடலோடு அழைத்தான் என்று சொல்வது தான் இயற்கை நியதிக்கு நேர் எதிர்.///

    இயற்கை நியதிக்கு மாறாக ஈசா அலைஹிஸ்ஸலாம் பிறந்ததை ஒப்புக் கொள்ளமுடியும் ... அவர்களை இறைவன் தனளவில் ஊன் உடல் சகிதம் உயர்த்திக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாதா...?
    ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அன்னை ஹவ்வா இருவரும் ஊன் உடல் சகிதம் இறைவனிடத்தில் இருந்து இந்த பூவுலகுக்கு வந்தார்களா அல்லது உயிர் மட்டும் வந்து வேறு உடலுடன் பொருந்திக் கொண்டதா ..?
    நீங்கள் தவறான தர்க்கம் பண்ணுகிறீர்கள் ... இறைவனின் வல்லமை பற்றிய புரிதலுக்கு சாதாரண பாமரனுக்கு இருக்கும் ஈமான் போதும் இறவன் நாடினால் எதுவும் நடக்கும்.
    உங்களுடைய மொத்தக் கருத்தையும் முதலில் சொல்லிவிடுங்கள் பிறகு நாஷித் அவர்களுக்கு பிறகு வரிக்கு வரி பதில் எழுதலாம் ... காதியானி இல்லை என்று உங்களை அறிமுகப் படுத்திக் கொண்டீர்கள் பின் எந்தக் கொள்கையின் பின்னனியில் இருந்து கொண்டு உங்கள் கருத்துக் களை வைக்கின்றீர்கள் என்பது தெரிந்தால் ஒரு முடிவுக்கு வரலாம்.

    பதிலளிநீக்கு