ஞாயிறு, 5 ஜனவரி, 2014

தக்லீத்வாதிகளின் வெற்று ஓலம்


குர் ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று சொல்லும் நம்மிடம் தக்லீத் இருக்காது. ஏனெனில், குர் ஆன், ஹதீஸை விடுத்து வேறு வேறு நபர்கள் பக்கம் சாய்வது தக்லீத் என்று நாம் தான் பிரச்சாரமே செய்கிறோம்.

இந்த சூழ்நிலையில், தக்லீதுக்கு எதிராய் குரல் கொடுக்கும் நம்மை தக்லீத்வாதிகள் என விமர்சனம் செய்கிறார்கள் சிலர். 

சரி, இவ்வாறு விமர்சனம் செய்ப‌வர்கள் எவராவது குர் ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்கிற கொள்கையை சொல்பவர்களா? என்று பார்த்தால் அப்படி இல்லை.

எவரெல்லாம் நம்மை தக்லீத்வாதிகள் என சொல்கிறார்களோ, அவர்கள் அனைவருமே சஹாபாக்களை தக்லீத் செய்பவர்களாகவும் இமாம்கள் என்ன சொன்னாலும் கேட்போம் என சொல்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

தக்லீதை தங்கள் அடிப்படை கொள்கையாய் கொண்டிருப்பவர்கள் தக்லீத் பற்றி பேசுவது கேலிக்குரியது, நகைப்புக்குரியது !!

ஒரு இயக்கத்திற்கு எதிராய் நாம் எந்த கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்றால் நாம் அந்த இயக்கத்தை தக்லீத் செய்வதாய் ஆகாது.
சரி காண்பவை மார்க்க அடிப்படையில் அல்லது தர்க்க ரீதியில் தவறு என்று நிரூபித்தால் தான் தக்லீத் நிரூபணமாகுமே அல்லாமல், அதன் கொள்கைகளில் எதையுமே மறுக்காதது, அதற்கு சான்றாக எந்த சபையிலும் ஆகாது !

உதாரணத்திற்கு, ஆம் ஆத்மி என்கிற அரசியல் கட்சியின் செயல்பாடுகளை நான் சரி காண்கிறேன் என்றால் ஆம் ஆத்மியை நான் தக்லீத் செய்கிறேன் என்று ஆகாது. அக்கட்சியிலுள்ள தவறுகள் எனக்கு சுட்டிக்காட்டப்பட்டு, அதற்கு முறையான விளக்கங்கள் எதையும் வைத்திராமல் தொடர்ந்து அதற்கு ஆதரவு கொடுத்தேன் எனில், அது தான் தக்லீத் என பொருளாகும்.

குற்றங்களையும் தவறுகளையும் கூட நியாயப்படுத்தி, தொடர்ந்து ஒருவரை சரி காண்பது தான் கண் மூடி பின்பற்றுதலுக்கான விளக்கம் என்பதை கூட அறியாமல் வரட்டு வாதம் புரிவோர், தங்கள் சிந்தனையையும் அறிவுத்திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத் என்கிற இயக்கம் கண் மூடித்தனமாய் கொடுத்த ஃபத்வாக்கள் என்ன?
அவற்றை பின்பற்றிய தொண்டர்கள் குர் ஆன், ஹதீஸுக்கு எதிராய் போனது எப்படி?
குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றையும் வைத்திராமல் தொடர்ந்து எந்தெந்த விஷயங்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்?

என்பதையெல்லாம் சான்றுகளுடன் நிரூபிக்கும் தகுதியும் திறனும் அற்றவர்களே இது போன்ற வெற்று ஓலமிடுபவர்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக