ஞாயிறு, 19 ஜனவரி, 2014

பகல் இரவை முந்துகிறதா?


இரவு பகலை முந்தாது என்பதாக வரக்கூடிய 36:40 வசனத்தை சான்றாக காட்டி, பகல் தான் நாளின் துவக்கம் என்று சிலர் வாதிடுகின்றனர்.

அதாவது, இரவு பகலை முந்தாது என்று அல்லாஹ் சொல்லி விட்டான் அல்லவா, ஆகவே பகல் தான் இரவை முந்தும் என்பது இவர்களது வாதம்.

சரி.. அப்படியானால் இதே அளவுகோலை தானே அனைத்திற்கும் இவர்கள் பொருத்த வேண்டும்?

அதே வசனத்தின் துவக்கத்தில்

சூரியனால் சந்திரனை பிடிக்க முடியாது என்றும் அல்லாஹ் சொல்கிறான்.

அதே அளவுகோலை இதற்கும் பொருத்துவார்களா?

இதோ பாருங்கள், சூரியனால் சந்திரனை பிடிக்க முடியாது என்று அல்லாஹ் சொல்லி விட்டான், ஆகவே சந்திரனால் சூரியனை பிடிக்க முடியும் என்று இதிலிருந்து விளங்குகிறது என்று இவர்கள் சொல்வார்களா?

அவ்வாறு சொன்னால் அது மடமையான விளக்கமாகி விடும். சூரியனின் வெப்பத்திற்கும் அதன் இழு சக்திக்கும் முன் சந்திரனால் அதை எட்டிப்பிடிக்கும் பேச்சுக்கே இடமில்லை.

சூரியனால் சந்திரனை பிடிக்க முடியாது என்றால் சந்திரனாலும் சூரியனை பிடிக்க முடியாது. இது தான் விஞ்ஞான உண்மை. இரண்டுக்குமிடையே இருக்கும் ஈர்ப்பு சக்தியானது ஒன்றுக்கொன்று இழுத்து வைத்துக்கொள்கிறது.

ஆக, எதையும் எதனாலும் பிடிக்க முடியாது என்கிற விஞ்ஞான தத்துவத்தை தான் அல்லாஹ் இங்கே சொல்கிறான்.

அதன் தொடர்ச்சியாய் தான் இரவு பகலை முந்தாது என்கிற வசனமும்.

இரவு பகலை முந்தாது, அது போல் பகலும் இரவை முந்தாது.

அனைத்தும் அதனதன் கணக்கில் துல்லியமாய் இயங்குகின்றன..!

துல்லியமாய் இயங்கிக்கொண்டிருக்கும் அந்த மகத்துவமான படைப்பை விளக்கும் வசனம் தான் இதே தவிர, எது முதல், எது அடுத்து என்பதை சொல்லும் வசனமல்ல !

இரவு பகலை முந்தாது என்பதால் பகல் தான் இரவை முந்தும் என்று இங்கே புரிய வேண்டுமென்றால்
சூரியனால் சந்திரனை அடைய முடியாது என்பதை வைத்து சந்திரனால் சூரியனை அடைந்து விட முடியும் என்று புரிய வேண்டி வரும் !

அவ்வாறு புரிவார்களா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக