ஞாயிறு, 5 ஜனவரி, 2014

பகவத் கீதை என்றால் என்ன?


அவசியம் ஏற்பட்டால் இஸ்லாமிய அரசாங்கத்தின் மீது போர் செய்வது கடமை என்பதாக வரக்கூடிய குர்ஆன் வசனங்களை, அது தீவிரவாதத்தை தூண்டுவதாக விமர்சனம் செய்பவர்கள், பகவத் கீதையின் தோன்றல் குறித்த, பலருக்கும் தெரியாத செய்தி ஒன்றை தெரிந்து கொள்ளட்டும்.

மஹாபாரத கதையின் ஒரு பாகம் தான் பகவத கீதை.

அதென்ன மஹாபாரத கதை?

பாண்டவ சகோதரர்களுக்கும் அவர்களது ஒன்று விட்ட சகோதரர்களான‌ கொளரவர்களுக்கும் இடையே நடைபெற்ற குருக்க்ஷேத்திர போர் தான் மஹாபாரத கதை.

இந்த போருக்கான காரணம் கூட, சகோதரர்களுக்கிடையேயான குடும்ப பிரச்சனை தான்.

பாண்டவ சகோதரர்களுக்கு வில் வித்தைகளும் போர் தந்திரங்களையும் கற்றுக் கொடுத்த குருனாதர்கள் பீஷ்மர், துரோணர் போன்றவராவர்.

தர்மத்திற்காக போர் செய்து, தங்கள் ஒன்று விட்ட சகோதரர்களான கொளரவர்களை அழிப்பதற்கு முடிவு செய்து போர்களத்தில் அணி திரண்ட பாண்டவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
.
அது என்ன அதிர்ச்சி? தங்கள் குருனாதர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களை எதிரி அணியில் அவர்கள் கண்டனர் !!

அதர்மத்திற்கு எதிராக போருக்கு தயாரான பாண்டவர்கள், தங்களது குருநாதர்களுக்கு எதிராய் போர் செய்வதா? என்று அச்சமுற்றனர்.
தங்கள் குரு நாதர்கள் அதர்மத்திற்கு ஆதரவாய் தான் நிற்கிறார்கள் என்று தெரிந்த பிறகும் கூட, குரு நாதர்களை கொலை செய்ய மனம் ஒத்துக்கொள்ளாத காரண‌த்தால் நீட்டிய வில்லை கீழே இடுகிறான் அர்ஜுனன்.

அந்த சந்தர்ப்பத்தில், அர்ஜுனனின் மைத்துன‌னான கண்ணன், அர்ஜுனனுக்கு அறிவுரை கூறுகிறான்.
அதில், போர் என்று வந்து விட்டால் நபர்களை பார்க்கக்கூடாது என்றும், தர்மமா அதர்மமா என்று தான் பார்க்க வேண்டும் எனவும், குரு நாதர்களாக இருந்தாலும் போர் செய்து அவர்களை அழிப்பது தான் சரி எனவும் அறிவுரை கூற, போருக்கு தயாராகிறான் அர்ஜுனன்.

போர் செய்ய வேண்டும்,
எதிரிகளை கொன்று குவிக்க வேண்டும்,
குருவாக இருந்தாலும் தயவு தாட்சணியம் பார்க்கக் கூடாது, அவர்களையும் வெட்டி வீழ்த்த வேண்டும்

என்று கண்ணன் கூறிய உபதேசங்களை உள்ளடக்கியது தான் பகவத் கீதை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக