சனி, 29 செப்டம்பர், 2012

மீலாது - ஒரு பார்வை





அஸ்ஸலாமு அலைக்கும்..

இன்று நம் சமுதாயம், புனிதமாக கருதி செய்து வரக்கூடிய மீலாது (நபி தினம்) விழாவை பற்றிய இஸ்லாமிய பார்வையை அலசுகிறது இந்த ஆக்கம். 


'எவர் அவருடைய (முஹம்மது நபி (ஸல்) அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63) 

என்கிற இறை வசனம், நபி சொல்லாததை, நபி செய்யாததை, நபி அன்கீகரிக்காததை செய்வதை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்கிறது !

 
நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் எப்போது ?

ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அது நபி அவர்கள் பிறந்த மாதம்  என்று நினைவு வருகிறது.  ஆனால் நபி (ஸல்) அவர்கள் பிறந்தது எந்த தேதியில் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று ஹதீஸ் முழுக்க தேடினாலும் ஒரு பலகீனமான செய்தியை கூட இவர்களால் காட்ட இயலாது என்பது வேடிக்கையான விஷயம்.


மீலாது விழா ஆரம்பமானது எப்போது?

நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 பக்கம் 172)

ஆக இவ்விழா நபி காலத்தில் இல்லை என்பதற்கு, பலகீனமான செய்தி கூட இல்லை என்பதே ஆதாரமாக இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்க, இது ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகியுள்ளது.


மீலாது விழாவும் சஹாபாக்களும்

நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாது விழா கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.


நபி பிறப்பும் இயேசு பிறப்பும் 

ஈஸா நபி அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா? 

பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)

கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.


அரபுக் கவிதைகள்

பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மவ்லிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைதான் இருக்கிறது. ஆனால் அவை பள்ளிவாலிலும் கூட கூட்டம் கூடி, புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்) கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.

எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை புகழ்வதற்கே பாடப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா? 
அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயிலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான். 
அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.


பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?


நாமாக விரும்பி கண்ணியப்படுத்துவது தவறா?

மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர்.
வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். 
இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும். நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். -நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
இது நல்ல விஷயம் என்றால் அதை நபி அவர்கள் சொல்லியிருப்பார்கள், சஹாபாக்கள் அதை செய்து நபியிடம் அங்கீகாரம் பெற்றிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, அவர்களுக்கு கிடைக்காத நல்லறம், நல்லறமல்ல என்பது தான் நாம் புரிய வேண்டிய அளவுகோல் !


நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். (ஹதீஸின் சுருக்கம் - முஸ்லிம்)

நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களும் இறுதி நபியும் ஆவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள். செய்திருப்பார்கள். அதனை நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.



நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?

வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.

இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)


மார்க்கத்தில் நூதனச் செயல்


உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் -அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

எனவே நபி(ஸல்)அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.
மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான். 
 (அல்குர்ஆன் 5:3)

இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும்போது, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீலாது விழா என்பது நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்ளை நுழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.


மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)

மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)

எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி(ஸல்) அவர்கள் புகட்டும் தண்ணீரை அருந்தும் வாய்ப்பை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க நேரிடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் பாதுகாப்பானாக !


ஈசா நபி மரணிக்கவில்லை - விவாதம்




அஸ்ஸலாமு அலைக்கும்..

ஈசா நபி மரணிக்கவில்லை என்றும், கியாமத் நாளுக்கு சமீபமாக இந்த உலகிற்கு மீண்டும் வருவார்கள் எனவும் குர் ஆனும் ஹதீசும் சொல்லக்கூடிய முன்னறிவிப்பை மறுக்க முனையும் கூட்டத்தை சார்ந்தவருடன்  நாம் செய்த எழுத்து மூலமான விவாதத்தின் முழு தொகுப்பை இங்கே காணலாம்.
இருவருக்கும் தலா பத்து வாய்ப்புகள் கொண்டு விவாதிக்கப்பட்டது.
இது தவிர, 4 :159 வசனத்தை பற்றி மட்டும் தனியாக ஒரு விவாதமும் நடந்தது.. அதை இந்த இணைப்பில் காணலாம். 
இதையும் பார்க்கவும். http://www.nashidahmed.blogspot.com/2012/08/blog-post_8.html


-----------------------------------------------------------------------------------------------------------























புதன், 26 செப்டம்பர், 2012

"முஹ்சனாத்" என்பதற்கான சரியான பொருள் என்ன?





அஸ்ஸலாமு அலைக்கும்.. 


4 :25 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் "முஹ்சனாத்" என்பதற்கான சரியான பொருள் என்ன? என்பதை குறித்து மாற்றுக்கருத்து கொண்டிருக்கும் சகோதரர் ஒருவருடன் மின்னஞ்சல் மூலம் நான் கலந்துரையாடியதின் தொகுப்பு.













அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த இழையில் ஒரு சந்தேகத்தை தெளிவு செய்து கொள்ள கருத்து பரிமாற்றத்தை  எதிர்பார்க்கிறேன்.

குரான் 4 : 25  இல் வரும் முஹ்சனத் " என்ற அரபு சொல்லுக்கு என்ன பொருள் என்று ஏதேனும் ஆதாரத்தோடு அல்லது அகராதி கொண்டு தெரியப்படுத்தவும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------



Nashid


திருமணம் ஆன பெண்களை திருமணம் செய்யக்கூடாது..
4 :24 வசனத்தில் அதே முஹ்சனாதிற்கு பொருள் - திருமணம் ஆன பெண்கள் !!!!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------



அலைக்கும் அஸ்ஸலாம் ,

முஹ்சநாத் - திருமணமான பெண்கள் , கணவனை இழந்த பெண்கள், கணவனுள்ள பெண்கள்  .

ஒரு வார்த்தைக்கு இத்தனை அர்த்தங்கள் எப்படி பொருந்தும் ? 

4 : 25 இன் படி கணவனை இழந்த பெண்களை திருமணம் முடிப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும் ? 

முஷ்சநாத் என்ற வார்த்தை குர்ஆனில் வரும் இடங்கள் ,

5:5இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.

4:24இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்.

4:25உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;)

24:4எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

24:23எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.

அப்படிஎன்றால் முஹ்சனத் என்றால் கற்புள்ள சுதந்திரமான கணவனுள்ள பெண்ணா ?

கணவனுள்ள பெண்ணை திருமணம் முடிப்பது தடுக்கப்பட்டுள்ளது. எனவே கணவனுள்ள பெண் என்று சொல்வதில் நியாயம் இல்லை.

4 : 25 இல் மட்டும் முஹ்சனத் என்பது கணவனை இழந்த பெண் அதாவது கணவன் இல்லாத பெண் என்று சொல்வது நேர் மாறான ஒரு விளக்கமாக படுகிறது. ஒரே வார்த்தை ஒரு இடத்தில் கணவனுள்ள பெண் என்றும் அதுவும் அடுத்த வசனத்திலேயே அது கணவன் இல்லாத  (கணவன் இழந்த ) பெண்   என்றும் வருவது சாத்தியமற்ற ஒன்றாக படுகிறது. 

ஒரு சட்டத்தை நியாயப்படுத்த இப்படி அர்த்தம் கொடுக்கப்படுள்ளதோ என்றே நடு நிலையோடு பார்க்கையில் எண்ண தோன்றுகிறது.

இது தொடர்பாக ஒரு மாறுபட்ட  விளக்கத்தை உங்களோடு  பகிர்ந்து கொள்கிறேன் இன்ஷா அல்லா.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------



Nashid


ஒரே வார்த்தை ஒரு இடத்தில் கணவனுள்ள பெண் என்றும் அதுவும் அடுத்த வசனத்திலேயே அது கணவன் இல்லாத  (கணவன் இழந்த ) பெண்   என்றும் வருவது சாத்தியமற்ற ஒன்றாக படுகிறது
ஏன் சாத்தியமில்லை?

ஒரே வார்த்தை ஒரு வசனத்தில் கணவனுடையவள் என்றும் இன்னொரு வசனத்தில் கற்புடையவள் என்றும் வருகிறதே?

இரண்டும் ஒரே அர்த்தத்தை தரும் பொருள் இல்லையே


சுதந்திரமான பெண் என்றால் கணவனில்லாத (திருமணம் ஆகாத பெண்) என்று தானே பொருள்?
4 :25 இல் கணவன் இல்லாத , திருமணம் ஆகாத பெண்களை தானே இது குறிக்கும்? திருமணம் ஆனா பெண்களை குரிக்காதே!


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




ஏன் சாத்தியமில்லை என்றால்,

ஒரே வார்த்தை ஒரு வசனத்தில் கணவனுடையவள் என்றும் இன்னொரு வசனத்தில் கற்புடையவள் என்றும் வருகிறதே?

கணவனுடயவள், கற்புடையவள் என்பதும் ஒரே அர்த்தம் இல்லை என்றாலும் அது முரணானது இல்லை. (இது புரிதலுக்காகவே தவிர இந்த வசனத்தில் அர்த்தம் கொள்ளவதற்கு இல்லை.)

கணவனையுடைய , கணவனை இழந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்படும் வார்த்தை. எனவே இந்த ஒரு வார்த்தையில்  இரண்டில் எதாவது ஒன்றை தான் குறிக்க முடியும் என்பது தான் என் கேள்வி.

நீங்களே உங்கள் புறிதலில் முரண்படுகிறீர்கள்,

4 :25 இல் கணவன் இல்லாத , திருமணம் ஆகாத பெண்களை தானே இது குறிக்கும்? 

உங்கள் அர்த்தப்படி கணவனில்லாத பெண்ணை மணமுடிக்க முடியாத பட்சத்தில் கணவனுள்ள பெண்ணை உங்கள் வலக்கரம் சொந்தமானவர்களை மனமுடியுங்கள் என்று அர்த்தம் வரும்.

இல்லை கணவனில்லாத அடிமை பெண்ணை தான் அது குறிக்கும் என்றால் சுதந்திரமான பெண் என்றால் கணவனுள்ள பெண் என்ற நீங்கள் அர்த்தம் கொள்வது தவறு.
சுதந்திரமான பெண் என்றால் கணவனில்லாத (திருமணம் ஆகாத பெண்) என்று தானே பொருள்?

அதாவது அடிமை பெண் என்பவள் கணவனோடும் இருக்கலாம் கணவன் இல்லாமலும் இருக்கலாம், அதே போல் சுதந்திரமான பெண் என்பவள் கணவனோடும் கணவநிள்ளமலும் இருக்கலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Nashid


அதாவது அடிமை பெண் என்பவள் கணவனோடும் இருக்கலாம் கணவன் இல்லாமலும் இருக்கலாம், அதே போல் சுதந்திரமான பெண் என்பவள் கணவனோடும் கணவநிள்ளமலும் இருக்கலாம்.
அப்படியானால், 4 :24 இல் வரக்கூடிய முஹ்சனடிர்க்கும் கணவனோடு அல்லது கணவநிலாத , ரியாண்ட்ல் எது வேண்டுமானாலும் இருக்கலாம் என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும்?

அடிமை பெண் திருமணம் ஆனவள் இல்லை என்பது அந்த வசனத்திலேயே புரிகிறது.

இப்போது, முஹ்சனத் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த வாசகத்தில் திருமணம் ஆனவள் என்று பொருள் கொள்வதா ஆகாதவள் என்று பொருள் கொள்வதா?

திருமணம் ஆனவள் என்று பொருள் கொள்ள முடியாது - காரணம் - முந்தைய வசனம்.. (அதில் திருமணம் ஆனவளை நாம்  திருமணம் செய்ய தடை உள்ளது)

ஆக, திருமணம் ஆகாதவள் என்று தான் அர்த்தம் கொடுக்க முடியும்..


அதே போல் சுதந்திரமான பெண் என்பவள் கணவனோடும் கணவநிள்ளமலும் இருக்கலாம்.
என்று சொல்ல முடியாது..


கணவனில்லாமல் மட்டுமே இருக்க முடியும்!!

அதாவது அடிமை பெண் என்பவள் கணவனோடும் இருக்கலாம் கணவன் இல்லாமலும் இருக்கலாம், அதே போல் சுதந்திரமான பெண் என்பவள் கணவனோடும் கணவநிள்ளமலும் இருக்கலாம்.
அப்படியானால், 4 :24 இல் வரக்கூடிய முஹ்சனதிர்க்கும் கணவனோடு அல்லது கணவனில்லாத  , எது வேண்டுமானாலும் இருக்கலாம் என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும்?


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------




நீங்கள் கேட்கின்ற கேள்விக்கு முன் உங்களது பதிலில் உள்ள முரண்பாடு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன்,

அப்படியானால், 4 :24 இல் வரக்கூடிய முஹ்சனதிர்க்கும் கணவனோடு அல்லது கணவனில்லாத  , எது வேண்டுமானாலும் இருக்கலாம் என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும்?

இந்த இடங்களிலும் மற்ற இடங்களிலும் வருகின்ற முஹ்சனா என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொள்ளத்தான் இந்த அர்த்தங்களை சரி காண்கிறேன். இது அல்லாத வேறு ஒரு அர்த்தமும் விளக்கமும் சரி என்று படுகிறது அதை நியாயபடுத்தும் முன் இப்போது உள்ள அர்த்தங்கள் சரி தானா என்று புறிந்து கொள்ள பார்க்கிறேன்.

4 : 25 இல் திருமணமாகாத சுதந்திரமான பெண்ணை மணக்க முடியாவிட்டால் என்ற ஒரே அர்த்தம் தான் கொடுக்க முடியும் என்பது உங்கள் வாதம், ஏனெனில் முந்தைய வசனத்தில் கணவனுள்ள பெண்ணை திருமணம் முடிக்க கூடாது என்று வருவதால் இப்படி அர்த்தம் கொள்கிறீர்கள். சரி தானே ?

எனில் 4 :24 முஹ்சனா விற்கு கணவனையுடைய பெண்கள் என்று அர்த்தம் , 4 :25 முஹ்சனா விற்கு கணவன்  இல்லாத  பெண்கள் என்று அர்த்தம். இரண்டு முரணான அர்த்தங்கள் இந்த ஒரு வார்த்தைக்கு பொருந்துமா ? இப்படி ஒரு சொல் இருக்குமா ? அல்லது இது வேறு ஏதேனும் அர்த்தம் உள்ளதா ? இன்னும் என்ன அர்த்தங்கள் இந்த வார்த்தைக்கு உண்டு என்பதையும் அது குரானில் பயன்படுத்த படும் இடங்களையும் தெரியப்படுத்தவும். 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------



Nashid



ஸலாம்.
எனக்கு தெரிந்த பொருளை தான் நான் சொல்லியுள்ளேன். இது அல்லாத வேறு பொருள் உள்ளதென்றால் தெரியப்படுத்தவும்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



அஸ்ஸலாமு அலைக்கும்,

முஹ்சனா என்ற சொல்லுக்கு நூர் என்ற ஒரு அறிஞர் கொடுத்துள்ள விளக்கத்தை போதுமான அளவில் எனது சில கருத்துகளோடும் ஹதிஷ்கலோடும்  தமிழில் கீழே தருகிறேன். இது என்னக்கு நியாயமாக படுவதால் இதை ஏற்று கொள்கிறேன். உங்களுடைய முடிவு உங்களை சேர்ந்ததே.

முஹ்சனா - இந்த சொல் எந்த அர்த்தத்தில் பலரால் கொடுக்க பட்டுள்ளது என்பது தெரியும் முன் இது எந்த பாலினத்தை குறிக்கும் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.முஹ்சனா என்ற வார்த்தை பெண்ணுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார்த்தை குர்ஆனில் 4 : 24 , 25 ,     5 : 5 ,          24  : 4 , 24  : 23  ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படுள்ளது. பெரும்பாலான மொழிபெயர்ப்பில் இவை முஹ்சனா விற்கு 'சுதந்திரமுள்ள நம்பிக்கை கொண்ட பெண்' என்றும் கையர் முஹ்சனா விற்கு 'அடிமை பெண்' என்றும் உள்ளது.

24:23எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. - ஜான் டிரஸ்ட் .

24:4எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

மேலுள்ள வசனங்களில் வருகின்ற முஹ்சன விற்கு திருமணமான அல்லது திருமணமாகத என்று பொருள் தர முடியாது. அப்படி தந்தால் அது திருமணமான பெண்கள் மீது அவதூறு கூறலாமா என்ற கேள்வி வரும். எனவே கற்புள்ள பெண் என்பதே சரி. 

4:25உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; 

இங்கே சுதந்திரமுள்ள முஹ்மீனான பெண் என்று சொல்லப்படுகிறது. சுதந்திரமுள்ள அல்லது அடிமைகளில் பெண்கள் மட்டும் தான் உள்ளனரா என்றால் இல்லை. ஆண்களும் உள்ளனர். ஆண்களில் அடிமைகளும் சில சலுகைகள் பெற வேண்டும், ஆனால் இந்த முஹசன என்ற வார்த்தை பெண்களுக்கு மட்டும் சொல்லப்படுவதால் இங்கேயும் கற்புள்ள(virgin ) என்ற அர்த்தம் தந்து பார்க்கலாம்.
அதாவது முஹ்சனா என்றால் secured women அது அல்லாதவர்கள் unsecured women .( இந்த காலத்தில் அடிமை என்றோ சுதந்திரம் என்றோ பெண்கள் இருவகையாக இல்லை ) கீழுள்ள காரணத்தால் தான் அவர்கள் வேறுபடுகிறார்கள்.

secured என்பது பல தரப்பு விஷயங்கள் சம்பந்தப்பட்டவை. ஒரு பெண் பொருளாதாரத்தில் , தனது கற்பில்,  பாரம்பரியத்தில்,  உயர்ந்த அந்தஸ்த்தில், கல்வியில் என்று பல விசயங்களில் பாதுகாகப்பட்டவலாக எதிர்காலத்தை பற்றிய கவலை அற்றவளாக இருப்பது secured woman எனலாம்.

unsecured என்பது இவை எதுவும் அல்லாத பெண்.

"உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ" என்ற வாசகம் இதனை உறுதி படுத்துகிறது. ஒரு பெண் இத்தனை விசயத்திலும் சிறந்தவளாக இருக்கும் போது அவளுக்கு மதிப்பும் திருமணம் செய்து கொள்ள போட்டியும் இருக்கும் எனவே அதிக மகர் கொடுப்பவர்களே இதில் முந்தி கொள்ள முடியுமே தவிர அதற்கு சக்தி பெறாதவர்களுக்கு அந்த வாய்ப்பு மிக சொற்பமே.

இதுவே unsecured women  என்பவள் காதலித்து ஏமாற்றப்பட்டிருக்கலாம், கற்பு சூறையாட பட்டிருக்கலாம், பிறரால் கைவிடப்படிருக்கலாம், தங்களது எதிர்காலம் குறித்து கவலை கொள்ளும் பெண்களாக தான் இவர்கள் இருப்பர்.

அவர்களுக்கு  வாழ்வு தரவும் , அவர்களை பாதுகாக்கவும் ஆண்கள் மணமுடிக்க வேண்டுமே தவிர அவரை வேறு சில தவறான காரியங்களுக்காக மணமுடிக்க கூடாது என்பதால் தான்  அல்லா இந்த வசனத்தில் சொல்லும் போது , அப்படி திருமணம் முடிப்பவர்களின் ஈமானை அல்லா அறிகிறவன் என்று சொல்கிறான்.

4 :25  அவர்கள் முஃமினான (பாதிக்கப்பட்ட )பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே அப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள்.

இதை அப்படியே ரசூல் ( ஸல்) அவர்களின் ஹதீஸில் பொருத்தி பாருங்கள்,

" ஒரு பெண் மூன்று காரனங்களுக்காக மணமுடிக்க படுகிறாள். அவள் அழகு, பாரம்பரியம், ஈமான். நீங்கள் ஈமானை மையப்படுத்தி கொள்ளுங்கள் "

ஆகவே அல்லா இப்படிப்பட்ட பாதிக்கப்பட பெண்களுக்கு வாழ்வை தர விரும்புகிறான் எனவே தான் அவர்களை எச்சரித்து இந்த வசனம் அவர்களுக்கு வாழ்வு தருகிறது. மீண்டும் அவர்கள் எந்த ஒரு மானக்கேடான ஒரு காரியத்திலும் ஈடுபட கூடாது என்பதே அந்த எச்சரிக்கை. கற்புள்ள பாதுகாப்பான ஒரு பெண்ணை மணமுடிக்க முடியாத ஆண்களையும் பார்த்து பாதுகாப்பற்ற இவர்களை நீங்கள் ஈமானை கொண்டே மனமுடியுங்கள் என்றும் வழியுருத்துகிறான். 

4 :24 இல் வரும் முஹ்சனா விற்கு என்ன அர்த்தம் என்ற கேள்வி வரும். இதே அர்த்தத்தை கொடுக்கலாம். கற்புள்ள(virgin ) பெண்கள் என்று. ஆனால் ஒரு சிறு மாற்றத்தோடு சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்த 4 : 24 ஆவது வசனம் 4 :23 ஆவது வசனத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் , அதாவது மணமுடிக்க விலக்கப்பட்டவர்களை பட்டியலிடும் அந்த வசனத்தோடு இதை சேர்த்து 

4 : 23  உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான். 4:24இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் (unsecured , ஆதரவற்ற   ) தவிர, (இரண்டு) கன்னி ( ஒரே காலத்தில் மனைவியராக) பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.

அதே போல் இரண்டு கண்ணிகளை ஒரு சேர முடிப்பதும்  தடுக்கபட்டிருக்கலாம். ஒரு வேளை இந்த அர்த்தம் கொடுக்கலாம் என்றால் இது இரண்டாம் திருமணம் என்பது கணவனை இழந்த அல்லது விவாகரத்து செய்யப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பெண்களை தான் செய்ய முடியும் என்றாகி விடும். ரசூல்(ஸல்) அவர்கள் கூட அன்னை ஆய்ஷா(ரலி) அவர்களை மட்டும் தான் கன்னியாக மணந்தார் என்பதும் குறிப்பிட தக்கது.

இப்படி முன்னுள்ள வசனத்தோடு இந்த வசனமும் சேருமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லகனத்தில் கூடும் என்றால் இதுவே சிறந்த விளக்கம் என்று தோன்றுகிறது. முஹ்சனா என்பது பாதுகாப்புள்ள(பணத்தால், கற்பால் , பாரம்பரியத்தால், கல்வியால்..) பெண் . க்ஹைர முஹ்சனா என்பவள் பாதுகாப்பில்லாத ஒரு பெண். இனி என்னுடைய மற்றும் உங்களுடைய பொறுப்பு இதில் உள்ள வசனம் முன்னுள்ள வசனத்திற்கு இலக்கணத்தோடு பொருந்துமா என்று அறிவது தான் .

அல்லா முற்றிலும் அறிந்தவன். 

தவறுகளுக்கு மன்னிக்கவும். அல்லா நம் அனைவருக்கும் சத்தியத்தை புரிய செய்வானாக !

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



Nashid


அஸ்ஸலாமு அலைக்கும்.. 

4 .24 வசனத்திற்கு உங்கள் விளக்கம் என்ன என்பதை தெளிவாக கூறவும்..
அதை வைத்தே 4 .25 க்கு பொருள் கொள்ள முடியும்.

4 .24 இல் முஹ்சனத் என்ற வார்த்தைக்கு திருமணம் ஆனவள் என்று பொருள் என்றால் 4 .25 இல் நீங்கள் குறிப்பிட்டுள்ள Secured woman - திருமணம் ஆனவளா ஆகாதவளா? என்பது தெளிவாகும்.

இரண்டு வசனங்களையும் முரணாக்காமல் விளக்கம் அளிப்பது என்றால், இரண்டாம் வசனத்தில் வரக்கொடிய Secured woman கணவன் இல்லாதவளை தான் குறிக்கும் என்பதே எனது வாதம். 

அதை மறுத்து நீங்கள் விளக்க வேண்டும். 
நீங்கள் சொல்லும் அந்த அறிஞரின் விளக்கத்தில் அந்த வார்த்தைக்குரிய மேலதிகமான விளக்கம் தான் உள்ளதே தவிர, நான் கேட்பவற்றுக்கு பதில் இல்லை. 

முந்தைய வசனத்திற்குரிய நேரடி அர்த்தம் என்ன?
அந்த அர்த்தத்தை இந்த வசனத்திற்கு கொடுக்க முடியுமா? முடியாதென்றால், இந்த வசனத்தில் அந்த அறிஞர் குறிப்பிடும் Secured woman - married woman ஆ  அல்லது unmarried woman ஆ? 

 தவிர, அதே வசனத்தில், முஹ்சனதான பெண்களுக்குரிய தண்டனையில் பாதி என்று வருகிறது.
இதில் நீங்கள் சொல்லும் பொருளை கொண்டால், கர்ப்புடைய பெண்ணின் தண்டனையில் பாதி என்று பொருள் வருகிறது.
அப்படியானால், கர்ப்பில்லாதவுக்கு என்று வேறு ஏதேனும் தண்டனைகள் உள்ளதா?
நான் சொல்லும் பொருளை கொண்டால் திருமணம் செய்யாத பெண்ணுடைய தண்டனையில் பாதி என்று பொருள்.
அதாவது நூறு கசையடிகளில் பாதி!
இது ஹதீஸிலும் உள்ளது..
 உங்கள் பொருள், இதிலும் இடிக்கிறது, நான் மேலே சுட்டிக்காட்டியது போல், முந்தைய வசனதொடும் இடிக்கிறது!!

4:24இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் (unsecured , ஆதரவற்ற   ) தவிர, (இரண்டு) கன்னி ( ஒரே காலத்தில் மனைவியராக) பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
மொழியாக்கம் விளங்கவில்லை..

இந்த வசனத்தில் முஹ்சநாத் என்ற அரபிப்பதத்திற்கு என்ன தமிழ் பதம் செய்துள்ளீர்கள்?

முஹ்சநாத் என்றால் கர்ப்போழுக்கம் உள்ளவள் - திருமணம் ஆனவள் - சில இடங்களில் திருமணம் ஆகாதவள்.


(இரண்டு) கன்னி ( ஒரே காலத்தில் மனைவியராக) பெண்களை
?? புரியவில்லை... விளக்கவும்..

இதை விளக்கினால் தான் 4 : 25 புரியும்.. !



--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




அஸ்ஸலாமு அலைக்கும்,

கணவனுள்ள பெண்ணிற்கு பதிலாக கன்னி என்பதே சரியாக வரும். 
கணவனுள்ள பெண் என்று அர்த்தம் கொண்டால் அதன் தொடர்ச்சியில் கணவனில்லாத பெண்ணை என்று வரும் அர்த்தம் முரண்பாடானது.

கன்னி என்றும் கற்புள்ள என்றும் அர்த்தம் கொண்டால் இரண்டு கண்ணிகளை ஒரு சேர மணமுடிப்பதும் ,  கன்னி பெண்ணை மணமுடிப்பதில் சிரமம் இருந்தால் என்ற வசனமும் முரணாகாது.

கன்னி பெண் , கற்புள்ள பெண் என்றால் திருமணமாகாத பெண் என்று அர்த்தமும் அதில் அடங்கி விடும். இந்த 4 : 25  இல் திருமணமாகாத பெண்ணுக்குரிய தண்டனையில் பாதி வழங்கப்படும்.

4 : 24 இல் வருகின்ற கணவனுள்ள பெண் என்பதே இங்கு சர்ச்சைக்கு உரியது. கணவனுள்ள பெண்ணா அல்லது கன்னி பெண்ணா என்பதே தெரிந்து கொள்ள வேண்டியது.
நீங்கள் கேட்ட விளக்கம் -  இரண்டு கன்னி பெண்களை ஒரு சேர மணமுடிப்பது கூடாது என்பதாக பொருள் விளக்கப்ட்டு உள்ளது.

-----------------------------------------------------------------------------------------



Nashid



அஸ்ஸலாமு அலைக்கும்.. 

நேரடியாக எந்த பொருளை நான் சொல்கிறேனோ, அதை தான் நீங்களும் சொல்லியுள்ளீர்கள்.
4:25 வசனத்தில் வரும் முஹ்சனத் என்ற வார்த்தை, திருமணம் ஆகாதவள் என்று நான் சொல்கிறேன்.
நீங்கள்; கர்ப்புடையவள் என்று சொல்கிறீர்கள்.
கர்ப்புடையவள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. கர்ப்புடைய, நல்லோழுக்கமிக்கவலை  திருமணம் செய்வது பற்றி தான் அல்லாஹ் சொல்வான்.
ஆகவே இங்கு கேள்வி, கர்ப்புடையவலா இல்லையா என்பது குறித்தல்ல!
அந்த கர்ப்புடையவள் திருமணமானவளா ? இல்லையா? என்பது குறித்து தான்.

இதற்கு நீங்களே பதிலும் சொல்லி விட்டீர்கள்.

கன்னி பெண் , கற்புள்ள பெண் என்றால் திருமணமாகாத பெண் என்று அர்த்தமும் அதில் அடங்கி விடும். இந்த 4 : 25  இல் திருமணமாகாத பெண்ணுக்குரிய தண்டனையில் பாதி வழங்கப்படும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளதை போல், கன்னி பெண் என்பது திருமணமாகாத பெண் என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
திருமணம் ஆகாதவள் தவறிழைத்தால் என்ன தண்டனையோ அதில் பாதி!!
ஆக, இந்த வசனத்தில், முஹ்சனத் என்ற வாசகத்திற்கு அர்த்தம் திருமணம் ஆகாத பெண் தான்!


இப்போது 4 .24 க்கு வருவோம்.. 

இதில் முஹ்சனத் என்பதற்கு திருமணம் ஆனவள் என்று பொருள் கொள்ள முடியாது என்று கூறுகிறீர்கள். 
அதற்கு காரணம், அடுத்த வசனத்துடன் அந்த அர்த்தம் மோதுகிறது என்கிறீர்கள்.

சரி,  இந்த வார்த்தைக்கு வேறென்ன அர்த்தம் என்று கேட்டால், அதற்கு நீங்கள் சொல்லும் அர்த்தம் -

கன்னி என்றும் கற்புள்ள என்றும் அர்த்தம் கொண்டால் இரண்டு கண்ணிகளை ஒரு சேர மணமுடிப்பதும்
4 : 24 இல் வருகின்ற கணவனுள்ள பெண் என்பதே இங்கு சர்ச்சைக்கு உரியது. கணவனுள்ள பெண்ணா அல்லது கன்னி பெண்ணா என்பதே தெரிந்து கொள்ள வேண்டியது.
  • கன்னிப்பெண் என்றால் ஏன் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது?
  • இரண்டு கண்ணிகளை ஒரு சேர மனம் முடிக்ககூடாது என்று அந்த வசனத்தில் எங்கே பொருள் கொள்ள இடம் இருக்கிறது?

இந்த இரண்டு கேள்விகளும் அந்த வசனத்திற்கு கன்னி பெண் என்று பொருள் கொள்ள தடையாக இருக்கிறது. 

இந்த வசனத்தில் திருமணம் ஆனவள் என்று பொருள் கொண்டால் அனைத்தும் தெளிவாகி விடும்..

4 .25 இல் முஹ்சனதிற்கு முரண்பாடான அர்த்தம் வருகிறதே என்று கேட்டால், அதற்குரிய பதில், முரண்பாடான அர்த்தம் தான்!
இடத்திற்கு தகுந்தாற்ப்போல், வார்த்தைக்குரிய அர்த்தத்தை மாற்றுகிறோம்..
5:5 இல் கணவன் இல்லாத (கன்னிப்பெண்களை) முஹ்சனத என்ற வார்த்தையுடன் அல்லாஹ் அழைக்கிறான்.
4:24 இல் கணவனுடன் இருக்கும் பெண்களை முஹ்சனத என்ற வார்த்தையுடன் அல்லாஹ் அழைக்கிறான்.
4.25   இல் கணவன் இல்லாத பெண்களை முஹ்சனத் என்ற வார்த்தையுடன் அல்லாஹ் அழைக்கிறான்.

இடத்திற்கு தகுந்தாற்போல பொருள் கொடுக்கிறோம்..

நீங்கள் மூன்றுக்கும் ஒரே அர்த்தம் வர வேண்டும் என்பதற்காக 4 .24 வசனத்திற்கு,  இல்லாத ஒரு அர்த்தத்தை கொடுக்க முனைகிறீர்கள். 

இது தான் விஷயம்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------





கணவனுள்ள இல்லாத அல்லது இழந்த இதற்கு வேறுபாடு உண்டு. கணவனை இழந்த  என்றால் திருமனானவர்கள் என்ற அர்த்தமும் வரும்.

4 .25 இல் முஹ்சனதிற்கு முரண்பாடான அர்த்தம் வருகிறதே என்று கேட்டால், அதற்குரிய பதில், முரண்பாடான அர்த்தம் தான்!
இடத்திற்கு தகுந்தாற்ப்போல், வார்த்தைக்குரிய அர்த்தத்தை மாற்றுகிறோம்..
 

இதை நான் அறிந்து கொள்ளவே கேட்டேன். 

நான் கூறியவற்றில் கன்னி என்றும் கற்புடையவள் என்றும் தான் அர்த்தம் கொள்ள சொல்கிறேன். இதிலும் வேறுபாடு உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.

கற்புடையவள் என்று பொதுவாக சொல்கையில் கணவன் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அதாவது கர்ப்பம் தரித்திருந்தாலும் இல்லையென்றாலும் ஒழுக்கமுடைய என்ற பதத்தில் எல்லா பெண்களையும் சொல்ல முடியும். உதாரணமாக 21  : ௯௧ இல் மரியம் அவர்களை அல்லா அஹ்சநாத் என்ற பதத்தில் கற்பொழுக்கமுள்ள என்று கூறுகிறான். 

கன்னி என்பது மட்டுமே பெரும்பாலும் திருமணமாகாத பெண்ணை குறிக்கும். 

சரி இனி உங்கள் இடத்திற்கு தகுந்தாற்போல் அர்த்தம் கொடுத்து பார்க்கலாம்,

5:5 இல் கணவன் இல்லாத (கன்னிப்பெண்களை) முஹ்சனத என்ற வார்த்தையுடன் அல்லாஹ் அழைக்கிறான்.


"கணவன் இல்லாத" என்று நீங்கள் சேர்த்து கொள்வது தான். நம்பிக்கை கொண்ட கற்பொழுக்க மிக்க பெண்களை தான் இது சொல்கிறது. (திருமணம் ஆகிருப்பினும் சரி இல்லை என்றாலும் சரி ).
( இந்த வசனந்தின் படி திருமணமான கன்னி தன்மை இழந்த ஒரு விதவையையும் குறிக்கும் )

4:24 இல் கணவனுடன் இருக்கும் பெண்களை முஹ்சனத என்ற வார்த்தையுடன் அல்லாஹ் அழைக்கிறான்.

இது முரணாக பட்டதால் தான் இந்த அர்த்தம் சரி இல்லை என்று வாதிடுகிறேன். இங்கே கணவனுள்ள என்றும் மற்றொரு இடத்தில் கணவனில்லாத என்பதும் முரண் என்பது தான் சொல்லபட்டது. ஒரு வார்த்தை இரண்டு முரணான அர்த்தம் கொள்ள முடியாது  என்பது தான் வாதம். 

4.25   இல் கணவன் இல்லாத பெண்களை முஹ்சனத் என்ற வார்த்தையுடன் அல்லாஹ் அழைக்கிறான்.

உங்கள் வாதப்படி கணவன் இல்லை என்றால் என்ன அர்த்தம் திருமணம் ஆகாத என்று பொருள் மட்டும் தானா ?
 முதலில் கணவனை இழந்த என்பதில் சந்தேகம் இல்லை என்று சொல்லி உள்ளதால் கேட்கிறேன். கணவனை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்கும். சரி தானே?
அப்படி என்றால் உங்கள் வாதப்படி திருமணமான வர்களுக்கும் 100 கசை அடி தான் என்பதை ஒத்து கொள்கிறீர்கள். 

தவிர கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்வதில் என்ன சிரமம் என்பதை விளக்கவும்.?

எனது இந்த இழையின் பரிமாற்றத்திலும் உங்கள் கேள்விக்கு பதில் அளித்ததிலும் மேலும் ஒரு புரிதலை என்னால் உணர முடிகிறது.

அதாவது கற்புள்ள என்றும் கன்னி என்றும் அர்த்தம் செய்யலாம். எல்லா இடங்களிலும் கற்பு ஒழுக்கமுள்ள பெண்ணை குறிக்கவும்,  4 : 24  இல் இரண்டு கன்னிகளை ஒரு சேர மன முடிப்பதும் என்று அர்த்தத்திலும் சொல்லபட்டிருக்கும் (இதை  மட்டுமே எனது வாதத்திற்கு இனி நான் தெளிவு செய்து கொள்ள வேண்டும்) .  கன்னி என்பவளும் கற்புள்ள பெண்களுக்குள் அடங்குவர். (secured women ).

4 :25   இல் secured வோமேன் ஐ  (கற்பால், பொருளால், கல்வியால்) திருமணம் செய்ய சக்தி இல்லை என்றால் ....... இப்படி கொள்ளலாம்.

இரண்டு கண்ணிகளை ஒரு சேர திருமணம் முடிக்க கூடாது என்பது எதனால் என்று கேடீர்கள்.
இரண்டு கண்ணிகளை ஒருசேர மணமுடிப்பது இச்சையினால் தான் இருக்க முடியும் என்பதால் கூட இருக்கலாம். இது சர்ச்சை அல்ல எனது புரிதல் தான். அல்லாவே அறிந்தவன்.

-------------------------------------------------------------------------------------------



Nashid


அஸ்ஸலாமு அலைக்கும்..
அன்பு சகோதரரே,

4 :25 வசனத்தை பொறுத்தவரை, அது கற்ப்போழுக்கமிக்க பெண்ணை குறிக்கிறது என்பதை நானும் மறுக்கவில்லை.
கற்போழுக்கமிக்கவள் என்றால் அவள் திருமணம் ஆனவளாகவும் இருக்கலாம், ஆகாதவளாகவும் இருக்கலாம் தான்.!.
அதையும் நான் மறுக்கவில்லை!!

நான் கேட்பது என்னவென்றால், இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ப்போழுக்கமுள்ள பெண் திருமணம் ஆனவளா ஆகாதவளா? என்பது தான்.
இரண்டையும் குறிக்கலாம் என்று நான் சொன்னால் தான், நீங்கள் சொல்வது போல,
அப்படி என்றால் உங்கள் வாதப்படி திருமணமான வர்களுக்கும் 100 கசை அடி தான் என்பதை ஒத்து கொள்கிறீர்கள். -நௌஷாத்

என்று ஆகும்.
கணவனை இழந்த பெண் என்று நான் மொழிப்பெயர்த்தது கவனக்குறைவால் நிகழ்ந்தது.. "கணவன் இல்லாத"என்பதே சரி..
ஆக, திருமணம் ஆனவளுக்கும் 100 கசையடி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லை.

சரி, இங்கு, திருமணம் ஆகாதவள் தான் என்று நான் சொல்லும் காரணம்? - இதற்கு முந்தைய வசனம்..
இதற்கு முந்தைய வசனத்தில் திருமணம் ஆனவளை திருமணம் செய்ய தடை உள்ளது.

ஆக, இப்போது பிரச்சனை 4 :24 வசனம் குறித்து தான். 

இரண்டு கண்ணிகளை ஒரு சேர திருமணம் முடிக்க கூடாது என்பது எதனால் என்று கேடீர்கள்.-நௌஷாத்

இரண்டு கண்ணிகளை ஏன் ஒரு சேர திருமணம் செய்யக்கூடாது என்று நான் கேட்கவில்லை.

நான் கேட்டது, அந்த வசனத்தில் (4 :24 ) "முஹ்சனாத்களை திருமணம் செய்யாதீர்கள்", என்று அல்லாஹ் சொல்கிறான்.
நான் இந்த இடத்தில் திருமணம் ஆன பெண் என்று மொழியாக்கம் செய்கிறேன் - அர்த்தம் பொருந்துகிறது.

நீங்கள் கன்னி என்று மொழியாக்கம் செய்கிறீர்கள்.
இரண்டு கன்னியை திருமணம் செய்யகூடாது என்று மொழியாக்கம் செய்கிறீர்கள்.
இதற்கு தான் நான் கேட்டேன்,
  • கன்னியை திருமணம் செய்யகூடாது என்று ஏன் அல்லாஹ் சொல்ல வேண்டும்?
  • இரண்டு கன்னியை திருமணம் செய்யகூடாது என்று மொழியாக்கம் செய்வதற்குரிய வாசக அமைப்பு என்ன?

முஹ்சனாத்களை திருமணம் செய்யாதீர்கள் என்றால் இரண்டு கண்ணிகளை ஒரு சேர..  என்று எவ்வாறு வரும்?
வராது!
இது திருமணம் ஆன பெண்களை மட்டுமே குறிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது திருமணம் ஆனவர்களை குறிக்கிறது எனும் போது, அடுத்த வசனம் திருமணம் ஆகாதவர்களை தான் குறிக்கும்.

அடிமை பெண் தவறு செய்தால் திருமணம் ஆகாதவளுக்குரிய தண்டனையில் பாதி அவளுக்குண்டு!
நீங்கள் சொல்வது போல , கற்ப்போழுக்கமிக்க பெண்ணுக்குரிய பாதி என்றும் பொருள் செய்யலாம்..
ஆனால், அது திருமணம் ஆகாத கர்ப்போழுக்கமிக்கவல் தான்.!

அதை நீங்கள் மறுக்க முடியாது என்பதே எனது வாதம்.
அதை நீங்கள் மறுக்க வேண்டுமென்றல், முந்தைய வசனத்தையும் மறுக்க வேண்டும்.. அவ்வாறு மறுப்பது, இல்லாத அர்த்தத்தை அதற்கு கொடுத்து மாற்றும் முயற்சியாகவே இருக்கிறது!

இதுவே எனது வாதம்..


இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், 4 :25 இல் அல்லாஹ் சொல்வது
திருமணம் ஆனவர்களுக்குரிய தண்டனையில் பாதி இல்லை !! (அல்லது பொதுவாக விபசாரதிற்குரிய தண்டனையில் பாதி என்று அல்லாஹ் சொல்லவில்லை.
முஹ்சனாதிற்க்குரிய தண்டனையில் பாதி என்றே சொல்கிறான்.
முஹ்சநாத் அல்லாத பெண்களுக்குரிய தண்டனையில் பாதி இல்லை!
அதாவது முஹ்சநாத் அல்லாத பெண்கள் என்றும் சிலர் இருக்கிறார்கள்.
முஹ்சநாத் அல்லாத பெண்களுக்கு என்று தனி தண்டனை சட்டம்  உள்ளது (மரண தண்டனை) - ஹதீஸில் விளக்கம் உள்ளது!

அது இந்த அடிமை பெண்களுக்கு இல்லை. இவர்களுக்கு முஹ்சனதிற்குரிய தண்டனையில் பாதி தான்!
ஆக, நான் அனைவருக்கும் ஒரே தண்டனை தான் என்று சொல்லவில்லை..

(நான் எதை புரிகிறேனோ அதையே சொல்கிறேன். அரபி ஞானம் அதிகம் இல்லை என்பதால் நான் சொல்வதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அல்லாஹ் மன்னிக்க வேண்டுகிறேன்.)


வஸ்ஸலாம்..


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------





அலைக்கும் அஸ்ஸலாம்,
அன்பு சகோ நஷித் அவர்களுக்கு,
கற்பொழுக்க மிக்க பெண் திருமணம் ஆகி இருக்கலாம் அல்லது திருமணமாகாமல் கன்னியாக இருக்கலாம் என்பது தான் உங்கள் கருத்தும் என்பதால் இனி உங்களின் கேள்விக்கு வருகிறேன்.

சரி, இங்கு, திருமணம் ஆகாதவள் தான் என்று நான் சொல்லும் காரணம்? - இதற்கு முந்தைய வசனம்..
இதற்கு முந்தைய வசனத்தில் திருமணம் ஆனவளை திருமணம் செய்ய தடை உள்ளது.

இங்கே தான் சர்ச்சையே. திருமணம் ஆனவர்கள் என்று இங்கே முஹ்சனாதிர்க்கு அர்த்தம் எப்படி வந்தது. அப்படி வந்ததிற்கு உரிய காரணம் என்ன ? முதலில் கணவனை உடைய என்று சொல்லி இருந்தீர்கள். கணவனை உடைய என்பதற்கு திருமணம் ஆனவர்கள் என்பதற்கும் இந்த வசனத்தில்  சட்டம் எடுப்பதில் குழப்பம் வந்து விடும்.
திருமணம் ஆனவர்களை என்று அர்த்தம் கொண்டு பாருங்கள்,

4:24இன்னும்  அடிமைப் பெண்களைத் தவிர, திருமணம் ஆன பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
4:24இன்னும்  அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.

வெறுமனே திருமணம் ஆன பெண்கள் தடுக்கப்படவில்லை. திருமணம் நடந்து கணவனுடன் வாழும் பெண்கள் என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி சொன்னாலும் அடிமை பெண்களை தவிர என்றால் அடிமை பெண்களை அவர்களுடைய கணவன் இருக்கும் போதே திருமணம் முடித்து கொள்ளலாமா ? இதை சற்றே ஆழமாகவே சிந்திக்க வேண்டி உள்ளது.

நீங்கள் சொல்வது போல் வேறு அர்த்தம் தர முடியாத காரணத்தால் கணவன் உள்ள என்ற  மொழி பெயர்பே வைத்து கொள்வோம், அப்படி பார்த்தாலும் 25 வது வசனத்தில் திருமணமாகத என்று மட்டும் எடுத்து கொள்ள முடியாது. ஜான் trustin மொழி பெயர்ப்பு 4 :24 உங்கள் வாதப்படி தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இருந்தாலும் அதற்கு அடுத்த வசனம் திருமணம் ஆகாதவர்கள் என்று முரணான ஒரு அர்த்தத்தை கொடுக்காமல் வேறு அர்த்தம் தரப்பட்டுள்ளது. 

4:24இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர,கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். ....

4:25உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன்....

இந்த 4 : 25 இலும் ஒரு சிறு மாற்றத்தோடு முதலில் சொன்னது போல் கற்பொழுக்க மிக்க என்றே மொழி பெயர்த்தால் இந்த கயர் முஹ்சனாத் என்பது கற்பினால் பாதிக்கப்பட்ட என்ற அர்த்தம் தரும். அது அழகாக பொருந்தியும் போகும். அதாவது 

4:24இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர,கற்பொழுக்கம் உள்ள(கணவனுள்ள) பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். ....

4:25உங்களில் எவருக்குச் கற்பொழுக்கமுள்ள  முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன்.

இதில் மற்றொன்றும் நான் கூற ஆசை படுகிறேன். முதலில் வெறுமனே கற்பொழுக்கமுள்ள பெண்கள் என்று கூறிவிட்டு இரண்டாவதாக கூறுகையில் முஹ்மீனான கற்பொழுக்கம் உள்ள என்று சொல்லபடுவதும் சிந்திக்க வேண்டியதே.

இந்த அர்த்தம் கொண்டால் 4 : 24  இல் முஹ்மீனல்லாத மற்ற பெண்கள் கற்பொழுக்கமுள்ள பெண்களாக இருந்தாலும் சரியே அவர்கள் விலக்கப்பட்டவர்கள் என்று கொள்ள முடியும். இது எனது ஆய்வே தவிர நிரூபணத்திற்கு அல்ல.

இரண்டு கன்னியை திருமணம் செய்யகூடாது என்று மொழியாக்கம் செய்வதற்குரிய வாசக அமைப்பு என்ன?

இதை தான் உறுதி செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். 23 வது வசனத்தில் தடுக்கப்படவர்களை பட்டியலிடும் வசனம் 24 இல் தான் முடிவடைகிறது.

4 :24  இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்...

பின்னர் இவர்களை தவிர மற்ற பெண்களை மஹர் தொகையோடு  நீங்கள் திருமணம் முடிக்கலாம் என்று சொல்லபடுகிறது. இதனால் இந்த வசனத்தில் வரும் முதல் வாக்கியம் இரண்டு சகோதிரிகளை என்பதோடு சேருமா என்பதையும் பார்க்க நாடினேன். அது வரை இதை நிரூபனமாக்கவில்லை. 

எனவே உங்கள் கூற்று படியே கணவனுள்ள பெண்களை மணமுடிக்க கூடாது என்பதால் கணவன் இல்லாத என்று எடுத்து கொண்டாலும் அது திருமணமாகாத என்று சொல்ல முடியாது. திருமணமாகி கணவனை இழந்த , விவாகரத்தான  என்பதாகவும்  எடுத்து கொள்ள முடியும். திருமானவர்களுக்குரிய திருமனாகதவர்களுக்குரிய  விபச்சார சட்டம் தனி தனி என்பதை இனி பார்ப்போம் இன்ஷா அல்லா. 

-------------------------------------------------------------------------------------------



Nashid

அன்பு சகோதரர் அஸ்ஸலாமு அலைக்கும்..


அடிமை பெண்களை தவிர என்றால் அடிமை பெண்களை அவர்களுடைய கணவன் இருக்கும் போதே திருமணம் முடித்து கொள்ளலாமா ?
4 :24 வசனத்தில் வரும் முஹ்சனாதிற்கு திருமணம் ஆனவள் என்று அர்த்தம் கொடுத்தால், திருமணம் ஆன அடிமை பெண்களை திருமணம் செய்யலாம் என்று பொருள் வருமே என்று கேட்க்கிறீர்கள்.
அடிமைப்பெண்களை பொறுத்தவரை, அவர்களை திருமணம் செய்யாமலேயே அவர்களுடன் உறவு வைக்கும் பழக்கம் தான் அன்று இருந்தது. அடிமை பெண்களை திருமணம் செய்யாமல், "போதுமாக்கி கொள்ளலாம் (4 .25 ) அவர்களின் எஜமானர்களின் அனுமதியுடன் திருமணம் செய்யலாம். அடிமை பெண்கள் விஷயத்தில் சொல்லப்படும் சட்டம் சுதந்திரமான பெண்களுக்கு பொருந்தாது.
இந்த இடத்தில், அடிமை பெண்கள் தவிர, மற்ற திருமணமான பெண்களை திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது என்பது எறேந்த பொருளும் கொடுக்க இயலாத நேரடியான வார்த்தை! 


முதலில் வெறுமனே கற்பொழுக்கமுள்ள பெண்கள் என்று கூறிவிட்டு இரண்டாவதாக கூறுகையில் முஹ்மீனான கற்பொழுக்கம் உள்ள என்று சொல்லபடுவதும் சிந்திக்க வேண்டியதே.
இந்த அர்த்தம் கொண்டால் 4 : 24  இல் முஹ்மீனல்லாத மற்ற பெண்கள் கற்பொழுக்கமுள்ள பெண்களாக இருந்தாலும் சரியே அவர்கள் விலக்கப்பட்டவர்கள் என்று கொள்ள முடியும். இது எனது ஆய்வே தவிர நிரூபணத்திற்கு அல்ல.


  • முதல் வசனத்தில் முமினான பெண் என்றோ, முமினல்லாத பெண் என்றோ சொல்லப்படவில்லை.
  • இரண்டாம் வசனத்தில் முமினான பெண் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதை வைத்து, 4 : 24  இல் முஹ்மீனல்லாத மற்ற பெண்கள் கற்பொழுக்கமுள்ள பெண்களாக இருந்தாலும் சரியே அவர்கள் விலக்கப்பட்டவர்கள் என்று கொள்ள முடியும்.

என்று கூறுகிறீர்கள்.

நான் சொல்வது, அவள் முமினான பெண் என்றாலும் சரியே, அவள் விலக்கப்பட்டவள் தான், என்கிறேன்.

இதை எவ்வாறு மறுக்கிறீர்கள்?

ஒரு வசனத்தில் முமினான பெண், முமினல்லாத பெண் என்று தரம்பிரிக்கப்படவில்லை என்றால், அது பொதுவாக தானே எடுக்கப்பட வேண்டும்?
ஆகவே, 4 :24 வசனத்தின் படி, திருமணம் ஆன பெண்ணை (அவள் முமினாக இருந்தாலும் , முமின் இல்லைஎன்றாலும்) திருமணம் செய்ய கூடாது!!


இங்கு புரிய வேண்டிய அடிப்படை என்ன வென்றால்,  முதல் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள முஹ்சனாதும் இரண்டாம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள முஹ்சனாதும் ஒரே பெண்ணை குறிக்குமா அல்லாது வேறு வேறு பெண்ணை குறிக்குமா? என்பது தான்.

ஒரே பெண்ணை குறிக்காது என்பது அந்த இரு வசனங்களை படித்தாலே புரிந்து விடும்.
முதல் வசனத்தில் முஹ்சனத்தை திருமணம் செய்ய தடை உள்ளது.
இரண்டாம் வசனத்தில் முஹ்சனத்தை திருமணம் செய்ய அனுமதி உள்ளது.
ஆகவே, இரு இடங்களிலும் வெவ்வேறு பெண்களை தான் முஹ்சநாத் என்று அல்லாஹ் சொல்கிறான்!!

முதல் வசனத்தில் முஹ்சநாத் என்பது கர்ப்போழுக்கமுள்ள திருமணம் ஆனவள் என்று நீங்களும் சொல்லுகிறீர்கள். நானும் ஒப்புக்கொள்கிறேன்.

இரண்டாம் வசனம் என்ன?

  • நிச்சயம் கர்ப்போழுக்கம் இல்லாத திருமணம் ஆனவளை குறிக்காது!
  • இதை குறிக்காது என்றால், எஞ்சியிருப்பது, கர்ப்போழுக்கம் உள்ள திருமணம் ஆகாதவளை தான்!


ஜான் trustin மொழி பெயர்ப்பு 4 :24 உங்கள் வாதப்படி தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இருந்தாலும் அதற்கு அடுத்த வசனம் திருமணம் ஆகாதவர்கள் என்று முரணான ஒரு அர்த்தத்தை கொடுக்காமல் வேறு அர்த்தம் தரப்பட்டுள்ளது. 
ஜான் ட்ரஸ்டில் 4 :25 வசனத்திற்கு திருமணம் ஆகாதவள் என்று தமிழாக்கம் செய்யாமல் வெறுமனே கர்ப்போழுக்கமிக்கவல் என்று மொழியாக்கம் செய்திருப்பதாக சொல்கிறீர்கள்.

கர்ப்போழுக்கமிக்கவல் என்று மொழிப்பெயர்ப்பு செய்திருப்பதை நான் குறை சொல்லவில்லை! நான் சொல்வதெல்லாம், இது முழுமையான மொழிப்பெயர்ப்பு இல்லை என்பது தான்.

கர்ப்போழுக்கமுள்ள யார்? திருமணம் ஆனவளா ஆகாதவளா? என்று கேள்விக்கும் மொழியாக்கம் பதில் சொல்ல வேண்டும்!
அது தான நான் கேட்பது.
அல்லது, கணவனை கொண்டுள்ளவளா  ? அல்லது கணவன் இல்லாதவளா?

கர்ப்போழுக்கமுள்ள திருமணம் ஆனவளை திருமணம் செய்யலாமா? என்று கேட்டால் கூடாது என்று அவர்களே பதிலும் சொல்வார்கள்.
முந்தைய வசனத்தில் அதற்கு தடை உள்ளது என்பார்கள்.
இல்லை, அது கர்ப்போழுக்கமுள்ளவலை குறிக்காது, கர்ப்போழுக்கமில்லாதவலை தான் குறிக்கும் என்றால் அதற்குரிய வாசகம் அந்த வச்னத்தில் இல்லாதவரை , அது வெறும் யூகமான வாதம் தான்.

இந்த அடிப்படையை தான் நான் சொல்லி வருகிறேன்.


இந்த வசனத்தில் வரும் முதல் வாக்கியம் இரண்டு சகோதிரிகளை என்பதோடு சேருமா என்பதையும் பார்க்க நாடினேன். அது வரை இதை நிரூபனமாக்கவில்லை. 

தொடர்ச்சியாக ஒன்றை குறித்து பேசப்பட்டு வருவதால், அதை குறித்து தான் இதுவும் பேசுகிறது என்று சொல்ல முடியாது. அவ்வாறு சொல்வதாக இருந்தால் அதற்குரிய வார்த்தை பிரயோகமும் இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் இருக்கிறதா?

4 :22   வசனத்தில் உங்கள் தந்தை மனமுடித்த பெண்களை நீங்கள் மணக்காதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
4 :23 இல் பொதுவாக யார் யாரெல்லாம் தடை என்று வருகிறது.
4 :24 இல் முஹசனாதும் தடை என்று வருகிறது.

இந்த இடத்தில், முஹ்சனாதிற்கு இரு கன்னிகள் என்ற   முந்தைய சட்டங்களோடு எவ்வாறு நீங்கள் பொருத்த முடியும்?
அப்படியானால், தந்தையின் மனைவி என்று வருவதோடும் பொருத்தலாம் என்று ஒருவர் கருத்து சொன்னால் என்ன செய்வது?
தனி தனி சட்டங்களை தனி தனியாக தானே பார்க்க வேண்டும்!


---------------------------------------------------------------------------------------------




அலைக்கும் அஸ்ஸலாம்,

அன்பு சகோ நஷித் அவர்களுக்கு , 
  • முதல் வசனத்தில் முமினான பெண் என்றோ, முமினல்லாத பெண் என்றோ சொல்லப்படவில்லை.
  • இரண்டாம் வசனத்தில் முமினான பெண் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதை வைத்து,
 4 : 24  இல் முஹ்மீனல்லாத மற்ற பெண்கள் கற்பொழுக்கமுள்ள பெண்களாக இருந்தாலும் சரியே அவர்கள் விலக்கப்பட்டவர்கள் என்று கொள்ள முடியும்.

என்று கூறுகிறீர்கள்.

நான் சொல்வது, அவள் முமினான பெண் என்றாலும் சரியே, அவள் விலக்கப்பட்டவள் தான், என்கிறேன்.

இதை எவ்வாறு மறுக்கிறீர்கள்?


ஒரு வசனத்தில் முமினான பெண், முமினல்லாத பெண் என்று தரம்பிரிக்கப்படவில்லை என்றால், அது பொதுவாக தானே எடுக்கப்பட வேண்டும்?
ஆகவே, 4 :24 வசனத்தின் படி, திருமணம் ஆன பெண்ணை (அவள் முமினாக இருந்தாலும் , முமின் இல்லைஎன்றாலும்) திருமணம் செய்ய கூடாது!!

உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் முன் என் தரப்பிலும் அதே கேள்வி உள்ளது. முதலில் முஹ்மீனலாத கற்பொழுக்க முள்ள பெண்களை திருமணம் செய்ய கூடாது என்பதை எப்படி மறுக்கிறீர்கள் என்பதும் எனது நியாயமான  கேள்வி. உங்கள்

நான் சொல்வது, அவள் முமினான பெண் என்றாலும் சரியே, அவள் விலக்கப்பட்டவள் தான், என்கிறேன்.

இதை எவ்வாறு மறுக்கிறீர்கள்?

உங்கள் கருத்துப்படி ஒரு வசனத்தில் திருமனானவர்கள் , திருமணமாகதவர்கள் என்று பிரிக்க  படாத போது அது பொதுவாக தானே எடுக்கப்பட வேண்டும்.?
ஆனால் தரம் பிரித்து தான் இருவரும் அர்த்தம் தருகிறோம். நீங்கள் திருமணமானவர்கள் என்றும் நான் முஹ்மீனலாத என்றும் தரம் பிரிக்கிறேன். இரண்டில் எது சரியெனவும் பொருந்தி போகிறது என்றும் தான் பார்க்க வேண்டும்.

 உங்கள் கருத்து படி எடுத்து கொண்டால் , முதல் குறை - திருமணமான கற்பொழுக்க முள்ள பெண்கள் தடுக்கப்படவில்லை. இதை எப்படி சொல்கிறேன் என்றால் திருமணமான பெண்களில் விதவையும், விவாகரதானவர்களும் அடங்குவர். இந்த சட்டம் திருமணமானவர்களை மணமுடிக்க கூடாது என்று சொன்னால் விதவையும் விவாகரத்தான பெண்ணும் திருமனமுடிப்பதில் தடுக்கபடுவார்கள்.
 எனவே திருமணமானவர்கள் என்று பொருள் கொள்வது எப்படி?

இரண்டாவது குறை -   அதிலும் இந்த வசனத்தில் திருமணமானவர்கள் தடுக்கப்பட்டு பின் அடுத்த வசனத்தில் திருமணமாகாத  என்று பொருள் கொள்வது இரண்டு முரணான அர்த்தம் என்பதை நீங்களும் ஒத்து கொண்டுள்ளீர்கள். 

மூன்றாவது குறை - நாமாக தான் திருமணமானவர்கள் திருமணமாகதவர்கள் என்று இரண்டு முரணான அர்த்தத்தை தரம் பிரித்திருக்கிறோம்.

எனது கருத்தில் ,
தரம் பிரிக்கும் முன் இந்த வார்த்தைக்கு கற்பொழுக்கமுள்ள என்ற அர்த்தத்தை மட்டும் கொடுக்கிறேன். அப்படி கொடுக்கையில் ஒரு புறம் அவர்கள் தடுக்கப்பட்டும் அடுத்த வசனத்தில் அவர்களை மணமுடிப்பதில் சிரமம் இருந்தால் என்றும் சொல்லபடுவதால் இரண்டும் தரம் பிரிக்க பட வேண்டும் என்பதை உணர்கிறேன். நீங்களும் உணர்ந்துளீர்கள்.

ஒரே பெண்ணை குறிக்காது என்பது அந்த இரு வசனங்களை படித்தாலே புரிந்து விடும்.
முதல் வசனத்தில் முஹ்சனத்தை திருமணம் செய்ய தடை உள்ளது.
இரண்டாம் வசனத்தில் முஹ்சனத்தை திருமணம் செய்ய அனுமதி உள்ளது.
ஆகவே, இரு இடங்களிலும் வெவ்வேறு பெண்களை தான் முஹ்சநாத் என்று அல்லாஹ் சொல்கிறான்!!

தரம் பிரிக்கும் முன் ஏதாவது வார்த்தை தரம் பிரிக்க அல்லா வேறுபடுத்தி கூறியுள்ளான என்று பார்க்கிறேன். அப்படி பார்க்கையில் இரண்டாவதாக சொல்லப்படும் வசனத்தில் முஹ்மீன் என்ற ஒரு வார்த்தை அல்லா சேர்த்து கூறியுள்ளான். இதுவே தரம் பிரிக்க போதுமான வார்த்தையாக படுகிறது. இதை முன்னுள்ள தடுக்கப்பட்டவர்களின் பட்டியலோடு சேர்த்து பார்க்கிறேன். இதையே பொருத்தி பார்க்கிறேன் அது எந்த குழப்பும் இன்றி அர்த்தம் தருகிறது. 

4:24இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, 
(முஹ்மீனல்லாத) கற்பொழுக்கமுள்ள  பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் கற்பொழுக்கமுள்ள பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

உங்கள் கருத்துப்படி தரம் பிரிக்கையில் , ஒரு இடத்தில் திருமணமான என்று பொருள் தர வேண்டும் அது விதவையையும் சேர்த்து அடக்கும் என்பதால் திருமணமான கணவனுள்ள என்று சேர்த்து அர்த்தம் செய்ய வேண்டும்.  அதன் பின் வரும் வசனத்தில் திருமணமாகாத கணவனில்லாத என்று அர்த்தம் கொடுக்க வேண்டும். இரண்டும் நேர் முரண். பகலுக்கும் இருட்டிர்க்கும் ஒரு வார்த்தை எப்படி அர்த்தம் செய்ய முடியும் என்பதால் தான் அல்லாவின் வார்த்தையிலேயே ஒரு வார்ஹ்தையை கொண்டு தரம் பிரிக்கிறேன். இதில்  என்ன தவறு என்று சுட்டி காட்டவும். அல்லது எது சிறந்தது என்று சொல்லவும்.

இந்த இடத்தில், முஹ்சனாதிற்கு இரு கன்னிகள் என்ற   முந்தைய சட்டங்களோடு எவ்வாறு நீங்கள் பொருத்த முடியும்?
அப்படியானால், தந்தையின் மனைவி என்று வருவதோடும் பொருத்தலாம் என்று ஒருவர் கருத்து சொன்னால் என்ன செய்வது?
தனி தனி சட்டங்களை தனி தனியாக தானே பார்க்க வேண்டும்!

இப்படி செய்ய முடிமா என்பது தான் சந்தேகம் , முடியாதென்றால் நான் மேலே சொன்ன தரம் பிரித்தல்  ஒத்து போவதால் அதை கொள்கிறேன்.

இந்த இடத்தில், முஹ்சனாதிற்கு இரு கன்னிகள் என்ற   முந்தைய சட்டங்களோடு எவ்வாறு நீங்கள் பொருத்த முடியும்?

எதனால் இப்படி பொறுத்த முடியுமா?  என்று எனக்கு சந்தேகம் வந்ததெனில் ஒரு அறிஞர் அப்படி பொருத்தி அர்த்தம் தந்துள்ளார் அதனை உறுதி செய்யவே. மேலும் பி. ஜெ அவர்களின் மொழிபெயர்ப்பில் ஈஸா(அலை) அவர்கள் தொரபுடைய வசனத்தில் 'தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் ,உயிரோடு உள்ளவனாகவும் ' என்ற இரு சரத்தும் சேர்ந்து மொழிபெயர்க்க வேண்டும் என்று சொன்னதால் அப்படி இந்த வசனத்திலும் ஏதும் இலக்கணம் இடம் தருகிறதா என்று தெரிந்து கொள்ளவே. நன்றி 


-----------------------------------------------------------------------------------------




Nashid


ஸலாம்.

உங்கள் கருத்து படி எடுத்து கொண்டால் , முதல் குறை - திருமணமான கற்பொழுக்க முள்ள பெண்கள் தடுக்கப்படவில்லை. இதை எப்படி சொல்கிறேன் என்றால் திருமணமான பெண்களில் விதவையும், விவாகரதானவர்களும் அடங்குவர். இந்த சட்டம் திருமணமானவர்களை மணமுடிக்க கூடாது என்று சொன்னால் விதவையும் விவாகரத்தான பெண்ணும் திருமனமுடிப்பதில் தடுக்கபடுவார்கள்.
 எனவே திருமணமானவர்கள் என்று பொருள் கொள்வது எப்படி?

திருமணம் ஆனவர்கள் என்றால், திருமணம் ஆகியிருப்பவர்கள் - கணவனுடன் இருப்பவர்கள்!
இப்போது பொருள் கொள்ளலாம்!



இரண்டாவது குறை -   அதிலும் இந்த வசனத்தில் திருமணமானவர்கள் தடுக்கப்பட்டு பின் அடுத்த வசனத்தில் திருமணமாகாத  என்று பொருள் கொள்வது இரண்டு முரணான அர்த்தம் என்பதை நீங்களும் ஒத்து கொண்டுள்ளீர்கள். 

அர்த்தம் முரண்பாடானது என்றாலும், இடம் சரியான அர்த்தம் எது என்பதை முடிவு  செய்யும் .

மூன்றாவது குறை - நாமாக தான் திருமணமானவர்கள் திருமணமாகதவர்கள் என்று இரண்டு முரணான அர்த்தத்தை தரம் பிரித்திருக்கிறோம்.
முதலில் முஹ்மீனலாத கற்பொழுக்க முள்ள பெண்களை திருமணம் செய்ய கூடாது என்பதை எப்படி மறுக்கிறீர்கள் என்பதும் எனது நியாயமான  கேள்வி.
"முஹ்மினல்லாத " என்று  , அந்த  வசனத்தில்  சொல்லப்படவில்லை .


முஹ்சனத்  என்பதற்குரிய அகராதி பொருள் என்று நீங்கள் அறிந்து வைத்திருப்பது என்ன என்பதை இங்கு எனக்கு அறியத்தரவும்..

  • சுருக்கமாக, முஹ்சநாத என்ற அரபிப்பததுக்கு ""திருமணம் ஆன""- ""திருமணம் ஆகாத"" ,. என்ற இரு அர்த்தங்களையும் கொடுக்க முடியாது என்பத உங்கள் கருத்தா?
  • குர் ஆனில் வரக்கூடிய அனைத்து இடங்களிலும் முஹ்சநாத் என்பதற்கு "கர்ப்புடைய" என்பது மட்டும் தான் பொருந்தக்கூடிய பொருளா?

இதை தெளிவாக்கினால், தொடர்ந்து பேசுவது புரியலாம்..
வஸ்ஸலாம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------





வசலாம் ,

முஹ்சனாத் - chaste (Abstaining from unlawful sexual intercourse ) கற்பொழுக்கமுள்ள 

அர்த்தம் முரண்பாடானது என்றாலும், இடம் சரியான அர்த்தம் எது என்பதை முடிவு  செய்யும் .

இப்படி முரண்பாடான ஒரு அர்த்தம் ஒரு வார்த்தைக்கு இருக்க முடியாது. இடத்திற்கு சரியான அர்த்தம் செய்ய வேண்டும் என்றால் கூட இரண்டு முரணான அர்த்தமா செய்ய முடியும்?

சுருக்கமாக, முஹ்சநாத என்ற அரபிப்பததுக்கு ""திருமணம் ஆன""- ""திருமணம் ஆகாத"" ,. என்ற இரு அர்த்தங்களையும் கொடுக்க முடியாது என்பத உங்கள் கருத்தா?
ஆம் கண்டிப்பாக கொடுக்க முடியாது. கொடுக்க கூடாது.
குர் ஆனில் வரக்கூடிய அனைத்து இடங்களிலும் முஹ்சநாத் என்பதற்கு "கர்ப்புடைய" என்பது மட்டும் தான் பொருந்தக்கூடிய பொருளா?

ஆம் . கற்புடைய அல்ல கற்பொழுக்கமுள்ள . பொருந்தகூடிய ஒரே பொருளா என்பது அல்ல அது தான் அர்த்தம் என்பது என் பதில்.

"முஹ்மினல்லாத " என்று  , அந்த  வசனத்தில்  சொல்லப்படவில்லை 

திருமணமான கணவனுள்ள , திருமணமாகாத கணவனில்லாத  என்றும் சொல்லப்படவில்லை தான்.


----------------------------------------------------------------------------------------------------------------------------



Nashid


அஸ்ஸலாமு அலைக்கும்..
நான் சொல்லும் பொருள் என்பது, அனைத்து வசனத்திற்கும் பொருந்துகிறது.. விபச்சாரத்தின் தண்டனையுடனும் பொருந்துகிறது.

நீங்கள் சொல்வது போல, 
திருமணம் ஆனவள், அல்லது ஆகாதவள் என்ற எதையும் முஹ்சநாத் குறிக்காது என்றால், கர்ப்புடைய, நம்பிக்கை கொண்ட பெண்ணிற்குரிய தண்டனையில் பாதி என்று உங்கள் கருத்துப்படி அந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கர்ப்புடைய, நம்பிக்கை கொண்ட பெண்ணிற்குரிய தண்டனை என்ன? கர்ப்புடைய, நம்பிக்கை  கொள்ளாதவளுடைய தண்டனை என்ன?

இதை விளக்கினால் தான், நீங்கள் இந்த வசனத்திற்கு தரும் அர்த்தம் சரியாகும்.. இல்லைஎன்றால் அந்த வசனமும் (4 :25 ) அதனால், இதற்கு முந்தைய வசனமும் புரியாமல் போகும் என்பது எனது கருத்து.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------





அலைக்கும் அஸ்ஸலாம்,
அனைத்து வசனத்திற்கும் நீங்கள் தரும் பொருள் பொருந்துகிறதா ? பொருந்துகிறது என்றால் ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு பொருள் கொண்டு தான் பொருந்துகிறது.

முஹ்சனாத் என்ற ஒரே வார்த்தை - 4 : 24  இல் திருமணமான கணவனையுடைய  பெண் .
அதே வசனத்தில் இவர்களை தவிர மற்ற திருமணமாகாத  மற்றும் திருமணமான கணவனை இழந்த , இல்லாத பெண் 
4 :25  இல் கற்புடைய கணவனில்லாத பெண்.
24 : 4 , 23  இல் கற்பொழுக்கமுள்ள  

என்னுடைய புறிதலில் முஹ்மீனலாத என்றும் முஹ்மீன் என்றும் கற்பொழுக்கம் முள்ள பெண்களை வகை படுத்தலாம் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்,

5:5இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.


கர்ப்புடைய, நம்பிக்கை கொண்ட பெண்ணிற்குரிய தண்டனை என்ன? கர்ப்புடைய, நம்பிக்கை  கொள்ளாதவளுடைய தண்டனை என்ன?

கற்பொழுக்கம் உள்ள பெண்கள் என்று அதுவரை கருதப்பட்ட பெண்கள் 4 சாட்சி கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும். பின்  100 கசையடி கொடுக்கப்பட வேண்டும். இதில் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு தான் இந்த சட்டம் என்று நம்புகிறேன். நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அவர்களது சட்டம் தான் பொருந்தும். புஹாரியில் கூட யூதர்கள் இரண்டு நபர்களை ரசூல் (ஸல்) அவர்களிடம் விபச்சாரம் செய்ததாக ஒப்படைத்த போது அவர் அவர்களது சட்டப்படி தான் தண்டித்தார். 

24:2விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

இவை அனைத்தும் இசலாமிய சட்டம் தானே தவிர நம்பிக்கை கொல்லாதவர்களுகேன்று தனியாக இல்லை என்பது என் கருத்து. கற்புள்ள பெண்கள் குற்றம் நிரூபிக்க பட்டால் என்ன தண்டனையோ அதில் பாதி தான் அடிமையான நம்பிக்கை கொண்டவர்களுக்கு. 


---------------------------------------------------------------------------------------------------------------------------------




Nashid


ஸலாம். 

""விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்""
இதில் முமினான விபச்சாரி என்று தனியாக சொல்லப்படவில்லை.. இதில் முமின், முமினல்லாத ஆகிய இருவரும் அடங்குவார்களா?

இஸ்லாம் கூறுகிற எந்த குற்றவியல் சட்டத்தையும் எடுத்துக்கொண்டு, அதில் முமின் - முமினல்லாத , என்று தரம் பிரிக்கப்பட்டதை காட்டவும்..

முமினான விபச்சாரிக்கும் முமினல்லாத விபச்சாரிக்கும், முமினான திருடனுக்கும் முமினல்லாத திருடனுக்கும் ஒரே இஸ்லாமிய சட்டத்தின் படி தான் நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிதுள்ளார்கள்.

ஆதாரம் தேவையெனில், இன்ஷா அல்லாஹ் தேடி தருகிறேன்.


மேலும், 
ஒருவன் விபச்சாரம் செய்யும் போதும், மது அருந்தும் போதும் அவன் முமினாக இருப்பதில்லை - புஹாரி 6772 


என்ற ஹதீஸ், உங்கள் கருத்தை நேரடியாக மறுக்கிறது. மூமினுக்கு ஒரு சட்டம், முமினல்லாதவருக்கு வேறு சட்டம் என்று இருக்குமானால், இவ்வாறு சொல்ல வேண்டியதில்லை..


புஹாரியில் கூட யூதர்கள் இரண்டு நபர்களை ரசூல் (ஸல்) அவர்களிடம் விபச்சாரம் செய்ததாக ஒப்படைத்த போது அவர் அவர்களது சட்டப்படி தான் தண்டித்தார். 
ஹதீஸ் எண் இருந்தால் தரவும்..


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------






அஸ்ஸலாமு அலைக்கும் ,

அன்பு சகோ நஷித் , 
உங்கள் புறிதலில் சில மாற்றங்களை தர கடமை பட்டுள்ளேன்.

இஸ்லாமிய சட்டத்தை பொறுத்த மட்டில் நான் சொன்னது முஹ்மீனல்லாத முஹ்மீனுக்கு என்று தனியாக சட்டம் இல்லை. சட்டம் ஒன்று தான். நான் சொன்னது ,

இவை அனைத்தும் இசலாமிய சட்டம் தானே தவிர நம்பிக்கை கொல்லாதவர்களுகேன்று தனியாக இல்லைஎன்பது என் கருத்து.

நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு தனியாக சட்டம் இல்லை என்று தான் கூறியுள்ளேன். சில அடிப்படையை தெளிவு படுத்தி கொள்ள நினைக்கிறேன்.

இஸ்லாமிய சட்டம் என்பது கண்டிப்பாக நம்பிக்கை கொண்டவர் அதை தான் பின்பற்ற வேண்டும். அது தான் அல்லாவுடைய சட்டம் என்பது நம்பிக்கை கொள்பவர்களுக்கு தீர்மானமான ஒன்று . அதே நம்பிக்கை அற்றவர்களுக்கு இந்த சட்டங்கள் சிறந்ததாக இருக்கும் என்பதால்  வேண்டுமானால் அவர்கள் பின்பற்றுவார்களே  தவிர இது அல்லாவுடைய சட்டம் என்பதால் அல்ல.

தவிர , ஒருவன் விபச்சாரம் செய்யும் போதும், மது அருந்தும் போதும் அவன் முமினாக இருப்பதில்லை - 

இதில் இருந்து என்ன புறிந்து கொண்டீர்கள் என்பது தெரியவில்லை. இது ஒரு உண்மையான முஹ்மீன் பெரும் பாவங்களை செய்ய மாட்டான் என்பது தான் இதன் கருத்து. இந்த ஹதிஷை நம்பிக்கை அற்றவர்களுக்கும்  இந்த சட்டம் என்பதற்கு ஆதாரம் காண்பிக்க முடியாது. ஒருவர் விபச்சாரம் அல்லது மது இவற்றை செய்யும் போது அவர் நம்பிக்கையற்றவர் ஆகிறார் என்று பொதுவாக எடுத்து கொள்ளகூடாது. அந்த தருணத்தில் அவர் இறை அச்சம் கொள்ளவில்லை என்பது தான் இதில் புரிய முடிகிறது.

 ஒரு வேளை உங்கள் கருத்தில் புறிந்து கொண்டால் இந்த தவறுகளை செய்பவன் முஹ்மீனலாமல் போய் விடுகிறான். எனவே தவறுக்கான சட்டம் அனைத்துமே முஹ்மீனல்லாதவனுக்கு மட்டும் தான். ஏனெனில் தவறு செய்த மறுகனமே அவன் நம்பிக்கையற்றவனாகிறான்.?

நீங்கள் தான் முஹ்மீனலாத கற்பொழுக்கம் உடைய பெனுக்கு என்ன தண்டனை என்றும் முஹ்மீனலாத கற்பொழுக்கமுள்ள பென்னுக்கு என்ன தண்டனை என்று கேடீர்களே தவிர அது என்னுடைய வாதம் அல்ல.
முஹ்சனாத் திற்கு என்ன தண்டனையோ அதில் பாதி தான் குறிப்பிட்டுள்ளதே தவிர முஹ்மீனான முஹ்சனாதிர்க்கு என்று குறிப்பிடவில்லை.

பொதுவாக ஒரு இஸ்லாமிய சட்டம் என்பது நம்பிக்கை கொண்டவர்களால்  தீர்ப்பளிக்கையில் கொடுக்க வேண்டியது. நம்பிக்கை அற்ற மற்றவர்கள் இதை சிறந்தது என்று புறிந்து கொண்டால் மட்டுமே செயல் படுத்தலாம் அது அவர்களது விருப்பம்.
உதாரணத்திற்கு அதே 24 வது சூராவில் தனதுமனைவி மீது குற்றம் சுமத்தும் கணவனுக்கு சாட்சி இல்லாது போனால் அதற்கு தீர்ப்பாக 4 முறை அல்லாவின் மீது சத்தியம் இட்டு பின் 5 அவது முறை தன் மீது அல்லாவின் சாபம் உண்டாகட்டும் என்று சொல்ல வேண்டும். இந்த சத்தியம்  செய்ய நம்பிக்கையற்றவனுக்கு என்ன உள்ளது.?

எனவே இஸ்லாமிய சட்டம் என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் , நம்பிக்கை கொண்டவர்களுக்கு அது கடமை, நம்பிக்கை அற்றவர்களுக்கு அது அவர்களது விருப்பம்.

நீங்கள் கேட்ட ஹதிஷின் எண் : Sahih Bukhari 6.79, Narrated by Abdullah ibn Umar

-------------------------------------------------------------------------------------------------------------




Nashid


முஹ்சனாதிற்கு திருமணம் ஆன, ஆகாத என்ற எந்த பொருளும் கொடுக்க முடியாது என்ற கருத்தின் படி நீங்கள் விளக்கமளித்தால், ௪:௨௫ வசனத்தில் முஹ்சனாதின் தண்டனையில் பாதி என்று வருகிறதே, நம்பிக்கை கொண்டவளின் தண்டனையில் பாதி என்று பொருள் கொண்டால் நம்பிக்கை கொள்ளாதவளுடைய தண்டனை என்று வேறு ஏதேனும் உண்டா? என்று கேட்டேன்.
அதற்கு பதில் சொல்கிற நீங்கள், நம்பிக்கை கொள்ளாதவளுடைய தண்டனை என்பது அவர்களது விருப்பத்தை பொறுத்தது தான் என்று சொல்கிறீர்கள்.

குர் ஆனில், அல்லாஹ் சொல்வதற்கு என்ன விளக்கம் என்பதையும் சேர்த்து தான் நீங்கள் இதற்கு காரணம் சொல்ல வேண்டும்.
நம்பிக்கை கொண்டவளின் தண்டனையில் பாதி என்றால், நம்பிக்கை கொல்லாதவளுக்குரிய தண்டனை என்றும் அல்லாஹ் ஏதேனும் சட்டம் சொல்லியிருக்க வேண்டும்.. நபி (ஸல்) அவர்கள் சட்டம் சொல்லியிருக்க வேண்டும்..
இல்லை, எந்த நலையிலும் அனைத்து சட்டங்களும் முஸ்லிம்களுக்கு தான் எனும் போது, இந்த இடத்தில் நம்பிக்கை கொண்டவுளுக்குரிய தண்டனையில் பாதி என்று அல்லாஹ் சொல்ல தேவையில்லை.. வெறுமனே விபசாரதிர்க்கான தண்டனையில் பாதி என்று சொன்னாலே போதுமானது.

நீங்கள் குறிப்பிட்டதை போன்று, சத்தியம் செய்வதிலோ, மற்ற மற்ற விஷயங்களிலோ சட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் தானே என்பதை நானும் மறுக்கவில்லை.
மற்ற மற்ற சட்டங்களுக்கும், இஸ்லாமிய அரசின் கீழ் இயங்கக்கூடிய குற்றவியல் சட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. நப இ(ஸல்) அவர்கள் காட்டியுள்ள வேருபாடுகாய் இன்ஷா அல்லாஹ் தருகிறேன்.
ஆனால், மற்ற மற்ற சட்டங்களை சொல்லக்கூடிய அனைத்து இடங்களிலும் அல்லாஹ், இதே போன்று நம்பிக்கை கொண்டவர்குக்கு இந்த சட்டம் என்று தான் சொல்கிறானா? அல்லது பொதுவாக சொல்கிறானா?


முஹ்சனாத் திற்கு என்ன தண்டனையோ அதில் பாதி தான் குறிப்பிட்டுள்ளதே தவிர முஹ்மீனான முஹ்சனாதிர்க்கு என்று குறிப்பிடவில்லை.
அதை தான் நானும் சொல்கிறேன்.. முமினான முஹ்சனத் என்று சொல்லப்படாத நிலையில் முமினான என்று நீங்கள் சேர்க்கும் போது, முமினல்லாதவளுக்குரிய தண்டனை என்ன என்பதையும் இஸ்லாம் சொல்லியுள்ளது என்று தான் பொருள் தரும்.
முஹ்சனதிற்கு என்ன தண்டனையோ, அதில் பாதி என்று தான் சொல்லப்பட்டதே தவிர, பொதுவாக அல்லாஹ் சொல்லியுள்ள விபசாரதிற்க்கான தண்டனையில் பாதி என்று சொல்லவில்லை.
முமினல்லாதவளுக்குரிய தண்டனை என்று இஸ்லாத்தில் எதுவும் இல்லை என்றால், இந்த இடத்தில் முமினான பெண்ணுக்குரிய தண்டனையில் பாதி என்று அல்லாஹ் சொல்ல மாட்டான்!


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------





சகோதரரே,

முஹ்சனாத் - கற்பொழுக்கமுள்ள 24 : 4 , 24 :23  4 :24  , 4 : 25
இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.

எல்லா இடங்களிலும் கற்பொழுக்கம் என்று தான் அர்த்தம் தருகிறது. 4 வது சூராவை தவிர  அந்த அர்த்தம் தான் தாங்களும் கொடுத்துள்ளீர்கள்.

5 : 5   இல் முஹ்மீனான முஹ்சனாத் , வேதம் கொடுக்கப்பட முஹ்சனாத் , என்று பிரித்து அல்லா கூறியுள்ளதால். பொதுவாக வரும் முஹ்சனாத் கற்பொழுக்கம் முள்ள  எல்லா பெண்களையும் குறிக்கிறது என்றும்  முஹ்மீன் என்று சொல்லப்பட்ட இடங்களில் முஹ்மீனான கற்பொழுக்கம் முள்ள பெண்களையும் குறிக்கிறது என்று பொருள் கொள்கிறேன்.  4 :24 இல் வேறு அர்த்தம் கொள்ளாமல் கற்பொழுக்கம் முள்ள என்றே அர்த்தம் கொள்கிறேன், இருந்தும் அடுத்த வசனத்தில் முஹ்மீனுள்ள முஹ்சனாத் என்று வருவதால் அதை முஹ்மீனல்லாத முஹ்சனாத்என்று சுலபமாக புறிந்து கொள்கிறேன். இது என் புறிதல்.

4 :25   வசனத்தில் முஹ்சனாதின் தண்டனையில் பாதி என்று வருகிறதே, நம்பிக்கை கொண்டவளின் தண்டனையில் பாதி என்று பொருள் கொண்டால் நம்பிக்கை கொள்ளாதவளுடைய தண்டனை என்று வேறு ஏதேனும் உண்டா? என்று கேட்டேன். 

முஹ்சனாத் திற்கு என்ன தண்டனையோ அதில் பாதி தான் குறிப்பிட்டுள்ளதே தவிர முஹ்மீனான முஹ்சனாதிர்க்கு என்று குறிப்பிடவில்லை.
அதை தான் நானும் சொல்கிறேன்.. முமினான முஹ்சனத் என்று சொல்லப்படாத நிலையில் முமினான என்று நீங்கள் சேர்க்கும் போது, முமினல்லாதவளுக்குரிய தண்டனை என்ன என்பதையும் இஸ்லாம் சொல்லியுள்ளது என்று தான் பொருள் தரும்.

இப்பொழுதும் நீங்கள் தான் முஹ்சனாத்தை நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கை கொள்ளாதவர்களின் என்று பிரிக்கிறீர்கள். நான் நம்பிக்கை கொள்ளாதவர்கள் என்று 4 : 24  இல் மட்டும் பிரிகிறேன் அதுவும் நம்பிக்கை கொண்ட என்ற வாசகம் 4 : 25  இல் வருவதால் தான்.
 அதாவது 4 :25 இல் அல்லா கூறியுள்ள முஹ்மீனான முஹ்சனாத் என்று அர்த்தம் கொள்கிறேன். அதே வசனத்தின் தொடர்ச்சியில் தண்டனை பற்றி சொல்லும் போது முஹ்சனாத் என்று தான் வருகிறது. நான் அதை கற்பொழுக்கம் முள்ள என்று தான் அர்த்தம் கொள்கிறேனே தவிர அந்த இடத்திலும் நான் முஹ்மீனான கற்பொழுக்கம் முள்ள என்று அர்த்தம் கொள்ளவில்லை என்பதை புரியவும்.

.... முஹ்சனாத் பெண்களுக்குரிய தண்டனையில் பாதி என்று தான் வருகிறது. அல்லா முஹ்மீனானமுஹ்சனாத்தின் தண்டனையில் பாதி  என்று சொல்லி இருந்தால் நீங்கள் கேட்பது நியாயம். அப்படி அந்த வார்த்தையும் இல்லை அதை நான் சொல்லவும் இல்லை.

 ஒரு வேளை நீங்கள் 4 : 25   இல் முதலில் வரும் முஹ்சனாத்ரிக்கு என்ன அர்த்தம் தருகிறோமோ அதே அர்த்தம் தான் அதன் தொடர்ச்சியில் வரும் வசனத்திற்கும் தர வேண்டும் என்று நினைகிறீர்களா ? அப்படி எதுவும் தேவை இல்லை. அப்படியே இருந்தாலும் உங்கள் அர்த்தத்தில் தான் அந்த நியாயமும் சொல்ல பட வேண்டியுள்ளது.
நான் எந்த மாற்று  அர்த்தமும் அல்லது வார்த்தையும் பிராக்கெட்டில் சேர்க்க வில்லை. உள்ளது உள்ளபடியே அர்த்தம் தருகிறேன்.

4:25உங்களில் எவருக்குச்  முஃமினான கற்பொழுக்கம் முள்ள பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், கற்பொழுக்கம் முள்ள  பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

மொத்தத்தில் எல்லா இடங்களிலும் கற்பொழுக்கம் முள்ள என்பது பொருந்தி போகிறது. ஒரு இடத்தில் மட்டும் முஹ்மீனலாத என்று புறிந்து கொள்ள வேண்டியுள்ளது. 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------





Nashid



சகோதரரே , தெளிவாக குழப்புகிறீர்கள். 

5 :5 இல், இரண்டு இடங்களில் முஹ்சநாத் என்ற வார்த்தை வருகிறது.
அதில், ஒன்றில் நம்பிக்கை கொண்ட முஹ்சநாத் என்று வருகிறது..
இன்னொன்றில், வெறுமனே முஹ்சநாத் என்று வருகிறது.

முதலாவதில் - நம்பிக்கை கொண்ட கர்ப்போழுக்கமுடையவள் என்று சொல்லப்பட்டதால் அவளை திருமணம் செய்யலாம் என்பதில் குழப்பம் இல்லை என்கிறீர்கள். சரி.

இரண்டாவதில், வெறுமனே கர்ப்போழுக்கமுடையவள் என்று தான் வருகிறது.. இதில் நம்பிக்கை கொண்டவள் என்று பொருள் கொள்ள முடியாது என்றாலும், வேதம் கொடுக்கப்பட்டவளை திருமணம் செய்யலாம் என்ற அர்த்தத்தில் அதையும் குழப்பமில்லாமல் புரியலாம். சரி!

4 ;24   இல் வெறுமனே முஹ்சநாத் என்று வருகிறது.. முஹ்சனாத்களை திருமணம் செய்யக்கூடாது என்று சொலப்பட்டுள்ளது.

5 :5 இல் முஹ்சனாதக்ளை திருமணம் செய்ய அனுமதித்த இறைவன், இங்கு ஏன் தடை செய்துள்ளான் என்று கேட்டால் ,அதற்கு நீங்கள் தரும் விளக்கம், அந்த வசனத்தில் நம்பிக்கை கொண்ட முஹ்சனாதை தான் திருமணம் செய்ய அனுமதித்துள்ளான்.. இந்த வசனத்தில் நம்பிக்கை கொண்டவள் என்று சொல்லப்படவில்லை. ஆகவே நம்பிக்கை கொள்ளாத முஹ்சனாதை திருமணம் செய்யக்கூடாது என்று பொருள் தரும், என்று விளக்கம் அளிக்கிறீர்கள்.
4 :25 இல், முஹ்சனாதை திருமணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளதே என்று கேட்டால், இதிலும்நம்பிக்கை கொண்ட முஹ்சநாத் என்று தானே வருகிறது? என்று கருத்து சொல்கிறீர்கள்.

சரி, அதே 4 :25 இல், முஹ்சனாதக்ளுக்கு கொடுக்கப்படும் தண்டனையில் பாதி என்று அல்லாஹ் சொல்கிறானே, அப்படியானால், உங்கள் கருத்துப்படி இதில் நம்பிக்கை கொண்ட முஹ்சனாத்களின் தண்டனையில் பாதி என்று பொருள் கொண்டால், நம்பிக்கை கொள்ளாதவளுக்குரிய தண்டனை என்று அல்லாஹ் வேறு எதையோ சொல்வதாக தானே அர்த்தமாகிறது? என்று நான் கேட்டேன்.

இதற்கு பதில் சொன்ன நீங்கள், 
4 :25 இல் அல்லா கூறியுள்ள முஹ்மீனான முஹ்சனாத் என்று அர்த்தம் கொள்கிறேன். அதே வசனத்தின் தொடர்ச்சியில் தண்டனை பற்றி சொல்லும் போது முஹ்சனாத் என்று தான் வருகிறது. நான் அதை கற்பொழுக்கம் முள்ள என்று தான் அர்த்தம் கொள்கிறேனே தவிர அந்த இடத்திலும் நான் முஹ்மீனான கற்பொழுக்கம் முள்ள என்று அர்த்தம் கொள்ளவில்லை என்பதை புரியவும்.

அதாவது, இந்த இடத்தில், கற்ப்போழுக்கம் உடைய பெண் என்று மட்டும் தான் பொருளே தவிர, நம்பிக்கை கொண்டவள் என்று பொருள் செய்ய முடியாது என்று விளக்கமளிக்கிறீர்கள்.

"முமினான", என்று இந்த இடத்தில் சொல்லப்படவில்லை என்பதால், முமினான பெண் என்று எடுக்க முடியாது.
எப்படி, 4 :24 வசனத்தில், "முமினான" என்று வரவில்லை என்பதால் ,அந்த இடத்தில் காபிரான பெண் என்று விளக்கம் அளிதீர்களோ, அதே போன்ற விளக்கத்தையும் இந்த இடத்தில் நீங்கள் தருகிறீர்கள்.


இப்போது, நான் மீண்டும் கேட்கும் கேள்வி, அல்லாஹ் முஹ்சனாதிற்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்கிறான்.

நீங்கள் பொருள் சொல்வது போல, நம்பிக்கை கொள்ளாத (காபிரான) கர்ப்போழுக்கமுடையவுக்குரியதண்டனையில் பாதி !

  • காபிரான ஒரு பெண்ணுக்குரிய தண்டனையில் பாதி என்பது எதை குறிக்கிறது?
  • நம்பிக்கை கொண்டவளுக்கும் நம்பிக்கை கொள்ளாதவளுக்கும் ஒரே தண்டனை என்று அல்லாஹ் சொல்வதாக ஒப்புக்கொள்கிறீர்களா? 
  • காபிரான பெண்ணுக்குரிய தண்டனை என்ன?
  • அப்படியானால், நம்பிக்கை கொண்ட கர்ப்போழுக்கமுள்ள பெண்ணுக்குரிய தண்டனை என்பது என்ன?
  • இரண்டும் ஒன்று என்றால் பொதுவாக சொல்லாமல், காபிரான பெண்ணுக்குரிய தண்டனை என்று அல்லாஹ்  இங்கு சொல்ல தேவையில்லையே.. காபிரான பெண்ணுக்குரிய தண்டனை என்று சொல்வதிலிருந்தே காபிர் அல்லாதவளுக்குரிய தண்டனை இல்லை என்று புரிகிறது. அதாவது, காபிர் அல்லாதவள் என்று ஒருவள் இருக்கிறாள், அவளுக்கென்று வேறு தண்டனை சட்டம் உள்ளது, அது இங்கு சொல்லப்படவில்லை என்று எளிதாக புரிகிறதே!

குழப்பங்களை தீர்க்க உதவுங்கள்.. 

வஸ்ஸலாம் 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------





அலைக்கும் அஸ்ஸலாம் ,

தெளிவாக யாரும் குழப்ப முடியாது. தெளிவில்லாத  காரணத்தால் தான் குழப்பம் அடைந்துளீர்கள். உங்களோடு தொலைபேசியில் உரையாடுவதே உங்களுக்கு புரிய வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

5 :5 இல், இரண்டு இடங்களில் முஹ்சநாத் என்ற வார்த்தை வருகிறது.
அதில், ஒன்றில் நம்பிக்கை கொண்ட முஹ்சநாத் என்று வருகிறது..
இன்னொன்றில், வெறுமனே முஹ்சநாத் என்று வருகிறது.

இரண்டாவதில், வெறுமனே கர்ப்போழுக்கமுடையவள் என்று தான் வருகிறது.. இதில் நம்பிக்கை கொண்டவள் என்று பொருள் கொள்ள முடியாது என்றாலும், வேதம் கொடுக்கப்பட்டவளை திருமணம் செய்யலாம் என்ற அர்த்தத்தில் அதையும் குழப்பமில்லாமல் புரியலாம். சரி!

அப்படி எல்லாம் வரவில்லை நம்பிக்கை கொண்ட முஹ்சனாத் என்றும் வேதம் கொடுக்கப்பட்ட முஹ்சனாத்என்றும் வந்துள்ளது. இதில் குழப்பம் இல்லை.எனவே இந்த வசனத்தில் எந்த புது அர்த்தமும் பிராக்கெட்டில் தரப்படவில்லை. அல்லது இன்னும் தெளிவாக சொன்னால் நானாக வேதம் கொடுக்கப்பட்ட முஹ்சனாத் என்று சொல்லவில்லை. அந்த வார்த்தை அல்லாவே சொல்கிறான்.

எப்படி, 4 :24 வசனத்தில், "முமினான" என்று வரவில்லை என்பதால் ,அந்த இடத்தில் காபிரான பெண் என்று விளக்கம் அளிதீர்களோ, அதே போன்ற விளக்கத்தையும் இந்த இடத்தில் நீங்கள் தருகிறீர்கள்.

இதிலும் நீங்கள் புறிந்து கொண்டது தவறு. அதே போன்று இந்த இடத்திலும் நான் எங்கே தருகிறேன்.? 4 : 24   இல் மட்டும் தான் நான் பிராக்கெட்டில் முஹ்மீனல்லாத என்ற வார்த்தையை சேர்க்கிறேன். மற்ற இடங்களில் எந்த ப்ரச்கேடும் இல்லை. நீங்கள் உங்கள் நியாயத்தை கேட்கும் அத்தனை கேள்விகளும் உங்கள் புரிதலிலும் உண்டு என்பதை சிந்திக்கவும்.

இந்த வசனத்தில் நம்பிக்கை கொண்டவள் என்று சொல்லப்படவில்லை. ஆகவே நம்பிக்கை கொள்ளாத முஹ்சனாதை திருமணம் செய்யக்கூடாது என்று பொருள் தரும், என்று விளக்கம் அளிக்கிறீர்கள்.

நீங்கள் கணவனையுடைய என்று எப்படி ஏன் விளக்கம் அளித்தீர்கள் என்பதை சிந்திக்கவும்.
உங்கள் பதில் என்னவோ அதே தான் நான் 4 :24 இல் முஹ்மீனலதா என்று எடுத்து கொள்ளும் காரணம். ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு மறு இடத்தில் அனுமதிக்கப்பட முடியாத காரணத்தால் தான். 

இன்னும் சொல்லப்போனால் நான் முஹ்மீனல்லாத என்று எடுத்து கொண்டதில் நியாயம் , அல்லா அந்த முஹ்மீன் என்ற வார்த்தையை இங்கே பயன் படுத்தியதால் தான். ஆனால் நீங்கள் தானாக தான் ஒரு விளக்கம் தருகிறீர்கள் அதுவும் ஒன்றோடு ஒன்று முரணான அர்த்தம். கேட்டால் முரணான அர்த்தம் தான் என்று பதில் சொல்லி முடித்து விடுகிறீர்கள். ஒரு நடு நிலையாளன் ஒரு விளக்கம் கேட்டு அதற்கு தரப்படும் விளக்கம் நியாயமாக இருந்தால் ஏற்று கொள்வான் இல்லை என்றால் அதை விட சிறந்த அர்த்தம் தரும் விஷயத்தை தான் எற்றுகொள்வான் அப்படி தான் நானும் செய்தேன். முரண் என்று கேட்டால் முரண் தான் என்று சொன்னீர்கள். சரி அது உங்கள் புறிதல் உங்கள் விளக்கம் அதில் நியாயம் இல்லை என்று நானும் அந்த அர்த்தத்தை விட்டு வெளியே வந்தேன்.

இப்போதும் சொல்கிறேன் முஹ்சனாத் என்றால் கற்பொழுக்கமுள்ள.

எல்லா இடங்களிலும் எல்லா கற்பொழுக்கம் முள்ள பெண்களை தான் பொதுவாக குறிக்கிறது.

முஹ்மீன் , வேதம் கொடக்கப்பட்டவர் என்று பிரிக்க வேண்டுமானால் அதையும் அல்லாவே பிரித்து தான் கூறியுள்ளான்.

ஒரே ஒரு இடத்தில்(4 : 24 ) அல்லா சொல்லும் போது எல்லா கற்பொழுக்கம் முள்ள பெண்களையும் எடுத்து கொள்ள முடியாத ஒரே காரணத்தால் முஹ்மீனல்லாத  என்று பிராக்கெட்டில் போட வேண்டியுள்ளது. 

இந்த வசனத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் கற்பொழுக்கம் முள்ள எல்லா பெண்களையும் குறிக்கும் என்பதே என் பதில் .
(தொலைபேசியில் தொடர்பு கொண்டால் இன்னும் நாம் விரிவாகவே விவாதிக்க வாய்ப்பாகும்  இன்ஷா அல்லா )

---------------------------------------------------------------------------------------------------------------------------------------





Nashid


அஸ்ஸலாமு அலைக்கும்..
தெளிவாக குழப்பியுள்ளீர்கள் என்பதற்கு நான் காரணத்தையும் சொன்னேன்.

அந்த காரணம், உண்மையில் என்னை குழப்பமடைய தான் செய்துள்ளன.. எனது குழப்பங்கள் தீர, அந்த காரணங்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்..
அதை நீங்கள் செய்யவில்லை.

எனது குழப்பத்தை மீண்டும் சொல்கிறேன்.. 

4 :24 வசனத்தில் முஹ்சநாத் என்பதற்கு காபிரான பெண் என்று பொருள் செய்கிறீர்கள். 
அதற்கு காரணம் - முமினான என்று வரவில்லை, அதனால், என்று காரணம் சொல்கிறீர்கள்.

4 :25 வசனத்தில் வரும் முஹ்சனாதை திருமணம் செய்யலாம் என்று கூறுகிறீர்கள். 5 :5 இல் வரக்கூடிய முஹ்ச்னதையும் திருமணம் செய்யலாம் என்கிறீர்கள். இதற்கு காரணம், இந்த வசனங்களில் முமினானமுஹ்சநாத் என்று சொல்லப்பட்டுள்ளது.

4 :25 இல் இரண்டாவது முறையாக வரக்கூடிய முஹ்சனாதிற்கு என்ன விளக்கம் என்றால், அதை வெறும் கர்ப்போழுக்கமுள்ளவள்  என்கிறீர்கள்.
இதை மிக எளிதான அர்த்தம் என்றும், எளிதான புரிதல் என்றும் சொல்கிறீர்கள்.


4 :24 வசனத்தில் வரும் முஹ்சனாதிற்கு நான்,  திருமணம் ஆனவள் என்றும், இங்கு திருமணம் ஆனவள் என்று வருவதால் 4 :25 இல் வரக்கூடிய முஹ்சனாதிற்கு திருமணம் ஆகாதவள், என்றும் நான் பொருள் சொன்ன போது, அதை மறுக்க நீங்கள் கூறிய காரணம் - அதெப்படி, ஒரே வார்த்தைக்கு இரண்டு முரண்பாடான அர்த்தம் இருக்குமா? என்று சொன்னீர்கள்.

இடத்தை பொறுத்து வரும், என்று சொன்னேன்.

இதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போது நீங்கள் செய்திருப்பது என்ன?

அதே முஹ்சனாதிற்கு தரும் மொழியாக்கம் - 4 :24 இல் காபிரான பெண்.
4 :25 இல் இரண்டாவதாக வரும் முஹ்சனாதிற்கு காபிர் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்.

காபிரான பெண்ணுக்குரிய தண்டனை என்று அல்லாஹ் எப்படி சொல்வான்? அதற்குரிய விளக்கம் என்ன? அப்படியானால், நம்பிக்கை கொண்ட பெண்ணுக்குரிய தண்டனை என்றால் என்ன? என்று நான் கேட்ட போது, நீங்கள் சொல்லும் பதில், 

4 :25 இல் இரண்டாவதாக வரக்கூடிய முஹ்சனாதிர்க்கு கற்ப்போழுக்கம் உள்ள பெண் - காபிரா நம்பிக்கை கொண்டவளா? என்று குறிப்பிட்டு இல்லை, என்கிறீர்கள்.

ஒரு வார்த்தை ஒரு இடத்தில் காபிரை மட்டும் குறிக்கும் போது, இன்னொரு இடத்தில் அது நம்பிக்கை கொண்டவளை குறிக்கும் என்றால் இது முரண்பாடான் அர்த்தம் இல்லையா?

திருமணம் ஆனவள் - ஆகாதவள் என்பது முரண்பாடு என்று சொன்னால், இதுவும் முரண்பாடு தான்.

ஒரு கருத்தை அடைவதற்காக, நான் வார்த்தைகளையும் அர்த்தங்களையும் மாற்றுவதாக சொன்ன நீங்களும் இப்போது வேறொரு கருத்தை அடைவதற்காக வார்த்தைகளையும் அர்த்தங்களையும் மாற்ற தான் செய்கிறீர்கள். 

நான் முஹ்மீனல்லாத என்று எடுத்து கொண்டதில் நியாயம் , அல்லா அந்த முஹ்மீன் என்ற வார்த்தையை இங்கே பயன் படுத்தியதால் தான். ஆனால் நீங்கள் தானாக தான் ஒரு விளக்கம் தருகிறீர்கள் அதுவும் ஒன்றோடு ஒன்று முரணான அர்த்தம்
அல்லாஹ் முஹ்மின் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் தான் நீங்கள் அவ்வாறு விளக்குகிறீர்கள் . முஹ்மின் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதால் தான் காபிர் என்று 4 :24 இல் விளக்கம் சொல்லியுள்ளீர்கள்.
4 :25 திலும் முஹ்மின் என்ற வார்த்தை இல்லை.
இடத்திற்கு ஏற்றவாறு நீங்களும் தான் அர்த்தங்களை மாற்றுகிறீர்கள் எனும்போது, அதை குழப்பம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

4 :25 இல் இரண்டாம் முஹ்சனாதிற்கு காபிர் என்று பொருள் கொண்டால், காபிர்களின் தண்டனையில் பாதி என்று வரும்.
நீங்கள் இதற்கு முன்பு சொல்லியது போல, காபிர்களுக்கென்று எந்த தண்டனையும் இஸ்லாத்தில் இல்லை. அவர்களுக்கு அவர்கள் மதத்தின் படி தான் தண்டனை!
சரி, அப்படியானால், அவர்களுக்கு அவர்கள் வேத புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள தண்டனையில் பாதி என்ற பொருள் தான் இந்த வசனத்திற்கு வரும்.
அதில் பாதி என்று ஒரு வாதத்திற்கு வைத்தால் கூட, நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு என்று வேறு ஏதோ தண்டனை உள்ளது என்ற கருத்தும் இதனுள் அடங்கி விட்டது. அது என்ன? என்பதையும் அறிய வேண்டும். 

இது குழப்பமில்லையா? இதை தான் எனக்கேற்பட்ட குழப்பம் என்றேன்..

தெளிவாக்கவும்.. போன் இல் பேசலாம் என்றால் இன்ஷா அல்லாஹ் பேசலாம்.. 


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------






அலைக்கும் அஸ்ஸலாம்,

சகோதரரே ஒரு கருத்திற்கு கேள்விகள் ஆயிரம் கேட்கலாம். அதனால் தான் நடு நிலையோடு பார்க்க வேண்டும் என்று சொல்கிறோம். 

ஒரு இடத்தில் முஹசநாத் என்றால் கற்பொழுக்கம் ,
மறு இடத்தில் முஹ்சனாத் என்றால் கணவனையுடைய  ,
ஒரு இடத்தில் திருமணமாகாத ,
இப்படி அர்த்தம் செய்வது எப்படி நியாயம் ? ஏன் செய்தீர்கள் ? இதற்குரிய ஆதாரம் என்ன ? 

சுதந்திரமான என்றால் திருமணமாகத என்று அர்த்தம் தருகுறீர்கள், அடிமை என்றால் திருமனமகதவள் என்றும் புரிகிறது என்று சொல்கிறீர்கள்? 

அர்த்தம் - கற்பொழுக்கம் முள்ள (நம்பிக்கை கொண்ட, கொள்ளாத, வேதக்காரர்கள்  ) பெண்கள்   .
ஒரு இடத்தில  மட்டும் இப்படி வந்தாலும்   கற்பொழுக்கம் முள்ள என்பதில்   அர்த்தம் மாறவில்லை  யார்  யார்  என்பதில்  தான் மாற்றம் . இது  முரண் இல்லை.

உதாரணம்  : இந்தியர்கள்  என்பது அர்த்தம்(சென்னை , பெங்களூர் , ஹைதராபாத், கொச்சின் , மும்பை ) .

இந்தியர்களுக்கு தடை என்ற வாசகம் உள்ளது.
தனி ஒரு இடத்தில் பெங்களூர் , ஹைதராபாத் நகர மக்களை தவிர என்று உள்ளது.
எனவே அந்த தடை என்கிற இடத்தில் மட்டும்  சென்னையில் , மும்பையில் , கொச்சினில் வாழும் மக்கள் மட்டும் தான் என்கிறேன். ஏனெனில் மற்றொரு இடத்தில் பெங்களூர், ஹைதராபாத் மக்களை அனுமதித்து விட்டார்கள்  என்று சொல்கிறேன். இது உங்களுக்கு குழப்பம் தருகிறது ஆனால் உங்கள் கருத்தில் நீங்கள் தெளிவாக உள்ளீர்கள்?  இனி இது நடு நிலயாலர்களுக்கு  விட்டு விடுவோம்.

எனது அர்த்தத்தில் முரணில்லை. கற்பொழுக்கம் என்று தனியாக சொல்லும் போது எல்லா கற்பொழுக்கம் முள்ள பெண்களையும் குறிக்கும் என்று சொல்கிறேன். ஒரே ஒரு இடத்தில் மட்டும் அது எல்லாரையும் குறிக்காது ஏனெனில் நம்பிக்கை கொண்டவர்களும் , வேதம் கொடுக்கப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது வேறு இடத்தில் சொல்லபடுகிறது. அதனால் இங்கே வேறு இடம் இல்லாமல் நம்பிக்கை கொள்ளாத பெண்களை தான் குறிக்க  முடியும்    என்று சொல்கிறேன். நீங்கள் சொல்வது  முரணாக  இருந்தாலும்  நியாயம்  என்று சொல்கிறீர்கள். 

இது குறித்து தொலைபேசியில் இன்ஷா அல்லா.



---------------------------------------------------------------------------------------------------------------------