திங்கள், 28 பிப்ரவரி, 2011

பொய்யை மூலதனமாக கொண்ட ஏர்வாடி JAQH

அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோ. ஏர்வாடி சிராஜ் அவர்களின் கவனத்திற்கு..
(அனைவரும் படிக்க வேண்டிய செய்திகள் தான்)


தக்லீத் குறித்த உங்கள் பேச்சுக்கள், நாம் கண்டித்த பிறகும் தொடர்வதால், அது குறித்து அல்லாஹ்விடம் முறையிட்டு விட்டேன்..
அல்லாஹ்வின் கோபமும் தண்டனையும் இவர் மீது (இந்த விஷயத்திற்காக மட்டும்) இறங்க வேண்டும் என்ற துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

தக்லீத் குறித்து இவரோடு இனியும் நாம் பேச எதுவும் இல்லை என்றாலும், இவர் போன்று பலரும் இவ்வாறு அயோக்கியத்தனம் காட்டி வருவதால் சில விஷயங்களை விளக்க வேண்டியுள்ளது . சிராஜ் போன்றோருக்கு சிந்தினையில் உறைக்க வேண்டும் என்ற வகையில் சில வாதங்களை முன் வைத்தால் இவர் போன்றவர்கள் இது போன்று இனிமேலும் அயோக்கியதனம் செய்ய மாட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ், அடுத்த மின்னஞ்சலில் விளக்குகிறேன்..

இப்போது இவர் கேட்கும் கேள்விக்கு வருவோம்.. ரபியுல் அவ்வல் மாதம் எப்போது துவங்கியது என்று கேட்கிறார்.

ஏற்கனவே பிறை குறித்து நம்மோடு பல வாரங்களாக வாதம் செய்து, இறுதியில் நான் பல கேள்விகளை முன்வைத்து விளக்கம் கேட்ட உடன், அவைகளுக்கு பதில் இல்லாமல் தடுமாறிய இவர், அப்போது சொன்ன பதில் , நாங்கள் பிஜே உடன் விவாதிக்க போகிறோம், இனி நாஷிதிடம் பேச மாட்டோம், என்பது.

நான் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் சொல்லாமல், பிஜே உடன் விவாதிக்க செல்கிறேன் என்று நீங்கள் அறிவிப்பது உங்கள் பார்வையில் நியாயம் என்றால், இப்போது நீங்கள் கேட்கும் கேள்விக்கு பிஜே உடனான விவாதத்தை அறிவியுங்கள், அதன் பிறகு பதில் சொல்கிறேன், என்று நான் சொல்வது நியாயம் ஆகாதா?

உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயம் என்று நடந்து கொள்வதை தவிர ஒரு நயவஞ்சகத்தனம் வேறு என்ன?


விவாத அழைப்பிற்கும் 1432 ரபியுல் அவ்வல் உங்கள் ஜமாஅத்திற்கு எந்த தேதியில், எந்த கிழமையில் ஆரம்பித்தது என்பதற்கும் என்ன சம்மந்தம்.
விவாதம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதில் நாஷிதிற்கு என்ன பிரச்சினை. அது பி.ஜேவிற்கும் எனக்கும் உள்ள விஷயங்கள் அதற்கு நான் அவருக்கு பதிலளிப்பேன். - ஏர்வாடி சிராஜ்.


அதாவது, அவர் கேட்கும் கேள்வக்கு நான் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்கிறார். ஏற்கனவே மின்னஞ்சல் மூலமான விவாதத்தின் போது, நான் அடுக்கிய பல கேள்விகளை கண்டு கொள்ளாமல் விட்ட இவர், இறுதியாக சொன்ன பதில் "நான் பிஜே உடன் விவாதம் செய்ய தயாராகி விட்டேன்", என்பது.

இந்த பதில், எனது கேள்விக்கு பதில் சொல்வதை விட்டும் அவரை ஒளிந்து கொள்ள ஏதுவாக , ஒரு கேடையமாக அமைத்தது.
இருந்தாலும், பிஜே உடன் விவாதிக்க இவர் ஒப்புக்கொண்டு விட்டார் என்ற வகையில் அவர் பதில் சொல்லாததை நான் பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில், இவர் நேர்மையாளர் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பிஜே உடன் விவாதிக்க முன் வர வேண்டும், அதற்குரிய தேதியை அறிவிக்க வேண்டும்.

இதை செய்யாமல் மேலும் மேலும் என்னிடம் கேள்வி கேட்கலாமா?
சரி, கேள்வி கேட்டார், அதற்கு நான் சொன்ன பதில் என்ன? விவாதத்திற்கு வர போகிறேன் என்று அன்றைக்கு சொன்னீர்களே, அது என்ன ஆயிற்று? அதற்குரிய கால அளவை சொல்லுங்கள், உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன், என்று நான் கூறினேன்.
இந்த பதில் நியாயமான பதிலாக இங்குள்ள சகோதரர்களுக்கு தெரியவில்லையா ?

இவரது நேர்மையை இப்போதாவது நிரூபித்திருக்க விடுமா இல்லையா? இப்போதும் என்ன சொல்கிறார்?
இந்த கேள்விக்கும் விவாதத்திற்கும் என்ன சம்மந்தம், அது எனக்கும் பிஜேக்கும் இடையில் உள்ள விஷயம் , என்கிறார்.

அப்படியா?
அப்படியானால், மின்னஞ்சல் விவாதத்தின் போதும், நான் அடுக்கிய கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில் தராமல் பிஜே உடன் விவாதிக்க போகிறேன் என்று அறிவித்தீர்களே, நான் கேட்ட கேள்விக்கும் பிஜெவிற்கும் என்ன சம்மந்தம்?
உங்கள் கேள்வியை நான் திருப்பி கேட்க கூடாதா?



  • குறைப் என்ற நபி தோழரை, அவர் சஹாபியே இல்லை, அவர் தாபி தான் என்று அப்பட்டமாக புளுகினீர்களே, அதற்குரிய குர் ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?
இந்த கேள்விக்கும் பிஜே உடன் விவாதிக்க போவதற்கும் என்ன சம்மந்தம்?

  • வாகனக்கூட்டம் ஹதீஸை அறிவிக்கும் சஹாபி, அவர் சஹாபியே இல்லை என்று அப்பட்டமாக புளுகினீர்களே ,அதற்குரிய குர் ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?
இந்த கேள்விக்கும் பிஜே உடன் விவாதிகக் போவதற்கும் என்ன சம்மந்தம்?

  • என்னிடம் நீங்கள் சத்யம் செய்ய சொன்னதை போல், உங்களிடம் நான் சத்தியம் செய்ய சொன்னேனே, அதை நீங்கள் செய்யாமல் ஒளிந்து கொண்டு பிஜே உடன் விவாதிக்க போகிறேன் என்று அறிவித்தீர்களே, நான் கேட்ட சத்தியத்திற்கும் பிஜெவிற்கும் என்ன சம்மந்தம்?

  • பிறை குறித்த இன்னும் பல ஹதீஸ்களை வைத்து, உங்கள் கொள்கைக்கு முரணாக இருக்கிறதே, என்று கேட்டேனே, அதற்கு பதில் சொல்லாமல் ஓடி விட்டு, பிஜே உடன் விவாதிக்க போகிறேன் என்று அறிவித்தீர்களே, நான் கேட்ட கேள்விகளுக்கும் பிஜெவிற்கும் என்ன சம்மந்தம்?


இதே போன்று இன்னும் எண்ணற்ற கேள்விகள் எனது குறிப்பில், எனது தொகுப்பில் உள்ளன.
அவற்றை அடுக்கடுக்காக நான் இங்கு முன்வைத்து, இவைகளுக்கு பதில் சொல்லாமல் பிஜே வுடன் விவாதிக்க செல்கிறேன் என்று நீங்கள் அறிவித்தது எந்த வகையில் சம்மந்தப்பட்டது? என்று நம்மால் கேள்வி கேட்க முடியாதா?

உங்களை நேர்மையாளர் ,உண்மையாளர் என்று நம்புகின்ற ஒரு சிலராவது இன்றும் மிச்சமிருப்பார்கள்.. அவர்கள் மத்தியிலாவது உங்கள் சுய தன்மைகளை வெளிக்காட்டாமல் மறைக்க முயற்சியுங்கள்..

வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக