திங்கள், 28 பிப்ரவரி, 2011

தக்லீதும் அதிமேதாவித்தனமும்

அஸ்ஸலாமு அலைக்கும்..

தக்லீத் குறித்த ஏர்வாடியை சேர்ந்த சிராஜ் போன்ற சில அதிமேதாவிக்கும்பலின் வறட்டு விமர்சனங்களுக்கு இங்கு சில விளக்கங்கள் அளிக்கபடுகின்றன..

தக்லீத் என்பது எதை குறிக்கும்?

  • ஒரு தனி நபர் மார்க்க விஷயமாக எதை கூறினாலும் , அதை கண்ணை மூடி பின்பற்றுவது தக்லீத் என்று அழைக்கப்படும்.
  • ஒரு தனி நபர் எதை சொன்னாலும், அதிலுள்ள குறைகளை கூட நியாயப்படுத்தி சரி காண்வது தக்லீத் எனப்படும்.
  • குர் ஆன் ஹதீசுக்கு எதிராக ஒருவர் சொல்வதை கூட ஆராயாமல் பின்பற்றுவது தக்லீத் எனப்படும்.

நான் அறிந்தவரை தக்லீத் என்பதற்கான அளவுகோல் இது தான்.

இந்த அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றை வைத்து தான் எந்த ஒரு நபரையும் அலச வேண்டும். அதுவே அறிவார்ந்த செயல்.

ஆனால், சில அதிமேதாவிக்கும்பல் தக்லீதுக்கு வைக்கும் அளவுகோலை பார்த்தால் இவர்கள் உண்மையில் சுய சிந்தனையுடன் தான் இருக்கிறார்களா அல்லது மருத்துவச் சிகிச்சைக்குரியவர்களா என்று நமக்கே சந்தேகம் ஏற்படும்,.

இந்த அதிமேதாவிக்கும்பல் சொல்லும் அளவுகோல் என்னவென்றால், ஒருவர் ஒரு குறிப்பிட்ட நபரை தக்லீத் செய்கிறார் என்பதற்குரிய காரணம், அந்த நபர் சொல்லும் அனைத்தையும் இவர் மறுக்காமல் விமர்சிக்காமல் இருக்கிறார் என்பதே!

கூறுகெட்டவன் கூட இதை விட தெளிவாக பேசுவான். இந்த அதிமேதாவிக்கு எந்த கூறும் இல்லை என்பதால் இவ்வாறு உளறுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
தன் கொள்கையை எப்பாடு பட்டாவது நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக, சஹாபியை சஹாபி இல்லை என்று கூறியும், ஹதீஸை ஹதீஸ் இல்லை என்று கூறியும் மறுத்தவருக்கு இது போன்று சிந்திக்க எந்த சிரமமும் இருக்காது.


  • நான் ஒருவரை தக்லீத் செய்கிறேன் என்றால் ஒன்று, அவர் எதை சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன் என்று நான் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும்.
  • அல்லது, அவர் தவறாக ஒன்றை சொன்னால், அது குர் ஆன் , ஹதீஸ் அடிப்படையில் தவறு என்று தெரிந்தும் நான் அதை நியாயப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டில் எதை சொன்னாலும் செய்தாலும், அது தான் தக்லீதுக்கான காரணம்.!
இந்த இரண்டை தவிர, ஒருவர் சொல்லும் அனைத்தையும் நான் மறுக்காமல் இருப்பதால், அல்லது விமர்சிப்பதாக இருப்பதால் நான் அவரை தக்லீத் செய்கிறேன் என்று சொல்ல முடியாது.

இது தான் அளவுகோல் என்றால், அனைவர் குறித்தும், அனைவரிடமும் இதே கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நபரையும் அலசி ஆராய்ந்து அவரை விமர்சித்து கொண்டே தான் நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.
ஏன்? ஒருவரை பற்றி விமர்சிக்காமல் இருந்து விட்டால் சில அதிமேதாவிக்கூடம் அந்தநபரை நாம் தக்லீத் செய்வதாக சொல்லி விடுமே. !
உலகில் உள்ள அறிஞர்கள் யார் யார் என்று பட்டியல் தயாரித்து, அவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்நாளில் என்னன்ன கருத்துகளை சொல்லியுள்ளார்களோ, அதையெல்லாம் அலசி ஆராய்ந்து, விமர்சனம் செய்து கொண்டே இருக்க வேண்டும். நமது வாழ்நாள் முழுவதையும் இதற்கே ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் செலவிட வேண்டும்
இதில் சிறிது பிசகி, எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு அறிஞர் குறித்து நாம் கருத்து தெரிவிக்க மறந்து விட்டோம் என்றால், இந்த அதிமேதாவிக்கும்பல், நாம் அந்த குறிப்பிட்ட அறிஞரை தக்லீத் செய்வதாக அறிவித்து விடுவார்கள்.

இதை படிக்கும் போது சிரிப்பு ஏற்படுகிறதா? இது தான் இந்த அதிமேதாவி சிராஜின் தக்லீதுக்கான definition !!!

இந்த அதிமேதாவி தக்லீதுக்கு கொடுக்கும் விளக்கம் இது தான் என்றால், நான் மேலே சொல்லியுள்ளவற்றுக்கு தகுந்த பதிலை தர வேண்டும்.

இன்னும் சொல்வதாக இருந்தால், இந்த குழுமத்திலுள்ள ஒவ்வொரு நபரின் பெயரையும் சொல்லி, இவரை நீங்கள் தக்லீத் செய்கிறீர்கள், அவரை நீங்கள் தக்லீத் செய்கிறீர்கள் என்று நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

அதற்கு அவர் காரணம் கேட்டால், "இந்த நபர் சொல்லியுள்ள எதையாவது நீங்கள் இன்றுவரை மறுதிருக்கிறீர்களா? என்று நான் திருப்பி கேட்ப்பேன்.
இந்த அறிவுப்பூர்வமான கேள்விக்கு அவரால் எந்த பதிலையும் சொல்ல முடியாதல்லவா? ஆகவே அவர் அந்த குறிப்பிட்ட நபரை தக்லீத் செய்கிறார் என்பது இதன் மூலம் உறுதி ஆகிவிடும்.
சரிதானே????

என்னே இவரது அறிவு ! என்னே இவரது கொள்கை !! என்னே இவரது சிந்தனை!!!
சிந்திக்கும் திறனில் கோளாறென்றால் இவர் போன்றவர்கள் மருத்துவரை சந்திக்கும் படி நாம் அன்புடன் பரிந்துரை செய்கிறோம், இறைவனிடம் இவருக்காக துவாவும் செய்கிறோம்..


ஆக, தக்லீத் என்றால் தவறுகளையும் நியாயப்படுத்த வேண்டும்.
தக்லீத் என்றால் சுய சிந்தனையில்லாமல் பின்பற்ற வேண்டும். இதை தாண்டிய ஒரு தக்லீத் உலகில் இல்லை.

ஒருவரது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றால் மேலே உள்ள இரு காரணிகள் இல்லாத நிலையில் நான் தக்லீத்வாதி ஆக மாட்டேன்.

இந்த காரணங்கள் இல்லாமல் எவரது கருத்தையும் எவரும் ஏற்றுக்கொள்ளலாம்.

இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதை ஊக்குவிதிருக்கிறார்கள்.

மார்க்கத்தை அறிந்தவர்கள் இருப்பதை போல அறியாதவர்களும் இருப்பார்கள். அறியாதவர்கள் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்க கட்டளை. இதை செய்வது தக்லீத் ஆகாது என்றால், தக்லீதின் பொருள் என்ன என்பது இதிலேயே விளங்குகிறது.

அறிஞர் பிஜேவை தக்லீத் செய்வது சம்மந்தமாக நான் முன்பே எழுதிய ஒரு மறுப்பாக்கம், இந்த அதிமேதாவிக்கு பதிலளிக்கும்.
பிஜே மத்ஹபா?


வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக