வியாழன், 3 பிப்ரவரி, 2011

காரி உமிழ தகுதியான மம கட்சி தீர்மானம்

அஸ்ஸலாமு அலைக்கும்

மம கட்சி பொதுக்குழு தீர்மானம் : அதிமுக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு பல்வேறு அம்சங்களில் மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகின்றது. இந்த அரசை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கூட்டணி வெற்றிபெற பாடுபடுவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.


கடந்த 2006 ஆம் ஆண்டு, சட்டசபை தேர்தலின் போது, கருணாநிதிக்கு வால் பிடித்துக்கொண்டிருந்த இவர்கள், தவ்ஹீத் ஜமாத்தினர் அதிமுகவை ஆதரித்த போது, என்னென்ன கோஷங்களையும் விமர்சனங்களையும் எழுப்பினார்கள் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்..

பாசிச சிந்தனையாளர் ஜெயலலிதா, நரேந்திர மோடிக்கு விருந்தளித்த ஜெயலலிதா, தீய சக்தி ஜெயலலிதா, முஸ்லிம் விரோத ஜெயலலிதா, என்றெல்லாம் இதே மாமா கட்சியினர் கோஷம் விளித்ததை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்! அத்தகைய பாசிச, தீய சக்தியின் வெற்றிக்கு தான் இவர்கள் பாடுபட போகிறார்களாம்!இவை அனைத்தையும் மறந்து விட்டவர்களுக்காக, முன்னர் இந்த சந்தர்ப்பவாத கூட்டம் அதிமுக விற்கு எதிராக வைத்த விமர்சனங்கள் அனைத்தும் விரைவில் மீண்டும் இங்கு பட்டியலிடப்படும் , இன்ஷா அல்லாஹ்..

அரசியல் என்னும் சாக்கடையில் நீந்திக்கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத "ராமதாசுகளாக" நாங்களும் மாறி விட்டோம் என்று, அனைவரும் காரி உமிழும் வகையில் வெளிப்படையாக இவர்கள் அறிவித்திருப்பதை கவனியுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக