வியாழன், 3 பிப்ரவரி, 2011

கேவலமான அரசியல் நிகழ்த்துவது யார்?

அரசியல் என்பதே சமுதாய நலன் என்றிருந்த காலம் மலையேறி, பணம் புகழ் சம்பாதிக்கும் கேந்திரமாக இன்றைய அரசியல் சூழல் ஆகி விட்ட நிலையில், அதற்கு நாங்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று கூறி புறப்பட்ட இவர்கள், சமுதாய நலன் என்று பேசுவதே வெட்கக்கேடானது..

அடிப்படையில் ஒன்றை இந்த சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்..

ஒரு முஸ்லிம் என்பவனுக்கு கொள்கை இருக்க வேண்டும்.. கொடுத்த வாக்கின் படி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.. இந்த அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட சமூக அக்கறை இருக்க வேண்டும்.
இந்த மூன்றும் ஒருங்கே நிரம்பிய ஒருவனே சமுதாய தொண்டாற்ற வேண்டும்..

மேலே நாம் குறிப்பிட்ட அளவுகோல்களில் ஒன்றை கூட பெற்றிருக்காத இந்த தமுமுகவினர், சமுதாய நலன் காக்க அரசியலில் நுழைகிறோம் என்று பிதற்றுவது, சமுதாய நலனையும் அதன் தன்மானத்தையும் அடகு வைக்கும் செயலே தவிர, காப்பாற்றும் செயல் அல்ல!
தங்களது தன்மானத்தையே அடகு வைப்பவர்களிடம் சமுதாயத்தின் தன்மானத்தை பற்றிய அக்கறையை நாம் எதிர்ப்பார்க்க கூடாது.

சமுதாய அக்கறை கொண்டவர்களை மேலே நாம் குறிப்பிட்ட அளவுகோல்களை கொண்டு அலசுவதாக இருந்தால் துவக்கம் முதலே அலசிப்பார்க்கலாம்..

 • ஏகத்துவக் கொள்கையும் அதன் பிரசாரமும் சமுதாய தொண்டாற்றுவதற்கு குறிக்கே நிற்கிறது என்று பேசியவர்கள் சமுதாய நலனை பேணுபவர்களா?

 • தங்களுக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் வந்து விட்டது என்று ஒடுக்கப்பட்ட நம் சமூகத்தினர், வரலாறு அதுவரை கண்டிராத எழுச்சியுடன் முகமலர்ந்த நேரத்தில், எந்த நிலையிலும் எந்த அரசியல் பதவியையும் நாம் பெற மாட்டோம், இறுதி வரை மக்களுடன் மக்களாக உழைத்துக்கொண்டே இருப்போம் என்று வாக்கு கொடுத்தார்களே, இன்று அந்த வாக்கின் படி நிற்காமல் சமூகத்தை வஞ்சிதவர்கள் சமூக நலனை பற்றி பேசுவதா?

 • இந்த சமுதாய மக்களையும், சமுதாயத்திற்காக குரல் கொடுப்பவர்களையும் இழிவு படுத்தும் நோக்கில், தமிழக அரசியல் கட்சிகளுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தார்களே, அது தான் சமுதாய நலனா?

 • அடிமை சாசனம் எழுதும் அளவிற்கு அவர்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் விதங்களிலும், தவறுகளை கண்டிக்காதவர்களாகவும், காட்சி தருகிறார்களே, அது தான் சமுதாய நலனா?

 • சமுதாயத்திற்காக அரசியல் கட்சிகள் என்ன செய்கிறது என்பதை கண்டு கொள்ளாமல், தங்கள் கட்சிக்காக என்ன செய்கிறது என்பதை மட்டும் அலசுவது தான் சமுதாய நலனா?

 • துவக்கத்தில், கலைஞரின் வாலை பிடித்து விட்டோம் என்பதற்காக, இட ஒதிக்கீடு தரும் அதிகாரம் கலைஞருக்கு இல்லை, நாங்கள் டில்லி செல்கிறோம், என்று உலக மகா புளுகு ஒன்றை புளுகினார்களே, அது தான் சமுதாய நலனை காக்கும் லட்சணமா?

 • கலைஞர் இட ஓதிக்கீட்டில் துரோகம் இழைத்த போதும் கூட, அதை சப்பை கட்டு கட்டி நியாயப்படுதினார்களே, அந்த ஈன செயல் தான் இவர்களின் பார்வையில் சமுதாய நலனா?

 • கலைஞர் இரண்டு தருகிறார் என்பதற்காக, அவருக்கு வால் பிடித்து, இப்போது அவர் தரவில்லை என்பதற்காக அம்மா பக்கம் செல்கிறார்களே, இவர்கள் தங்கள் சுய நலனை கவனித்தார்களா சமுதாய நலனை கவனித்தார்களா?

 • பிஜே அதிமுக வை ஆதரித்தார் என்ற ஒற்றை காரணத்திற்காகவே அதிமுகவை விமர்சனம் செய்து கண்டித்தவர்கள், இன்றைக்கு அதே ஆதிமுக வின் வெற்றிக்காக பாடு படுவோம் என்று அறிவிப்பது கேவலமில்லையா? இத்தகைய கேவலமான செயலை செய்தும் கூட சமுதாய நலனில் இவர்கள் அக்கறை காட்டுபவர்கள் என்று மக்கள் நம்பி விடுவார்களா?

 • ஆரம்ப காலத்தில், சமுதாய மக்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற வக்கில்லாமல் இன்று வாரியம், MP பதவி, MLA பதவி என்று சபலப்படுகிறார்களே, இவர்களா சமுதாய நலனை காப்பவர்கள்?

 • வெறும் இயக்கம் நடத்திக்கொண்டிருந்த பொழுதே சுனாமி வசூல், பித்ரா வசூல் என்று சமுதாய மக்களிடம் இருந்து பிடுங்கி தின்றார்களே, இவர்களா பதவிக்கு வந்த பின்னர் சமுதாய மானம் காப்பார்கள்?

காசுக்கும், சீட்டுக்கும் வேண்டி கட்சிகளிடம் பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள் கேவலமான அரசியல் நடத்துகிறார்களா? அல்லது சமுதாயதிற்காகவும், அதன் முன்னேற்றதிற்காகவும் மட்டும் பேரம் பேசுபவர் கேவலமான அரசியல் செய்பவரா?
விமர்சனம் செய்வதற்கென்ற அடிப்படை தகுதியாவது உங்களுக்கு இருக்கிறதா?
கேவலத்தை பற்றி யார் யாரை நோக்கி பேசுவது?

ஏகத்துவம் தமிழகத்தில் வளரவே கூடாது என்ற கொள்கையை உயிர் மூச்சாக கொண்டு, வெறும் வாரியப்பதவியை வைத்துக்கொண்டே ஏகத்துவவாதிகளுக்கு இவர்கள் செய்த அட்டூழியங்களை பட்டியலிட்டால் இவர்கள் சமுதாய நலனை காப்பவர்களா அல்லது சமுதாய துரோகிகளா? என்பதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.. அத்தகைய பட்டியல் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்..

இந்த கருவை, அது கருவாக இருக்கும் போதே அழித்து விட வேண்டுமே அல்லாமல், வளர விடுவது நம் சமூகத்திற்கும், இஸ்லாமியக்கொள்கைக்குமே நாசக்கிருமியாய் மாறி விடும்..

மேலே உள்ளவற்றுக்கும், சமுதாயம் சார்பாக நாம் அடுத்தடுத்து வைக்கப்போகின்ற பல பல கேள்விகளுக்கும் முறையான பதிலை சொல்லி, நாங்கள் கேவலமான அரசியல் செய்யவில்லை என்று தமுமுகவினர் நிரூபிக்க தயாரா?
இதற்கு தயாராகாதவரை, இந்த சமுதாயத்தின் எந்த அங்கீகாரமும் இவர்களுக்கு இனி கிடைக்காது இன்ஷா அல்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக