திங்கள், 18 மார்ச், 2013

"சூனியக்காரர்களின்" முரண்பாடுசூனியம் என்பது அற்புத செயல், அது மனித சக்திக்கு அப்பாற்பட்ட காரியம் என்று சொல்கிறார்கள்.

அப்படியா?? அப்படி குர்ஆன் சொல்லவில்லையே? குர்ஆன் சூனியத்தை வெறும் கண் கட்டி வித்தை என்று தானே சொல்கிறது? என்று கேட்டால், அது  2:102  வசனத்தில் அது மனித சக்திக்கு மீறிய செயல் என்று சொல்லப்பட்டுள்ளது என்று பதில் சொல்கிறார்கள்.

அந்த வசனத்தில் கணவன் மனைவியை பிரிப்பார்கள் என்று தானே உள்ளது? என்று கேட்டால் அதற்கு சரியான பதில் இல்லை.

சூனியம் என்பதை வெறும் கண் கட்டி வித்தை என்று நாம் சொல்கிற போது இல்லை இல்லை அப்படி நம்பக்கூடாது, அது ஷைத்தானின் தீண்டல் என்று தான் புரிய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஷைத்தானின் குணம் என்பது மனிதனின் எண்ணங்களை வழி கெடுப்பது தானே தவிர, உடல் ரீதியான உபாதைகள் செய்வதல்ல என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. 
உடல் ரீதியான உபாதை செய்வான் என்கிற பொருள் பட வரக்கூடிய ஒரு சில சான்றுகள் கூட அவ்வாறு புரியதக்கதாக இல்லை. இதை கீழே உள்ள ஆய்வுக்கட்டுரை தெளிவாக விளக்குகிறது.

எனினும், இவர்கள் சொல்வது போல ஷைத்தானின் தீண்டல் தான் சூனியம் என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொள்வதாக இருந்தால் 2:102 வசனத்திலும் அது ஷைத்தானின் தீண்டல் என்று தானே சொல்ல வேண்டும்? அங்கு சூனியம் செய்தது ஷைத்தான் என்று சொல்லாமல் மலக்குகள் என்று சொல்லி இவர்கள் முரண்பாடுகிறார்கள் என்பது ஒரு வேடிக்கை.

சரி, அதையும் ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொள்வதாக இருந்தால், ஹதீஸ்களில் நபிக்கே சூனியம் வைக்கப்பட்டதாக வருகிறதே, நபிக்கு சூனியம் வைக்க முடியாது, அப்படி வைத்ததாக நம்புவது வழி கேடு என்று அல்லாஹ் சொல்லும் போது இதை எப்படி நம்பலாம் என்று நாம் கேட்கிற போது, அது இறை நிராகரிப்பார்களுக்கு அல்லாஹ் சொன்னது என்கிற வேடிக்கையான பதிலை சொல்கிறார்கள்.

இதை நம்பாதே, இதை நீ நம்பியாதால் மிகப்பெரும் வழிகேட்டில் வீழ்வாய் என்று ஒருவரை பார்த்து சொன்னால் சொல்லப்பட்ட விஷயம் பொதுவான விஷயம் எனும் போது அது அனைவரையும் தான் கட்டுப்படுத்தும். இப்படி புரிவது தான் சரியான புரிதலாக இருக்கும்.

இதே அத்தியாயத்தில் மூசா நபியின் சமூகத்தை பற்றி அல்லாஹ் சொல்லும் போது, அந்த சமூகம் காளை கன்றை வணங்கி வந்ததாகவும் அது அல்லாஹவிடம் மிகவும் கெட்ட செயல் எனவும் சொல்கிறான்.

நபிக்கு சூனியம் என்று நம்புவது கெட்ட செயல் என்று சொன்னால் அது அந்த மக்களுக்கு மட்டும் தான் என்று இவர்கள் கூறுவது போல, காளை கன்றை வணங்குவது கூட இஸ்ரவேல் சமுதாயத்திற்கு மட்டும் தான், நம்மை இது கட்டுப்படுத்தாது என்று சொல்வார்களா? என்றால் மாட்டார்கள். 

இதிலும் இவர்களது முரண்பாடு தெரிகிறது.

சரி அதையும் விடுவோம். ஷைத்தான் உள்ளங்களை தான் வழிக்கெடுப்பான், பைத்தியம் ஆக்குவதோ, உடல் உபாதைகள் செய்வதோ அவனால்  இயலாது என்று நாம் சொல்கிற போது அதை மறுப்பதற்கு, ஷைத்தான் மனிதனை பைத்தியமாக்குவான் என்று வரக்கூடிய ஒரு ஹதீஸை காட்டுகிறார்கள். இந்த  ஹதீசுக்கான சரியான விளக்கமும் கீழே உள்ள கட்டுரையில் உள்ளது)

சரி, இது தான் வாதம் என்றால், நபி பைத்தியமாக இருந்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? என்கிற கேள்வி எழுகிறது, அதற்கு , அது... பைத்தியம் இல்லை, ஆனால் மன உபாதை, பைத்தியம் இல்லை, ஆனால் மன சிதரல் என்று மென்று முழுங்குவதை தவிர உருப்படியான பதில் இல்லை.

சரி, அதையும் விடுவோம், ஒரு பேச்சுக்கு ஷைத்தான் தான் சூனியத்தை கொண்டு வந்தான் என்றே வைப்போம். ஷைத்தான் எண்ணங்களை வழிக்கெடுப்பதை தாண்டி உடல் உபாதையும் செய்வான், பைத்தியமாக ஆக்கவும் செய்வான் என்று வைத்துக்கொண்டால் கூட , அதை மற்ற மக்கள் விஷயத்தில் அவன் செய்வான் என்று சொல்லலாமே தவிர நபிக்கு செய்வான் என்று அப்போதும் ஒப்புக்கொள்ள முடியாதே??

என் விஷயத்தில் நல்லதை மட்டுமே அவன் சொல்வான், அல்லாஹ் என்னை அவனிடம் இருந்து பாதுகாத்து விட்டான் என்று நபி சொல்வதாக வேறொரு அறிவுப்பு உள்ளதே, அதை வைத்து பார்க்கையில், இந்த சூனியம் ஹதீஸில் ஷைத்தான் நபியை தீண்டினான் என்பது ஹதீசுக்கே  முரணாக இருக்கிறதே? என்கிற கேள்விக்கும் மௌனமே பதில் !

 சூனியம் என்பது ஒரு தந்திர வித்தை. அதை தாண்டி எதுவுமே சூனியதால் செய்ய இயலாது. அதை மனிதன் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக செய்கிறான் என்று சொல்கிற போது எந்த இறை வசனமும் எந்த ஹதீசும் முரணாக்கப்படவில்லை. அதுவே  ஷைத்தானே வந்து செய்கிறான் என்றெல்லாம் சொன்னால் மேலே உள்ளது போல பல குழப்பங்கள்.

மேலும் ஷைதானின் தீண்டல் தான் சூனியம் என்று இவர்கள் சொல்வது கூட இவர்களது சுயமான கருத்து தானே தவிர, குர் ஆனில் வெறும் வித்தை என்று தான் பொருள் இருக்கிறது.

அதை சரியாக பொருள் செய்தால், நபிக்கு சூனியம் செய்யப்ப்பட்டதாக வரக்கூடிய ஒரு ஹதீஸை மட்டும் அதில் ஏதோ தவறு ஏற்பட்டிருக்கும் என்று முடிவு செய்து நிறுத்தி விட்டு மற்ற அனைத்தையும் சரியாக புரியலாம், எந்த க்குழப்பமும் இன்றி புரியலாம்.

சூனியத்தை கூட நியாயப்படுத்த புகுந்தால், 

அது ஒரு வித்தை என்று குர் ஆன் சொல்வதை மறுக்க வேண்டி வரும்.

நபிக்கு சூனியம் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்வதை நிராகரிக்க வேண்டி வரும்.

ஷைத்தானுக்கு உள்ளங்களை வழிக்கெடுக்கும் சக்தியை தாண்டிய வேறு சக்தி இல்லை என்று குர் ஆனும் ஹதீஸும் சொல்வதை மறுக்க வேண்டி வரும், 

ஷைத்தானால் நபியை தீண்டவே முடியாது என்று வரக்கூடிய ஹதீஸ்களை பொய்யாக்க வேண்டி வரும் !  

நபிக்கு பைத்தியம் இல்லை என்று அல்லாஹ் சொல்வதை மறுக்க வேண்டி வரும். !!

ஜின் மற்றும் ஷைத்தானால் என்னென்ன செய்ய முடியும் என்னன்னா செய்ய முடியாது என்பதை தெளிவாக அறிய  கீழே உள்ள ஆய்வு நூலை பிடிக்கவும்.
http://onlinepj.com/books/jin_shaithan/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக