வெள்ளி, 1 மார்ச், 2013

மற்ற நபிமார்களை பின்பற்றுதல் - ஒரு உரையாடல்



கேள்வி  :  இஸ்லாம் அல்லாத ஆட்சி அமைந்தால் நாம் கட்டுப்படலாமா?


நமது பதில் : 

இஸ்லாமிய ஆட்சி அல்லாத ஒரு ஆட்சி தான் அமைகிறது என்றால் நமது கொள்கைக்கு பாதகம் இல்லாத வகையில் அந்த ஆட்சிக்கு கட்டுப்படுவது நம்மீது குற்றமில்லை.

யூசுப் நபியை பற்றி அல்லாஹ் சொல்லும் போது அவர்கள் மாற்று மத ஆட்சிக்கு கட்டுப்பட்டார்கள் என்று அல்லா சொல்கிறான்.


இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்' என்று அவர் கூறினார் 12:55

நீங்கள் பொய்யர்களாக இருந்தால் இதற்குரிய தண்டனை என்ன?' என்று அவர்கள் கேட்டனர்

யாருடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவரே (அவரைப் பிடித்துக் கொள்வதே) அதற்குரிய தண்டனை. நாங்கள் அநீதி இழைத்தோரை இவ்வாறே தண்டிப்போம்' என்று இவர்கள் கூறினர்.
அவரது சகோதரரின் சுமைக்கு முன் இவர்களின் சுமைகளை (யூசுஃப் சோதிக்க) ஆரம்பித்தார். பின்னர் அவரது சகோதரரின் சுமையிலிருந்து அதை வெளியே எடுத்தார். இவ்வாறே யூஸுஃபுக்கு தந்திரத்தைக் கொடுத்தோம். அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப் படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். நாம் நாடி யோருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்.
12:74 - 76)

மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் , யூசுப் நபியின் சமூகத்தில் உள்ள அந்த மன்னர் இஸ்லாமிய ஆட்சியை நடத்தவில்லை என்பதையும், இஸ்லாமிய ஆட்சியை நடத்தாத போதும், அந்த மன்னரின் ஆட்சியில் பொறுப்பு வகிக்க யூசுப் நபி விரும்பியதையும், திருட்டுக்கு இஸ்லாமிய சட்டம் வேறாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் படி சொல்லாமல் உங்கள் நாட்டில் என்ன தண்டனை? என்று அவர்கள் கேட்பதையும் வைத்து, இஸ்லாமிய ஆட்சி அல்லாத ஆட்சிகள் உருவானால் அதற்கும் நாம் கட்டுப்படலாம் என்று புரிகிறது.


கேள்வி  : முஹம்மது நபியை தானே பின்பற்ற வேண்டும்? குர் ஆனில் யூசுப் நபியை பற்றிய சம்பவங்களோ வேறு நபிமார்களின் வரலாறுகளோ இருந்தால் அவற்றை எதற்கு பின்பற்ற வேண்டும்??

பதில் :

தவறான கருத்தை சொல்கிறீர்கள். கடைசி நபியை தான் பின்பற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே சமயம் கடைசி நபியை பின்பற்றுவது எப்படி கட்டாயமோ அது போல குர் ஆன் சொல்வதை பின்பற்றுவதும் கட்டாயம்.

குர் ஆனில், ஒவ்வொரு நபிமார்களின் வரலாற்றை சொல்வது வெறுமனே கதை சொல்வதற்கல்ல. குர் ஆணை ஏதோ ஒரு வரலாற்று புத்தகம் போல சொல்கிறீர்கள்.. பழைய நபிமார்களின் சம்பவங்களை சொல்வது நமது படிப்பினைக்காக தான். நமது படிப்பினை என்றாலே, அவற்றை முகமது நபியும் பின்பற்ற வேண்டும், முகமது நபியின் சமூகமும் பின்பற்ற வேண்டும்.

இதே சம்பவத்தில் யூசுப் நபியை பற்றி அல்லாஹ் சொல்லும் போது 
(விளக்கம்) கேட்போருக்கு யூஸுஃபிடமும், அவரது சகோதரர் களிடமும் பல சான்றுகள் உள்ளன. 12:7 என்கிறான்.

அல்லாஹ் குர் ஆனில் 6:83-86 வசனங்களில் எல்லா நபிமார்களையும் அவர்கள் எப்படி அல்லாஹ்வுக்கு பணிந்து அதன் மூலம் வெற்றி பெற்றார்கள் என்பதையும் சொல்கிறான்.. சொல்லி விட்டு அல்லாஹ் சொல்லும் போது,

இதுவே அல்லாஹ்வின் வழி.தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்து கிறான். 6:88
அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். எனவே அவர்களின் வழியை (முஹம்மதே!) நீரும் பின்பற்றுவீராக! 6:90

அவர்களது வழியை நீயும் பின்பற்று என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டு விட்டான் என்றால், குர் ஆனில் மற்ற மற்ற நபிமார்களின் வரலாறுகளாக எதை அல்லாஹ் சொல்கிறானோ அதை நாமும் பின்பற்றத்தான் வேண்டும் !!





அவர்கள் வாதம் : படிப்பினை வேறு, சட்டங்களை அமுல்படுத்துவது என்பது வேறு .

நமது பதில் : எனவே அவர்களின் வழியை (முஹம்மதே!) நீரும் பின்பற்றுவீராக! 6:90 என்று யூசுப் நபியை பற்றி அல்லாஹ் சொல்கிறான். பின்பற்றதானே சொல்கிறான்??


அவர்கள் வாதம் : அப்படியானால் மூஸா நபி இன்று உயிருடன் இருந்தால் எனது வழியை தான் பின்பற்றியிருப்பார்கள் என்று நபி சொன்ன இந்த ஹதீஸை (அஹமத் 14104) எப்படி புரிகிறீர்கள்?


நமது பதில் : நிச்சயமாக, இன்று மூசா நபி உயிருடன் இருந்தால் நபி (ஸல்) அவர்களை தான் பின்பற்ற வேண்டும், அதே சமயம் அவர்கள் குர் ஆணையும் பின்பற்ற வேண்டுமல்லவா??

அவர்கள் வாதம் : அப்படியானால், நபி (ஸல்) அவர்கள் மாற்று மத ஆட்சியில் பங்கு கேட்டதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா?? இல்லை என்றால் நபி (ஸல்) அவர்களை பற்றி தவறான செய்தியை நீங்கள் சொல்வதாக தான் பொருள்.


நமது பதில் : யூசுப் நபியையும் மற்ற மற்ற நபிமார்களையும் பின்பற்றுமாறு முஹமது நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கட்டளையிடுகிறான் என்று இறை வசனத்தை நான் காட்டி விட்டேன்.
ஆட்சியில் பங்கு கேட்டார்கள் என்றால், அத்தகைய நிலை வந்தால் அவ்வாறு கேளுங்கள் யூசுப் நபியிடம் உங்களுக்கு முன் மாதிரி இருக்கிறது என்று தான் பொருள் ஆகுமே தவிர அனைவரும் கட்டாயம் ஆட்சியில் பங்கு கேளுங்கள் என்கிற பொருள் வராது !


அவர்கள் வாதம் : ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்வது இறை தொதரின் வாழ்க்கை குர் அனாகவே இருந்தது என்று. எங்கேயோ இடிக்கிறதே உங்க கருத்து ..

நமது பதில் : சரி உங்கள் வழியிலேயே பார்ப்போமே. இப்ராஹீம் நபியை அல்லாஹ் பின்பற்ற சொல்கிறான், அதை ஒப்புக்கொள்கிறீர்களா?


அவர்கள் வாதம் : சப்ஜக்ட் மாற்ற வேண்டாம். நாம் பேசுவது ஆட்சி, ஆட்சியில் பங்கு, அதை முடித்து விட்டு அடுத்ததை பேசலாம்.


நமது பதில் : சப்ஜக்ட் மாறவில்லை. இதற்கு பதில் சொல்லுங்கள், சப்ஜக்ட் மாறவில்லை என்பது புரியும்.


அவர்கள் வாதம் : முதல் கேள்வி முதலில் நீங்கள் எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

நமது பதில் : 'உங்களை விட்டும், அல்லாஹ்வை யன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. 'உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ் விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (60:4)

மேற்கண்ட வசனத்தில், இணை கற்பிக்கும் தனது தந்தைக்கு பாவ மன்னிப்பு தேடியதை தவிர, மற்ற எல்லா விஷயங்களிலும் இப்ராஹீம் நபியிடம் நமக்கு முன் மாதிரி உள்ளது என்று அல்லாஹ் சொல்கிறான். அப்படியானால், இந்த ஒரு காரியத்தை தவிர, இப்ராஹீம் நபியின் செயலை பின்பற்றி வேறு எதை செய்தாலும் அது குர் ஆணுக்கு உட்பட்டது தான், அவர்களிடம் அழகிய முன் மாதிரி உள்ளது என்று நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் சொல்கிறான்.

இதை எப்படி புரிய வேண்டும்?? இப்ராஹீம் நபி செய்தது போல நாமும் செய்யலாம், இப்ராகீம் நபி காபிருக்கு சலாம் சொன்னது போல் நாமும் சொல்லலாம், கொடிய சமூகத்திற்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்தது போன்று நாமும் கொடுக்கலாம், அவர்களது சிலைகளை உடைக்க வாய்ப்பு கிடைத்தால் நாமும் உடைக்கலாம்.
அப்படி ஒரு கால சூழல் வந்தால் இதை செய்யலாம் என்று புரிவது சரியான புரிதலா?? அல்லது முஹம்மது நபி எங்காவது கோடாரியுடன் சிலைகளை உடைத்தார்களா?? என்று கேள்வி மட்டும் கேட்டு, அதனால் இப்ராஹீம் நபியை பின்பற்ற தேவையில்லை என்று சொல்வது சரியான புரிதலா???



அவர்கள் வாதம் : ஆதாரம் வரவில்லையே ஆயிஷா (ரலி) சொன்னதற்கும் யூசுப் நபியை பின்பற்றுவதற்கும் 

நமது பதில் : இந்த நபிமார்களிடம் முன் மாதிரி உள்ளது, இவர்களை பின்பற்றுங்கள் என்றால் அதை அப்படி நம்ப வேண்டும். பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிரானல்லவா? ஆகவே முகமது நபி எங்காவது கோடாரியுடன் சென்று சிலைகளை ஏன் உடைக்கவில்லை?? என்று கேள்வி கேட்க கூடாது.

கோடாரியை 
எடுத்து சிலைகளை உடைக்க வேண்டிய நிலை வந்தால் உடைபதற்கு இப்ராஹீம் நபியிடம் முன் மாதிரி உள்ளது என்று தான் இதற்கு பொருளாகுமே தவிர, எல்லாரும் காட்டாயம் கோடாரியை கொண்டு ஒவ்வொரு சிலைகளாக உடைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல !!

அவர்கள் வாதம் : இன்னும் ஆதாரம் தரவில்லை 


நமது பதில் : இப்ராஹீம் நபியை பின்பற்றுவது என்பது அத்தகைய நிலை வந்தால் அவர்கள் செய்தது போல சிலைகளையும் உடைக்கலாம் என்று புரிவது போல, யூசுப் நபியை பின்பற்றி அப்படி ஒரு நிலை வந்தால் நாமும் மாற்று மத ஆட்சியில் பங்கு கேட்கலாம் !!

ஆதாரங்கள் தெளிவாகவே உள்ளன !!

இப்ராஹீம் நபி செய்தது போல நாமும் செய்யலாம், இப்ராகீம் நபி காபிருக்கு சலாம் சொன்னது போல் நாமும் சொல்லலாம், கொடிய சமூகத்திற்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்தது போன்று நாமும் கொடுக்கலாம், அவர்களது சிலைகளை உடைக்க வாய்ப்பு கிடைத்தால் நாமும் உடைக்கலாம்.
அப்படி
 ஒரு கால சூழல் வந்தால் இதை செய்யலாம் என்று புரிவது சரியான புரிதலா?? 

அல்லது முஹம்மது நபி எங்காவது கோடாரியுடன் சிலைகளை உடைத்தார்களா?? என்று கேள்வி மட்டும் கேட்டு "இன்னும் ஆதாரம் தரவில்லை" என்று சொல்வது சரியான புரிதலா??




அவர்கள் வாதம் : சகோதரர் ஆதாரம் தராத காரணத்தால் இத்துடன் நான் முடிக்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் 

நமது பதில் : மேலே உள்ள உரையாடலை படிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள், யார் ஆதாரம் தந்தது, யார் அதை மறுப்பது என்று.. வ அலைக்குமுஸ்ஸலாம் 


அவர்கள் வாதம் : நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.

நமது பதில் : உண்மை எப்போதும் வெல்லும்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக