வேதக்காரர்கள் அனைவரும் அவரது (ஈசா) மரணத்திற்கு முன் அவரை நம்பிக்கை கொள்வார்கள், மறுமையில் அவர்களுக்கு எதிரான சாட்சியாக அவர் இருப்பார் - 4 :159
மேற்கண்ட வசனத்தை ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்குரிய ஆதாரமாக நாம் வைக்கிறோம். அவரது மரணத்திற்கு முன் வேதக்காரர்கள் (இனி) நம்புவார்கள் என்று எதிர்கால வினையாக வந்திருப்பதால் இனிமேல் ஈசா நபி மீண்டும் வரும்போது நம்புவார்கள் என்பது கச்சிதமாக பொருந்திப்போகிறது என்பது சரி தான்.
ஆனால், அந்த வசனத்தின் பின்பகுதியை கவனித்தால் , முதல் பகுதியை முரணாக்குவது போல உள்ளது. மீண்டும் வருகிற ஈசா நபியை கண்டு, அது நாள் வரை மறுத்துக்கொண்டிருந்தவர்கள் அவரை நபி என்று நம்பி விடுவார்கள் என்று முதல் வசனம் சொல்கிறது. அதாவது அவர்கள் முஸ்லிம்களாக ஆகி விடுவார்கள்.
ஆனால் அவ்வாறு முஸ்லிம்களாக ஆகி விட்ட அந்த வேதக்காரர்களுக்கு எதிராக ஈசா நபி ஏன் மறுமையில் சாட்சி சொல்ல வேண்டும்? இதில் அர்த்தமில்லையே ! என்று சிந்திக்கையில், இந்த இடத்தில் "எதிரான சாட்சி" என்று அனேக மொழியாக்கங்களிலும் மொழிப்பெயர்ப்பு செய்திருப்பது தவறாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
"ஷஹாதுன் அலைஹிம்" என்று வரக்கூடிய அந்த அரபிப்பதத்திற்கு "அவர்களுக்கான சாட்சி" என்பது தான் நேரடி பொருள். இடத்தை பொறுத்து சாதகமான சாட்சி என்றோ பாதகமான சாட்சி என்றோ நாம் சொல்லிக்கொள்ளலாம் . இந்த இடத்தில் பாதிகமான சாட்சி என்பதை விட சாதகமான சாட்சி என்று மொழியாக்கம் செய்வது தான் பொருந்திப்போகிறது. எனவே "மறுமையில் ஈசா நபி அவர்களுக்கு சாட்சியாக இருப்பார்" என்று மொழியாக்கம் செய்வது தான் சரி.
இந்த மொழியாக்கம் தமிழ் உள்பட எந்த தர்ஜுமாக்களிலும் இருக்காது !
சகோ. பிஜே அவர்களிடமும் இது குறித்து கலந்தாய்வு செய்து அவரது ஒப்புதலும் கிடைத்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
இதை அடிப்படையாக வைத்து ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்கிற கொள்கையுடையவர்களுடன் நாம் விவாதமும் செய்திருக்கிறோம், பார்க்க http://www.nashidahmed.blogspot.com/2012/07/blog-post_8197.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக