புதன், 1 ஆகஸ்ட், 2012

பெற்றோருக்கு ஜகாத் கொடுக்கலாமா?



கேள்வி :

அஸ்ஸலாமு அலைக்கும் 
பள்ளிவாசலுக்கு ஜகாத் கொடுக்கலாமா?
அநாதை இல்லங்களுக்கு ஜகாத் கொடுக்கலாமா?
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஜகாத் கொடுக்கலாமா?







பதில் :

வ அலைக்குமுஸ்ஸலாம்.

9 :60 வசனத்தில் அல்லாஹ் எட்டு வகையான மக்களுக்கு சகாத் கொடுக்க சொல்கிறான்.
அந்த எட்டில் அடங்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சகாத் கொடுக்கலாம். நமது பெற்றோரோ நமது சகோதரனோ இதில் அடங்குபவர்களாக இருந்தால் அவர்களுக்கும் சகாத் கொடுக்க எந்த தடையும் கிடையாது.

ஆனால், கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், பெற்றோருக்கான உதவியை பொறுத்தவரை அது பிள்ளை என்கிற அடிப்படையில் நமது கடமை! கடமையான ஒரு செயலை சகாத் என்கிற அடிப்படையில் செய்யாமல் நமது சொந்த பணத்தில் இருந்து தான் செய்ய வேண்டும்.
அதாவது, சகாத் என்று சொல்லி அதனடிப்படையில் கொடுப்பது என்பது விரும்பி கொடுக்கிற ஒன்று, இன்னாருக்கு தான் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அப்படி கட்டாயமில்லாத ஒரு காரியமாக பெற்றோருக்கு சகாத் வழங்குதலை நாம் பாவிக்க கூடாது.

புஹாரி 1852 ஹதீஸில், பெற்றோரின் கடனை பிள்ளைகள் தான் அடைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.

அதே போல, அபு தாவூதில் பதிவு செய்யப்பட்ட இன்னொரு ஹதீஸில், நீயும் உன் செல்வங்களும் உன் தந்தைக்கு உரியவனவாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில், பெற்றோருக்கு பொருளுதவி செய்வது என்பது நமக்கு நாமே உதவி செய்து கொள்வது போன்றதாகும். நமக்கு நாமே எப்படி சகாத் கொடுத்துக்கொள்ள மாட்டோமோ அதே போன்று பெற்றோருக்கும் சகாத் என்கிற அடிப்படையிலான உதவியை செய்யாமல், கடமை என்கிற அடிப்படையில் நமது முழு பொருளையும் செலவு செய்ய வேண்டும்.

சகோதரர்களுக்கு அல்லது இன்ன பிற உறவினர்களுக்கு சகாத் கொடுப்பது இதில் அடங்காது, 


பள்ளிவாசலுக்கு கொடுப்பது பற்றி கேட்கிறீர்கள் - தாராளமாக கொடுக்கலாம். அந்த வசனத்தில் உள்ள எட்டு வகையில் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதையும் அல்லாஹ் அனுமதிக்கிறான். பள்ளிவாசல் ஆனாலும் அனாதைகள் இல்லமானாலும் அவை அல்லாஹ்வின் பாதையில் செய்யும் செலவு தான்.

அதே போல, உறவினர்களிலும் அல்லாஹ் சுட்டிக்காட்டியபடி யாசிப்பவர்களோ, அல்லது யாசிக்காத ஏழைகளோ இருந்தால் அந்த உறவினர்களுக்கும் கொடுக்கலாம்.


இது எனது கருத்து, சரி பார்த்துக்கொள்ளவும்..

வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக