திங்கள், 27 ஆகஸ்ட், 2012

வட்டி தொழில் செய்பவரிடம் இருந்து அன்பளிப்பு பெறலாமா? • பரீராவுக்கு தர்மமாக தரப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது.
  இது பரீராவுக்கு தர்மம், எனக்கு இது அன்பளிப்பு என்று நபி அவர்கள் சொன்னார்கள் புஹாரி 1495

  வட்டி எப்படி ஹராமோ அதே போல, நபி (ஸல்) அவர்கள் தர்மம் பெறுவதும் அவர்களுக்கு ஹராம். இருந்தும் தர்மமாக இன்னொருவருக்கு கிடைத்த பொருள் தமக்கு வரும் பொது அது தர்மம் என்று பாவிக்காமல் அன்பளிப்பாகவே பாவிக்கிறார்கள்.

  அதே போல, வட்டியின் மூலம் ஒருவர் சம்பாதித்த பொருள் நமக்கு வந்தால், அது நமக்கு அன்பளிப்பு, அவருக்கு தான் வட்டி !
 •  வட்டி வியாபாரம் செய்பவரிடம் இருந்து எதையுமே பெற கூடாது என்றால் இந்த உலகில் நம்மால் வாழவே முடியாது.
  நாம் வேலை செய்யும் அலுவலகம் வட்டி தொழில் தான் செய்கிறது.
  நாம் கட்டுப்பட்டிருக்கும் இந்த அரசாங்கமே வட்டி தொழில் தான் செய்கிறது. அப்படி பார்த்த

  ால் ரேஷன் அரிசி வாங்க கூடாது, மின் இணைப்பு பெற கூடாது, தண்ணீர் இணைப்பு பெறக்கூடாது, இன்னும் சொல்லப்போனால், நாம் வாங்கும் தூத் பிரஷ், சோப், சீப்பு போன்ற எதையுமே வாங்க கூடாது,
  ஏனெனில் எல்லாமே இந்த அரசாங்கம் அல்லது அந்தந்த நிறுவனங்கள் வட்டி தொழிலின் மூலம் ஈட்டும் வருமானம் தான்.

  சோப் தயாரிக்கும் விப்ரோ நிறுவனம் வட்டி தொழிலான ஷேர் மார்க்கெட் இல் கணிசமான இடத்தில உள்ளது !!

  ஆக, இந்த வாதத்தில் எந்த அறிவும் இல்லை.

  வட்டி வாங்குவதும், கொடுப்பதும் சாட்சியாக இருப்பதும் தான் தவறே தவிர, ஒருவர் வட்டி வாங்குகிறார் என்பதற்காக அவரிடம் இருந்து எந்த அன்பளிப்பையும் பெற மாட்டேன் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக