புதன், 29 டிசம்பர், 2010

நபிகளாரை இழுவுப்படுத்திய சாகுல் ஹமீத் பாதுஷா அவ்லியா(?) !!!


ஷாகுல் ஹமீது பாதுஷா அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறேன்.

தம் மாணவர்களுடன் நாயகமவர்கள் (ஷாகுல் ஹமீது பாதுஷா) பெரும்பாலும் நாட்களை கழித்துவந்தார். தம் வீட்டில் நடப்பது தெரியாமல் வந்ததது. ஒரு நாள் வீட்டிற்கு வந்த போது வாயி­ல் பந்தல் போட்டிருப்பதையும் நல்லுணவு சமைக்கப்படுவதையும் விருந்திணர்கள் உள்ளுக்கும் வெளியுமாக நடந்து கொண்டிருப்பதையும் கண்டார்கள். தாயிடம் சென்று விணவிய போது மகனே உனக்கு திருமணம் செய்விக்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். அதனால்தான் வாயி­ல் பந்தல் வருவோர்க்கு என்று சொன்னதும் நசாயகம் அவர்கள் ஒரு பெருமூச்சு விட்டு நான் உலக இச்சைகளை துறந்தவன். என் உள்ளமும் உயிரும் ஆண்டவனையே நாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு மண சடங்கு வேண்டாம் என்று பணிவுடன் சொல்­விட்டு வெளியே வந்து அலங்கார பந்தலை பார்த்தார்கள் பந்தல் மட்டும் எரிந்து சாம்பலாகிவிட்டது.; தாய் தந்தை தமது தவறுக்கு வருந்தினர். மற்றவர்கள் வியந்தனர்.


இப்படி ஒரு சம்பவம் நாகூர் டிரஸ்டிகளால் வெளியிடப்பட்ட கன்ஜீல் கரமத் என்ற புத்தகத்தில் பக்கம் 54 ல் எழுதப்பட்டுள்ளது.


பொய் சொல்பவர்கள் முரண்பாடகவும் தாம் ஏற்கனவே என்ன சொன்னோம் என்பதையும் மறந்துவிடுவார்கள். பிறகு வசமாக தூண்டி­ல் சிக்கிக் கொள்வார்ல்கள். இது போன்றுதான் இவர்களும் நம் வலையில் வசமாக சிக்கியுள்ளனர்.


அவ்­யாலிக்களுக்கு மறைவான செய்திகளெல்லாம் அத்துப்பிடி அனைத்தையும் அறியும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. என்று கதை கட்டிவிடுவார்கள். பாருங்கள் அதை இந்த சம்பவத்தில் மறுத்துள்ளார்கள் வனத்திலேயே சுற்றிவந்த அவ்­லியா பாதுஷா அவர்களுக்கு வீட்டில் கல்யாணம் நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. பந்தலை பார்த்தபிறகும் குட தெரியவில்லை.



இன்னும் இந்த சம்பவத்தில் அவ்­லியாவை விட அவ்­லியாவின் பெற்றோருக்கு தன் பிள்ளை வீட்டிற்கு வரப்போகிறான் என்ற செய்தி மறைவான ஞானத்தின் மூலம் தெரிந்துவிடுகிறது, இந்த இடத்தில் ஷாகுல் ஹமீதை விட அவர்களின் பெற்றோர் அவ்­லியாக்களை மிஞ்சிவிட்டனர்.


மீண்டும் சம்பவத்தை படியுங்கள் எனக்கு மணச்சடங்கு வேண்டாம் என்று சொல்­லி நபிகள் நாயகத்தின் அருமையான சுன்னத்தையே புறக்கணித்தது மட்டு மில்லாமல் அது ஒரு மணச்சடங்கு மணச்சடங்குக்கு ஆசைப்படுபவர்கள்தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சொல்­லி நபிகள் நாயகத்தையும் அவர்களின் தோழர்களையும் இன்னும் இந்த உம்மத்தில் யாரெல்லாம் திருமணம் செய்தார்களோ அவர்களையும் கே­லி செய்திருக்கிறார்.


இப்படி நபிகள் நாயகத்தின் திருமணத்தை கே­லி செய்தவர் எதற்காக தன்னுடைய மகனுக்கு பொண்ணு பார்ப்பதற்கு பெண்கள் மட்டும் குளிக்கும் குளத்து கரைக்குச் செல்ல வேண்டும்.?
எதற்கு அங்கே குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை ? தடவிக் கொடுக்க வேண்டும் எங்குமில்லை தலையில்தான்.


தன்னுடைய மகனாருக்கு திருமணம் செய்து வைக்கையிலும் நல்ல நாள் பார்த்து அலங்கார பந்த­லிட்டு முணமுடித்து வைத்திருக்கிறார். தனக்கு வேண்டாத மணச்சடங்கை தன்னுடைய குஞ்சிக்கு ஏன் நடத்தி வைக்க வேண்டும். இருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால் அதையும் நம்பக்கூடியவர்கள் என்ற அடிப்படையில் இந்தக்கதைகளை அவிழத்துள்ளனர். மகாபாரதத்திற்கும் ஷாகுல் ஹமீது பாதுஷாவிற்கும் சரியான போட்டி சபாஷ் யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்.



- yoosuf faizy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக