வெள்ளி, 31 டிசம்பர், 2010

கோமாளித்தனமான வாதங்கள்..!!




பச்சை ஷிர்க்கை நியாயப்படுத்த கோமாளித்தனமான வாதங்கள்..!
!


"இணை வைப்பவர்கள் யார்?", என்ற இன்றைய விவாதத்தில் ஒரு பகுதி, உங்கள் பார்வைக்கு..

இறந்து போனவர்களை ஒரே நேரத்தில், எத்தனை பேர் வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும், உலகத்தின் எந்த பாகத்திலிருந்து வேண்டுமானாலும் அழைக்கலாம் என்ற பச்சை ஷிர்க்கான ஒரு செயலை ஆதரிக்கும் சுன்னத் (?) ஜமாத்தின் பொறுப்பாளரான ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள், அவ்வாறான இணை வைப்பை நியாயப்படுத்தி பேசிக்கொண்டிருக்கிறார்.

அதற்கு பிஜே அவர்கள் ஆதாரம் கேட்கிறார்..

அதற்கு ஜமாலி தரும் ஆதாரம் இதோ..

""Google இணையதளம் இருக்கிறது. அதில் இங்கிருந்து நான் ஜப்பான் நாட்டை பற்றி தகவல் தேடுகிறேன், அது தருகிறது. இன்னொரு ஊர் அல்லது நாட்டில் இருந்து இன்னொருவர் இதே நேரத்தில், டில்லி அல்லது பாம்பே பற்றி தகவல் தேடுகிறார். அவருக்கும் அந்த இணையதளம் தகவலை தருகிறது. ஆக, ஒரே நேரத்தில், பலருக்கும் பல வகையிலான தகவலை அந்த இணையதளம் தருகிறது.
இதனால், Google இணையதளத்தை அல்லாஹ் என்றோ அல்லது அல்லாவுக்கு இணையானது என்றோ நாம் கருதுவதாக ஆகி விடுமா?
அதனால், இறந்தவர்களிடம் எங்கிருந்து வேண்டுமானாலும், எத்தனை பேர் வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும் துஆ செய்யலாம்!!!!!!""""

சுன்னத் (?) ஜமாத்தினரின் வழிகேடான நிலைக்கும், ஜமாலி அவர்களின் கோமாளித்தனமான வாதங்களுக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக