சனி, 17 ஆகஸ்ட், 2013

முகநூல் பதிவுகள் : அறிவுக்கு பொருந்தா வாதம்


மக்ரிப் தொழுகை 3 ரக்காத் தொழுதோமா 4 ரக்காத் தொழுதோமா என்கிற குழப்பம் ஒருவருக்கு வருகிறது என்று வைப்போம். லுஹர் தொழுகை 4 தொழுதோமா 5 தொழுதோமா என்கிற குழப்பம் ஏற்படுகிறது என்று வைப்போம்.

இதை பார்க்கும் ஒரு பாமரன், ஒரு வக்து தொழுகை 2 ரக்காத், ஒரு வக்த் தொழுகை 4, ஒரு வக்த் தொழுகை 3 என வேறு வேறாக தொழுவதால் தானே இந்த குழப்பம் உங்களுக்கு ?

இதை சரி செய்ய எல்லா வக்துக்கும் சீராக 4 ரக்காத் என்று முடிவு செய்வது தான் சரி என்று அவன் சொன்னால் அது எப்படி மடத்தனமான வாதமோ

அது போல தான்

பிறை பார்த்து மாதங்களை தீர்மானம் செய்கையில் சில இடங்களில், சில ஊர்களில் குழப்பம் ஏற்படுவதால் விஞ்ஞான முறைப்படி உலகம் முழுவதும் சீராக கணியுங்கள் என்கிற சிலரது வாதமும் அமைந்துள்ளது.

ஆணும் பெண்ணும் சமமா?



ஆணும் பெண்ணும் எல்லா விதத்திலும் சமம் என்கிற எண்ணம் பல குழப்பங்களுக்கும் காரணமாய் அமைகிறது.

பல விஷயங்களில் ஆணும் பெண்ணும் சமமில்லை !!

அது தான் உலக நியதி. அது தான் இயற்கையான அமைப்பு. அது தான் இயற்கை மார்க்கம் இஸ்லாமும் சொல்வது.

மேலும், இதை புரிந்து கொண்டால் ஆணிடம் ஆணாதிக்கம் வெளிப்படாது என்பது மற்றுமொரு ஆச்சர்ய உண்மை. 
ஆணும் பெண்ணும் சமம் என்கிற வறட்டு சித்தாந்தம் போலிகளால் மொழியப்பட்டு வருவது ஆண்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படாதது.

இந்த போலி தத்துவத்தை நம்புகிற பெண்கள், தங்கள் இயல்பையும் மீறி ஆண்களிட்டம் வலிமை காட்ட முற்படும் போது ஆண்களால் சகித்துக்கொள்ள முடியாது.
எனக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீ எனக்கு சமமாக பேசுகிறாயா? என்று பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவது இதன் காரணமாகவே நடக்கிறது.

இதற்கு மாற்றமாக, ஆண்கள் பெண்களை நிர்வகிக்க கூடியவர்கள், பெண்கள் ஆண்களுக்கு கட்டுப்பட வேண்டியவர்கள் என்கிற உண்மையை உண்மையாக சமூகத்தில் போதிக்கும் போது அதை பெண்கள் உள்வாங்கி அதற்கேற்றார்போல கணவன்மார்களிடம் நடக்கிறார்கள்,
ஆண்களும், தாம் நிர்வகிக்கிறோம் என்பதால் அவளை அனாவசியமாக அதிகாரம் செலுத்த கூடாது என்று எண்ணுகிறான்.

மனித இயல்பை சரியாய் புரிந்து சட்டம் இயற்ற இறைவனால் தான் முடியும் என்கிற வகையில் இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இதுவே சான்று பகர்கிறது !

இஸ்லாத்தில் பெண்கள், மற்ற சமூகத்து பெண்களை விடவெல்லாம் மிக கண்ணியமாக வாழ்வதற்கு இந்த தத்துவமே காரணம்.

மற்ற சித்தாந்தங்களை விடவும் இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் குறைவு, இஸ்லாத்தில் வரதட்சணை கொடுமை குறைவு, இஸ்லாத்தில் விவாகரத்து குறைவு, இஸ்லாத்தில் சின்ன வீடு என்று ஏமாற்றுதல் குறைவு, இன்னும் ஏராளமான வகைகளில் இஸ்லாமிய பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று கண்ணியத்துடன் வாழ்கிறார்கள்.
மற்ற எந்த சித்தாந்தங்களிலும் பெண்களுக்கு இந்த கண்ணியம் இல்லை என்பதை இன்று உலகம் புரிய ஆரம்பிக்கிறது.. இதற்கு, ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமம் என்கிற இவர்களது வறட்டு தத்துவமும் ஒரு காரணம்.

இன்னும் சொல்லப்போனால் ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமம் என்கிற போலி தத்துவத்தை மக்களிடம் பிரசாரம் செய்வதால் தான் இயல்பாய் தோன்றும் ஆணாதிக்கம் கூட சமூகத்தால் குறையாய் பார்க்கப்படுகிறது !

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவான வற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

எது வரதட்சணை ?




"உங்க மகளுக்கு எவ்வளவு செய்றீங்க?"

இந்த கேள்வியை கேட்டு சலிப்படைந்த பெண்ணை பெற்றவர்கள் பலர் உள்ளனர்.

எனது மகளுக்கு எவ்வளவு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும், நீங்கள் எதற்கு அதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்று அந்த நொடி பெண்ணின் தகப்பனார் மனதினுள் எழும் யதார்த்தமான கேள்வி கூட, தங்கள் மகளின் நலன் கருதி மனதிற்குள்ளேயே சமாதியாக்கப்படும்.

100 சவரன் என்று இவர்கள் சொல்ல, அவ்வளவு தானா? என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்க, மாப்பிள்ளைக்கு.... டொயோட்டா கார்... இன்ஷா அல்லாஹ்...... புக் பண்ணலாம் என்று பெண்ணின் தகப்பனார் மென்று விழுங்க, திருமண பேச்சுவார்த்தை இனிதே (?) நிறைவுறும்.

சில நாட்கள் கழித்து பெண்ணின் தாயாரிடம், என்ன? இப்பவே வரதட்சணை எல்லாம் பேசியாச்சு போல? என்ன நியாயம் இது? என்று உற்றார் கேட்கின்ற போது,

"இதை எப்படி வரதட்சணை என்பீர்கள்? எங்க மகளுக்கு நாங்க செய்றோம், இது தப்பா? தவ்ஹீத் தவ்ஹீத் னு சொல்லி எல்லாத்தையும் தப்பாவே பேசுறீங்களே?" என்று பொய் கோபத்தை காட்டுவதை தவிர வேறு வழி இல்லாது நிற்கும் அவர்களை எண்ணி பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா என்று குழம்பி போவோம் நாம்.

பெண்ணை பெற்றவர்கள் அவர்களாக விரும்பி தருவதை யாரும் வரதட்சணை என்று சொல்ல மாட்டார்கள்.
அதே சமயம், பெண்ணை பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது தருவது தான் விரும்பி தருவது என்பது.
அவர்கள் எப்போது விரும்பி தர வேண்டும் என்பதை மூன்றாம் நபர் தான் தீர்மானிக்கிறார் என்றால் அது பெண்ணின் பெற்றோர் விரும்பி தருவதாக ஆகாது. பெண்ணின் பெற்றோர் விரும்பி தருவதற்கு இன்னொருவர் விரும்புகிறார் என்று தான் ஆகும் !

சுருக்கமாக கீழ்காணும் நான்கு காரணங்கள் இருந்தால் அது வரதட்சணை என்று முடிவு செய்யலாம்.

1. மாப்பிள்ளை அல்லது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் நேரடியாகவே கேட்பது.

2. இந்த குடும்பத்தில் திருமண உறவு வைத்துக்கொண்டால் நிறைய கிடைக்கும் என்று மாப்பிள்ளை அல்லது மாப்பிள்ளை வீட்டார் எண்ணி அந்த அடிப்படையில் திருமணம் செய்வது..

3. நாம் இதை செய்யவில்லை என்றால் நமது மகள் அங்கே மகிழ்ச்சியாக இருக்க மாட்டாளோ என்று பெண்ணை பெற்றவர்கள் அஞ்சுவது..

4. நாம் இதை செய்யவில்லை என்றால் இந்த சமுதாயத்தில் நமக்கான அங்கீகாரம்பறி போய் விடுமோ என்று பெண்ணை பெற்றவர்கள் அஞ்சுவது.

மேற்கண்ட நான்கோ, நான்கில் ஒன்றோ இருந்தால் அது வரதட்சணை !!
மேற்கண்ட காரணங்கள் ஒன்று கூட இல்லையெனில், பெண் வீட்டார் 100 கோடியே கொடுத்தாலும் அது வரதட்சணை ஆகாது !!

மீலாது எப்போது தோன்றியது ?




நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, மீலாது விழா கொண்டாடவில்லை. 

அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 - பக்கம் 172)

ஆக இவ்விழா நபி காலத்தில் இல்லை என்பதற்கு, பலகீனமான செய்தி கூட இல்லை என்பதே ஆதாரமாக இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்க, இது ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகியுள்ளது.

முகநூல் பதிவுகள் : பிஜே புராணம்




தர்காவிற்கு செல்லுதல் பாவமான காரியம் என்று கப்ர் முட்டிகளிடம் சொன்னால் பிஜே ஒரு முட்டாள் என்று பதில் சொல்கிறார்கள்.

மவ்லூத் ஓதுவதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உள்ளதா என்று இணைவைப்பாளர்களிடம் கேட்டால் பிஜே ஒரு குழப்பவாதி என்கிறார்கள்.

சஹாபாக்களை பின்பற்றலாம் என்று சொல்வது வழிகேடில்லையா? என்று சலபிகளிடம் கேட்டால் பிஜே முர்தத் ஆகி விட்டார் என்கிறார்கள்.

சூனியத்தை நம்புவது இணை வைப்பு என்று சொன்னால் பிஜே ஒரு காபிர் என்று பதில் அளிக்கிறார்கள்.

முஹம்மது (சல்) தான் இறுதி நபி என்று காதியானிகளிடம் சொன்னால் அவர்களும் பிஜேவை ஏசுகிறார்கள்.

சூபிகளிடம் தரீக்காவிலுள்ள தவறுகளை எடுத்துரைத்தால் அவர்களும் பிஜெவையே வசை பாடுகிறார்கள்.

மத்ஹப் வாதிகளிடம் அதிலுள்ள ஆபாசங்களை விளக்கினால், தப்லீக் ஜமாஅத்தினரிடம் அவர்களது அபத்தமான கொள்கைகளுக்கு சான்று கேட்டால் அனைவருமே பிஜெவையே திட்டுகிறார்கள்.

கிறிஸ்தவர்களிடம் பைபிள் கடவுளின் வார்த்தையில்லை என்று நிரூபித்தாலும், நாத்திகர்களின் பகுத்தறிவு வேஷத்தை கலைத்தாலும், ஹிந்துக்களின் மூட நம்பிகைகளை படம் போட்டு காண்பித்தாலும் அனைவருமே ஓன்று திரள்வது பிஜேவை விமர்சிக்கத்தான்..

என்றால், ஒரு விஷயம் புலனாகிறது..

இஸ்லாத்தில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகிலும் கூட இரண்டே சித்தாந்தங்கள் தான் .உள்ளன.

ஒன்று, சான்றுகளுடனும் சிந்தனை செறிவுடனும் பேசும் ஏகத்துவ சித்தாந்தம் !

இன்னொன்று, நம்மை கேலி செய்வதையும் திட்டுவதையுமே குறிக்கோளாக கொண்ட மற்ற சித்தாந்தங்கள் !!

அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா? (40:69)

முகநூல் பதிவுகள் - இஸ்லாத்தில் பெண்கள்



அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று கூறியவர்களெல்லாம் புரட்சி கவிஞர்களாக பாராட்டப்படும் இந்த சமூகத்திற்கு,

பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கின்ற இஸ்லாத்தை, 

பெண்கள் அவர்களுக்கென சம்பாத்தியம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கிற இஸ்லாத்தை, 

தாம் சம்பாதித்த சொத்துக்களை தாமே நிர்வகிக்கலாம் என்று அனுமதிக்கிற ஒரு இஸ்லாத்தை, 

கணவனை பிடிக்கவில்லை என்றால் தைரியமாக விவாகரத்து பெற்று கொள்ளும் முழு சுதந்திரத்தை தந்துள்ள இஸ்லாத்தை, 

அதற்கான காரணத்தை கூட சொல்ல தேவையில்லை என்று சொல்கிற அளவுக்கு பெண்களுக்கு உரிமைகளை வழங்கியுள்ள இஸ்லாத்தை,

திருமணத்திற்கென பணம் காசுகளை ஆண்களிடம் உரிமையுடன் கேட்டு பெறலாம் என்று சட்டம் இயற்றியிருக்கிற இஸ்லாத்தை,

கணவன் தன்னை விவாகரத்து செய்தால் அதற்கான நஷ்டஈட்டை கூட சட்டப்படி பெற்றுக்கொள்ளும் உரிமையை தந்துள்ள இஸ்லாத்தை,

ஹிஜாப், இத்தா போன்ற சட்டங்கள் மூலம் பெண்களுக்குரிய சமூக பாதுகாப்பை வேறெந்த சித்தாந்தாமும் கற்பனை கூட செய்யாத காலகட்டத்தில், தெளிவான முறையில் வரையறுத்து தந்துள்ள இஸ்லாத்தை 

விமர்சனம் செய்யும் எந்த யோக்கியதையும் கிடையாது !


திங்கள், 12 ஆகஸ்ட், 2013

ஜமாலி ஹசரத் VS சலபி ஹசரத்


ஜமாலி ஹசரத் : மக்களே.. நூறு ரூபா காணிக்கை, அப்புறம் கொப்பற தேங்கா எல்லாம் கொண்டுகிட்டு, எனது வயிற்று வலியை போக்குங்க அவ்லியானு அதோ அந்த தர்கால அடங்கியிருப்பவரு கிட்ட நாம கேட்டா நம்ம வயிற்று வலியை அவர் போக்குவார்.

பாமரர் : ஹசரத், ஹசரத்,அது எப்படி ஹசரத்? நேரடியா மருந்து மாத்திரை மூலம் போக்குவார் அப்படின்னு சொன்னா நம்ப முடியுது.., எந்த புற சாதனமும் இல்லாம எப்படி ஹசரத் அவர் குணமாக்குவார்? இது அல்லாஹ்வின் ஆற்றலல்லவா ஹசரத்? இப்படி நம்புவது ஷிர்க் இல்லையா ஹசரத்?

ஜமாலி ஹசரத் : தப்பு தப்பு.. அப்படியெல்லாம் பேசக்கூடாது தம்பி.. நாம என்ன அவருக்கே இந்த சக்தி இருக்குது அப்படினா சொல்றோம்?? அல்லாஹ் அந்த சக்தியை அவருக்கு வழங்கியிருக்கிறான். அல்லாஹ்வின் ஆற்றலால் அதை அவர் செய்கிறார். அப்படிதான் சொல்றோம்.
எத சொல்றதா இருந்தாலும், "அல்லாஹ் இந்த சக்திய அவருக்கு குடுத்திருக்கான்" அப்படிங்கற இந்த பிட்ட சேர்த்து விடு, எதுவுமே தப்பாகாது.. சரியா !

பாமரர் : சரிங்க ஹசரத்.. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். உங்க அறிவே அறிவு !

சலபி ஹசரத் : பக்தர்களா, இங்கிருந்துகிட்டே யார் வேணாலும் எங்கேயிக்கிருக்ககூடிய ஒருவனையும் என்ன வேணா செய்யலாம். கை காலை முடக்கலாம், பைத்தியமாக்கிடலாம்.. நமக்கு தேவை, அந்த ஆளோட முடி அல்லது நகம் மட்டும் தான் சரியா.. ?

பக்தன் : ஹசரத் ஹசரத், அதெப்படி முடியும் ஹசரத் ? இருந்த எடத்துலே இருந்துகிட்டே இன்னொருத்தனோட கையை முடக்குறது அல்லாஹ்வோட சக்தி இல்லையா ஹசரத் ?

சலபி ஹசரத் : பக்தா, அப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாதுப்பா.. நாம என்ன அவருக்கே இந்த சக்தி இருக்குதுன்னா சொல்றோம்? அல்லாஹ் அந்த சக்திய கொடுப்பான் பக்தா..
அல்லாஹ் கொடுக்கும் போது அதை அவர் செய்வார்.
இப்படி போய் சொல்லு சரியா..
எப்பவுமே, இத அவருக்கு செய்ய முடியும் னு மொட்டையா சொல்லாத, அல்லாஹ் அந்த சக்திய அவருக்கு கொடுப்பான்னு ஒரு பிட்ட எப்போதும் சேர்த்துக்கோ சரியா??

பக்தன் : அட சூப்பர் ஹசரத்.. பிரமாதம் ! உங்கள் அறிவோ அறிவு.. இந்த ஒரு பாயிண்ட் போதும், ஒரு கை பாத்துடறோம் ..