அஸ்ஸலாமு அலைக்கும்..
பல பேருக்கு அனுப்பி வைக்கின்றீர்கள். இது என்ன PUBLIC விவாதமா? எனக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்சனையை ஏன் போதுவாக்குகின்ரீர்எனக்கும் உங்களுக்கும் எந்த சொந்த பிரச்னையும் கிடையாது. ஏதோ சொந்த, கொடுக்கல் வாங்கல்களை பற்றி நாம் வாதிப்பதை போல் பேசுகிறீர்கள்.
இது பொது பிரச்சனை !. மார்க்கப்பிரச்சனை !!
அதை குழுமத்திலும், உங்களுக்கும் எனக்கும் தெரிந்த அனைவர் மத்தியிலும் தான் வாதிக்க வேண்டும்.
உண்மை தன் பக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர் மத்தியில் வாதிப்பதற்கும் தயங்க தேவையில்லை!
நான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லவில்லை, என்று நீங்கள் தான் துவங்கினீர்கள். நீங்கள் யாருக்கெல்லாம் cc வைத்து அந்த மெயிலை அனுப்பினீர்களோ, அதே cc யுடன் வாதங்களை தொடரலாம்.
ஜமாலியின் கொள்கை என்று நான் ஒரு கருத்தை கூறினேன். அந்த கொள்கையை நீங்கள் ஏற்கிறீர்களா? அல்லது மறுக்கிறீர்களா? இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லுங்கள். வேறு திசை திருப்பல்கள் வேண்டாம்.
நீங்கள் இதை ஏற்பதாக இருந்தால் மட்டுமே வாதம் அவசியம். மறுப்பதாக இருந்தால் நம் இருவர் கருத்தும் ஒன்றே!
This is Truthஎப்படி இப்படி அப்பட்டமாக பொய் பேசுகின்றீர். நான் cc போட்டு துவங்க வில்லை. அதற்கு முன் உங்கள் பதிவில் அந்த CC இருந்தது. உங்களுக்கு Reply அனுப்பும் போது அதப்படியே வந்தது. இது தான் உண்மை. நான் நீங்கள் CC அனுப்பிய group ல் உறுப்பினராக கூட இல்லை. அதனால் என்னுடைய தகவல் அங்கே பரிமாறப்படவில்லை. CC பிரச்சனையும் உங்களால் ஆரம்பித்தது தான்.
மார்க்கப் பிரச்சனையை என்றால் பொது விவாதம் சரி தான். அதற்க்கு என்று ஒரு முறை இருக்கின்றது. நானும் நீங்கள் அனுப்பும் group ல் சேர்ந்து இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த நபர்கள் எவ்வளவு அனுப்புகின்றீர்களோ அவ்வளவு எனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்ப வேண்டும். இது தான் விவாதிக்கும் முறை. அதனால் இது முறை இல்லா விவாதம் என்று வேண்டுமானால் கூறலாம்.
ஒரு இட்டு கட்டை நீங்கள் கூறி அதை கூற வேண்டாம் என்று கூறும் போது, வேறு ஒரு கேள்வி கேட்கின்றீர். நான் கேட்டது, நீங்கள் கப்ரு வணங்கி என்பதை வாபஸ் வாங்கி விட்டீர்களா? இல்லையா? ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை தவிர வணங்குகின்றான் என்று இட்டுக்கட்டி கூறலாமா? இதற்கு பதில் சொல்லுங்கள். அப்போது தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல எதுவாக இருக்கும்.
அதை விடுத்து உங்கள் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி கொண்டே இருக்க முடியாது. நான் விவாதிக்க தயங்க வில்லை. அதை நீங்கள் வேறு இழைகளில் விமர்சனமாக வேறு வைக்கின்றீர். இப்படி செய்யலாமா என்று தான் கேட்கின்றேன். அதற்க்கு ஆயிஷா என்ற பெயர் உடையவர் வக்காலத்து வேறு. இது தான் கூடாது. one to one. விவாதம் என்றால் விவாதம் முடிந்த பிறகு தான் விமர்சனம் வேண்டும். நானும் விமர்சனம் செய்யலாம். உங்கள் தலைவர் களியக்காவிளையிலேயே இந்த விவாதத்தில் அப்பட்டமாக தோற்று விட்டாரே, அதனால் தானே விதண்டா வாதம் உண்மை பதில் என்று மக்களை Convince பண்ணினார் என்று கருத்தை பதிவு செய்யலாமா? இல்லை நீங்கள் எல்லாம் அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது என்று கூறுவதால் இவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் என்று கூறலாமா? அப்படி விமர்சனம் செய்யலாமா? இது எப்பிடி முறை இல்லையோ, அப்படி நீங்கள் செய்தது முறை இல்லை. அதை ஒப்புக்கொள்ளுங்கள், சுத்தி வலைக்காதீர்கள்.
பயம் யாருக்கும் கிடையாது. நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் அனுமதித்த ஜியாரத்தை கப்ரு வணங்கி என்று கொச்சை படுத்தும் நீங்களே பயப்படைல்லை, வெக்கப்படவில்லை. நான் எதற்கு பயப்பட வேண்டும். நீங்கள் செல்லும் முறை சரி இல்லை. ஒரு வரி பதில் கேட்கின்றீர். அதற்க்கு முன் நான் நீங்கள் கப்ரு வணங்கி என்று சொன்னதை வாபஸ் வாங்கி விட்டீர்களா இல்லையா. நீங்கள் கேட்டதை போல ஒரு வரி கூட தேவை இல்லை. ஒரு வார்த்தை போதும். ஆம் அல்லது இல்லை.
இதை விடுத்து நீங்கள் சொல்லுங்கள் என்று ஏன் என்னை கேட்டுக்கொண்டு இருக்கின்றீர். நான் முதலில் வைத்தது கோரிக்கை தான், அதை ஒத்துக்கொண்டீர்களா, இல்லையா, இல்லை கப்ரு வணங்கி தான் கூறுவீர்களா? சொல்லுங்கள், அதற்கேற்றாற்போல் விவாதிக்கலாம். அது தெரியாமல் எப்பிடி உங்களோடு விவாதம் செய்வது. உங்கள் கொள்கை எப்பிடியோ அதன் படி தான் விவாதம் செய்ய முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இனி விவாதம் செய்வதாக இருந்தால் CC யோ அல்லாஹ்விற்கு பயந்து அவன் மீது சத்தியமிட்டு BCC யோ இருக்கக்கூடாது என்று இருந்தால் மட்டுமே விவாதம் தொடர முடியும். காரணம், நடுவில் பிரச்சனையை செய்வதற்கு இரு தரப்பிலும் ஆயிஷா என்ற முகவரி உடையவர் போன்றவர்கள் இருப்பார்கள்.
Nashid Ahmed
அஸ்ஸலாமு அலைக்கும்..
எப்படி இப்படி அப்பட்டமாக பொய் பேசுகின்றீர். நான் cc போட்டு துவங்க வில்லை. அதற்கு முன் உங்கள் பதிவில் அந்த CC இருந்தது. உங்களுக்கு Reply அனுப்பும் போது அதப்படியே வந்ததுநான் cc வைத்து உங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. நான் எழுதியதும் பேசியதும் வேறு நபர்களிடம், வேறு தலைப்புகளில்.
இடையில் நுழைந்து , நான் உங்கள் கேள்விக்கு பதில் அனுப்பவில்லை என்று நீங்கள் தான் நம்மிடையே உள்ள வாதத்தை துவக்கினீர்கள்.
நீங்கள் ஒன்றை துவக்கும் போது, அதே cc க்கு தான் நானும் பதில் அனுப்ப முடியும்.
உங்களுக்கு தெரிந்த நபர்கள் எவ்வளவு அனுப்புகின்றீர்களோ அவ்வளவு எனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்ப வேண்டும். இது தான் விவாதிக்கும் முறைஉங்களுக்கு தெரிந்த எண்ணிக்கை எத்தனை என்பதை சொல்லுங்கள். நானும் எனது லிஸ்டை தருகிறேன்.
குழுமங்கள் தேவையில்லை என்றால் வேண்டாம்.
என் தரப்பில், குறைந்தது 50 பேருடைய லிஸ்டை தருகிறேன். நீங்கள் அதற்காவது தயாரா?
ஒரு இட்டு கட்டை நீங்கள் கூறி அதை கூற வேண்டாம் என்று கூறும் போது, வேறு ஒரு கேள்வி கேட்கின்றீர். நான் கேட்டது, நீங்கள் கப்ரு வணங்கி என்பதை வாபஸ் வாங்கி விட்டீர்களா? இல்லையா? ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை தவிர வணங்குகின்றான் என்று இட்டுக்கட்டி கூறலாமா? இதற்கு பதில் சொல்லுங்கள். அப்போது தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல எதுவாக இருக்கும். ஜமாலியின் நிலைபாடை தான் இணை வைப்பு என்று நான் கூறுகிறேன். எந்த கருத்தை வைத்து அவரை இணை வைப்பு, கபுர் வணங்கி என்று நான் சொல்கிறேனோ, அந்த கருத்தை தான் உங்களிடம் வைத்தேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல், ஏதோ நான் பதில் சொல்லாததை போல் பேசுகிறீர்கள். .
மீண்டும் அந்த கருத்து..
""இறந்தவர்கள் செவி எற்பார்கள் என்பதும், எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செவியுற்று, பிரித்தறிந்து , அனைத்திற்கும் பதில் அளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வால் இறை நேசர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இறந்தவர்களிடம் உதவி தேடலாம், என்பது சுன்னத் ஜமாத்தின் (ஜமாலியின்) நிலைபாடு"".
என்று நான் கூறுகிறேன். இந்த நிலைபாட்டில் அவர் இருப்பதன் மூலம், அவர் இணை வைக்கிறார், அவர் தன்னை கபுர் வணங்கி என்று பிரகடனப்படுத்துகிறார், என்பது எனது குற்றச்சாட்டு.
ஜமாலியின் இந்த நிலைபாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா மறுக்கிறீர்களா? என்று நான் கேட்டேன்.
ஆம், இல்லை, இரண்டே வார்த்தை தான் இதற்கு பதில். ஒரு வரி பதில் கேட்கின்றீர். அதற்க்கு முன் நான் நீங்கள் கப்ரு வணங்கி என்று சொன்னதை வாபஸ் வாங்கி விட்டீர்களா இல்லையா. நீங்கள் கேட்டதை போல ஒரு வரி கூட தேவை இல்லை. ஒரு வார்த்தை போதும். ஆம் அல்லது இல்லை.எந்த கருத்தை சொல்லி, அவர் கபுர் வணங்கி என்று நான் குற்றம் சுமதுகிறேனோ, அந்த கருத்தை கண்டுகொள்ளாமல், அவர் கபுர் வணங்கி என்பதை வாபஸ் வாங்குங்கள் என்கிறீர்கள். வேடிக்கை தான்!
மேலே நான் குறிப்பிட்ட நிலைபாட்டை ஜமாலி கொண்டிருப்பதன் மூலம் தான் அவர் இணை வைக்கிறார், அல்லாஹ்வை வணங்குவதற்கு பதில் செத்து போன பிணங்களை வணங்குகிறார் என்று நான் பகிரங்கமாக, வெளிப்படையாக, எவருக்கும் அஞ்சாமல் தான் இப்போதும் கூறுகிறேன்.
ஜமாலியின் நிலைபாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
அந்த நிலைப்பாடு உங்களுக்கு உடன்பாடில்லையா?
அந்த நிலைபாட்டை கொண்டிருந்தாலும் அதனால் கபுர் வணங்கி ஆகா மாட்டாரா?
எதையாவது சொல்லி தானே நம்மிடம் கேள்வி கேட்க வேண்டும்?
நான் ஒரு விமர்சனத்தை , காரண காரியத்துடன் சேர்த்து தான் வைக்கிறேன்.
உங்கள் கடமை, அந்த காரண காரியம் சரி அல்லது தவறு என்று உங்கள் பக்க விளக்கத்தை தர வேண்டும்.
உங்களுக்கு அந்த நிலைபாட்டில் உடன்பாடில்லை என்றால், நீங்கள் ஜமாலி போல் கபுர் வணங்கி ஆக மாட்டீர்கள். அவர் நிலைபாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், நீங்களும் கபுர் வணங்கி தான்.
இதுவே எனது தெளிவான நிலை.
அதே நேரம், அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா மறுக்கிறீர்களா என்பதை சொல்லாமல், இறைநேசரை அழைத்தால் கபுர் வணங்கியா ? என்று என்னிடம் கேள்வி கேட்க கூடாது.
முதலில் ஜமாலியின் கொள்கை குறித்து உங்கள் நிலையை சொல்லுங்கள். அதன் பிறகு, நீங்கள் எத்தகைய கேள்வியையும் கேட்கலாம்.
உங்கள் நிலை என்ன என்பதையே அறியாமல் நான் உங்களோடு வாதித்து பயன் இல்லை.
Nashid Ahmed
அஸ்ஸலாமு அலைக்கும்..
குழும உறுப்பினர்கள் மற்றும் இதர cc மற்றும் bcc யில் உள்ள சகோதரர்களின் கவனத்திற்கு..
புதிய, பழைய குழுமங்கள் வாயிலாகவும், புதிதாக துவங்கப்பட்ட பெயரில்லா புல்லுருவிகள் மூலமாகவும், என்னையும், தவ்ஹீத் ஜமாத்தையும் விமர்சித்து பல ஆக்கங்கள் வெளியாகி வருகின்றன.
அவசியமில்லாத வீண் விவாதங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்போரும் கூட, எனது கட்டுரைகளும் எழுத்துக்களும் தான் தங்களுக்கு அவசியமில்லாததாக தோன்றுவதாகவும், ஆகவே தங்களுக்கு இனிமேல் எந்த ஆக்கங்களையும் அனுப்பக்கூடாது என்றும் என்னிடம் சொல்லி வருகின்றனர்.
இரண்டு செய்திகளை அனைவருக்கும் கூறிக்கொள்கிறேன்.தனிப்பட்ட முறையில் என்னை குறித்தோ, அல்லது தவ்ஹீத் குறித்தோ விமர்சனங்களை, பலருக்கும் cc வைத்து ஒருவர் எனது மெயிலுக்கு அனுப்பினால், அதே cc யுடன் சேர்த்து அவருக்கு என் தரப்பில் இருந்து பதில் மெயில் அனுப்பப்படும். இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
இது அல்லாமல், எனது புதிய ஆக்கங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவை யாருக்கெல்லாம் அவசியமில்லை என்று கருதுகிறீர்களோ,
அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தங்கள் முகவரியை எனது லிஸ்டில் இருந்து நீக்கி விட கோரலாம். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள், எனது cc யிலும் bcc யிலும் இனி இருக்க மாட்டார்கள்.
இரண்டாவது, என்னை குறித்தோ, ஏகத்துவக்கொள்கை குறித்தோ, தவ்ஹீத் ஜமாஅத் குறித்தோ விமர்சனங்களை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பக்கூடியவர்களுக்கு நான் சொல்லும் செய்தி..
எந்த விஷயத்திற்கு உங்களிடம் ஆதாரம் இல்லையோ, அல்லது நீங்கள் எடுத்து வைக்கும் எந்த விமர்சனம் குறித்து நான் ஆதாரம் கேட்கும் போது அதை உங்களால் தர இயலாதோ, அது போன்ற விமர்சனங்கள் எனது மின்னஞ்சலுக்கு வரக்கூடாது.
நான் ஆதாரம் கேட்டு அதை அடுத்த பதிலில் நீங்கள் தரவில்லை எனில், தொடர்ந்து உங்களுடன் நான் உரையாட மாட்டேன்.
இந்த இழையில் என்னோடு பேசி வரும் நபராகட்டும், வேறு வேறு இழைகளில் அவதூறுக்கட்டுரைகளை பரப்பி வருபவராகட்டும், அனைவரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலே உள்ள இரு விஷயங்களையும் முக்கியமானது எனக்கருதி, இங்கே பதிவு செய்துக்கொள்கிறேன்.
"this is truth " என்று கூறும் சகோதரரின் கவனத்திற்கு..
நேரமின்மையால் என் கேள்விக்கு பதில் தர இயலாமல் போயிருந்தால் பிரச்சனை இல்லை. அது அல்லாமல், மௌனம் சாதிப்பது, உங்கள் கொள்கையில் உங்களுக்கே உறுதிப்பாடு இல்லை என்ற கருத்தையே தரும். .
நான் இன்னும் வாதங்களுக்குள்ளே கூட செல்லவில்லை.
திருவாளர் ஜமாலி இவ்வாறு ஒரு நிலைபாடை கொண்டிருக்கிறார்.
அவரது நிலைபாடை நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்களா? அல்லது மறுக்கிறீர்களா?, என்ற மிக சாதாரண கேள்வி ஒன்றை தான் கேட்டிருக்கிறேன்.
அவசர அவசரமாக, என்னை நோக்கி, "எதற்கும் நீங்கள் பதில் தரவில்லை, பதில் தர தயாரா?", என்று சவால் விட்டு விட்டு, இப்போது, விவாதத்திற்குள்ளே கூட செல்லாமல், ஜமாலி குறித்த உங்கள் அடிப்படை நிலை குறித்து கேள்வி கேட்டால் அதையே நீங்கள் இன்னும் தர மறுப்பதை நான் எவ்வாறு எடுத்துக்கொள்வது?