வியாழன், 18 ஏப்ரல், 2013

தஜ்ஜால் சம்மந்தமான ஹதீஸை மறுக்க வேண்டுமா?
தஜ்ஜால் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களுக்கு நேரடி அர்த்தம் கொடுக்க கூடாது என்று கூறுவோரின் வாதத்திற்கு  மறுப்பு..

(சூனியம் குர்ஆனுக்கு முரண் என்று சொல்லி ஹதீஸை மறுப்பது போல தஜ்ஜால் ஹதீசையும் மறுக்கலாமே என்று கூறுவோரின் வாதங்களுக்குரிய தக்க மறுப்பு இத்துடன் பின்னர் இணைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.ஆதாரங்களுடன் எழுதப்படுபவைகளுக்கு தான் மறுப்பு தர முடியும். நீங்கள் forward செய்துள்ள கட்டுரை என்பது ஆதாரங்களுடன் கூடியது இல்லை.
ஏற்கனவே குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் இருப்பவை அனைத்தும் மூட நம்பிக்கை என்று சொல்கிற ஒரு அறிவிப்பு - ஒரு கருத்து. 
ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு, அவைகளுக்கு நேரடி அர்த்தம் கொடுக்க கூடாது - கொடுப்பது மூட நம்பிக்கை, என்கிறார் கட்டுரையாளர்.

ஆக, நேரடி அர்த்தம் கொடுத்தால் எப்படி மூட நம்பிக்கை என்பதை இந்த கட்டுரையாளர் தான் ஆதாரத்துடன் விளக்க வேண்டும்.
அதன் பிறகு தான் நம்மால் மறுப்பு கொடுக்க முடியும்..

அதை தராமல் இருப்பது வரை இது போன்ற அபத்தமான கட்டுரைகளை பிறருக்கு பரப்புவது சரியில்லை.

இதற்கு மறுப்பு தேவையே கிடையாது. மறுப்பு கொடுக்கும் தரத்திற்கு அந்த கட்டுரை இன்னும் வரவில்லை.
ஒரு ஹதீசையோ ஒரு இறை செய்தியையோ மறுப்பதாக இருந்தால் அதை ஆதாரங்களுடன் தான் மறுக்க வேண்டுமே அல்லாமல், தனது கருத்தாக சொல்லி ஒன்றை மறுப்பது என்பது அர்த்தமற்றது.

ஆதாரமற்ற வறட்டு வாதங்கள் தான் இவர்கள் வைக்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்..

தஜ்ஜால் ஒற்றை கண்ணன் என்பது தெளிவான ஹதீஸ். அதற்கு நேரடி அர்த்தம் கொடுக்காமல் ஆன்மீக  ரீதியிலான கண் என்று வியாக்கானம் கொடுப்பது வெறும் வியாக்கானம் தானே தவிர, ஆதாரமல்ல.
ஆன்மீக  கண் என்று கூறுவதற்குரிய ஆதாரம் என்ன? என்பதே நமது கேள்வி. அதை தந்து விட்டு வாதம் வைத்தால் தான் அதற்குரிய மறுப்பை சொல்ல முடியும்.

அதே போன்று, 

சூரத்துல் கஹ்ப் முதல் பத்து வசனங்களை ஓத வேண்டும் என்பது தஜ்ஜாலுக்காக அல்ல, கிறிஸ்தவர்களுக்கு எதிரான நோக்கமாகும் என்று கூறுவதற்கு ஒரு காரணம் கூறுகிறார்கள் - அதாவது, அந்த அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்கள் இறைவனுக்கு சந்ததிகள் உருவாக்கியவர்களை (நஸ்ராயிகள்) பற்றி கூறுகிறதாம், அதனால், அது அவர்களை பற்றியதாம்!
அந்த முதல் பத்து வசனங்களில் குகை வாசிகளை பற்றியும் அல்லாஹ் கூறுகிறானே, ஏன் குகைவாசிகள் குறித்து தான் இது சொல்கிறது, தஜ்ஜால் குறித்தல்ல, என்று இன்னொருவர் வாதம் வைக்கலாமே?
இதற்கு இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆக, ஒரு ஹதீஸை அணுகும் முறை இதுவா?
ஒன்றை சொல்லி, இதற்க்கு இதை ஓதுங்கள் என்று சொல்லப்பட்டால் அதை அப்படியே புரிந்து கொண்டு செய்ய வேண்டுமேயல்லாமல், இதை இதற்கு சொல்லியிருக்க மாட்டார்கள், அந்த வசனத்தில் வேறு செய்தியை குறித்தல்லவா சொல்லப்பட்டுள்ளது, ஆகவே இது அந்த சம்பவம் குறித்து தான், என்றெல்லாம் வியாக்கானம் கொடுப்பது நபியை மறுப்பதாகவும், வெறும் வறட்டு வியாக்கானமாகவே கருத முடியும்.


அடுத்து, தஜ்ஜால் மழையை பொழிய செய்வான், ஆனால், அது இணை வைப்பாகும். அவவாறு தஜ்ஜால் செய்ய இயலாது என்பதால் தஜ்ஜாலே கிடையாது என்கிறார்கள்.

அப்படியானால், ஷைத்தான் கூட இறைவனது அம்சங்களில் சிலவற்றை பெற்றிருக்கிறானே, இதற்கு இவர்கள் என்ன சொல்கிறார்கள்? மனிதனின் உள்ளங்களை வழிக்கேடுக்கிற ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு, அதை ஷைத்தானும் செய்கிறானே? ஷைதானையும் மூட நம்பிக்கை என்று சொல்வார்களா?  

ஆக, 
குர் ஆன், ஹதீஸ் அடிப்படையிலான ஆதாரங்களை அவர்கள் தந்து தஜ்ஜாலை நம்புவது மூட நம்பிக்கை என்று சொன்னால் அது குறித்து பரிசீலிக்கலாம். இவர்களின்  சுய கருத்துக்கள் கருத்துக்களாகவே இருக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக