புதன், 17 ஏப்ரல், 2013

இறந்தவர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள் என்பதற்கு ஆதாரமா??
கேள்வி : 2:154 வசனம் இறந்தவர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ளதே?அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்த வசனத்தில், ஷஹீதானவர்கள் அல்லாஹ்வுடைய பார்வையில்இறக்கவில்லை என்று தான் சொல்லப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வரும் வாசகமான "எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்", என்பது, அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றாலும், அது நாம் உணரக்கூடிய வகையிலான உயிரோடு இருத்தல் இல்லை, அது "வேறு விதமான" உயிரோடு இருத்தல் என்பது தெளிவாகிறது. 

இவ்வாறு அல்லாஹ் கூறுவதற்கு விளக்கமாக இன்னொரு வசனத்திலும் அல்லாஹ் இதையே கூறுகிறான்.
3 :169 வசனத்தில் ஷஹீதான ஒருவர மரணிக்கவில்லை என்றால், அவர் இறைவனிடத்தில் மரணிக்காமல் உள்ளார்  என்பதே பொருள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஒரு வாதத்திற்கு, இந்த வசனம், சஹீதானவரை இறக்கவில்லை, நாம் புரிந்து கொள்வதை போன்றே அவர் உயிருடன் தான் உள்ளார் என்று வைத்துக்கொண்டால் கூட,

  • இதன் மூலம், அவர் நாம் பேசுவதை கேட்ப்பார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
  • அவர் புரிந்து கொண்டு பதில் அளிப்பார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
  • உயிருடன் இருப்பவர்களிடமேல்லாம் துஆ செய்யலாம் என்பதற்கு இது ஆதாரமாகாது. நாம் கூட உயிரோடு தான் இருக்கிறோம். நான் உங்களிடமும் நீங்கள் என்னிடமும் துஅ செய்யலாமா? 
  • நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ சஹாபாக்கள் ஷஹீதாகி உள்ளனர். அவ்வாறு இறந்தவர்களிடம் அவர்களிடம் சஹாபாக்கள் எந்த உரையாடலையும் வைத்துக்கொள்ளவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக