வியாழன், 31 மார்ச், 2011

ஜனாஸா தொழுகையில் தக்பீர் எத்தனை தடவை?

நஜ்ஜாஷி மன்னருக்காக நபி (ஸல்) ஜனாஸா தொழுகை நடத்திய பொழுது நான்கு முறை தக்பீர் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபு ஹுரைரா(ரலி)
புஹாரி 1318 , 1319


எப்போதும் நான்பு தக்பீருடன் ஜனாஸா தொழுகை தொழும் சைத் (ரலி) அவர்கள், ஒருமுறை ஐந்து தக்பீர் சொல்லி தொழுவித்தார்கள். இது பற்றி அவரிடம் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் ஐந்து தக்பீர் சொல்லியும் தொழுதுள்ளார்கள், என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான்
முஸ்லிம் 1589ஆக, நான்கு முறையும் தக்பீர் சொல்லலாம், ஐந்து முறையும் தக்பீர் சொல்லலாம்.

Note: தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்வது தான் நான்கு அல்லது ஐந்து முறையே தவிர கைகளை முதல் தக்பீருக்காக உயர்த்தி கட்டிய பின்னர் மீண்டும் பிரிக்க தேவையில்லை..

இது தவிர, ஏழு ரக்காத்கள், ஒன்பது ரக்காத்கள் என்று வரும் ஏனைய அறிவிப்புகள் பலகீனமானவை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக