வியாழன், 31 மார்ச், 2011

வால் பிடிப்பவர்களிடம் சில கேள்விகள்..


Makkal Urimai Sep 22-28, 2006 3.jpg








அஸ்ஸலாமு அலைக்கும்..

இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு வால் பிடிப்பவர்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அவர்கள் சொல்லியுள்ள பதிலை குறித்து சில விளக்கங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளனர்.


1 . ஜெயலலிதா இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறையில் இருக்கும் அப்துந்நாசர் மதானி உயிரோடு இருப்பாரா?
இருக்கமாட்டாரா?


  • இருப்பார் என்றால் அவ்வாறு நீங்கள் சொல்வதற்கு ஏதுவாக ஜெயலலிதா தந்துள்ள வாக்குறுதி என்ன?
  • இருக்க மாட்டார் என்றால், ஜெயலலிதாவின் வாலை இன்று நீங்கள் பிடித்தது சமுதாய துரோகம் இல்லையா? மதானி செத்தாலும் பரவாயில்லை, ஜெயலலிதாவின் வால் தான் முக்கியம் என்பதை தவிர வேறென்ன காரணம்?

2 . ஜெயலலிதா இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முனீர் ஹோதாவை போல இன்னும் பல முஸ்லிம்கள் தேச துரோக பட்டத்தை பெறுவார்களா பெற மாட்டார்களா?

  • பெற மாட்டார்கள் என்றால், அவ்வாறு ஜெயலலிதா எங்கே வாக்குறுதி தந்துள்ளார்? எதனடிப்படையில் இவ்வாறு உங்கள் கொள்கையை மாற்றினீர்கள் என்பதை சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
  • பெறுவார்கள் என்றால், அத்தகைய நிலையில் கூட அம்மாவுக்கு ஜால்ரா அடித்து சீட்டு பெறுவதில் மட்டும் நோக்கமாக நீங்கள் இருப்பது சமுதாய துரோகமில்லையா? முஸ்லிம் அதிகாரிகள் தேச துரோகிகளாக சித்தரிக்கப்பட்டாலும் பரவாயில்லை, எங்களுக்கு சீட்டும் நோட்டும் தான் முக்கியம் என்ற ஒற்றை காரணத்தை தவிர வேறென்ன காரணம்?

3 . ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் சமுதாயத்தில் குழப்பங்களும் பதற்றங்களும் பெருகியிருக்குமா? குறைந்திருக்குமா?

  • குறைந்திருக்கும் என்றால், அவ்வாறு ஜெயலலிதா எங்கே வாக்குறுதி தந்துள்ளார்?
  • பெருகும் என்றால், அத்தகைய நிலையில் கூட அம்மாவின் தாஜா தான் முக்கியம், சமுதாயம் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கு பரவாயில்லை என்று சொல்கிறீர்களா? குழப்பங்கள் பெருகும் என்ற போதிலும் கூட, அம்மாவின் ஆட்சியை மலர செய்வோம் என்று நீங்கள் கூறுவது ஏன்?

4 . நல்ல வேளையாக தமுமுக அன்றைக்கு ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பியதை போல இன்றைக்கு அவரை வீட்டுக்கு அனுப்புவது முஸ்லிம் சமுதாயத்தின் கடமையில்லையா?

  • இல்லை என்றால், அதற்குரிய காரணங்கள் என்ன?
  • ஆம் என்றால், அதை செய்யாமல் அம்மாவின் வாலை விட மாட்டோம் என்று இன்றைக்கு பற்றிப்பிடிப்பது ஏன்?அன்று, "நல்ல வேளையாக" வீட்டுக்கு போனவர், இன்று நிச்சயம் ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்ற அளவிற்கு நீங்கள் மாறுதல் அடைவதற்கு அல்லது அவரிடம் கண்ட மாறுதல்களாக நீங்கள் சொல்லும் காரணங்கள் என்னென்ன?


5 . ஜெயலலிதாவிடம் கமிஷன் பெற்று, அவரை ஆதரித்த அனைவரும் அன்றைக்கே அவர்கள் தவறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய நீங்களே இன்றைக்கு அதே தவறை செய்தால், உங்களுக்கு அறிவுரை சொல்வது யார்? கமிஷன், அன்றைக்கு கை மாறி இருக்கும் என்றால் இன்றைக்கு கை மாறாதா?

  • கை மாறாது என்றால், அவ்வாறு அன்றைக்கு இதே ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் மட்டும் கமிஷன் வாங்கினார்கள் என்று நீங்கள் கூறியது ஏன்?
  • கை மாறும் என்றால், அது சமுதாய துரோகம் இல்லையா? கமிஷன் வாங்கி நக்கிப் பிழைக்கும் தொழிலை நீங்கள் செய்து வருவது சமுதாயத்தை வஞ்சிப்பதாகாதா?


இவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் சமுதாயம் இவர்களுக்கு வாக்களிக்கும் என்று நம்பினால், இவர்களை விடவும் சமுதாயத்தை ஏமாற்றும் நயவஞ்சகர்கள் யார்?

பிர்அவ்ன் முஸ்லிம் (??)




அல்லாஹ் தனது திருமறையில் பிர்அவ்னின் மனைவி ஆஸியா அவர்கள் மூஸா அலை அவர்கள் கட­ல் மிதந்து வந்து அதை கண்டு எடுத்த போது கூறினார்கள்.


இக்குழந்தை எனக்கும் உமக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கும் என்று ஆஸியா அம்மையார் அவர்கள் சொன்னதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

இதை விளக்க வந்த மூடர்களின் தலைவன் ஷைகுல் ஆரிபீன் என்று போற்றப்படும் இப்லீஸ் இப்னு அரபி சொல்கிறான்.

பிர்அவ்ன் கட­ல் மூழ்கிய நேரத்தில் அல்லாஹ் வழங்கிய ஈமானுக்கு காரணமாக இருந்ததின் முலம் மூஸா அலை அவர்கள் கண் குளிர்ச்சியாக இருந்தார்.

அவனிடத்தில் எந்த அசுத்தமும் (குப்ரு) இல்லாத வகையில் இறைவன் இறைவன் அவனை சுத்தப்படுத்தினான். காரணம் பிர்அவ்ன் பாவம் செய்வதற்கு முன்பாக ஈமானோடு கைப்பற்றிவிட்டான். அல்லாஹ்வின் அருளில் யாரும் நம்பிக்கை இழநஙதிளராத வகையில் அவனை கைப்பற்றிதை அத்தாட்சியாக ஆக்கிவிட்டான். அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான். அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்” என்றார்.

பிர்அவ்ன் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்திருந்தால் ஈமானை ஏற்றுக் கொள்வதற்கு விரைந்திருக்கமாட்டான்.


இதை எழுதியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்தான் நான் நான்தான் அல்லாஹ் யார் யாருக்குத்தான் கட்டளையிட முடியம் என்று எழுதிய இப்னு அரபிதான். இவன் தன்னுடைய புத்தகமான புஸீலுல் ஹிகம் 200 ல் குறிப்பிடுகிறான்,

இந்த வழிகெட்ட கருத்து திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு முரண்படுகிறது.

(இவர்களின் நடவடிக்கை) ஃபிர்அவ்ன் மற்றும் அவனுக்கு முன் சென்றோரின் நடவடிக்கை போலவே உள்ளது. அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதினர். அவர்களது பாவங்களின் காரண மாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். 3 : 11

103. அவர்களுக்குப் பின் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிட மும் தெளிவான சான்றுகளுடன் அனுப்பி னோம். அவற்றை அவர்கள் ஏற்க மறுத்தனர். ‘குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?’ என்பதைக் கவனிப்பீராக! 7 : 103

எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.
46. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம்1 வரும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) 40 : 45 46

ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். எனவே அவனைக் கடுமையாகத் தண்டித்தோம். 73 : ௧௬



இது போன்ற வழிகேடர்களிடமிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்ற வேண்டும்!

ஈமானின் முழு சுவையையும் கொண்டுள்ள தன்மைகள் என்னென்ன?

மூன்று தன்மைகளை நாம் பெற்றுக்கொண்டோம் என்றால் ஈமானின் முழு சுவையும் நம்மிடம் உள்ளதாக அர்த்தமாகும்!.

அந்த மூன்று தன்மைகள் என்னென்ன?

1 . இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விடவும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம் நேசத்திற்க்குரியவர்களாக நாம் கருதுவது.
2 . எந்த நபரையும் அல்லாஹ்வுக்காக மட்டுமே நாம் நேசிப்பது
3 . நெருப்பில் வீசப்படுவதை நாம் எவ்வாறு
வெறுப்போமோ, எவ்வாறு அஞ்சி நடுங்குவோமோ, அதே போன்று இணை வைத்தலில்
ஈடுபடுவதை குறித்தும் அஞ்சுவது.

நூல் : திர்மிதி 2548

ஜனாஸா தொழுகையில் தக்பீர் எத்தனை தடவை?

நஜ்ஜாஷி மன்னருக்காக நபி (ஸல்) ஜனாஸா தொழுகை நடத்திய பொழுது நான்கு முறை தக்பீர் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபு ஹுரைரா(ரலி)
புஹாரி 1318 , 1319


எப்போதும் நான்பு தக்பீருடன் ஜனாஸா தொழுகை தொழும் சைத் (ரலி) அவர்கள், ஒருமுறை ஐந்து தக்பீர் சொல்லி தொழுவித்தார்கள். இது பற்றி அவரிடம் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் ஐந்து தக்பீர் சொல்லியும் தொழுதுள்ளார்கள், என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான்
முஸ்லிம் 1589



ஆக, நான்கு முறையும் தக்பீர் சொல்லலாம், ஐந்து முறையும் தக்பீர் சொல்லலாம்.

Note: தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்வது தான் நான்கு அல்லது ஐந்து முறையே தவிர கைகளை முதல் தக்பீருக்காக உயர்த்தி கட்டிய பின்னர் மீண்டும் பிரிக்க தேவையில்லை..

இது தவிர, ஏழு ரக்காத்கள், ஒன்பது ரக்காத்கள் என்று வரும் ஏனைய அறிவிப்புகள் பலகீனமானவை !

எந்த விசாரணையும் இன்றி நேரடியாக சொர்க்கம் செல்பவர்கள் யார் யார்?

அத்தகையோர் மொத்தம் 70 ,000 பேர்.!

  • சகுனம் பார்க்காதவர்கள்
  • ஒதிப்பார்க்காதவர்கள்
  • கஷ்டங்கள் / நோய்களுக்காக தங்களையே சூடிட்டுக்கொள்ளாதவர்கள்
  • எப்போதும், எந்த நிலையிலும் இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பவர்கள்.

முஸ்லிம் : 323

ஷஹீதினுடைய அந்தஸ்தை பெறுபவர்கள் யார் யார்?






  • தனது செல்வதை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்
  • வயிற்றுப்போக்கு போன்ற நோயினால் இறந்தவர்
  • பிளேக் நோயால் இறந்தவர்
  • கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்
  • தண்ணீரில் மூழ்கி இறந்தவர்
புஹாரி 654

இறுதி நாளை நம்புதல்



அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)

அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:281)


இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும். (அல்குர்ஆன் 55:27)
வானம், பூமி, சூரியன், விண் கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.


யுக முடிவு நாள், இறுதி நாள், ஸþர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் திருமறைக் குர்ஆனில் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.
பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர். நல்லவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கும்; கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது.


தீர்ப்பு நாள், மறுமை, மறு உலகம், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவ முடியாத நாள், திரும்பச் செல்லும் நாள், கூ­ வழங்கும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன் தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், அவ்வுலகம், கைசேதப்படும் நாள், இறைவன் முன் நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள் இன்னும் பல பெயர்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.


சந்தேகம் இல்லாத நாள், மகத் தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்தச் சந்தேகமும் இல்லாத நாள் போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவானதாகும்.


அழிக்கப்படும் நாள், மீண்டும் உயிர்ப்பிக்கும் நாள் ஆகிய இரு நாட்களும் எப்போது ஏற்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த மனிதரும் ஏன் வானவர்களும் கூட அறிய மாட்டார்கள். அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும்.
இவ்வுலகில் மனிதன் நல்லவனாக வாழ இத்தகைய ஒரு நாளை நம்புவது பெரிதும் உதவும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.


மண்ணறை வேதனை


மறுமைநாளில் குற்றம்புரிந்தவனுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு முன், இறந்த பின் அவனுக்கு சிறிய அளவு தண்டனையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். இதை பல நபிமொழிகள் தெளிவுபடுத்தியுள்ளன. இதைப்போன்று திருமறைக் குர்ஆனும் தெளிவுபடுத்துகிறது.

பிர்அவ்ன் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் ஏற்படும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன் 40:46)


ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்பது மறுமையில் வழங்கப்படும் தண்டனைக்கு முன் வேறொரு தண்டனை உள்ளது என்பதை நிரூபிக்கிறது. ஏனென்றால் இவ்வசனத்தில் கடுமையான யுக முடிவு நாளில் இவர்களைக் தண்டனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது.


இது தான் கப்ருடைய வேதனை என்று நபி மொழிகள் கூறுகின்றன.

இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்கள்



இஹ்ராமுக்கு பின்னர் ஆண், பெண் இருவருக்கும் பொதுவாக தடை செய்யப்பட காரியங்கள்


  • தலை மற்றும் உடலில் உள்ள முடிகளை அகற்றக்கூடாது - (அல்குர் ஆன் 2 :196 ) (புஹாரி 1814 to 1818 )
  • நகங்களை வெட்டக்கூடாது - முஸ்லிம் 3653
  • நறுமணம் பூசக்கூடாது - புஹாரி 1265 to 1268
  • திருமணம் செய்யக்கூடாது, திருமண ஒப்பந்தம் செய்யக்கூடாது, பிறருக்கு திருமணமும் செய்து வைக்ககூடாது. - (முஸ்லிம் 2524 )
  • தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது , ஆசையுடன் (இச்சையுடன்) தொடுவது, அணைப்பது, முத்தமிடுவது கூடாது - (அல் குர் ஆன் 2 :197 )
  • பிராணிகளை வேட்டையாடக்கூடாது. (5 :94 )



ஆண்களுக்கு மட்டும் தடை செய்யப்பட காரியங்கள்

  • தலையை மறைப்பது கூடாது - புஹாரி 1839
  • தைக்கப்பட்ட ஆடைகளை அணிவது கூடாது - புஹாரி 366



பெண்களுக்கு மட்டும் தடை செய்யப்பட்டவை


  • முகத்தை மறைப்பது கூடாது - புஹாரி 1838
  • கையுறை அணிந்து கைகளை மறைப்பதும் கூடாது - புஹாரி 1838

பிறை - வறட்டு கேள்விகளும் ஆணித்தரமான பதில்களும்



அஸ்ஸலாமு அலைக்கும்..

ஹிஜ்ரா கமிட்டி மற்றும் ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தினர் துண்டு பிரசுரமாக விநியோகித்த பிறை குறித்த வறட்டுக்கேள்விகள் அனைத்திற்கும் ஆணித்தரமான தொடர் பதில்கள் தினமும் வெளியாகி வருகின்றன..
முதல் தொடரை படிக்க இங்கே சொடுக்கவும்..

"இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?



"இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;" (யோவான் 11:25) என்று கூறுகிறாரே. இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொல்ல முடியுமா?







PJ அவர்களின் பதில்

முதலில் நீங்கள் ஒரு வசனத்தை எடுத்துக்காட்டினால் அதை சரியான பொருளில் புரிந்து கொண்டு கேட்க வேண்டும். நீங்கள்சுட்டிக்காட்டும் வசனங்களுக்க்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்களை சேர்த்துபார்த்தால் இதன் பொருள் உங்களுக்கே விளங்கி விடும்.

யோவான் 11 அதிகாரத்தில் 21 முதல் 26 வரை உள்ளவசனங்களை பாருங்கள்


21.மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன்மரிக்கமாட்டான்.

22. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத்தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

23. இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்என்றார்.

24. அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலேஅவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும்ஜீவனுமாயிருக்கிறேன்,என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும்மரியாமலும் இருப்பான்;இதை விசுவாசிக்கிறாயா என்றார்.


உயிர்த்தெழுதல் என்பதன் பொருள் உலகம்அழிக்கப்பட்ட பின் அனைவரும் மீண்டும் உயிர்க்கப்படுவதைத் தான் குறிக்கிறது.

24வசனத்தில் மார்த்தாள் கூறுவதில் இருந்து இதை விளங்கிக் கொள்ளலாம்.



மேலும் இதில் கூறப்படும் அனைத்துமே நேரடிப்பொருளில் அர்த்தம் செய்ய முடியாதவையாக உள்ளன. என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று இயேசு கூறுகிறார். மரித்துப் போன கிறித்தவர்கள் அனைவரும் உடனே பிழைத்துக் கொண்டும் இருக்கிறார்களா நிச்சயமாக இல்லை. அப்படியானால் மரித்தாலும் பரலோக ராஜ்ஜியத்தில் பிழைப்பதை தான் இயேசு கூறுகிறார் என்று விளங்கிக் கொள்ளலாம். உயிர்த்தெழுதல் என்பது அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு விஷ்யம் தான் என்று இயேசுவே விளக்கம் தந்துவிட்டார்.


உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் மரிக்கமாட்டான் என்று இயேசு கூறுகிறாரே? கிறித்தவர்கள் யாரும் மரிப்பதில்லையா? அப்படித்தான் அர்த்தமா? நிச்சயமாக இல்லை. அப்படி அர்த்தம் கொடுத்தால் இயேசுவை நீங்கள்பொய்யராக்கி விடுகிறீர்கள். பரலோக ராஜ்ஜியத்தில் உயிர்த்தெழுவதால் அவர் மரிப்பதில்லை என்ற கருத்தில் தான் இதை இயேசு கூறுகிறார். அது போல் இயேசு தன்னைப்பற்றியும் அப்படி கூறுகிறார், நான் மரணித்த பிறகும் மற்றவர்களைப் போல் உயித்தெழுப்பப்படுவேன் என்கிறார். இது கடவுள் தனமையைக் கூறவில்லை, கடவுளின் குமாரன் என்பதையும் கூறவில்லை.

இதை நீங்கள் மறுத்தால் மேற்கண்ட அனைத்து வசனங்களுக்கும் நேரடி அர்த்தம் செய்து காட்டி கிறித்தவர்கள் சாக மாட்டார்கள் என்பதையும் செத்தாலும் உடனே பிழைப்பார்கள் என்பதையும் நீங்கள் நிரூபித்துக்காட்டுங்கள்.

அத்துடன் இயேசு தன்னை கடவுள் அல்ல என்று கூறிய வசனங்களையும் சேர்த்து சிந்தியுங்கள்



புதன், 30 மார்ச், 2011

அறிந்து கொள்ளுங்கள் - இவர்கள் தான் ஹிஜ்ரா கமிட்டியினர் !!

"""நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடிவிவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம். """ - Hijra Committee (Yervadi) - 29 March, 2011



விவாதம், விவாதம் ..! என்று சில மாதங்களுக்கு முன்னர் கூக்குரல் இட்டவர்களின் இன்றைய அறிவிப்பை மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.


முன்னர் இவர்கள் என்னென்ன சவடால்கள் விட்டார்கள், விவாதத்திற்கு பதில் கொடுத்து அவர்களிடம் முடிவை கேட்ட போது எவ்வாறெல்லாம் காலம் கடத்தினார்கள், என்பனவற்றையெல்லாம் இப்போது நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்..

பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு

டி.என்.டி.ஜே யையும் ஜாக் மாநிலத் தலைவரையும், ஏர்வாடி ஜாக் ஒரு சேர பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது.

நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.
- ஹிஜ்ரா கமிட்டி - ஜூலை, 2010



இதற்கு பிஜே (TNTJ ) வின் பதில் :

பிறை குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இரு சாராரும் பேசி ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் விவாதிக்கத் தயார் என்றால் அதைக் குறிப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் தலமைக்கு கடிதம் எழுதி அனுப்பட்டும்.
மேலும் கருத்து வேறுபாடுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்றும் ஒப்புக் கொண்டு கடிதம் எழுதினால் தவ்ஹீத் ஜமாஅத் உடனே அதை ஏற்று ஒப்பந்தம் செய்வதற்கான நாளை அறிவிக்கும்.

மடமையைத் தான் நிபந்தனையாக்கியுள்ளனர். விவாதத்துக்கு அழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் ஆனால் ஓடி ஒளீயும் வகையில் அந்த அழைப்பு இருக்க வேண்டும் என்று பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விவாத அழைப்பு இருந்ததால் தான் இதை நாம் கண்டு கொள்ளவில்லை.
கீழ்கண்டவாறு அவர்கள் தெளிவு பட எழுதி கடிதம் எழுதினால் உடனே விவாத ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.
எங்களுக்கும் உங்களுக்கும் இடையே முரண்பாகவுள பிறை தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் மேலும் நமக்கிடயே கருத்து வெறுபாடுள்ள பாரதூரமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார்
மேற்கண்டவாறு எழுதி விவாதக் குழுத் தலைவர், தமிழ்நாடு தஹீத் ஜமாஅத், 30 அரண்மனைக்காரன் தெரு, மண்னடி சென்னை-1 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் எழுதி விவாதத்துக்கு சவடால் விடுவதை மெய்யாக்கட்டும்
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்
September 20 , 2010



அதன் பிறகு, இவர்கள் முறையான பதிலை சொல்லி , முறைப்படி விவாதத்திற்கு முன்வந்திருக்க வேண்டும்.. ஆனால், அதை செய்யாமல் பல சாக்கு போக்குகள் சொல்லி காலம் கடத்தி வந்தார்கள். பல சகோதரர்கள் இது குறித்து கேள்விகள் பல எழுப்பிய போதும், மழுப்பலான பதிலை தந்து காலம் கடத்துவதிலேயே தான் குறியாக இருந்து வந்தார்கள் இந்த ஹிஜ்ரா கமிட்டியினர்.


கூடிய விரைவில் அனைத்து கருத்துகளையும் பரீசீலித்து அதன் பிறகு முழுமையான பதில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ்.

இப்படிக்கு
தள நிர்வாகி July 15, 2010



பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக்கொள்கிறோம். எங்கள் இமெயில் முகவரி:admin@jaqh.net (August 14 2010


உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே. இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் பதில் வெளியாகும்.

மற்றவை பின்
admin
jaqh.net September 20
2010


இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதில் எழுதுவோம். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.

இப்படிக்கு
நிர்வாகி September 22
2010




பகிரங்க விவாதம் என்பதால் அனைவரின் கருத்துகளையும் பெற்று பரீசீலிக்க வேண்டியது அவசியம் தானே?

நாங்கள் ஹஜ் பிரயாணம் மேற்கொள்ள இருப்பதால் ஹஜ்ஜிற்கு பிறகு தான் எங்களால் இன்ஷாஅல்லாஹ் இதில் முழு கவனம் செலுத்த முடியும் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன்.

எனவே தாங்கள் பொறுத்திருந்து கவனியுங்கள். இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் எங்கள் பதில் வெளிவரும்.

இப்படிக்கு
தள நிர்வாகி September 23
2010



நாஷித் போன்றவர்களுக்கு இந்த விவாத ஒப்பந்தத்தில் எந்த பங்கும் கிடையாது. அதனால் விவாதக்குழு என்றெல்லாம் பதிந்து மக்களை திசைதிருப்புவதை விட்டுவிட்டு, பி.ஜே யின் கொள்கையை மட்டுமாவது இணையத்தில் ஒழுங்காக பிரச்சாரம் செய்து வந்தால் சரி. மேலும் யாருடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டுமோ அதை நாங்கள் நன்கறிவோம். ஆகவே சம்மந்தமில்லாத உங்களை போன்றவர்கள் தலையிடாமல் ஒதுங்கியிருப்து நலம்.

நிர்வாகி January 22 , 2011




விவாதம் அல்லாஹ்நாடினால் கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
நிர்வாகி
January 22 , 2011





இவை, விவாத சவடாலை மெய்ப்படுதுங்கள், ஏன் தாமதிக்கிறீர்கள், என்று பல சகோதரர்கள் கேட்டுக்கொண்டவற்றுக்கு இவர்கள் தங்கள் இணையதளத்தில் சொல்லியுள்ள பதில்..

பிஜே உடன் விவாதிக்க போகிறார்கள், என்று அவர்களது கொள்கையில் இருப்பவர்கள் கூட மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்து வந்த நிலையில், அவர்களது எதிர்ப்பார்ப்பை "பூர்த்தி" செய்யும் வண்ணம் இவர்கள் விடுத்துள்ள இறுதி அறிக்கை இதோ..

"""நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடிவிவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம். """ - Hijra Committee (Yervadi) - 29 March, 2011



அறிந்து கொள்ளுங்கள். இவர்கள் தான் ஏர்வாடி JAQH என்று செயல்படும் ஹிஜ்ரா கமிட்டியினர் !!

The main reason போர் TNTJ supporting DMK is...

2011/3/29 siraj wrote

I couldn’t read this one may the tamil font is not available in my system.

Anyhow, the main reason for supporting DMK is TMMK is in alliance with ADMK, what else could be.

Salam,









Assalaamu alaikkum.

No. Following the history for the past 2 months, we can understand that what you have told is not the real reason.

Initially (During January,2011), TNTJ has announced that TNTJ's support will be provided to any party who provides Muslim reservation of 5% or if ADMK mentions in their election manifesto.
Note that, when TNTJ proclaimed this, TMMK had not formed an alliance with ADMK.

Also note that, as per this proclamation, TNTJ is bound to support any alliance (either DMK or ADMK!!) who provides reservation. If ADMK had mentioned in their manifesto, TNTJ would have supported, that is what been committed.
What has been committed in front of media cannot be denied.
Till last week, ADMK officials met PJ at his office requesting his support.

PJ himself has written a statement of letter, framing the sentence how it should be mentioned in ADMK's manifesto regarding muslim reservation, and had sent to ADMK.

Finally, to everyone's surprise, ADMK did not publish that in their manifesto & later they have called up PJ & told that "Amma" will definitely provide the reservation but the reason we are not committing it in our manifesto is that, we may lose many other caste votes!

PJ did not accept this.
If you are hesitating to even commit in your manifesto, it means you will hesitate to bring to power too. This is what PJ's stand is.

But, when we checked DMK's manifesto, Karunanidhi has mentioned the same in his manifesto.
Comparing the both, DMK is far better at this stage.
Note that, Karunanidhi had not thought of losing other caste votes unlike how Jaya has thought.
This is the reason.
Understand that, till the eleventh hour, both the parties were at equal distances from TNTJ..

TMMK's alliance with ADMK is not at all a bother to TNTJ.
Even by supporting ADMK, TNTJ can oppose TMMK alone, in their particular constituencies.

So, the reason is not what you told, but what I have mentioned above.

திங்கள், 28 மார்ச், 2011

திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?



அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.

இறைவனின் மாபெரும் கிருபை:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.

இவர்களுக்கு மத்தியில், எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ அல்லது அமைப்பின் தலைவர்களை தனியாகச் சந்தித்து டேபிளுக்கு கீழே அழுத்தும் வேலைகளுக்கோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.

கொள்கை ரீதியாக மடித்துக்கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கும் யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய‌ கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம் எனலாம். சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரப்போகும் தேர்தலையும் சமுதாயத்தின் நன்மையை முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்தது.

பொதுக்குழுவும் அவசர செயற்குழுவும்:

மற்ற தேர்தல்களைப் போல அல்லாமல் இந்தத் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமான அவசரமான தேர்தலாக மாறிப் போனது. இந்த அவசரத்தில் எப்படியாவது துண்டு போட்டு 3 சீட்டு பிடித்து விட வேண்டும் என்ற ரீதியில் இதே சிந்தனையாக, அந்த அமைப்பு சார்ந்த எந்த மக்களின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக மற்ற அமைப்பினர்கள் தூது விட்டுக் காத்திருக்க, இந்த அவசரத்திலும் அசராமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவைக் கூட்டி மக்கள் முடிவைக் கேட்டது.

அதாவது ஆளும் திமுக இடஒதுக்கீட்டு அதிகரிப்பை இப்போதே சட்டமாக்க வேண்டும். அப்படி சட்டமாக்கினால் திமுகவை ஆதரிப்பது என்ற ஒரே முடிவு. அவ்வாறு நடைபெறா விட்டால் அதிமுக அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும். திமுக இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னால் அதிமுகவை ஆதரிப்பது என்ற செயல் திட்டத்தோடு சேலம் பொதுக்குழு நிறைவுபெற்றது.
ஆனால் ஆளும் திமுகவினர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமாக்காமல் சென்றதால் பொதுக்குழு முடிவுப்படி அதிமுகவை ஆதரிக்கும் செயல்திட்டத்தோடு சென்னை திநகரில் அவசர செயற்குழு கூட்டப்பட்டது. செயற்குழு அறிவித்த அந்த நேரத்தில் அதிமுக தலைமை தவ்ஹீத் ஜமாத்தோடு இந்த இடஒதுக்கீடு விசயத்தில் நெருங்கி வந்திருந்தது.

அதாவது கட்டாயமாக தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என்ற நிலையில் இருந்தது அதிமுக தலைமை. ஆனாலும் அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் அல்வா கொடுப்பார்கள் என்ற ரீதியில் அதே நிலைபாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது அதிமுக இடஒதுக்கீட்டை அறிவித்தால் அவர்களுக்கு சீரிய ஆதரவு என்றும், அறிவிக்காவிட்டால் சும்மா கடமைக்கு தார்மீக ஆதரவு என்றும் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.

அதிமுகவினர் ஏற்படுத்திய நம்பிக்கை:

செயற்குழு முடிந்தும் கூட திமுகவினர் தலைமையைத் தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் அவர்களை நிராகரித்து அனுப்பியது தலைமை. ஆனாலும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார்கள் அதிமுகவினர். தேர்தல் அறிக்கை பற்றி அவர்களிடத்திலே தொடர்ந்து கேட்கப்பட்டது. அதெல்லாம் கவலையே படாதீர்கள். உங்கள் கோரிக்கையான சமுதாய இடஒதுக்கீடு அதிகப்படுத்தும் செய்தி ஒரு எழுத்து கூட விடுபடாமல் தேர்தல் அறிக்கையில் தயாராகி விட்டது என சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய செயற்குழு முடிவை மூடியே வைத்து மவுனம் காத்தது.

அதிமுகவின் துரோகமும் சமுதாயக்காவலர்களின் மௌனமும்:

இந்த நிலையில் திருச்சியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த அதிமுக தலைவர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் அதில் இஸ்லாம் அல்லது முஸ்லீம் என்ற ஒரு வார்த்தை கூட இல்லாலது கண்டு கொதிப்படைந்தது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை. சாதரண துரோகத்தைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் இது பச்சை நம்பிக்கை துரோகம் என்ற ரீதியில் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி இதை மக்கள் மன்றத்தில் வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் அதிமுகவை ஆதரித்தவர்களும், அவர்களிடத்திலே சீட்டு வாங்கியவர்களும் இதைப் பற்றி ஏதாவது பேசினால் நமக்கு கிடைத்த சீட்டு பறிபோய் விடும் என்ற நிலையில் வாய்மூடி மௌனியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், பார்த்தீர்களா! ஜெயலலிதா திருச்சி கூட்டத்திலே இடஒதுக்கீடு குறித்து சொல்லிவிட்டார் என்ற ரீதியில் முழக்கமிடவும் துவங்கிவிட்டார்கள்.

தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்த செய்தி இல்லையென்றதும் பதறியடித்து கூட்டணியை விட்டே வெளியே வந்திருக்க வேண்டாமா? அல்லது இடஒதுக்கீடு குறித்த உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள் என அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டாமா? எங்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கிடைத்தால் போதும் நாங்கள் வெற்றிபெற்றால் போதும் என போகிற போக்கில் காற்றுவாக்கில் சொல்கிற கோரிக்கைகளுக்கு கொடிபிடித்து அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களின் செயல் வெறுப்பைத் தான் ஏற்படுத்துகிறது

மீண்டும் கூடிய அவசர பொதுக்குழு:

இந்த விசயத்தில் திருப்தியடையாத‌ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனடியாக‌ அவசர பொதுக்குழுவைக் கூட்டியது. செய்யவே மாட்டேன் என சொல்பவனும், வாய்ப்பிருந்தால் செய்வேன் என சொல்பவனும் சமமாக மாட்டான். அதே ரீதியில் தான் திமுகவினரின் இன்றைய நிலையும், அதிமுகவினர் இன்றைய நிலையையும் மக்கள் மன்றத்திலே வைப்பது என முடிவுசெய்யப்பட்டு இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் எல்லாவற்றையும் அப்படியே காப்பியடித்து அதை இருமடங்காக்கி வழங்குவேன் என தேர்தல் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, இடஒதுக்கீட்டு விசயத்தை மட்டும் தூக்கி தூர எறிந்தார்.

அதைப் பற்றி பேசுவதற்கோ கேட்பதற்கோ அம்மாவின் நவீன அடிமைகள் தயங்கும் போது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பணிய மாட்டோம், தேர்தல் நட்பு தேர்தல் முடியும் வரை மட்டும் தான். அடுத்த நாள் அவர்களால் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையாக களமிறங்குவோம், நமக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை, நம் ஆதரவு தான் அவர்களுக்குத் தேவை என்ற ரீதியில் இன்று வரை இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரு கட்சியினர் செய்த துரோகங்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தது.

வாக்கெடுப்பும் மக்களின் தீர்ப்பும்:

இந்த இடத்தில் சமுதாயத்திற்கு அதிமுக செய்த நம்பிக்கை துரோகத்தை விட, திமுகவின் துரோகம் கொஞ்சம் குறைவு என்ற ரீதியிலும், தவ்ஹீத் ஜமாஅத்திடம் வாக்குறுதி கொடுத்து ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஏமாற்ற நினைத்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற ரீதியிலும் இரண்டு விசயங்கள் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன.

1) இந்த தேர்தலில் நம் சமுதாயத்திற்கு யாருமே நன்மை செய்துவிடவில்லை, இரண்டு கட்சிகளுமே துரோகம் தான் செய்தார்கள். எனவே யாருக்கும் ஆதரவு இல்லை. ஜமாஅத் பெயரையும் கொடியயும் பயன்படுத்தி ய்யாருக்கும் வேலை செய்யக் கூடாது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்து ஓட்டளிக்கலாம்

2) திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்ததும் சமமானதல்ல என்பதால் திமிகவுக்கு ஆதரவு அளிப்பது
என்ற இரண்டு விசயங்கள் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன. மக்களுக்கு வாய்ப்பளித்து முதல் கோரிக்கை சராசரியாக 20 % வாக்குகளைப் பெற்றது. அதே போல இரண்டாவது கோரிக்கை மக்களின் ஏகோபித்த தீர்ப்பாக ஏறத்தாழ 80% வாக்குகளைப் பெற்றது.

மக்களின் ஏகோபித்த முடிவைத்தான் தலைமையே ஏற்றுக் கொள்ளும் என்ற ரீதியில் திமுக அணியை 234 தொகுதிகளிலும் ஆதரிப்பது என்ற மக்களின் முடிவை தலைமை அறிவித்தது. இது எந்த நிலையிலும் தன்னிச்சையான முடிவு அல்ல.

ஆக சமுதாயத்தைக் காட்டி ஒன்று, இரண்டு, மூன்று அதுவும் இல்லைன்னாலும் பரவாயில்லை கிடைத்ததை வாங்கிக்கொண்டு கிடையாய்க் கிடக்கிறோம், நீங்கள் தான் சமுதாய காவலர், நாங்கள் காலங்காலமாக நீங்கள் சமுதாயத்திற்கு என்ன துரோகம் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டோம், எங்களுக்கு 3 தாருங்கள் நாங்கள் 300க்கு உழைப்போம் என அவர்களுக்கு கொடி தூக்குவதும், இவர்களை ஆதரிக்கும் போது அவர்களைத் திட்டுவதும், அவர்கள் பக்கம் ஓடிவிட்டால் இவர்களைத் திட்டுவதும் என மோடிமஸ்தான் வேலைகளைச் செய்து எப்படியாவது தங்களை சமுதாய காவலர்களாக காட்டிக்கொள்ள துடிக்கும் சமுதாய துரோகிகளுக்கு மத்தியில் மக்கள் முடிவே அமைப்பின் முடிவு என்ற நிலையை மட்டும் கையாளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்து விளங்குகின்றது. எல்லா புகழும் இறைவனுக்கே


- TNTJ

வெள்ளி, 25 மார்ச், 2011

சிரிக்க.. சிந்திக்க..













தடம் புரண்ட ஜாக்

ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற ஜாக் இயக்கம் மௌலவி பி.ஜே அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதாகும். அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் இயக்கத்திற்கு தலைவராக இருந்த பிஜே, தலைவர் பொருப்பில் இருப்பது தவ்ஹீத் பிரச்சாரத்தை பாதிக்கிறது என்ற நோக்கில் கமாலுதீன் மதனியை தலைவராக ஆக்கிவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அன்றைய அவ்வளவு எதிர்ப்புகளையும் அடிதடி வெட்டுக்குத்துக்களையும் மீறி வெடித்துக்கிளம்பிய ஒரு இயக்கம் தான் இந்த ஜாக். குர்ஆன் மற்றும் ஹதீஸ் இரண்டை மட்டும் தான் பின்பற்றவேண்டும் என்ற நோக்கில் அன்றைக்கு இருந்த வழிகேடுகளைத் தவிர்த்து விட்டு உண்டாக்கப்பட்ட இந்த‌ இயக்கம், இன்றைக்கு அவர்களின் சுய நலனுக்காகவும் உலக ஆதாயங்களுக்காகவும் மட்டுமே இரத்தம் சிந்தி உண்டாக்கப்பட்ட ஒரு இயக்கம் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தால் நமக்கு வெறுப்பு தான் மிஞ்சும்.

அதாவது சினிமாவை வெறுத்து அதிலிருந்து வெளியேறி சினிமாவே ஹராம் என்று சொன்னவன் இன்றைக்கு அவனே சொந்தமாக‌ சினிமா தியேட்டர் கட்டி டிக்கெட் கிழித்த கதையாக ஆகிவிட்டது இன்றைய ஜாக்கின் நிலை.

எதையெல்லாம் வழிகேடுகள் என்று சொன்னார்களோ, இன்றைக்கு அதெல்லாம் சரி என்ற ரீதியில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் சஹாபாக்கள் மற்றும் இமாம்கள் என்ற ரீதியில் இறங்கிவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் தர்ஹா, தரீக்கா என்ற ரீதியில் இறங்கி கழிசடையாகி கடைசியில் 1980 களுக்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலைக்கு விரைவில் வந்து விடுவார்கள் என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.

பிறை விசயத்தில் பயங்கர பில்டப் கொடுத்து தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே ரீதியில் பிறையைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்தார்கள். அமீருக்கு கட்டுப்படுதல் என்பது பிஜே இன்றைக்கு எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர். ஆனால் ஜாக்கின் வழிகெட்ட கொள்கையில் மிக முக்கியமானது அமீருக்கு கட்டுப்படுதல். இந்த அமீருக்கு கட்டுப்படுதலும், பிஜே அவர்கள் எழுதியிருக்கும் அமீருக்கு கட்டுப்படுதலும் ஒன்றுக்கொன்று முரண்படும். காரணம் ஜாக் என்ற வழிகெட்ட இயக்கத்தில் அமீர் என்ன சொன்னாரோ அது தான் ஃபத்வா ஆகும். நாளை முதல் தண்ணீர் ஹராம் என்று சொன்னால் அதை ஏன் எதற்கு என்று கேட்காமல் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டே கட்டுப்பட வேண்டியது தான் ஜாக்கில் இருப்பதற்கு தகுதிகள் ஆகும். இந்த வழிகெட்ட கூட்டத்தினர் ஒப்புக்கொண்டு வெளியிட்ட அல் ஜன்னத் பத்திரிக்கையின் ஒரு பகுதி தான் இது. தாமதமாக கிடைத்ததால் செய்தியும் தாமதமாகிறது.

முக்கியக் குறிப்பு:

இவர்கள் எழுதியுள்ள குறிப்பு எண் 9ம் குறிப்பு எண் 11 ம் ஒன்றுக்கொண்டு நேராக மோதுவதை கவனியுங்கள்

நபித்தோழர்களை மதிக்க வேண்டும் என்ற விசயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்றைக்குமே முரண்பட்டதில்லை. ஆனால் வஹி என்பது ரசூலுல்லாஹ் அவர்களின் காலத்தோடு நின்று போய்விட்டதால் நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவதோடு நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும், அவர்களை பின்பற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

உமர் ரலி அவர்களின் ஹதீஸ் பலகீனமானது என ஒரு நண்பர் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டியதால் அது நீக்கப்படுகிறது. ரசூலுல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் வஹி வராது என்ற நோக்கில் மட்டுமே ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரலாம்

ஆக ஜாக் மற்றும் அதன் விசுவாசிகளே! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

வெள்ளி, 18 மார்ச், 2011

இயேசு உண்மையில் சிலுவையில் அறையப்படவில்லை என்றால்...

அஸ்ஸலாமு அலைக்கும்..

www.jesusinvites.com
இணையத்தில் கிறிஸ்தவர்களின் கேள்விகளும் பிஜே அவர்களின் பதில்களும் தொகுப்பாக வெளியாகி வருகின்றன..
அதிலிருந்து ஒரு கேள்வி...


கேள்வி

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு அல்லது இறைவன் சீடர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை?

PJ அவர்களின் பதில்

இயேசு தன்சீடர்களிடம் இந்த உண்மையைச் சொல்லத் தான் செய்தார். அவரது சீடர்களுக்கும் அதுதெளிவாக விளங்கத் தான் செய்தது. கிறித்தவ பாதிரிமார்கள் தவறான கொள்கை காரணமாககண்ணை மூடிக் கொள்வதால் அவர்களுக்கு அது விளங்காமல் போய் விட்டது. அதன் காரணமாககிறித்தவ அப்பாவிகளுக்கும் விளங்காமல் போய் விட்டது.

இயேசு சிலுவையில்அறையப்பட்டதாக அவரது சீடர்கள் எண்ணிக் கொண்டிருந்த போது இயேசு அவர்கள் முன்காட்சியளித்து கூறியதைக் கீழே காணுங்கள்.

இவைகளைக்குறித்துஅவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம்என்றார்;.

37. அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக்காண்கிறதாக நினைத்தார்கள்.

38. அவர் அவர்களை நோக்கி: நீங்கள்ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

39. நான்தான் என்றுஅறியும்படி,என் கைகளையும்என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கிற படி, எனக்கு மாம்சமும் எலும்புகளும்உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

40. தம்முடையகைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

41. ஆனாலும்சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்குஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.

42. அப்பொழுது பொரித்தமீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

43. அவைகளை அவர் வாங்கி அவர்களுக்குமுன்பாகப் புசித்து,

44. அவர்களை நோக்கி: மோசேயின்நியாயப் பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்துஎழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்த போது உங்களுக்குச்சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

லூக்கா 24:37-44

இயேசு அவளை நோக்கி:என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப்போய், நான் என்பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள்தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

18. மகதலேனா மரியாள்போய், தான் கர்த்தரைக்கண்டதையும்,அவர்தன்னுடனேசொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

19. வாரத்தின் முதல் நாளாகியஅன்றையத்தினம் சாயங்கால வேளையிலே,சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப்பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச்சமாதானம் என்றார்;.

20. அவர் இப்படிச் சொல்லித்தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

யோவான் 20:18-20

யூதர்களிடமிருந்துதப்பித்து வந்த போது சீடர்கள் ஆவி என்று நினைக்கிறார்கள். ஆனால் இயேசு அதை மறுத்துநன் ஆவி அல்ல என்கிறார். மாமிசம் எலும்புகள் தனக்கு இருப்பதை காட்டுகிறார். தொட்டுப்பார்க்கச்சொல்லி உறுதி படுத்துகிறார். மேலும் அவர்களிடம் உணவை வாங்கி சாப்பிட்டுகாட்டியுள்ளார். இதில் இருந்து சிலுவையில் அவர் அறையப்படவில்லை. அவர் தப்பித்துஉயிருடன் ஓடி வந்து விட்டார் என்பதை அறியலாம். மேலும் அவர் கொல்லப்பட்டு ஆவியாகஇருந்தால் அவர் நடைப் பயணமாக பல ஊர்களைக் கடந்து சீசட்ர்களை சந்திக்க தேவை இல்லை. அடுத்தவிநாடியே சீட்ர்கள் முன் தோன்றி இருப்பார்.

இயேசு தப்பிப்பிழைத்து தான் சீட்ர்கள் முன் காட்சி அளித்தார் என்ற உண்மையுடன் பவுலடிகள் கலந்துவிட்ட பொய்யும் சேர்ந்து விட்டதால் கிறித்தவர்களுக்கு உண்மை புரியாமல் போய்விட்டது.



வெள்ளி, 4 மார்ச், 2011

புதிதாக துவங்கப்பட்டுள்ள இணையதளம்

பல்வேறு தலைப்புகளில் ஏகத்துவ அறிஞர்கள் உரையாற்றிய அடியோ, வீடியோ ஆகியவற்றை ஒரே தொகுப்பில் காண, TNTJ சார்பில் புதிதாக துவங்கப்பட்டுள்ள இணையதளம் சோதனை ஓட்டத்தில்...

http://thowheedvideo.com

வியாழன், 3 மார்ச், 2011

இறுதி நாளை நம்புதல்



அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)

அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:281)


இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும். (அல்குர்ஆன் 55:27)
வானம், பூமி, சூரியன், விண் கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.


யுக முடிவு நாள், இறுதி நாள், ஸþர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் திருமறைக் குர்ஆனில் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.
பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர். நல்லவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கும்; கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது.


தீர்ப்பு நாள், மறுமை, மறு உலகம், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவ முடியாத நாள், திரும்பச் செல்லும் நாள், கூ­ வழங்கும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன் தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், அவ்வுலகம், கைசேதப்படும் நாள், இறைவன் முன் நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள் இன்னும் பல பெயர்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.


சந்தேகம் இல்லாத நாள், மகத் தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்தச் சந்தேகமும் இல்லாத நாள் போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவானதாகும்.


அழிக்கப்படும் நாள், மீண்டும் உயிர்ப்பிக்கும் நாள் ஆகிய இரு நாட்களும் எப்போது ஏற்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த மனிதரும் ஏன் வானவர்களும் கூட அறிய மாட்டார்கள். அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும்.
இவ்வுலகில் மனிதன் நல்லவனாக வாழ இத்தகைய ஒரு நாளை நம்புவது பெரிதும் உதவும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.


மண்ணறை வேதனை


மறுமைநாளில் குற்றம்புரிந்தவனுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு முன், இறந்த பின் அவனுக்கு சிறிய அளவு தண்டனையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். இதை பல நபிமொழிகள் தெளிவுபடுத்தியுள்ளன. இதைப்போன்று திருமறைக் குர்ஆனும் தெளிவுபடுத்துகிறது.

பிர்அவ்ன் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் ஏற்படும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன் 40:46)


ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்பது மறுமையில் வழங்கப்படும் தண்டனைக்கு முன் வேறொரு தண்டனை உள்ளது என்பதை நிரூபிக்கிறது. ஏனென்றால் இவ்வசனத்தில் கடுமையான யுக முடிவு நாளில் இவர்களைக் தண்டனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது.


இது தான் கப்ருடைய வேதனை என்று நபி மொழிகள் கூறுகின்றன.

- kadayanalluraqsa

புதன், 2 மார்ச், 2011

பிர்அவ்ன் முஸ்லிம் ?!!?!!?



அல்லாஹ் தனது திருமறையில் பிர்அவ்னின் மனைவி ஆஸியா அவர்கள் மூஸா அலை அவர்கள் கட­ல் மிதந்து வந்து அதை கண்டு எடுத்த போது கூறினார்கள்.


இக்குழந்தை எனக்கும் உமக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கும் என்று ஆஸியா அம்மையார் அவர்கள் சொன்னதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

இதை விளக்க வந்த மூடர்களின் தலைவன் ஷைகுல் ஆரிபீன் என்று போற்றப்படும் இப்லீஸ் இப்னு அரபி சொல்கிறான்.

பிர்அவ்ன் கட­ல் மூழ்கிய நேரத்தில் அல்லாஹ் வழங்கிய ஈமானுக்கு காரணமாக இருந்ததின் முலம் மூஸா அலை அவர்கள் கண் குளிர்ச்சியாக இருந்தார்.

அவனிடத்தில் எந்த அசுத்தமும் (குப்ரு) இல்லாத வகையில் இறைவன் இறைவன் அவனை சுத்தப்படுத்தினான். காரணம் பிர்அவ்ன் பாவம் செய்வதற்கு முன்பாக ஈமானோடு கைப்பற்றிவிட்டான். அல்லாஹ்வின் அருளில் யாரும் நம்பிக்கை இழநஙதிளராத வகையில் அவனை கைப்பற்றிதை அத்தாட்சியாக ஆக்கிவிட்டான். அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான். அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்” என்றார்.

பிர்அவ்ன் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்திருந்தால் ஈமானை ஏற்றுக் கொள்வதற்கு விரைந்திருக்கமாட்டான்.


இதை எழுதியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்தான் நான் நான்தான் அல்லாஹ் யார் யாருக்குத்தான் கட்டளையிட முடியம் என்று எழுதிய இப்னு அரபிதான். இவன் தன்னுடைய புத்தகமான புஸீலுல் ஹிகம் 200 ல் குறிப்பிடுகிறான்,

இந்த வழிகெட்ட கருத்து திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு முரண்படுகிறது.

(இவர்களின் நடவடிக்கை) ஃபிர்அவ்ன் மற்றும் அவனுக்கு முன் சென்றோரின் நடவடிக்கை போலவே உள்ளது. அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதினர். அவர்களது பாவங்களின் காரண மாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். 3 : 11

103. அவர்களுக்குப் பின் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிட மும் தெளிவான சான்றுகளுடன் அனுப்பி னோம். அவற்றை அவர்கள் ஏற்க மறுத்தனர். ‘குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?’ என்பதைக் கவனிப்பீராக! 7 : 103

எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.
46. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம்1 வரும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) 40 : 45 46

ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். எனவே அவனைக் கடுமையாகத் தண்டித்தோம். 73 : ௧௬



இது போன்ற வழிகேடர்களிடமிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்ற வேண்டும்!