திங்கள், 17 நவம்பர், 2014

குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் அதன் உள்ளர்த்தம் என்ன ?

குர் ஆனை நபி (சல்) அவர்கள் மறக்கவே மாட்டார்கள் என்று 87:6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
இவ்வாறு குர் ஆனின் பாதுகாப்புக்கு நபி மூலமாகவே அல்லாஹ் உத்திரவாதம் வழங்கி விட்ட பிறகு, நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்பினால் குர் ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று அர்த்தமாகும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறி வருவது அவர்களது அறியாமையை காட்டுவதாக சிலர் வாதம் புரிகின்றனர்.

உண்மையில் இவர்கள் தான் குர் ஆனில் நுனிப்புல் மேய்ந்து அறியாமையில் திளைக்கிறார்கள்.

குர் ஆனை பாதுகாப்பது என்றால் என்ன என்பதையே இவர்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு மேற்கண்ட இவர்களது வாதம் சான்றாக இருக்கிறது.

குர் ஆனை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதனுடைய பொருள், பாதுகாப்பதற்குரிய எல்லா வழிகளையும் திறந்து வைத்து பாதுகாப்பான் என்பதாகும்.

பாதுகாப்புக்கு தடங்கல் ஏற்பபடுதவல்ல எல்லா புறக்காரணங்களையும் அப்புறப்படுத்தி, அதன் மூலம் பாதுகாப்பான் என்பது தான் அதன் அர்த்தம்.

நபிக்கு மறதி ஏற்படாமல் குர் ஆனை பாதுகாப்பது எப்படி அல்லாஹ் தந்த வாக்குறுதியோ அது போல நபிக்கு மறதி ஏற்பட்டு அதன் காரணமாக குர் ஆனில் விடுதல்கள் வந்திருக்கலாமோ? என்று எவரும் நினைக்கும் அளவுக்கு எந்த காரிணிகளும் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்வதும் அல்லாஹ்வின் வாக்குறுதிகளில் ஒன்று தான் !

29 ;48 வசனத்தில், "இந்த தூதருக்கு எழுதவோ படிக்கவோ நாம் கற்றுக்கொடுக்கவில்லை. அவ்வாறு கற்றுக்கொடுதிருந்தால், இதை காரணம் காட்டியே இறை மறுப்பாளர்கள் இந்த வேதத்தின் மீது சந்தேகம் கொண்டிருப்பார்கள், என்று அல்லாஹ் சொல்வது, சூனியம் குறித்த இவர்களது அறியாமைக்கு பதிலாக அமைந்துள்ளது.

இது இறை வேதம் தான் என்று அல்லாஹ் பாதுகாக்க எண்ணினால், நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுத்து , அதன் பிறகும் கூட வேதத்தை பாதுகாத்திருக்க முடியும்.

அல்லாஹ்வுக்கு அந்த ஆற்றல் கூட உள்ளது !!

ஆனால், இது மனித கையாடலாக இருக்குமோ? என்கிற சந்தேகம் கூட வரக்கூடாது என்பதில் அல்லாஹ் கவனமாக இருக்கிறான் என்பதற்கு மேற்கண்ட வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

வேதத்தை பாதுகாக்கவும் செய்ய வேண்டும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தோன்றக்கூடிய எல்லா வாசல்களை அடைக்கவும் செய்ய வேண்டும்.

இது தான் அல்லாஹ்வின் அளவுகோல் !

நபிக்கு குர்ஆன் மறக்காது என்று சொன்னால் மறப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இருக்காது என்று பொருள்.

இன்ன காரணத்தால் மறந்திருப்பார்களோ, இன்ன காரணத்தால் சொல்ல விட்டிருப்பார்களோ என்றெல்லாம் எவருமே எண்ணிடாத வகையில் அல்லாஹ் பாதுகாப்பான் என்று பொருள் !

புரிய வேண்டிய விதத்தில் புரியாததால் தான் இது போன்ற நுனிப்புல் கேள்விகள் !






சனி, 25 அக்டோபர், 2014

நாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன நோய்


நாங்களும் இருக்கிறோம்லே என்று அடிக்கடி காட்டிக் கொள்ளும் மன நோய்க்கு பல வருடங்களாக ஆளானவர் அபு அப்துல்லாஹ் என்பவர்.
தனது சீடர்களை அழைத்து வைத்துக் கொண்டு பிஜெவை ஏசுகிற நிகழ்ச்சியொன்றினை ஈரோட்டில் நடத்தி முடித்திருக்கிறார். வழக்கம் போல் அதுவும் நகைச்சுவையின் உச்சகட்டமாக முடிந்திருக்கிறது.
விவாதத்திற்கு தயாரா? என்று நம் சகோதரர்கள் நேரடியாக கேட்க, விவாதத்தின் மூலம் சத்தியத்தை அறிய முடியாது என்று முதலில் அடித்தார் ஒரு பல்டி.
பிஜெவை விடுங்கள், மற்ற தாயிகளுடன், மற்ற அறிஞர்களுடன் விவாதிக்க முன்வருகிறீர்களா? என்று கேட்டதற்கு, தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயருடன் வந்தால் விவாதிக்க மாட்டோம் என்று அடித்தார் அடுத்த பல்டி.
நாத்திகர்களும் கிறித்தவர்களும் கூட தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை தான் சரியானது என்று கூறி விவாதிக்க முன்வரும் துணிச்சலை பெற்றிருக்கிறார்கள்,
ஏன், காளிக்கு பூஜை செய்து உனக்கு சூனியம் வைப்பேன் என்று கூறுகிற சூனியக்கார கும்பல் கூட அவன் அளவிற்கு ஏதோ குருட்டு நம்பிக்கையில் விவாதிக்க வந்து விடுகிறான்.
இவர்களுக்கு, அந்த துணிச்சல் கூட இல்லை என்பதே இதன் மூலம் நிரூபணமாகிறது.
இவர் சார்பாக பேசிய இவரது சீடர் சலீம் என்பவர், "நேயர்" நாஷித் அஹமத் என்று ஆன்லைன் பிஜெ இணையதளத்தில் பொய்யாக எழுதியுள்ளார்கள் என்று சொல்லி விட்டு
தொடர்ந்து, இவர் ஒரு மிகப்பெரிய ஆகாசப் பொய்யினை அவிழ்த்து விடுகிறார்.
""நாஷித் அஹமத் யார் என்று எங்களுக்கு தெரியும், அவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் தாயி, அவர் வாணியம்பாடி, பேரணாம்பேட்டில் இருக்கிறார்"" என்று அடித்தாரே ஒரு பொய் !!!!
நாஷித் அஹமத் யார் என்று எங்களுக்கு தெரியும் என்று கூறுகிற அளவிற்கு இந்த அப்துல்லாஹ் சலீம் நாஷித் அஹமதோடு கொண்டிருந்த நெருக்கம் என்ன? அவரென்ன நாஷித் அஹமதுக்கு மாமனா மச்சானா?
நாஷித் அஹமத் தவ்ஹீத் ஜமாஅத்தின் முழு நேர தாயி கிடையாது,
அமீரகத்தில் பணிசுமைக்கு நடுவே எழுத்திலும் அவ்வப்போது மற்ற வகைகளிலும் தாவா செய்வதை தவிர, இவர் கூறுவது போல் நாஷித் அஹமத் எந்த தேதியில், எந்த வருடத்தில் வாணியம்பாடி வந்தார், என்றைக்கு பேரணாம்பேட்டிற்கு வந்தார்?
இந்த சலீம் அவரை வாணியம்பாடியிலும் பேரணாம்பேட்டிலும் எங்கே எப்போது பார்த்தார்???
ஆதாரத்துடன் வெளியிட்டு விட்டு, தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கும் அருகதையினை பெறட்டும்.
பொய்களையும் புளுகுகளையும் அவிழ்த்து விட்டு விட்டு நீங்கள் தவ்ஹீத் ஜமாஆத்தை விமர்சிக்கிறீரா?
என்றால், சொன்னதை ஆதாரத்துடன் சொல்லவும், என்று நாஷித் அஹமத் ஆகிய நான் கேட்டுக் கொள்கிறேன்.
கணிப்பு கணிப்பு என்று கூறி ஊரை ஏமாற்றி திரிந்த காலம் போய் ..
தற்போது வருமானம் படுத்து விட்டதை தொடர்ந்து, அவ்வப்போது இவ்வாறு தெருக்கூத்துகள் நடத்தி வியாபாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு இவர்கள் ஆளாகியிருக்கிறார்கள் என்பது தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க முன்வராமல் இவர்கள் எடுக்கும் ஓட்டத்தின் மூலம் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது !

ஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு



உங்கள் மத்ஹபில் என்ன அபத்தங்கள் எல்லாம் உள்ளன என்பதை உங்களுக்கு போதிக்காமலேயே உங்களை மத்ஹப் எனும் மாய வலையில் சிக்க வைத்திருக்கிறார்கள் மார்க்கமறியாத உங்கள் ஹசரத்மார்கள்.
அதற்கு சில சான்றுகளை இங்கே பார்ப்போம்.
ஹனஃபி மத்ஹப், அபு ஹனீஃபா இமாமை மையப்படுத்தி தோற்றுவிக்கப்பட்டது என்று தெரிந்திருக்கும் நீங்கள், அந்த அபு ஹனீஃபா இமாமை இந்த மத்ஹப் நுற்கள் எந்த அளவிற்கு வரம்பு மீறி புகழ்ந்திருக்கின்றன என்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் குர்ஆனுக்கு அடுத்த மகத்தான அற்புதம் அபூஹனிஃபா தான்.
நூல்: துர்ருல் முக்தார்
பாகம்: 1, பக்கம்: 52
குர் ஆனுக்கு அடுத்த அற்புதமே அபு ஹனீஃபா இமாம் தானாம்.. இதை யார் உங்களுக்கு சொன்னது? அல்லாஹ்வின் அற்புதமான குர் ஆனோடு அபு ஹனீஃபாவை ஒப்பிடும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தது?
அவரது மாணவர்களிடமும், அவரைப் பின்பற்றியவர்களிடமும் அவரது காலம் முதல் இன்று வரை ஞானத்தை அல்லாஹ் ஒப்படைத்து விட்டான். முடிவில் அவரது மத்ஹபின் அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.
நூல்: துர்ருல் முக்தார்,
பாகம்: 1, பக்கம்: 52
அபு ஹனிஃபா இமாமின் சட்டப்படி தான் ஈஸா நபி தீர்ப்பளிப்பார்களாம். இது அல்லாஹ்வையே கேலி செய்வதாகாதா? அல்லாஹ் ஈஸா நபியை உலகிற்கு அனுப்புகிறான் என்றால் அவர்களுக்கு இடப்படும் கட்டளை என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும்.
ஏற்கனவே பூமியில் நபியாக வாழ்ந்த அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகள், சட்டங்கள் தெரியத் தான் செய்யும், ஒரு அபு ஹனீஃபா தேவையில்லை, ஈஸா நபிக்கு சொல்லித் தர.. !
"நான் அபூஹனீஃபாவின் பரக்கத்தை நாடி அவரது கப்ருக்குச் செல்வேன். எனக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, அவரது கப்ருக்கருகே நின்று அல்லாஹ்விடம் கேட்பேன். விரைந்து அந்தத் தேவை நிறைவேற்றப்படும்'' என்று ஷாஃபி இமாம் கூறினார்கள்.
துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51
அல்லாஹ்வைத் தொழும் போது கூட கப்ரை நோக்கித் தொழக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். கப்ரைத் தொழுவதாகப் பிறருக்குத் தோன்றாமல் இருக்க நபியவர்கள் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் இங்கு அபூஹனீபாவின் கப்ருக்கருகில் நின்று பிரார்த்தனை செய்தால் உடனே நிறைவேறும் என்று கூறி இமாம்கள் மீது பக்தி ஊட்டப்படுவதுடன் இணை வைப்பதற்கான வாசலும் திறந்து விடப்படுகின்றது.
ஷாஃபி, அபூஹனீஃபா ஆகிய இரண்டு இமாம்களுமே இது போன்ற சமாதி வழிபாட்டைக் கடுமையாகக் கண்டித்திருந்தும் அவர்கள் பெயரிலேயே இவ்வாறு இட்டுக் கட்டுவதற்கு இவர்களுக்கு வெட்கமில்லை.
அடுத்து, இவர்கள் எவ்வாறு சஹாபாக்களையே கேலி செய்கிறார்கள் என்பதை பாருங்கள்.
அபூஹனீஃபா அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்றவராக இருக்கும் போது அவருக்கு இத்தகைய சிறப்புகள் எப்படி இல்லாமல் போகும்?
துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51
அதாவது, அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களும் அபு ஹனீஃபாவும் சமமாம் !
எந்த அபுபக்கர் சித்தீக்? நீங்கள் மலையளவு தர்மம் செய்தாலும் அவர்களது ஒரு கையளவு தர்மத்திற்கு அது ஈடாகாது என்று நபி (சல்) அவர்கள் சிலாகித்து சொல்கிறார்களே அந்த சத்திய சஹாபாக்களில் சிறந்தவரான அபுபக்கர் சித்திக் அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதரான அபு ஹனீஃபாவும் சமமாம் !
இவர்கள் தான் நம்மைப் பார்த்து சஹாபாக்களை ஏசுகிறோம் என்று விமர்சனம் செய்பவர்கள் !

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்?



-------------------------------------------------------------------
முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது ஷைத்தானின் தூண்டுதலை தான் குறிக்கிறது என்பதற்கு பல சான்றுகளை நாம் முன் வைத்திருக்கிறோம்.
முடிச்சு என்பதற்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு ?
இரவில் தூங்கும் போது மூன்று முடிச்சுகளை ஷைத்தான் இடுகிறான் என புஹாரி 1142 இல் சொல்லப்பட்டுள்ளது.
ஊதுதலுக்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு?
ஷைத்தானின் தூண்டுதலை அவனது ஊதுதல் என்றும் அத்தகைய ஊதுதலிலிருந்து பாதுகாப்பு தேடுமாறும் அபுதாவுத் 651 இல் சொல்லப்பட்டுள்ளது.
ஷைத்தானை ஏன் பெண்பாலாக ஏன் சொல்ல வேண்டும்?
இதற்கான விடையை அறிவதற்கு முன், இது தொடர்பாக சலஃபிகளின் முரண்பாட்டை விளக்க வேண்டியுள்ளது. இந்த வசனம் ஷைத்தானை தான் சொல்கிறது என்று நாம் சொல்லும் போது, அப்படியானால் இங்கு ஏன் பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது? பெண் ஷைத்தானிடமிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா? என்று குதர்க்கமாக கேட்பர்.
அதே சமயம், இந்த வசனம் சூனியத்தை தான் குறிக்கிறது எனவும் இன்னொரு பக்கம் சொல்வார்கள்.
அப்படியானால் சூனியத்தை பெண்களால் மட்டும் தான் செய்ய முடியுமா? அல்லது பெண்கள் செய்யும் சூனியத்திலிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா? என்று, இவர்களது கேள்வியை நாம் இவர்களிடமே திருப்பிக் கேட்பதன் மூலம் இவர்களது சந்தர்ப்பவாதத்தையும் முரண்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் நஃப்ஃபாஸாத் என்பது இலக்கண அடிப்படையில் பெண்பாலை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் கூட, பொருள் அடிப்படையில் அது பொதுவாய் சொல்லப்படுபவை தான்.
முடிச்சுகளில் ஊதுபவைகளின் தீமையை விட்டும், என்று பொதுவாய் மொழியாக்கம் செய்வதும் இவ்விடத்தில் தகும்.
இதற்கு சான்றாய் குர்ஆனின் வேறு பல வாசகங்களை இங்கே பார்க்கலாம்.
79:1 5 வசனங்களில் பொதுவாக மலக்குகளை பற்றி அல்லாஹ் பேசும் போது நாஸியாத், நாஷிதாத் என்கிறான். இவை, இலக்கணப்படி பெண்பாலாக இருந்தாலும் மலக்குகளில் அவ்வாறு பாலின வேறுபாடு கிடையாது என்பதே சரி. இங்கு பொதுவாய் மலக்குகள் அனைவரையும் குறிக்கும் என்று தான் புரிய வேண்டுமே தவிர மலக்குகளில் பெண் மலக்கு உண்டு என்று புரியக்கூடாது !
அது போல், 77:5 வசனத்தில் இதயத்தில் உபதேசங்களை இடும் மலக்குகள் பற்றி சொல்கிற இடத்தில் முல்கியாத் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பெண்பாலை குறிக்கும் சொல் தான்.
அரபு மொழியில் இலக்கண ரீதியில் பாலின வேறுபாட்டுடன் குறிப்பிடுவது பயன்பாட்டில் இருக்கிறது, கருவுற்றிருக்கும் பெண்ணை குறிக்க ஹாமில் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், ஹாமில் என்பது ஆண்பால் !
மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை குறிக்க ஹாயில் என்கிற சொல் உபயோகப்பட்டாலும் ஹாயில் என்பது இலக்கணப்படி ஆண்பாலாகும்.
ஆக, முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று மொழியாக்கம் செய்தாலும், அது ஜின் இனத்தின் ஆண், பெண் என இரு பாலரையும் பொதுவாய் குறிக்கும் பொதுவான சொல் தான்.

தஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிரான ஆதாரம் !


நபிமார்கள் இதை செய்தார்கள், தஜ்ஜால் இதை செய்வான்.. என்றெல்லாம் சொல்லப்படுவது தான் சூனியத்தினால் எதையும் செய்ய முடியாது என்பதற்கு சான்று என்கிறேன் நான்.
ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.
நீங்களோ மேலோட்டமாக சிந்தித்து, நபிமார்கள் செய்வார்கள் தானே அப்படியானால் சூனியத்தின் மூலம் மற்ற மனிதர்களாலும் செய்ய முடியும் என்கிறீர்கள்.
யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சூனியம் என்கிற பெயரால் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்ட முடியும் என்பது உண்மையாக இருக்குமானால் தஜ்ஜாலைப் பற்றி குறிப்பிட்டு அல்லாஹ் சொல்ல மாட்டான் என்கிறேன் நான்.
ஈஸா அதை செய்தார், மூசா இதை செய்தார், சுலைமான் இன்னின்னதை செய்தார் என்று, ஒவ்வொரு அற்புதத்தையும் ஒவ்வொரு நபிமார்கள் செய்ததை தனி தனியே சுட்டிக் காட்டி அல்லாஹ் சொல்வதில் அர்த்தமிருக்காது என்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால், அத்தகைய அற்புதம் தான் அவர்கள் தங்களை இறைவனின் தூதர்கள் என்று சமுதாயத்தில் காட்டிக் கொள்ள உதவியது என்கிற வகையில் சிந்திக்கையில், எல்லா மனிதர்களுக்கும் சகஜமாய் அற்புதத் திறன் இருக்கும் என்று நம்புவது தான் நபிமார்கள் மூலமாக அல்லாஹ் நிகழ்த்திய கராமத்களை மறுப்பதாக இருக்கும்.
அல்லாமல், கராமத்தை நம்புவதால் சூனியத்தையும் நம்ப வேண்டும் என்பது மிக மிக பாமரத்தனமான, ஆழமான, நுணுக்கமான புரிதல் அறவே இல்லாத வாதம் !
தஜ்ஜாலைப் பற்றியும் நபிமார்கள் செய்து காட்டிய அற்புதங்கள் பற்றியும் அல்லாஹ் பெருமையுடனும் மனித குலம் படிப்பினை பெறுவதற்காகவும் சொல்கிறான் என்றால், அத்தகைய ஆற்றல் குப்பனுக்கும் சுப்பனுக்கும் அகோரிக்கும், நாதாரிகளுக்கும் கொடுக்கப்படவில்லை என்று பொருள் !
இவர்கள் வாதப்படி) ஏற்கனவே இவ்வுலகில் ஏராளமான மனிதர்கள் மூலம் ஏராளமான அற்புதங்களை சூனியம் என்கிற பெயரில் பார்த்து வந்த தலைமுறை தான் தஜ்ஜாலை சந்திக்கும்.
அப்படியிருக்கையில், தஜ்ஜாலை பத்தோடு ஒன்று பதினொன்றாக தான் அம்மக்கள் காண்பார்களேயொழிய யாரும் அவனைக்கண்டு பிரமிப்படைய மாட்டார்கள், இதுவரை காணாத ஒன்றை கண்டது போன்றோ இதுவரை கேட்டிராத ஒன்றை கேள்விப்பட்டதை போன்றோ வியப்படைய மாட்டார்கள் !
நபிமார்கள் அற்புதம் செய்திருப்பதால் சூனியத்தினால் செய்ய முடியாது என்கிறோம்.
அற்புதங்கள் தான் அவர்களை நபியென்று நிரூபிக்க உதவியது.
அந்த சாதனத்தை, அந்த ஆயுதத்தை அல்லாஹ் எவருக்கும் கொடுக்க மாட்டான் !!
எது சூனியத்தை மறுக்கிறதோ அதை சூனியத்தை நம்புவதற்கு சான்றாய் கொண்டு வருகிறார்கள் !! ஆழமான புரிதல் இல்லாமையே இதற்கு காரணம் !!

சூனியப்பிரியர்களிடம் ஒரு கேள்வி


எனது முந்தைய பதிவின் சாராம்சத்தை இங்கே சூனியப்பிரியர்களிடம் கேள்வியாக வைக்கிறேன்.
ஃபிளைட்ல வர்றதுக்கெல்லாம் ஏதுப்பா காசு.. துபை போகணும், எவ்வளவு செலவாகும்னு சூனியக்காரன் ஒருத்தன் கிட்ட கேட்டேன், 500 ரூபாய் குடு, அஞ்சே நிமிஷத்துல நீ துபைல இருப்பே அப்படின்னு சொன்னான்.. கொடுத்தேன், மன்னார்குடியில் இருந்த நான் அஞ்சே நிமிஷத்துல துபை ஜுமேரா ஹோட்டல்ல நிக்கிறேன் !
என்று ஒருவன் சொன்னால்
அல்லாஹ் நாடினால் சூனியம் பலிக்கும் என்று கூறி அவன் சொல்வதை அப்படியே நம்பி விடுவீர்களா?
அல்லது
விசாரித்து பார்த்து பிறகு நம்பலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பீர்களா?
அல்லது
எடுத்த எடுப்பிலேயே அவன் பொய் சொல்கிறான் என்று மறுத்து விடுவீர்களா?
இந்த மூன்றில் எந்த பதிலை சொன்னாலும் மாட்டிக் கொள்ளும் பரிதாபகர நிலையில் தான் நீங்கள் உள்ளீர்கள் !!

சூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு


சூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை பாமரத்தனமான ஒரு உதாரணத்தின் மூலம் புரியலாம் !
நேற்று வரை ஊரில் இருந்த நண்பனை இன்று காலை திடீரென துபையில் சந்திக்கிறீர்கள்.
எப்போது வந்தாய், எந்த ஃபிளைட்.. என்றெல்லாம் விசாரிக்கிறீர்கள்.
ஃபிளைட்ல வர்றதுக்கெல்லாம் ஏதுப்பா காசு.. துபை போகணும், எவ்வளவு செலவாகும்னு சூனியக்காரன் ஒருத்தன் கிட்ட கேட்டேன், 500 ரூபாய் குடு, அஞ்சே நிமிஷத்துல நீ துபைல இருப்பே அப்படின்னு சொன்னான்.. கொடுத்தேன், மன்னார்குடியில் இருந்த நான் அஞ்சே நிமிஷத்துல துபை ஜுமேரா ஹோட்டல்ல நிக்கிறேன் !
என்று ஒருவன் சொன்னால் சூனியத்தை நம்பாதவர்கள் அவனை பொய்யன் அல்லது கிறுக்கன் என்பார்கள்.
சூனியம் கூட அல்லாஹ் நாடினால் நடக்கும் என்று நம்புகிறவர்கள், ஆமாம் ஆமாம், அல்லாஹ் நாடினால் ஏன் முடியாது, அல்லாஹ் நாடினால் சூனியம் பலிக்கும் என்பது கூட இந்த தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு தெரியவில்லை என்று கூறி,
மேற்படி மன்னார்குடி டு துபை பறந்து வந்த அந்த அற்புத மனிதரை ஆரத்தழுவிக்கொள்வார்கள்.
ஐந்து நிமிட துபை பயணத்தை ஏற்றுக்கொள்வார்கள்!
(நம்பாமல் எப்படி? அவனென்ன சூனியக்காரனின் திறமையினாலா வந்தான் ? அல்லாஹ் நாடினான், அதனால் வந்தான் !!)
வேறுபாடு இது தான் !
மற்றபடி, இவர்களது காதில் பூ ஒன்று சுற்றப்பட்டிருக்கும், மற்றவர்களுக்கு அது இருக்காது. இதையும் வேறுபாடாக கொள்ளலாம் !!