வெள்ளி, 21 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?


ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதைச் செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும். 

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது)

மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது)

பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடைவீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராயிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!

Article Copied From: www.onlinepj.com , Read more at:http://onlinepj.com/egathuvam/2013-/

முகநூல் பதிவுகள் : குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை



குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

இதை செய்தால் சாக்லேட் தருவேன் இந்த வேலையை செய்தால் வெளியே அழைத்து போவேன் என்றெல்லாம் குழந்தைகளிடம் பேரம் பேசக்கூடாது. நாளடைவில் ஒவ்வொன்றுக்கும் எதையேனும் எதிர்பார்த்து செய்யும் சுபாவமே குழந்தைகளிடம் தலை தூக்கும். வீட்டு வேலைகள் செய்வதும் அப்பா அம்மாவுக்கு பணிவிடை செய்து கொடுப்பதும் தனது அடிப்படை கடமை என்பதை குழந்தை கவனிக்க தவறி விடும்.

படித்ததில் முக்கியமாக நான் கருதிய இரண்டு...

முகநூல் பதிவுகள் : பாகிஸ்தான் தவ்ஹீத் ஜமாஅத்


பாகிஸ்தானை சேர்ந்த நண்பர் ஒருவர் தற்செயலாக சகோ. பிஜே புகைப்படம் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு சைனுல் ஆபிதீன் தானே, தவ்ஹீத் தானே என்று என்னிடம் விசாரித்தும் கொண்டார்.

எப்படி இவரை தெரியும் என்று கேட்டதற்கு, நான் சவுதியில் தமிழர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில தங்கி இருந்தேன், இவரது சிடி அதிகம் ஓடும், என்று சொன்னவர், ரூமில் உள்ளவர்கள் மத்தியில் அது சரியா இது சரியா என அதிகமாக விவாதங்கள் எல்லாம் எல்லாம் வரும், என்றும் கூறினார்.

"அச்சா ஆத்மி பாய்.." என்றும் பிஜே பற்றி சிலாகித்துக்கொண்டார்.

பாகிஸ்தானில் தர்காவாதிகளும் தரீக்காக்களும் அதிகமாக இருந்தாலும், இந்த சகோதரர், அவையெல்லாம் மிகப்பெரிய தவறு என்று நம்மை விடவெல்லாம் மிக ஆவேசமாக பேசுகிறார். நபியின் சுன்னாஹ் இருக்கும் போது இமாம் எதற்கு, சஹாபாக்கள் எதற்கு? என்று தெளிவாக கேள்வி கேட்கிறார்.

அங்கும் ஒரு தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுகிறதாம்.. அதையும் சொன்னார்,.அல்ஹம்துலில்லாஹ் !!

பாகிஸ்தானி ஒருவர் மார்க்கத்தை இவ்வளவு தெளிவாக பேசி இன்றைக்கு தான் நான் கேட்கிறேன் என்பதால் இதை இங்கே பதிகிறேன்.

வியாழன், 20 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : (ரலி) என்று சொல்வது கட்டாயமா?



ரஹ்மதுல்லாஹி அலைஹி என்று பெரியார்களின் பெயருக்கு பின்னால் சொல்ல வேண்டும் என்பது கட்டாய கடமை போல ஆகி விட்டது ஆக்கப்பட்டு விட்டது, பலரும் அர்த்தமே தெரியாமல் ஷாபி (ரஹ்) ,அபு ஹனீபா (ரஹ்) என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

அவர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும் என்கிற துஆ தான் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்கிற வாசகத்தின் அர்த்தம் எனும் போது இதை யாருடைய பெயருடனும் சொல்லலாம், யாருடனும் சொல்லாமலும் இருக்கலாம். 

இமாம்கள் பெயரை சொல்கிற போது இதை கூடவே சேர்த்து சொல்வது கட்டாயம் போல் ஆக்குவது வழிகேட்டுக்கு கொண்டு செல்லும் பித்அத் ஆகும். மார்க்கம் கட்டாயமாக்காததை கட்டாயம் ஆக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை !

இது போல் சஹாபாக்களின் பெயருடன் ரலியல்லாஹு அன்ஹு (ரலி) என்று சேர்த்து சொல்வதும் கட்டாயம் போல கருதப்படுகிறது. இதுவும் மார்க்கம் கட்டாயமாக்காத ஒரு காரியமாகும். சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என்கிற அளவோடு நிறுத்திக்கொள்வது தான் ஈமானுக்கு பாதுகாப்பானது.

- சகோ. பிஜே கேள்வி பதில் உரையிலிருந்து புரிந்தெடுத்தது..

முகநூல் பதிவுகள் : தக்லீத்


இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்றால் பிஜேவின் விளக்கம் எதற்கு???

பாமரருக்கும் இஸ்லாம் புரியும் என்று ஒரு பக்கம் சொல்லி இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்று பிரசாரம் செய்து விட்டு, இன்னொரு பக்கம் பிஜே பயானை கேட்டு விளக்கம் பெற ஏன் செல்கிறீர்கள்? இது முரண்பாடில்லையா? என்கிற இந்த கேள்வி, சமீபத்தில் எனது இன்பாக்ஸை நிரப்புகிறது.

மடத்தனமான கேள்வியை கேட்பதை விடவும் கொடுமையானது, அதை கேட்டு விட்டு, தான் அறிவுப்பூர்வமாக கேட்டு விட்டதாக பெருமிதம் கொள்வதாகும் !
இந்த கேள்வியே இஸ்லாத்திற்கு வெளியே நின்று கொண்டு கேட்கப்படும் கேள்வி என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரியாததால் தான் ஏதோ அதி பயங்கர கேள்வியை கேட்டு விட்டதாக எண்ணுகிறார்கள்.

ஏன் இது இஸ்லாத்தின் வரம்புகளை விட்டும் வெளியே நின்று கேட்கப்படும் கேள்வி??

எந்த இஸ்லாம், இந்த மார்க்கத்தை எளிமை என்று சொல்லியுள்ளதோ அதே இஸ்லாம் தான் நன்மையை ஏவுங்கள் என்றும் சொல்லியுள்ளது, அதே இஸ்லாம் தான் தீமையை தடுக்கவும் சொல்லியுள்ளது.

நன்மையை இன்னொருவருக்கு ஏவுதல் என்பதே அந்த நபர் எளிமையான இந்த மார்க்கத்தை புரியவில்லை என்கிற போது தான் வரும்.

எந்த மார்க்கம் பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக்கப்பட்டிருக்கிறதோ அந்த மார்க்கத்தில் இருந்து கொண்டே சிந்தனையை செலுத்தாதவர்கள் இருப்பார்கள், எது நன்மை,எது தீமை என்பதை அறியாதவர்கள் இருப்பார்கள். ஆக. எளிமையான மார்க்கம் என்பதனுடைய அர்த்தம் முழுமையாவதே நாம் நமது சிந்தனையை செலுத்துகிற போது தான் !

குர் ஆனில், அறிந்தவர்கள் அறியாதவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் அனுமதிக்கிறான்.
இங்கு வந்திருபவர்கள் வராத மக்களிடம் இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள் என்று தனது இறுதி உரையில் நபி (ஸல்) கூறினார்கள்.

வெள்ளை வெளீர் என்கிற மார்க்கம், பாமரருக்கும் புரிகிற வேதம் என்று சொல்லப்படுபவைகளுக்கெல்லாம் இவை முரண் இல்லை !

அறியாதவர்கள் அறிந்தவர்களிடம் கேட்டு தங்களை சரி செய்து கொள்ள முடிவதால் தான் இந்த மார்க்கம் வெள்ளை வெளீர் என்கிற மார்க்கம்.
ஒரு போதனையை கேட்டவர்கள் அதை கேட்காத பிற மக்களுக்கு எடுத்து சொல்கிற காரணத்தால் தான் இந்த மார்க்கம் எளிமையான மார்க்கம் !

ஆக, இது போன்ற கேள்வி மிகவும் அபத்தமானது மட்டுமல்ல, குர் ஆனிலேயே முரண்பாட்டை கற்பிக்கும் கேள்வியாகும். !

அடுத்ததாக, பிஜேவை விமர்சனம் செய்து ஏதேனும் பதிவுகள் இட்டால் உடனே ததஜவினர் மத்ஹப் இமாம்களை பற்றி எதையாவது போட்டு விடுவார்கள், உங்க இமாம் பெருசா எங்க இமாம் பெருசா என்பது தான் இவர்களது எண்ணமாக இருக்கிறது என்று கப்ர் வணங்கி கூட்டம் நம்மை விமர்சிக்கிறது.

ஏகத்துவத்தை போதிக்கிற, தனி மனித போற்றல், தனி மனித வழிபாடு போன்றவைகளுக்கு கூட அவ்வளவு அழகான விளக்கத்தை வைத்திருக்கிற நம்மை நோக்கி, மார்க்கத்தின் பெயரால் எவன் என்ன சொன்னாலும் நம்புகிற கூட்டம் ஒன்று விமர்சனம் செய்வது ஈயத்தை பார்த்து பித்தளை கேலி செய்ததற்கு சமமாகும்.

இமாம்களை இவர்கள் ஈமான் கொண்டிருப்பதற்கும் சகோ பிஜேவின் ஆய்வுகளை நாம் மேற்கோள் காட்டுவதற்கும் இடையே மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது, இந்த வேறுபாட்டினை புதிதாக இந்த ஏகத்துவ கொள்கையை ஏற்ற ஒரு சகோதரன் கூட மிக துல்லியமாக விளக்குவான்.

உன் இமாம் பெருசா என் இமாம் பெருசா என்று போட்டி இடுவது ஒரு தவ்ஹீத்வாதியை பொறுத்தவரை சிரிப்பை வரவழைக்க கூடிய ஒரு காரியமாகும்.

தவ்ஹீத்வாதிகளுக்கு எந்த இமாமும் தேவையில்லை. அல்லாஹ்வை கேலி செய்கிற நபியின் பெயராலேயே புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிற, தொழுகை, நோன்பு என அனைத்து மார்க்க சட்டங்களையும் இழிவுப்படுத்துகிற வேலையை மத்ஹப் இமாம்கள் செய்துள்ள போது அவற்றுக்கும் முட்டுக்கொடுத்து நியாயப்படுத்தும் இழி நிலையை இவர்கள் அடைந்தது போல ஒரு தவ்ஹீத்வாதி அடையவே மாட்டான்.

பிஜெவாக இருந்தாலும் அவர் மார்க்கத்தை தப்பும் தவறுமாக போதிப்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அடுத்த நொடியே பிஜே இந்த சமுதாயத்தால் தூக்கி வீசப்படுவார், எட்டி உதைக்கப்படுவார்.

குர் ஆன் ஹதீஸுக்கு ஒத்ததாக பேசுகிற வரை தான் யாருக்கும் மதிப்பு ! அதை விட்டு தடம் புரண்டு விட்டால் எங்களுக்கு ஜமாலியும் ஒன்று தான் பிஜேவும் ஒன்று தான்.
இதை உரக்க சொல்வதால் தான் நாம் தவ்ஹீத்வாதிகள் எனப்படுகிறோம் என்பதை இமாம்களுக்கு ஜால்ரா தட்டும் கூட்டத்தினர் உணர வேண்டும்.

இது பற்றி, அனைத்து கோணங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆய்வு கட்டுரை விரைவில் தயாராகி வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

சனி, 15 ஜூன், 2013

மூன்றாம் இரவில் இறங்குவது அல்லாஹ்வா அல்லாஹ்வின் அருளா?




கீழ் வானம் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ் உண்மையில் என்ன தான் சொல்கிறது என்பதை விளக்குவதற்கு முன்பாக, ஒரு சில அடிப்படைகளை இங்கே விளக்க வேண்டியுள்ளது.

ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திலும் இறங்குவது அல்லாஹ்வுக்கு சாத்தியமாகாதா? என்கிற அதி பயங்கர (?) கேள்வியை கேட்கிறார்கள்.  சிந்தனையை அடகு வைத்து விட்டு எதையும் அணுகுவதால் தான் இத்தகைய அபத்தமான கேள்வி எழுகிறது.

அல்லாஹ்வின் சிபத்துகளை பற்றி பேசக்கூடிய எந்த இடமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு சாத்தியமா சாத்தியமில்லையா என்கிற ரீதியில் சிந்திக்க கூடாது. எது அல்லாஹ் கற்றுத்தந்த இயற்கை நியதியோ அந்த நியதிக்குள் நின்று தான் சிந்திக்க வேண்டும்.

ஒரு நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பது அல்லாஹ் கற்றுத்தந்த இயற்கை விதிக்கு முரண். இந்த வசனத்தில் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்கிற விதி தான் இயற்கையானது, அது தான் இயற்கையாக அல்லாஹ் கற்று தந்தது. அந்த விதிக்கு முரணாக, அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் தானே என்கிற கோணத்தில் நாம் சிந்திக்க தேவையில்லை.


அப்படி சிந்திப்பதாக இருந்தால் கபருக்குள் இருக்கும் மய்யித் அல்லாஹ்வின் ஆற்றலை பெற்று  குறைகளை கேட்டறிகின்றன என்று சொல்கிற முஷ்ரிக்குகளின் வாதத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். ஏன்? அல்லாஹ் நாடினால் கப்ருக்குள் இருக்கும் மய்யித்துக்கு தனது ஆற்றலை வழங்க முடியாதா?? முரணான ஒன்றை அல்லாஹ் நாடினால் முரண்பாடில்லாமல் புரிய முடியாதா என்று இதற்கும் கேள்வி கேட்கலாம்.

இரவும் பகலும் சமமாகாது என்று அல்லாஹ் சொல்வது கூட நம்மளவில் புரிய தான். உண்மையில் அல்லாஹ்வின் சிபத்திற்கு இது போன்ற முரண்பாடுகளை முரண்பாடு இல்லாமல் அமையும், இரவும் பகலும் அல்லாஹ்வின் புறத்தில் சமம் தான் என்று தான் புரிய வேண்டும் என்று கூட வாதம் வைக்கலாம்.

நன்மை தீமை சமமாகாது, படித்தவர் படிக்காதவர் சமமாக மாட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லும் ஏராளமான வசனங்களை இப்படி கூறிய பொருள் மாற்றி விடலாம்.

சரி இப்படி கேள்வி கேட்பவர்கள், தமக்கு தாமே முரண்படும் வகையில் இன்னொரு கேள்வியையும் கேட்கிறார்கள். என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பார் இல்லையா என்று அல்லாஹ்வின் அருள் பேசுமா?? என்று கேட்கிறார்கள்.

இவர்களது பாணியிலேயே நாம் இதற்கு பதில் சொல்லலாம். ஏன், அல்லாஹ்வுக்கு  தனது அருளை பேச வைக்க முடியாதா?? அல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திற்கும் வர இயலும் என்று நம்புவது போல அல்லாஹ்வுக்கு தனது அருளை கூட பேச வைக்க முடியும், இப்படியும் நம்பலாம்.
இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? அல்லாஹ் தனது அருளை இறக்கினான் அருள் பேசியது, ஏனெனில் அல்லாஹ் நாடினால் எதுவும் நடக்கும் என்று இவர்கள் பாணியில் நாம் விளக்கம் கொடுப்பதற்கு எது தடையாக இருக்கும்??

இது முதல் விஷயம்.

இரண்டாவதாக, அல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திற்கும் வர இயலும், அது அல்லாஹ்வுக்கு சாத்தியம் தான் என்று நம்பலாம் என்று சொல்பவர்கள், அவர்களின் கட்டடங்களின் அடிப்புறத்தில் அல்லாஹ் வந்தான். என்று வரக்கூடிய வசனத்திற்கு மட்டும் (16:26) அல்லாஹ்வின் ஆற்றல் வந்தது என்று ஏன் பொருள் செய்ய வேண்டும்?? 

அர்ஷில் இருந்து கொண்டே கட்டிடங்களின் அடியில் அல்லாஹ்வால் வர இயலாதா??

நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். என்று வரக்கூடிய வசனத்திற்கு மட்டும் (57:4), அல்லாஹ்வின் கண்காணிப்பும் பாதுகாப்பும்   நம்மை சுற்றியிருக்கும் என்று ஏன் பொருள் செய்ய வேண்டும்??? அர்ஷில் இருந்து கொண்டே நம்முடன், நாம் செல்லக்கூடிய கடை வீதி, அலுவலகம், பேருந்து நிலையம் என எங்கு வேண்டுமானாலும் அல்லாஹ்வால் வர இயலுமே.. இப்படி இவர்கள் ஏன் புரிவதில்லை?

ஆக, தெளிவான சந்தர்ப்பவாதமே இவர்கள் வாதங்களில் வெளிப்படுகிறது. உண்மையை அறியும் ஆர்வமும் இவர்களுக்கு இல்லை, அதற்கான தகுதியையும் இவர்கள் வளர்க்கவில்லை என்பதற்கு இவை சான்று.

அர்ஷில் இருந்து கொண்டே கீழ் வானத்திலும் இருக்கலாம் என்று சொல்வது முரண்பட்ட நம்பிக்கையாகும் என்றாலும், அது நமக்கு தான் முரண், அல்லாஹ்வின் சிபத்தில் இது போன்ற முரண்பாடுகள் நமது கற்பனைக்கே எட்டா வண்ணம் முரணில்லாமல் கூட இருக்கும், ஆகவே இதை முரண் என்று நாம் சொல்ல கூடாது என்றும் இவர்கள் வாதம் வைக்கிறார்கள். 

இது தான் வாதம் என்றால், அல்லாஹ் வேறொரு வசனத்தில், நிராகரிப்பாளர்கள், ஊசியில் காதில் ஒட்டகம் நுழைகின்ற வரை சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்கிறான். 
இதன் சரியான பொருள், எந்த நிலையிலும் இவர்கள் சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்று அடித்துக்கூற கூடிய வசனம் இது என்று எவருமே சொல்வர். 

மேலே உள்ள கீழ் வானம் ஹதீஸுக்கு சப்பைக்கட்டு கட்டும் சலபிகளிடத்தில் இந்த இறை வசனத்திற்கு விளக்கம் கேட்டால், நிராகரிக்கின்றவர்களால் சுவர்க்கம் செல்ல முடியாது தான், ஆனால் இங்கே அல்லாஹ் ஊசியின் காதில் ஒட்டகம் நுழைகிற வரை என்று ஒரு நிபந்தனையை சொல்கிறான், இந்த நிபந்தனை இயற்கை நியதிப்படி முடியாது என்றாலும் அல்லாஹ்வின் சிபத்திற்கு இது நடத்திக்காட்டக்கூடிய ஓன்று தான், இது அல்லாஹ்வுக்கு சாத்தியம் தான் என்பதால், அல்லாஹ், ஊசியின் காது வழியாக ஒட்டகத்தை புக செய்து நிராகரிப்பாளர்களை சொர்க்கத்திற்கு கொண்டு செய்வான் என்று பொருள் செய்வார்களா??

சரி இந்த ஹதீஸுக்கு சரியான புரிதல் தான் என்ன??

அல்லாஹ்வின் அருள் மூன்றாம் இரவின் போது நம்மை நெருங்குகிறது என்பது தான் இதன் பொருள். அப்படியானால் என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்கள் இல்லையா? என்று அருள் பேசுமா?? என்று கேள்வி எழும். 

இங்கே தான் ஒரு நுணுக்கமான புரிதலை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஹதீஸில் இரண்டு செய்திகள் உள்ளன. 

ஒன்று, அல்லாஹ் கீழ் வானத்தில் இறங்குகிறான் என்கிற செய்தி. 
இரண்டு, என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்கள் உண்டா என்று அல்லாஹ் கேட்கிறான் என்கிற செய்தி. 

இரண்டையுமே அதன் நேரடி பொருளில் புரிந்தாலோ, ஏதேனும் ஒன்றை  அதன் நேரடி பொருளில் புரிந்தாலோ, இப்படி தான் சலபுகள் போல நுனிப்புல் மேய்ந்தவர்கலாக ஆவோம். 

உண்மையில் இந்த இரண்டு செய்திகளுமே உவமையான செய்திகள் தான்.

என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்கள் உண்டா என்று அல்லாஹ் கேட்கிறான் என்கிற செய்தியை அல்லாஹ்வே பேசினான் என்று புரிய இயலவே இயலாது. 
அல்லாஹ் பேசினான் என்றால் யாரிடம் பேசினான்??? தூங்கிக்கொண்டிருக்கும் நம்மிடமா?? அப்படியானால் அல்லாஹ் பேசினான், அல்லாஹ் இப்படி கேட்டான் என்று ஒவ்வொரு மூன்றாம் இரவிலும் நாம் உணர்கிறோமா? நம் காதுகளில் அல்லாஹ் பேசுவது விழுகிறதா? 
இல்லை. இறை தூதர்களிடம் தவிர மற்றவர்களிடம் அல்லாஹ் பேசுவதில்லை, அப்படியே ஒரு வாதத்திற்கு அல்லாஹ் மற்றவர்களிடமும் பேசுவான் என்று சொன்னாலும் இங்கே கேட்பவர் எவருமின்றி அல்லாஹ் பேசுவதாகவே பொருள் வருகிறது. கேட்பவர் எவருமின்றி அல்லாஹ் பேசினான் என்று சொல்வது அல்லாஹ்வை கேலி செய்வதாகும். அர்த்தமில்லாத ஒன்றை அல்லாஹ் சொல்ல மாட்டான்.

ஆக அல்லாஹ் இவ்வாறு கேட்டான் என்பதற்கு, அல்லாஹ் இவ்வாறு எதிர்பார்க்கிறான் என்று பொருள் செய்வதே எல்லா விதத்திலும் பொருத்தமுள்ளதாக உள்ளது, முந்தைய வசனத்திற்கு, அல்லாஹ்வின் அருள் நம்மை நெருங்கும் என்று அர்த்தம் வைக்க இது உதவிகரமாகவும் இருக்கும்.
அல்லாஹ் தமது அருளை ஒவ்வொரு மூன்றாம் இரவிலும் அதிகமான அளவிற்கு நம்மீது பொழிய செய்து, இந்த அருளை, உங்கள் பாவ மன்னிப்பின் மூலமும் துஆக்களின் மூலமும் தொழுகைகளின் மூலமும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். 
இப்படி புரிவது தான் சரி, என்பது கருத்து.

ஏதேனும் தவறுகள் இருக்குமேயானால் மாற்றுக்கருத்துடையவர்கள் சுட்டிக்காட்டலாம்.


திங்கள், 3 ஜூன், 2013

தஜ்ஜால், ஈசா நபி அற்புதங்களும் மறுக்கப்பட வேண்டிய ஹதீஸ்களா??



சூனியம் கண் திருஷ்டி போன்றவை அல்லாஹ்வுக்கு இணையான காரியங்கள் என்று கூறி மறுக்கும் நீங்கள் எப்படி தஜ்ஜால் சம்மந்தமான ஹதீஸை மட்டும் ஏற்றுக்கொள்வீர்கள்??


ஒரு குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விதத்தில் குறிப்பிட்ட காரியத்தை செய்வார் என்று மனித தன்மைக்கு அப்பாற்ப்பட்டதாக குர்ஆனோ ஹதீசோ ஒருவரை பற்றி கூறினால் அதை நம்பலாம், நம்ப வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அது அல்லாஹ்வுக்கு இணையானதில்லை.

குறிப்பிட்ட நேரத்திலும், குறிப்பிட்ட விதத்திலும் மட்டும் தான் அவரால் இதை செய்ய முடியும் என்கிற விதியே, அவர் அல்லாஹ்வின் தன்மையை கொண்டிருக்கவில்லை, மாறாக அல்லாஹ் தான் சோதனைக்காக இந்த ஆற்றலை அவருக்கு வழங்கியுள்ளான் என்கிற கருத்தை அழுத்தமாக புரிய வைக்கிறது,

சாமிரி என்பவன் மாட்டை போல ஒன்றை செய்கிறான், அது சத்தம் போடுகிறது என்று குர்ஆன் சொல்கிறது என்றால் அந்த நேரத்தில் அது மாடாக ஆனது, இன்னொரு சந்தர்ப்பத்தில் அது ஆகி இருக்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அது சத்தம் போடாது.

ஈசா நபி இறந்தவர்களில் சிலரை உயிர் கொடுத்து எழுப்பியதும் இதே நிலையில் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலவை பிளந்தார்கள் என்றால் அதுவும் இதே விதிக்கு உட்பட்டு தான்.

கியாமத் நாளுக்கு சமீபமாக தஜ்ஜால் சில அற்புதங்களை செய்து காட்டுவான் என்றால் அதையும் இதே அளவுகோலின் படி தான் நாம் புரிய வேண்டும்.

அதே சமயம், இவர்களுக்கு எல்லாம் இத்தகைய அற்புத சக்தியை அல்லாஹ் வழங்கி இருக்கிறான் என்பதை நம்புவதும், எந்த மனிதனாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும், உலகின் எந்த பாகமானாலும், எந்த காலகட்டமானாலும், எந்த மனிதரையும் எந்த வித புற சாதனமும் இன்றி வீழ்த்தி விடலாம் என்று நம்புவதும் மலைக்கும் மடுவுக்கும் இடையே இருக்கும் வேறுபாடாகும்.

இந்த அடிப்படை வேறுபாட்டை கூட நாம் புரியாமல் இருப்பதால் தான் பில்லி சூனியம் என்றும் மாய மந்திரம் என்றும் கண் திருஷ்டி என்றும் ஊரை ஏமாற்றி திரிகிறது ஒரு கூட்டம் !


இது தொடர்பாக மேலும் விரிவாக பின்னர் எழுதப்படும் இன்ஷா அல்லாஹ் !