ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

மரண தண்டனை சரியா? விவாதம் - ஜெய பிரகாஷ் 1



ஜெய பிரகாஷ்  17 february 2013


அன்பின் இம்ரான்

சட்டங்கள் மக்களை நல்வழிப்படுத்த அல்ல; என்றும் சட்டங்கள் மக்களை
நல்வழிப்படுத்தும் என்றும் அடுத்தடுத்த பத்திகளில் முரண்படும் உங்கள்
விவாதம் ஆச்சர்யப்பட வைக்கிறது. அரசு-நாடு-ஆட்சி-அரசாங்கம் என்பவற்றின்
தாத்பர்யம் மீதான உங்களின் முதிர்ச்சியின்மை மேலும் விவாதம்
செய்யத்தடையாக இருக்கும். நாடு சட்டம் இயற்றாது. அரசு தான் சட்டத்தை
இயற்றும். அரசு என்றால் மன்மோகன் தலைமையிலான அரசு போல. அரசாங்கம் என்பது
அரசின் அங்கம். அரசின் கொள்கை முடிவுகளை சட்டங்களை நிறைவேற்றி
பாதுகாக்கும் அரசின் துறைகள் நீதித்துறை போல. இது உங்கள் புரிதலுக்காக.

எந்த சட்டங்களும் மக்களை நல்வழிப்படுத்திவிட முடியாது. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பர்யமான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள
நாடுகளில் குற்றங்கள் குறைந்து விட்டனவா? குற்றங்களூக்கும் மேலாக மக்கள்
நல்வழியை அடைந்து விட்டார்களா? சட்டங்கள் மதிக்கப்பட வேண்டியவை. பயப்பட
வேண்டியன அல்ல. இஸ்லாமிய சட்டங்கள் அதீத குரூர தண்டனைகளை முன்வைத்து
மக்களை பயப்படுத்துகின்றன. ராணுவத்தில் தான் இத்தனை ஒழுங்கும்
கண்டிப்பும் தேவை. சிவில் சமூகத்தில் சுதந்திரம் வேண்டும். சுதந்திரம்
என்றால் கட்டற்ற காட்டுமிராண்டித்தனம் அல்ல. பொறூப்பை உணர்ந்த
அடுத்தவனுக்கு தொல்லை தராததே சுதந்திரம். அப்படியான சுதந்திரத்தை
பெயரளவேனும் பிற அரச சடங்கள் வழங்குகின்றன. சல்மான் ருஷ்டிக்கு ஃபத்வா.
தாலிபன்கள் மதக் காவலர்கள். இதுவா இஸ்லாமின் சமூக நீதி?

மனித உரிமைப்பாதுகாப்பு என்பது நம் இந்தியச்சூழலில் எனக்கு ஒரு
கெட்டவார்த்தை. மக்களை அரசிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயல்சக்திகளின்
சதிவேலைகளின் பங்காகவே நான் மனித உரிமை அரசுசார தொண்டு நிறுவனங்கள்
இவற்றை பார்க்கிறேன். மரணதண்டனிக்கு எதிரான என் வாதங்கள் மனிதநேயத்தின்
அடிப்படையில் தான். மேலாக ஒரு நாகரீக சமூகத்தை நாடும் எனக்கு அந்தச்
சமூகத்தில் மரணதண்டனை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் தேவையற்றவையாகத்
தோன்றுகின்றன.

கோவையில் சிறு பெண்ணை சீரழித்துக் கொலை செய்த மோகன்ராஜை மக்களின் அல்லது
அந்தக்குழந்தையின் சமூகத்தை திருப்திப்படுத்த சுட்டுக்கொன்றது போலீஸ்.
அப்போதும் நான் எதிர்த்தேன். மறுமடியும் சொல்கிறேன். தனிமனிதன் தப்பு
செய்தால் அது பலவீனம். அதையே அரசும் சட்டமும் செய்தால் அநீதி.

டெல்லி சம்பவம் பற்றி. இதுவரை எத்தனை பெண்களை அப்படிக்கொன்று
இருப்பார்கள்? எத்தனை தண்டனைகள்? இருந்தும் குற்றங்கள் குறைய வில்லை.
பூலான் தேவி அனுபவிக்காத கொடுமைகளா? அவர் திருப்பி கொடுத்ததை
பார்த்துமாவது திருந்தினார்களா? மாட்டார்கள். வெறும் பயம் மட்டுமே மனிதனை
குற்றத்தில் இருந்து விலக்கிவைக்காது. மனத்தெளிவும் நாகரீகமும் வளரும்
போதுதான் குற்றங்கள் குறையும். இவற்றை எந்த மரண தண்டனையும் ஏற்படுத்தி
விட முடியாது. அந்த 6 பேரை தூக்கிலிட்ட பின்பு டெல்லியிலோ வேறெங்குமோ
இப்படி நடக்காது என்று யார் உத்தரவாதம் தருவார்கள்? இதெல்லாம் வெறும்
ஆவேசப்பேச்சுக்கள். நிதானிப்பவன் இப்படி பேசமாட்டான்.

பாதிப்புக்கு உள்ளானால் மட்டும் தான் வலி தெரியும் என்று இம்ரான் நாசித்
எத்தனை பாதிப்புக்கு உள்ளாகி வலியை தெரிந்துள்ளீர்கள்? இதெல்லாம் விவாதம்
செய்ய சரியாக இருக்கும். உண்மை நிலை என்னவென்றால் பகுத்தறியும் எல்லா
மனிதனுக்கும் மற்றவனின் வலி கண்டிப்பாக தெரியும்.

குற்றவாளிக்கு பாதிக்கப்பட்ட குடும்பம் தண்டனை விதிக்கலாம்-விலக்கலாம்
என்பது இஸ்லாமிய சட்டத்தின் மேன்மையென சொல்கிற என் சகோதரர்களே அதுதான்
இஸ்லாமிய சட்டத்தின் ஆகப்பெரும் பலவீனம். சட்ட்டங்கள் எல்லாருக்கும்
பொதுவில் இருக்க வேண்டியவை. அது நெகிழும் தன்மையோடிருந்தால் அது
சட்டமல்ல. சம்பிரதாயம்.

சட்டங்களின் கடுமை-நாகரீக சமூகம் குறித்து.
பொது இடத்தில் சிறிநீர் கழிக்காமல் இருப்பது; நாலு பேர் இருக்கிற
இடத்தில் எச்சில் துப்பாமல் இருப்பது; பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணம்
செய்வது இப்படி சமூகத்துக்கான நாகரீகம் இருக்கிறது. இதை மீறுபவர்களுக்கு
சட்டமும் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் குறைய வேண்டுமானால் சட்டம் மட்டும்
போதாது. நாகரீகம் வளர வேண்டும். இதே போலத்தான் பிற பெரிய குற்றங்களும்;
கற்பழிக்காமல் இருப்பது ஒரு சமூக மனிதனின் அடிப்படைக்கடமை. அதை விடுத்து
அவ்வாறு செய்பவன் சமூகத்தின் வியாதி. அத்ற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல.
காலங்காலமாக ஆணாதிக்கத்தை போற்றி வரும் ஒரு சமூகத்தின் வெளிப்பாடே அந்தக்
காமவெறியன்.

அந்த 10 மிருகங்களை அழித்தால் நாட்டில் கோடி மக்கள் நிம்மதியாக
இருப்பார்கள் என்கிற உங்கள் கருத்தையே வேறு வரிகளில் சமூகத்தின்
மனசாட்சியை திருப்திப்படுத்த  என்று சொல்லி அஃப்சல் குருவை
தூக்கிலேற்றிவிட்டார்கள். அஃப்சல் குரு அஜ்மல் கஸாப், பேரறிவாளன் அவ்வளவு
ஏன் ராஜபக்‌ஷே உட்பட யாரும் அரசால் கொல்லப்படக்கூடாது. சண்டையில்
சாவதற்கும் ஒரு சமூகத்தால் சாவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

குண்டு வைத்தால் தடா பொடா தேசியப்பாதுகாப்பு சட்டம் துக்குதண்டனை என்று
எத்தனையோ மிரட்டும் அங்கங்கள் இருந்தும் குண்டுகள் வெடிப்பது
குறைந்துள்ளதா? இஸ்லாமிய சட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில்
உள்ள இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புகள் நடப்பதிலையா? பயத்தை விதைப்பதால்
நீங்கள் ஒன்றையும் அறுவடை செய்து விட முடியாது.

குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பதைக் கண்டறிந்து காரணிகளை சரி செய்யாமல்
குற்றம் செய்தவனைக் கொண்று விட்டால் அந்தக் குற்றத்தை அங்கீகரித்தது
போலாகும். எதனால் குற்றம் நடந்தது, மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும் என்று யோசிப்பதுதான் அறிவு.

உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி உள்ளேன். வாழ்த்துக்கள்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மரண தண்டனை சரியா? விவாதம் - இம்ரான் 1


அஸ்ஸலாமு அலைக்கும் 


முகநூல் வழியாக இஸ்லாத்தை பல்வேறு வழிகளில் விமர்சித்து வரும் டாக்டர். ஜெயப்ரகாஷ் என்பவரை நாம் இது தொடர்பாக முழுமையான முறையில் விவாதம் செய்ய அழைப்பு விடுத்தோம். அவரோடு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை இந்த இணைப்பில் காணலாம். 


ஒரு சில தலைப்புகளில் பேச முடியாது என்று அவர் மறுத்து விட்ட நிலையில், அவர் முதலில் பேசுவதற்கு ஒப்புக்கொண்ட தலைப்பான மரண தண்டனை சரியா? என்கிற விவாதம் துவக்கப்பட்டுள்ளது.

நம் தரப்பில் சகோ இம்ரான் ஷெரிப் அவர்கள் வாதங்கள் வைக்கிறார். எதிர் தரப்பில் டாக்டர். ஜெயப்ரகாஷ் எழுதுகிறார்.

சகோ. இம்ரான் ஷெரிபின் முதல் பதிவை கீழே பார்க்கலாம்.


----------------------------------------------------------------------------------------------------



 Imran Sheriff  15 February 2013 16:23




 ஐந்து வாய்ப்புகள் கொண்ட இந்த விவாதத்தில் இது எனது முதல் வாய்ப்பு.  

அன்பு சகோதரர் ஜெயப்ரகாஷ் அவர்களுக்கு, இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும். 
மரண தண்டனை சரியா தவறா என்பதை பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு அடிப்படையை நாம் மனதில் கொள்ள வேண்டும். எந்த நாட்டினுடைய சட்டமானாலும் அதன் முதல் நோக்கம் மக்களை நல்வழிப்படுதுவதல்ல !!! எந்த காலகட்டத்திலும் எந்த நாட்டிலும் இது இரண்டாம் பட்சம் தான். நல்வழிபடுதுவதற்கு அது ஒரு சித்தாந்தத்தையோ மத போதனைகளையோ செய்யும் கேந்திரமல்ல, மாறாக மக்களை ஆட்சி செய்யும் நாடு. மக்களை ஆட்சி செய்யும் நாட்டில் சட்டம் இயற்றும் போது மக்களிடையே குற்றங்கள் குறைவதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், கொடுக்கிறார்கள்.. 
குற்றங்களை குறைப்பதற்கு அவர்கள் இடும் சட்டமானது, மக்களை நல்வழிப்படுத்தத்தான் செய்யும். இது தான் அடிப்படை. 
 இஸ்லாம் சொல்லும் சட்டமானது, குற்றங்களை  குறைக்க உதவுகிறது. இஸ்லாமிய சட்டங்களை எதிர்க்கும் இன்னபிற சட்டங்களானது குற்றங்களை குறைக்க உதவவில்லை என்கிற சாதாரண உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தும் இது போன்ற விவாதத்திற்கு நீங்கள் வந்திருப்பதே ஆச்சர்யமான ஓன்று. 
 அடுத்து, மரண தண்டனை அல்லது தூக்கு தண்டனை என்பது காட்டுமிராண்டிதனமானது என்பது உங்கள் கருத்து என்றால், அது போல ஒரு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கொடுப்பதும் காட்டுமிராண்டி தனமானது என்று இன்னொருவர் வாதம் வைக்கலாம். 
 என்னப்பா !!! ஒரு கொலையை செய்தான் என்பதற்காக அவனை அவனது வாழ்நாள் முழுவதும் தனி சிறையில் அடைப்பது என்பது மனித உரிமை மீறல் இல்லையா?? என்று ஒருவர் கேட்கலாம். 
 ஒரு குற்றத்தை ஒருவன் செய்தான் என்பதற்காக ஆறு மாதம் சிறையில் அடைப்பதை கூட ஒருவர் விமர்சனம் செய்வார். அதுவும் மனித உரிமைக்கு அப்பாற்பட்டது என்று வாதம் வைப்பார். ஒரு பிக்பாகட் அடித்தான் என்பதற்காக அவனுக்கு 15 நாள் காவலா?? இது மனித உரிமைக்கு விடப்பட்ட சவால் இல்லையா?? என்று வேறொருவர் கேட்பார்.
 அதாவது, மரண தண்டனை விதிப்பது தான் காட்டுமிராண்டித்தனமானது, அதை விடுத்த வேறெந்த தண்டனையும் காட்டு மிராண்டிதனமானது இல்லை என்று வாதம் வைப்பவர்கள் அதை தர்கா ரீதியாக நிரூபிப்பதாக இருந்தால் மேற்கண்ட கேள்விகள் எழத்தான் செய்யும்.

மேலும், கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களால் பாதிப்பிற்கு  உள்ளானவர்  ஒரு புறம் இருக்க ,இது போன்ற குற்றச்செயல்கள் நிகழ்வது ஒரு சமுதாயத்தில் வாழும் அனைத்து மனிதர்களையும் எப்போதும் நிம்மதியற்ற, பாதுகாப்பற்ற அச்ச நிலைக்கு வழி வகுக்கும் 

உதாரனத்திற்க்கு டெல்லியில் நடந்த அந்த கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தை எடுத்து கொள்ளுங்கள்,அந்த பெண் இரவில் தன் ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதும் அப்பெண் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம்
 இந்த சம்பவத்தில் 6 நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை சித்ரவதை செய்து கற்பழித்துள்ளனர், அந்த பெண் துடித்து கொண்டு இருந்த வேலையில் நீங்களோ நானோ இல்லை, அந்த பெண் மாத்திரம் தான் இருந்துள்ளார், அந்த பெண்ணை கற்பழிக்கும் பொழுது அவள் எத்துனை முறை கதறி இருப்பால், எதிர்த்து போரிட்டிருப்பால் ஆனால் அந்த மனித மிருகங்கள் ஒன்று அல்ல 6 பேரும் சேர்ந்து கற்பழித்துக் குடலை உருவிக் கொன்றுள்ளனர். இப்படிப்பட்ட மனித மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று கூறுவது எந்த விதத்திலும் நீங்கள் கூறியது போல அடிபடைவாதமோ, காட்டுமிராண்டித்தனமோ கிடையாது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவேளை உயிர் பிழைத்திருந்து கயவர்களை தூக்கிலிடுங்கள் என்று அந்த பெண்ணே உரிமை கூறினாலும் தாங்கள் அவளை நோக்கி, "என்னம்மா காடுமிராண்டிதனமா சட்டம் சொல்றன்னு" நீங்கள் அந்த பெண்ணை நோக்கி கூறுவது எந்த அளவிற்கு பகுத்தறிவு (?) வாய்ந்தது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பாதிப்பிற்கு உள்ளான பெண்ணிற்கும் அவள் தாய் தந்தை மற்றும் குடும்பதினர்க்கே அந்த வலி தெரியும் ,கருத்து சொல்லும் நீங்களோ ஏன் என்னாலோ கூட முழுமையாக அனுபவிக்க முடியாது .
ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல,குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?)உரிமைப் போராளியாக, இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று கூறும் உங்கள் கருத்து அதிர்ச்சியை தான் தருகிறது .. 
சரி இவ்வளவு வேண்டாம், தாங்கள் பெரும் அளவிற்கு வன்மையாக கண்டித்த இலங்கையில் நடந்த அந்த கொடூர கொலைகள் , மனிதநேயமற்ற அந்த காட்டுமிராண்டிதனத்தை செய்த இராஜபக்க்ஷேவை தூக்கிலிட்டால் அது மனித உரிமை மீறல், அப்படி தானே?அதாவது பாதிக்கபட்டவன், பாதிப்பு அரங்கேறி விட்டது இப்போ என்ன செய்ய? , பாதிப்புக்கு உள்ளாகியவன் உயிருடன் உள்ளான், இவனை எப்படி தூக்கு தண்டனையில் இருந்து காப்பற்றலாம் ? என கூறுவது எந்த பகுத்தறிவோ?
திரு .ஜெயபிரகாஷ் அவர்களே : பாதிப்புக்கு உள்ளானால் தான் அந்த வலி தெரியும் ..
இங்கு மற்று ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும், இவை போன்ற கொடூர செயல்கள் செய்திருப்பவரை கொன்றே ஆக வேண்டும் என்று இஸ்லாமிய சட்டம் கூரவி ல்லை, அந்த பாதிக்கப்பட்ட குடும்பம் , மன்னித்தால் அந்த குற்றம் புரிந்தவரை மன்னித்து விட முடியும் .
இங்கு பாதிபிர்க்கு உள்ளானவர்களிடம் தண்டிபதர்க்கான உரிமை வழங்க பட்டுள்ளது, இவர் தான் முடிவெடுக்க வேண்டியவர்கள் , நீகளோ நானோ அல்லது நாட்டின் ஜனாதிபதியோ அல்ல .
சட்டங்கள் கடுமையாக ஒரு சமுகத்தை பாதுகாப்பான நிம்மதியான வாழ்விற்கே வழிவகுக்குமே தவிர அது" சட்டங்கள் கடுமையாக இருந்தால் அந்த சமுதாயம் நாகரீகமடையவில்லை என்றுதான் அர்த்தம்" என்ற தங்கள் கருத்து எப்படி விளங்கி கொள்வது என்றே புரியவில்லை .
கொலை கற்பழிப்பு போன்ற குற்றம் செய்த மனித மிருகங்களை தண்டிக்க மரண தண்டனை விதிப்பது எந்த விதத்திலும் தவறு கிடையாது .
குற்றவாளியை மென்மையாக பாவிக்கும் பார்வை , இது அறிவு முதிர்ச்சியில்ல .
ஒரு கோடி மனிதர்கள் நிம்மதியாக வாழ, 10 மனித மிருகங்களை தூக்கிலிடுவது எந்த வகையிலும் காட்டுமிராண்டி தனம் கிடையவே கிடையாது .
இவ்வாறு சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் தனி மனிதன் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் .
தாங்கள் கூறிய "சட்டங்கள் பயப்பட அல்ல. மனிதன் பண்பட." என்பது கவிதை நடைக்கு அழகாக உள்ளதே தவிர நிஜ வாழ்விற்கு பொருந்தாத வரிகள் அவை .
மனிதம் பாதுகாப்பாக இருக்கவும், பயன்பெறவும், மனித தோல் போர்த்தி உலா வரும் மிருகங்களின் உள்ளத்தில் பயம் இருக்க வேண்டியது என்பது ஒரு தேவை என்று நான் கூறவில்லை, அது கட்டாயம் என்று கூறுகிறேன்.
தூக்கு தண்டனை என்பது மனிததை மிருக இனத்திடமிருந்து காபற்றுமே தவிர அழிக்காது.

உங்களது முதல் வாய்ப்பின் போது மேலே நான் எழுப்பியுள்ள எல்லா கேள்விகளுக்கும் பதில்களை தந்து உங்கள் கருத்தை நிலைநாட்டவும்.

புதன், 13 பிப்ரவரி, 2013

மாற்று மத அன்பருக்கு ஒரு அழைப்பு





அஸ்ஸலாமு அலைக்கும் 

முகநூலில் இஸ்லாத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் விமர்சனம் செய்து எழுதி வருபவர்களில் ஒருவரான டாக்டர்.ஜெயப்ரகாஷ் என்பவர் பல இடங்களில் நமக்கு எதிரான விமர்சனங்களை பதிந்து வந்தார். 

சகோ. இம்ரான் ஷெரிப் சுட்டிக்காட்டியதன் பேரில், அனைத்தையும் ஒரே தளத்தில் பேசுவதற்கு ஏதுவாக எழுத்து மூலம் கலந்துரையாட முன் வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


இரு தரப்பிலும் செய்யப்படும் கலந்துரையாடல்கள் கீழே பதியப்பட்டு வருகின்றன.






நாஷித் அஹமத் 



அன்பு சகோதரர் ஜெயப்ரகாஷ் அவர்களுக்கு, இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும்.

முகநூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கருத்துக்களை நீங்கள் இடுவதும் அதற்கு நாம் சில பதில்களை சொல்கிற போது வேறு ஏதேனும் கருத்துக்கள் வேறு சிலரால் பதியப்படுவதன் காரணமாக தலைப்பு திசை மாறி சென்று விடுவதும் நமது நோக்கங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல தடையாக உள்ளன. அசில நரங்களில் பதியப்படும் பதிவுகள் நம்மால் கவனிக்கப்படாமல் செல்வதாலும் பதில்கள் தர இயலாமல் போகின்றன.

கருத்து பரிமாற்றம் சமமாக நடத்தப்பட முகநூலை விட மின்னஞ்சல் மூலமாக இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்று சில முன் அனுபவங்கள் மூலம் நாம் உணர்வதால் அத்தகைய வழியில் நமது கருத்து பரிமாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
விவாதம் முடிந்த பிறகு அதை பொதுவில் எங்கும் அனுப்பி விடுவதற்கோ, இணையதளங்களில் இடுவதற்கோ நமக்கு ஆட்சேபனை கிடையாது. அதன் மூலம் பலருக்கும் நம் கருத்துப் பரிமாற்றம் சென்றடையும்.

உங்கள் புறத்தில் நீங்கள் 4 தலைப்புகளை குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை நான் கவனித்தேன்.

அந்த தலைப்புகளை வெறும் கேள்விகளாக வைத்துள்ளீர்கள். அதை சற்று மாற்றி, இந்த விஷயத்தில் இது எனது நிலை, ஆனால் முஸ்லிம்களாகிய நீங்களோ இப்படி சொல்கிறீர்கள் இது தவறு ! என்று வாதமாக வைத்தால் அது விவாதப்பொருளாக மாற்றம் பெறும்.

உதாரணத்திற்கு, புத்தர் சிலையை இஸ்லாம் உடைக்க சொல்கிறதா? தலிபான்களுக்கு பத்வா வேலை செய்யாதா? என்று கேள்வியாக கேட்பதற்கு பதிலாக, தாலிபான்கள் புத்தர் சிலைகளை உடைத்தார்கள் அது தவறு என்பது எனது நிலை, தாலிபான்கள் பத்வாக்களை அடிப்படையாக கொள்ளாமல் செயல்படுகிறார்கள் இதை மறுக்கும் முஸ்லிம்களாகிய உங்களுடன் விவாதிக்க வேண்டும்..

இப்படி வாதமாக வையுங்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள 4 விஷயங்களையும் மேலே உள்ளது போன்று திருத்தி வெளியிட்டால் அந்த நான்கை குறித்தும் விரிவாக கலந்துரையாடல் அல்லது விவாதம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்த 4 அல்லாத வேறு சில தலைப்புகளையும் நான் முன் வைக்கிறேன் நீங்கள் உடன்படும் பட்சத்தில் அவற்றையும் விவாதப்பொருள் ஆக ஆக்கி கொள்ளலாம்.

  • தூக்கு தண்டனை கூடாது என்கிற உங்கள் நிலை தவறு. இது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
  • ரிசானா தூக்கிலிடப்பட்டது தவறு என்கிற உங்கள் நிலை பற்றி விவாதிக்க வேண்டும்.
  • விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பது தவறு என்கிற நிலையில் நீங்கள் இருந்தால் அது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
  • பெண்ணுரிமை புர்காஹ் பற்றி உங்களுக்கு இஸ்லாத்தில் மாற்றுக்கருத்து இருந்தால் அது பற்றி விவாதிக்க வேண்டும்.
  • ஹிந்து மதம் அது சொல்லும் கடவுள் கொள்கை, இஸ்லாமிய மதம் , அது சொல்லும் கடவுள் கொள்கை, இது பற்றியும் விவாதிக்கலாம்.

மேற்கண்ட அனைத்து தலைப்புகளையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு தலைப்புக்கும் குறைந்த பட்சம் தலா 5 வாய்ப்புகள் தேவை. 

அதாவது, நான் எனது முதல் பதிவை மின்னஞ்சல் மூலம் அனுப்பினால், அது கிடைத்து 24 மணி நேரத்தில் நீங்கள் உங்கள் முதல் பதிவை மின்னஞ்சல் செய்ய வேண்டும். இப்படியாக இருவருக்கும் 5 வாய்ப்புகள் என்றால் 10 நாட்களில் ஒரு தலைப்பு முடியும்..
ஒரே விவாதத்தில் இரண்டு தலைப்புகள் கூட வைத்துக்கொள்ளலாம். 

நாளை மாலை (அதாவது புதன்) ஆறு மணிக்கு பதில் தருவதாக நீங்கள் சொல்லியுள்ளதால் இந்த மின்னஞ்சலுக்கான பதிலை அப்போது எதிர்பார்க்கிறேன். 
தொடர்ந்து, என்றைக்கு விவாதத்தை ஆரம்பிப்பது, ஒரு வாய்ப்பு என்றால் என்ன அளவு, இரு தரப்பிலும் வேறு யாரேனும் உள்ளார்களா? என்பதையெல்லாம் பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

மேலே சொல்லப்பட்டதில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் அதையும் நீங்கள் தெரிவிக்கலாம். 
இது அல்லாத வேறு ஏதேனும் தலைப்புகளில் உங்களுக்கு எங்களிடம் மாற்றுக்கருத்து இருந்தால் அதையும் தெரிவிக்கவும்.

மின்னஞ்சலை விட முகநூல் தான் உங்களுக்கு இயலும் என்றால் அதை காரணம் காட்டி நாம் விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டாம் என்பதையும் நான் உங்கள் கவனத்திற்கு தருகிறேன்.

கருத்துப்பரிமாற்றங்களும் விவாதங்களும் சகோதரத்துவத்தை அதிகரிக்கவே செய்ய வேண்டும் என்பதில் என்றைக்கும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------



Mani Jayaprakashvel



உங்களது சார்பில் முன்வைக்கப்பட்ட விவாதங்களைப்பற்றிய என் ஒப்புதல் நிலைப்பாடு.
  • தூக்கு தண்டனை கூடாது என்கிற உங்கள் நிலை தவறு. இது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
கண்டிப்பாக இதை விவாதிக்கலாம்.
  • ரிசானா தூக்கிலிடப்பட்டது தவறு என்கிற உங்கள் நிலை பற்றி விவாதிக்க வேண்டும்.
தனிப்பட்ட விவாதம் இதற்கு தேவை இல்லை. மேலுள்ள முதல் விவாதப் பொருளின் உள்ளேயே இதையும் பொதுவாக்கி விவாதிப்போம்.
  • விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பது தவறு என்கிற நிலையில் நீங்கள் இருந்தால் அது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
இது தேவை அல்ல. எதிர்ப்பதை தவறு என்று நான் சொல்லவில்லை. எதிர்க்கும் வழிமுறையத்தான் விமர்சித்தேன்.
  • பெண்ணுரிமை புர்காஹ் பற்றி உங்களுக்கு இஸ்லாத்தில் மாற்றுக்கருத்து இருந்தால் அது பற்றி விவாதிக்க வேண்டும்.
இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கைகள் உண்டு. அது மிக நீண்ட விவாதமாக போகும். இதை விவாதைக்க அருகதை அற்றதாக நான் என்னுகிறேன்.
  • ஹிந்து மதம் அது சொல்லும் கடவுள் கொள்கை, இஸ்லாமிய மதம் , அது சொல்லும் கடவுள் கொள்கை, இது பற்றியும் விவாதிக்கலாம்
இதுவும் தேவை இல்லை. ஏனெனில் நான் எந்த மதத்தினையும் ஆதரிப்பதில்லை. எல்லா மதங்களும் கற்பிதமான கதைகளின் அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்டவை என்பது என் மாறாத கருத்து. அறிவியலுக்கு புறம்பான கதைகளைக் கொண்ட கடவுள் என்ற கற்பிதத்தை நான் விவாதிக்க விரும்பவில்லை.

நான் விவாதிக்க விரும்புபவை

1. 1. இஸ்லாம் சினிமா முதலான கேளிக்கைகளை விலக்கி வைக்கிறது. இரானில் அரபு நாடுகளில் பொழுதுபோக்கு அரசியல் சினிமாவே இல்லை. மஜீத் மஜீதி போன்ற உன்னத கலைஞர்கள் குழந்தைப்படங்களில் தம் கலையுன்னதங்களை படைத்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இந்த ”இஸ்லாமிய அறிஞர்கள்” என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள்? கேளிக்கைகளை இஸ்லாம் விலக்க வேண்டியதில்லை. அரசியல் பட்ங்களை இஸ்லாமிய நாடுகளில் அனுமதிப்பதில்லை. இதெல்லாம் தவறு என்கிறேன். நீங்கள் சரி என்ற கருத்தில் இருந்தால் விவாதிப்போம்

2. இஸ்லாமிய மார்க்கவாதிகள் பலருக்கும் ஃபத்வா விதிக்கிறார்கள். மிகவும் அராஜகமான வகையில் பாமியானில் புத்தை சிலைகளை உடைப்பது, பெண்ண் கல்வியை நசுக்குவது, பிணைக் கைதிகளை  கொடூரமாக தலையை வெட்டிக் கொல்வது போன்றவற்றை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இந்தக் கொடுமைக்கெல்லாம் ஃபத்வா பிறப்பிக்க மாட்டார்களா? இதை அவர்கள் கண்டிக்காதது இஸ்லாம் ஒரு ப்ழமைவாத ராணுவ மார்க்கம் என்பதை சுட்டுகிறது என்பது என் கருத்து. மாற்றுக் கருத்து இருக்குமானால் விவாதிப்போம். 

3. எதிராளி தப்பு செய்தால் அவனை நாகரீக வரம்புக்கு கீழே வந்தும் தாக்கலாம் என்பது தப்பு. (கமல்-மகள் விவகாரம்). எந்த நிலைமையிலும் சான்றான்மை தவறுதல் கூடாது. இஸ்லாம் அத்தகைய நாகரீகத்தை போதிக்கவில்லை. மாற்றுக் கருத்து இருந்தால் பேசுவோம்.

எனது மற்ற ஒரு கேள்வி மேலுள்ள விவாதபொருளில் அடங்குவதால் இதோடு நான் நிற்கிறேன். 

24 மணி நேரம் என்ற கட்டாய வரையறை சற்று கடினம். எனக்கு வேறு வேலைகளும் உள்ளன. பல தளங்களிலும் மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளேன். எனக்கு நேர்மையுணர்ச்சி அதிகம். கூடுமானவரை விரைவில் பதில் சொல்வேன். கட்டாயப்படுத்திக் கொள்ள முடியாது. அது பெரும் நெருக்கடி. அப்படி நெருக்கடியில் விவாதிக்க நான் விரும்பவில்லை. உங்கள் நிலைப்பாட்டை கொஞ்சம் தளர்த்தினால் பேசலாம்.


என் தரப்பில் வேறு யாரையும் சேர்த்துக்கொள்ள எனக்கு விருப்பமும் அவசியமும் இல்லை.

குறைந்தது ஒன்று அல்லது இரண்டை மட்டும் எடுத்து விவாதிப்போம். எந்த ஒன்று அல்லது இரண்டு என்பதை உங்கள் பொறுப்பில் விடுகிறேன். எதுவானாலும் எனக்கு சம்மதம். வாழ்த்துக்கள்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நாஷித் அஹமத்




அஸ்ஸலாமு அலைக்கும் 

முதல் தலைப்பு

பொத்தாம் பொதுவாக சினிமாவை இஸ்லாம் எதிர்க்கிறது என்று சொல்ல முடியாது. ஆபாசங்கள் ஏதும் இன்றி பெண்களை கூட இஸ்லாம் சொல்லக்கூடிய ஆடை (அதாவது முகம் மற்றும் முன்னங்கை தெரியும் வகையில் ) மற்றும் இதர கட்டுபாட்டுடன்(இசை,  ஆடல் பாடல் கூத்து கும்மாளம், மற்றும்  பெண்களை ஆண்கள் ரசிக்கும் வண்ணம் சித்தரித்தல் போன்றவைகள் இல்லாமல் ) காட்டப்படும் சினிமாக்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை என்பது தான் எங்கள் நிலை.
அந்த அடிப்படையை மீறக்கூடிய திரைப்படங்கள் என்றால் இஸ்லாம் ஆதரிக்காது, அது இரானிய படமாக இருந்தாலும் சரி, இந்திய படங்கள் என்றாலும் சரி.
இதில் விவாதப்பொருள் ஏதும் இல்லை என்று நினைக்கிறோம். மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லவும்.

இரண்டாம் தலைப்பு :


தூக்கு தண்டனையே கூடாது என்கிற நிலை தவறு. விவாதம் செய்யலாம்.

மூன்றாம் தலைப்பு :

இஸ்லாம் ஒரு பழமை வாய்ந்த ராணுவ மார்க்கம் என்கிற உங்கள் கருத்து தவறு. விவாதிக்கலாம்.


நான்காம் தலைப்பு (உங்கள் கருத்தை இரண்டு தலைப்பாக பிரிக்கிறோம்)


 விஸ்வரூபத்திற்கு பதிலடியாக கமல் - சுருதி உறவை பற்றி பேசியது தவறா இல்லையா? தவறில்லை என்பது எங்கள் நிலை. விவாதிக்கலாம்.

ஐந்தாம் தலைப்பு

இஸ்லாம் நாகரீகத்தை போதிக்கவில்லை என்கிற உங்கள் கூற்று தவறு - விவாதிக்கலாம்.


ஆறாம் தலைப்பு :

விஸ்வரூபம் படத்தை எதிர்த்த வழிமுறையை விமர்சிப்பதாக சொன்னீர்கள். எதிர்த்த வழிமுறையில் எந்த தவறும் இல்லை என்பது எங்கள் நிலை - விவாதிக்கலாம்.


ஏழாம் தலைப்பு :

புர்கா பற்றி பேசலாமா? என்று கேட்டதற்கு அது ஒரு மூட நம்பிக்கை என்பதாக கருத்து தெரிவித்துள்ளீர்கள். புர்காஹ் அணியாதவர்கள் அல்லது அணிய தேவையில்லை என்று சொல்பவர்கள் பிற்போக்குவாதிகள் என்பதும் அணிய வேண்டும் என்கிற நிலையில் இருப்பவர்கள் தான் மூட நம்பிக்கைகளை விட்டும் அப்பாற்பட்ட முற்போக்குவாதிகள் என்பதும் எங்கள் நிலை. உங்கள் கருத்து முற்றிலும் தவறு - விவாதிக்கலாம்.


எட்டாம் தலைப்பு :

இஸ்லாம் சொல்லும் கடவுள் நம்பிக்கை பற்றி விவாதிக்க அழைத்ததற்கு பதில் சொன்ன நீங்கள்,, அறிவியலுக்கு புறம்பானது தான் கடவள் நம்பிக்கை என்பதாக சொல்லியிருந்தீர்கள். இது தவறான கருத்து என்பதும், இஸ்லாம் அறிவியலுக்கு உகந்த மார்க்கம் என்பதும் எங்கள் நிலை - விவாதிக்கலாம்.


விவாதம் சீரான வகையில் செல்வதற்கு சில நிபந்தனைகள் :

  1. மேற்கண்ட எட்டு தலைப்புகளை இரண்டிரண்டாக இணைத்து விவாதிக்கலாம்..
  2. ஒவ்வொரு விவாதத்திற்கும் தலா ஐந்து வாய்ப்புகள். அதாவது, நீங்கள் ஒரு மெயில் இட, அடுத்து நாங்கள் ஒரு மெயில் இடும் போது இருவருக்கும் ஒரு வாய்ப்பு நிறைவு பெறும்)
  3. ஒவ்வொரு மெயிலும் அதிக பட்சம்  75 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (உதாரணத்திற்கு மேலே நான் முதலில் எழுதிய மெயில் கிட்டத்தட்ட  50 வரிகளை கொண்டது, நீங்கள் எழுதியது கிட்டத்தட்ட  40 வரிகளை கொண்டது)
  4. வேறு இணையதளங்களின் லிங்குகளை பதியக்கூடாது.
  5. நீங்கள் ஒரு மெயிலை எழுதி  24 மணி நேரத்திற்குள் அடுத்த மெயிலை நான் எழுத வேண்டும். (24 மணி நேரம் குறைவு என்றால்  48 ஆக்கி கொள்ளலாம்)
  6. வார்த்தைகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தனி நபர் விமர்சனங்கள் இருக்க கூடாது.



விவாதத்தை நீங்கள் துவக்குகிறீர்களா அல்லது நாங்கள் துவக்கவா என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறோம்.
யார் துவங்குவது என்பதை பொறுத்து எந்த தலைப்பை முதலில் எடுத்துகொள்வது என்பதை தீர்மானிக்கலாம்.
வெள்ளிக்கிழமை  முதல் துவங்கலாம்.

உங்கள் இறுதி பதிலுக்காக காத்திருக்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Mani Jayaprakashvel


நாஷித் 
48 மணி நேரங்கள் என்று வைத்துக்கொள்வோம். நிறைய கண்டிப்புகள் அயற்சியைத்தருகின்றன. என்றாலும் விவாதிப்போம். ஏழு எட்டு என்ற விவாதப் பொருட்களில் எனக்கு விவாதிக்க எதுவும் இல்லை. அதை விவாதிப்பது நேர விரயம் என்றே கருதுகிறேன்.விவாதத்தை இயல்பாக கொண்டு செல்ல இரண்டாம் மற்றும் நான்காம் பொருட்களை முதலில் எடுத்துக்கொள்வோம். நீங்களே ஆரம்பியுங்கள். நான் எனது பதிலை சனிக்கிழமை வைக்கிறேன். நாளை எனக்கு நேரம் ஒதுக்குவது சிரமம். வாழ்த்துக்கள்









சங்கை ரித்வானும் "புறம்" நாடகமும்








அஸ்ஸலாமு அலைக்கும் 

அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மண்டல தலைவரை பற்றி இவர் வைத்துள்ள விமர்சனங்களை பற்றி சில விளக்கங்கள்.

சங்கை ரித்வான் என்கிற இவர், தமது முகநூல் பக்கத்தில் எழுப்பி வரும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன், 
முதலில் இவர் முகமத் ஷேக் செய்ததாக கூறுவது என்ன என்று பார்க்கையில், ஷேக் எழுதியதாக இவர் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட ஒரு செய்தி என்பதை புரியலாம்.

ரித்வானின் எழுத்துக்களை நியாயப்படுத்தி கமண்டுகள் இடுகிறவர்கள், பிரச்சனைகளை உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதற்கு முன், தர்க ரீதியில், சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த ஆள் ஏன் இப்படி பண்ணுகிறார்?
கண் பரிசோதனைக்கு ஒரு இணையதளம் இருக்கிறது அப்படின்னு ஒரு தகவல் கொடுக்க ஏன் இவ்வளவு பெரிய விளம்பரம்? ஒன்னுமே புரியவில்லை.. 

என்பது தான் ஷேக் எழுதியது. இவர் எழுதியது தவறா, என்பதை பற்றி பேசுவதற்கு முன், இவர் இதை எழுதியதற்கு தகுந்த மறுப்பை தான் ரித்வான் எழுதியுள்ளாரா? அல்லது மிகைப்படுத்தி இவரை விமர்சனம் செய்துள்ளாரா? என்பதை ஒவ்வொரும் சிந்தியுங்கள்.

ஷேக் புறம் பேசியுள்ளார் என்பதாக இவர் வைக்கும் குற்றச்சாட்டை அடுத்து விளக்குகிறேன். அதற்கு முன், 

புறம் பேசினார் என்பது தான் அவர் மீதான ரித்வானின் ஒரே குற்றச்சாட்டு என்றால் விமர்சனம் செய்கிற போது அதையல்லவா முதலில் எடுத்து சொல்லியிருக்க வேண்டும்?? ஷேக் செய்ததில் எது தவறு என்று இவர் நினைக்கிறாரோ, அதை சொல்லி விமர்சனங்களை வைத்திருந்தால் 
நியாயத்திற்காக நிற்பவராக இவரை கருதியிருக்கலாம். 

ஆனால் ஷேக் Facebook TNTJ வில் வைத்த விமர்சனத்திற்கு பதில் தரப்போவதாக சொல்லி எழுதியவர்,

நான் விளம்பர பிரியர் என்று எனது உள்ளதை அவர் அறிந்தாரா?
எனது பக்கத்தில் உள்ள நல்ல விஷயங்களை அவர என்றைக்காவது பாராட்டினாரா?
என்னை பற்றி பேச இவர் என்ன எனது தந்தையா அல்லது சகோதரனா?

என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, அதிகமாக கேள்விகள் எழுப்பி விமர்சனம் வைத்து விட்ட ஒரு தோரணையை காட்ட முயற்சிக்கிறார். 

இவர் கேள்விகளை இவர் பக்கமே நாம் திருப்பி கேட்கிறோம்.

1. ஆயிரக்கணக்கான நல்ல விஷயங்களை ஒருவர் செய்தால் அவர் செய்யும் தவறான விஷயங்களை சுட்டிகாட்ட கூடாது என்பது தான் இவரது நிலையா??

2. ஒருவரது தளத்தில் உறுப்பினராக இல்லாத எவரும் அவரது தளத்தை பற்றி விமர்சிக்க கூடாது என்பது இவரது நிலையா??

3. ரித்வான் விளம்பர பிரியர் என்று ஷேக் எங்கே சொன்னார்? அதற்கு என்ன ஆதாரம்?  
எதற்கு இந்த விளம்பரம் என்று கேட்பதும் இவர் ஒரு விளம்பர பிரியர் என்று சொல்வதும் ஒன்றா? சம்மந்தமில்லாதவற்றை இணைத்து பேசிய இவர் பொய் சொல்பவர் இல்லையா?

சரி, பிறரை விளம்பர பிரியர் என்று யார் சொன்னாலும் அப்படி சொன்னவரின் நியாயமான கூற்றையும் ஏற்க மாட்டேன் என்பது தான் இவரது நிலையா?

4. பிறரது தவறுகளை சுட்டிக்காட்ட அவரது மாமனாகவும் மச்சானாகவும், தந்தையாகவும் சகோதரனாகவும் தான் இருக்க வேண்டுமா? அப்படி எந்த உறவும் இல்லாத ஒருவர் மற்றவரை விமர்சிக்க கூடாது என்பது தான் இவரது நிலையா?


மேற்கண்ட கேள்விகளுக்கு இவர் தரப்பு பதிலை சொல்லி, ஆமாம் எனது நிலை அப்படிதான் என்று சொல்வாரானால், ஷேக் பற்றி இவர் அடுக்கிய கேள்விகளில் அர்த்தமிருக்கும். 
எந்த நிலைபாட்டை தான் கொள்ளவில்லையோ, அதை நியாயப்படுத்தி பேசுவது சந்தர்ப்பவாதம். அதை தான் ரித்வான் செய்கிறார்.

மேலும், சகோ. ஷேக் அந்த விமர்சனத்தை இவரது பக்கத்தில் பதியாமல் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் மட்டுமே உள்ள குழுமத்தில் பதிந்த விஷயம் இவருக்கு எப்படி தெரிந்தது என்பதை சிந்திக்கையில், அதில் கூட இவர் நாடகம் தான் ஆடுகிறார் என்பது தெரிகிறது. நானே அதை பார்த்தேன் என்று சொல்வதில் ஓன்று பொய் சொல்பவராக இருக்க வேண்டும், அல்லது வேறொரு நபர் உதவியுடன் இவர் உள்ளே நுழைந்து உளவு பார்த்திருக்க வேண்டும்.
இரண்டில் எதை செய்திருந்தாலும் இவர் உண்மைக்கு புறம்பானவர் என்று தெரிகிறது.

இவர் வைக்கும் கேள்விகளில் அர்த்தமுள்ள ஒரே கேள்வி என்பது, ஏன் தன்னிடம் சொல்லாமல் பொதுவில் தன்னை பற்றி விமர்சிக்க வேண்டும் என்பது தான்.

இந்த பிரச்சனைக்காக என்று இல்லை, பொதுவாகவே நாம் அனைவரும்  புறம் என்றால் என்ன என்பதை புரியாமல் போட்டு குழப்பிக் கொள்கிறோம்.

ஒருவரை பற்றிய குறையை வேறோருவரிடத்தில் சொல்வது புறம் என்பது பொதுவான சட்டம். 

ஆனால் அந்த பொதுவான சட்டத்தை வைத்து மட்டும் சிந்தித்தால் இஸ்லாத்தின் அனேக கடமைகளை நம்மால் செய்ய முடியாது, சுருங்க சொன்னால் நாம் முஸ்லிமாகவே இருக்க முடியாது.

ஒருவரது குறையை பற்றி இன்னொருவரிடத்தில் சொல்வது அனைத்துமே புறம் என்றால் நம்மால் மார்க்க பயான்கள் செய்ய இயலாது, நன்மைகளை ஏவி தீமையை தடுப்பது தான் சிறந்த அறம் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையை பேண முடியாது, சமுதயத்திற்காக குரல் கொடுக்க முடியாது, தவறுகளை தட்டி கேட்க முடியாது, வியாபாரம் செய்ய இயலாது, கொடுக்கல் வாங்கல், திருமணங்கள் செய்ய முடியாது, சுருங்க சொன்னால் அடிப்படை முஸ்லிமாக வாழ கூட முடியாது.

அதே சமயம், ஒருவரது குறையை பிறரிடம் சொல்லாதீர்கள் என்று சட்டமும் இஸ்லாமிய சட்டம் தான், அதையும் பின்பற்றத்தான் வேண்டும்.

இப்போது இந்த வேறுபாட்டை எப்படி புரிய வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வாங்குவதற்காக அனுப்பிய ஒரு சஹாபி, தவறான ஒரு நிலையை கொண்டிருக்கிறார் என்பதற்காக, அவர் செய்த தவறை அவருக்கு மட்டும் உணர்த்தாமல், சமுதாயம் முழுவதையும் அழைத்து வெளிக்காட்டினார்கள்.
இது புறம் என்று நாம் சொல்வது கிடையாது.

கடைதெருவில் இருந்த திருடனை பிறருக்கு எச்சரிப்பதற்கு அவனை சுட்டிக்காட்டி பிறரிடம் சொன்னார்கள், இதை புறம் என்று நாம் யாரும் சொல்ல மாட்டோம். 

ஒரு சஹாபிய பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்ள இரு சஹாபிகள் விருப்பம் தெரிவிக்கிறார்கள், என்ன செய்வது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கும் போது, அந்த இருவரிடம் இருந்த சிறு சிறு குறைகளை இந்த பெண்ணிடம் நபி அவர்கள் சுட்டிக்காட்டியதாக ஹதீஸ்கள் உள்ளன.  நபி (ஸல்) அவர்கள் புறம் பேசி விட்டார்கள் என்றா நாம் சொல்வோம்? நிச்சயமாக இல்லை.

ஆக, ஒருவரது குறையை இன்னொருவரிடம் சொல்வது ஒன்றே புறம் என்பதற்கான அளவுகோல் கிடையாது, மாறாக, சொல்லப்பட்டவரின் நோக்கம் தான் பிரதானம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ்கள் சான்று.

சங்கை ரித்வான் என்பது ஒரு தனி நபராக இருந்து, அவர் புகை பிடித்தார், மது அருந்தினார் என்கிற விஷயங்களை ஷேக் வேறு நபர்களிடம் சொன்னால், அந்த செய்தி பொய் என்றால் அது அவதூறு என்றோ உண்மை என்றால் புறம் என்றோ கருதப்படும்.

புறம் என்று இஸ்லாம் சொல்கிற எல்லா சட்டங்களுமே இந்த வகை புறத்தை தான் சொல்கின்றன. 

ஆனால் இங்கு பேசப்படுவது என்பது சங்கை ரித்வான் என்கிற தனி மனிதரின் தனிப்பட்ட செயல்களை குறித்ததல்ல. 

இது ஒரு குழுவை பற்றிய விஷயம். 
இவரே சங்கை ரித்வான் (பக்கம்) என்று சொல்லி ஒரு குழுவாக (community) தான் அவரது முக நூல் பக்கத்தை உருவாக்கி உள்ளார் எனும் பொது அங்கு செய்யப்படும் எந்த காரியமும் தனி மனிதனின் தனிப்பட்ட காரியமாக கருதப்படாது. 

இவரே இதை பொதுவான தளம் என்று பிரபல்யப்படுத்தும் வகையில், பொய்க்கு எதிராக உண்மையை சொல்வோம் , அணி திரள்வோம் என்று கூறி சமுதாயத்திற்காக குரல் கொடுக்க ஒரு தளம் என்று பிரகடனப்படுத்தி இது ஒரு சமூக தளம் என்று தானே ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்..

அந்த வகையில், பொது வாழக்கையில் தன்னை ஈடுபடுத்தி வருபவர் என்றால் அவரை பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்கத்தான் வேண்டும். அப்போது தான் சமுதாயம் நன்மையின் பால் செல்லவும்  தவறுகளில் இருந்து மீளவும் முடியும். 

தவிர, இவரது பக்கத்தில் தவ்ஹீத் சகோதரர்கள் பலர் இணைந்திருக்கிறார்கள். இது போன்ற தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் அடைபவர்களிடம் தவ்ஹீத் சகோதரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனில் அந்த சகோதரர்கள் இணைந்திருக்கும் முகநூல் TNTJ வில் இது குறித்து விளக்கம் தருவது அவசியமாகிறது, அதுவும் தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாக பொறுப்பில் இருப்பவருக்கு இது கூடுதல் அவசியம்.

ஆக சகோ. ஷேக் செய்ததில் எந்த தவறும் இருக்க முடியாது, மாறாக, இதுவும் நபி வழியே என்பதை நடுநிலையுடன் சிந்திப்பவர்கள் புரிய வேண்டும். ரித்வான் செய்ததாக ஷேக் வைக்கும் விமர்சனங்கள் நியாயமான விமர்சனமா இல்லையா என்பதற்கு தன அவர் விளக்கமளிக்க வேண்டுமே தவிர, அவர் புறம் பேசுகிறார் என்று சொல்வது அர்த்தமில்லாத வாதம் என்பது தெளிவாகிறது.

ஷேக் செய்தது புறம் என்றால் ரித்வானிடம் சில கேள்விகள்..

தூத்துக்குடியில் ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்தான் என்று உங்கள் பக்கத்தில் போட்டுள்ளீர்கள். இது புறம் இல்லையா?? அவன் கற்பழித்து உண்மை என்றாலும் கூட இதை பொதுவில் சொல்லி அவனது மானத்தை சேதப்படுத்தியது எந்த வகையில் நியாயம்??

கோக கோலா நிறுவனத்தை பற்றி உங்கள் பக்கத்தில் விமர்சனம் செய்திருக்கிறீர்களே, இது புறம் இல்லையா?? அவர்கள் நிறுவனத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டார் என்றால் முதலில் கோக கோலா நிறுவனத்திடம் அல்லவா அதை நீங்கள் சொல்ல வேண்டும்?? எங்கே எப்போது சுட்டிக்காட்டினீர்கள்?? அதை செய்யாமல் எப்படி பொதுவில் வைத்து அந்த நிறுவனத்தின் மானத்தோடு விளையாடலாம்??

இலங்கை தமிழர் விஷயத்தில் கலைஞர் இரட்டை வேடம் செய்கிறார் என்றால் அதை கலைஞரிடம் நேரடியாக சுட்டிக்காட்டினீர்களா? அதை செய்யாமல் அவரின் தவறை பொது மேடையில் அம்பலப்படுத்தியது புறம் இல்லையா??

இது போன்று இன்னும் ஏராளமான செயல்களை நீங்களும் நீங்கள் ஒப்புக்கொள்ள கூடிய அனைவருமே செய்கிறோமே இவையெல்லாம் புறம் இல்லையா??
இதற்கெல்லாம் என்ன பதில்??

இதற்கெல்லாம் என்ன பதிலை நீங்கள் சொல்வீர்களோ, அதுவே சகோ. ஷேக் உங்களது பக்கத்தை விமர்சித்தது பற்றிய உங்கள் கேள்விக்கும் பதிலாய் அமையும் என்பதை சிந்திப்பவர்கள் புரியாமல் இல்லை.


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
(அல் குர்ஆன் 61:2,3)

சனி, 9 பிப்ரவரி, 2013

உண்மையை தானே படமாக எடுத்தான்? என்று சொல்பவர்களுக்கு ..




அது உண்மையா பொய்யா என்பதை அடுத்து விளக்குகிறேன். அதற்கு முன், 

அடிப்படையான முதல் விஷயம், உண்மையான செய்திகளாக கூட அது ஒரு இனத்தையோ சமூகத்தையோ ஒட்டு மொத்தமாக பாதிக்கும் என்றால்
அப்படியொரு படத்தை எடுக்க கூடாது.
இது அணைத்து நடுநிலைவாதிகளும் ஒப்புக்கொள்ளகூடியது தான்.

விடுதலை புலிகள் செய்யும் அட்டூழியங்கள் ஏராளம் உண்டு. ஆனால் அதை நிஜப்படமாக எடுத்து ""குற்றப்பத்திரிக்கை"" என்று காண்பிக்கும் போது நாம் தடை போடுகிறோம். குற்றபத்திரிக்கை படம் தடை செய்யப்பட்டதை நானும் வரவற்கிறேன்.

உண்மை என்கிற போதிலும் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. அதனால் அனைத்து தமிழர்களுக்கும் ஒரு பாதுகாப்பற்ற நிலை உருவாகலாம்.
விடுதலை புலிகள் என்கிற ஒரு இயக்கம் செய்யும் தவறுகள் ஏதோ இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த தமிழர்களும் செய்யும் தவறுகளாக சமூகத்தின் கண்களுக்கு புலப்படும், அத்தகைய நிலையை நாம் உருவாக்க கூடாது, உண்மையை சொல்கிறோம் என்றாலும் சரியே !!

ஆக, விடுதலைபுலிகள் விஷயத்திலேயே நாம் இத்தனை கவனமாக செயல்படுகிறோம் என்றால், உலகளாவிய மதம் ஒன்றை பற்றி படம் எடுக்கையில் இதில் பாதி அக்கறையை கூட காட்ட வேண்டாமா??

சரி, அது உண்மையை தான் சொல்கிறது என்று யார் நிரூபித்தார்கள்?? குர் ஆன் வசனம் ஓதி தான் ஆப்கானில் ஒருவன் கொலை செய்யப்படுகிறான் என்பதற்கு என்ன ஆதாரம் நம்மிடம் உள்ளது?? மீடியாக்கள் சொல்வது தானே ஆதாரம்???

தவிர, சம்மந்தப்பட்ட காட்சியில் அவன் ஓதும் குர் ஆன் வசனம், கொலை செய்வதற்கோ, ஜிஹாத் என்று போவதற்கோ தூண்டும் வசனமே அல்ல, அந்த வசனத்திற்கும் அவன் செய்யும் செயலுக்கும் சம்மந்தமேயில்லை இதுவே, அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதற்கு சான்று.

சம்மந்தமேயில்லாமல் ஒரு காட்சியை புகுத்தி, அல்லாஹு அக்பர் என்றோ லா இலாஹா இல்லலாஹ் என்றோ சொல்லி விட்டால் இதன் மூலம் அவன் உலகிற்கு சொல்ல விரும்பும் கருத்து என்னவாக இருக்கும்? உலகம் இதை எப்படி எடுத்துக்கொள்ளும்??

ஓஹோ, லா இலாஹ இல்லல்லாஹ் என்றால் அவர்கள் ஜிஹாத் செய்ய அழைக்கும் வார்த்தையோ?
அல்லாஹு அக்பர் என்று ஒவ்வொரு நாளும் ஐந்து முறை நம் தெருக்களில் உள்ள பள்ளிவாசல்களில் அழைக்கிறார்களே இதுவெல்லாம் அவர்களது மத வெறியின் வசனங்கள் தானோ?? என்கிற எண்ணம் பாமரனுக்கு ஏற்படாதா?? இது மத துவேஷத்தை உருவாக்காது என்று நெஞ்சின் மீது கை வைத்து தான் சொல்கிறீர்களா??

அகவே அவன் உண்மையை படமாக எடுக்கவில்லை அதற்கு ஆதாரமும் இல்லை.

சரி உண்மையை தான் எடுத்தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால் கூட, அமெரிக்காவை நல்ல பிள்ளையாகவும் ஆப்கானை கொடியவனாகவும் காட்டுவது தான் உண்மையா??
ஆப்கானியர்கள் தவறிழைப்பவர்கள் என்றே வைப்போமே, அவர்கள் செய்யும் தவறுகளை விட நூறு மடங்கு அதிக தவறுகளை அமெரிக்கா அல்லவா செய்தான்?
அமேரிக்கா படையெடுத்து நாட்டை அபகரிக்க வந்தவன், ஆப்கானியர்கள் அதற்கு எதிராக போராடியவர்கள். இது தானே நிதர்சனமான உண்மை??

இருவரிடத்திலும் தவறுகள் இருக்கின்றன என்றே வைத்துக்கொண்டால் கூட, படம் எடுக்க கூடியவன் எப்படி அதை காட்ட வேண்டும்???
படை எடுக்க வந்தவனையல்லவா கொடியவனாக காட்ட வேண்டும்?? அது தானே நியாயம்??

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் படை என்பது பல வெள்ளையர்களை கொன்று வீசியுள்ளது உயிருடன் தீயிட்டு கொளுத்தியுள்ளது காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வெள்ளையர்களின் வீடுகள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி அங்குள்ளவர்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. இதுவும் வரலாறு.
ஆனால் நாம் யாராவது இவராய் தீவிரவாதி என்போமா? மாட்டோம். காரணம், படையெடுக்க வந்தவன் வெள்ளையன். மிகப்பெரிய கொடுமைகாரன் அவன் தான். அவனை விரட்ட இவர்கள் செய்யும் தவறுகள் பொருட்டல்ல அது தேச தியாகம் என்போம் !!

இது தானே நியாயமாக சிந்திப்பவன் சொல்ல வேண்டியது???

இதே கமல்ஹாசன், விஸ்வரூபம் part 2 என்று சொல்லி இந்திய விடுதலையை மையமாக வைத்து படமெடுகிறான் என்று வைப்போம்.

அதில் வெள்ளையர்கள் என்றால் மிகவும் நல்லவர்கள் போலவும், எந்த தவறுகளுமே செய்யாதவர்கள் போலவும், பெண்கள் எல்லாம் அவனது ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதாகவும் படம் எடுத்து,
நேதாஜியின் படையை காட்டும் போது பலரையும் கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்வது போலவும், வெள்ளையர்களின் வீடுகளில் தீ வைத்து அவர்களை கொலை செய்வது போலவும், கொலை செய்யும் போதெல்லாம் பாரத் மாதா கீ ஜெ என்று கோஷம் போடுவதாகவும் காட்டினால் இதை 
ஒவ்வொரு இந்தியனும் எப்படி எடுத்துக்கொள்வான்???

என்பதை உங்களின் நடுநிலை சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.