திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா?



அஸ்ஸலாமு அலைக்கும்

அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!

கடந்த காலங்களில் நாங்கள் எந்த அரசியல்வாதியையும் சந்திக்க மாட்டோம்! நீங்கள் இடஒதுக்கீட்டை அறிவித்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து(?) வேலை செய்து உங்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்! வெறும் சந்திப்பு தேவையில்லை "கையில காசு வாயில தோசை'' ஆர்டர் போடுங்க - ஆதரவு தருகிறோம் என்றெல்லாம் கூறியவர், தற்போது எந்த வாக்குறுதியும் தராமல் பிரதமரை ஓடோடிச் சென்று மாநாடு முடிந்த மறுநாளே சந்தித்து இருப்பது அவருக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றத்தையே எடுத்துக் காட்டுகிறது.
மாநாட்டின் தோல்விக்கு மன்மோகன் சிங்கிடம் மருந்து தேடுகிறார் பாவம்! மேலும் பிரதமரைச் சந்தித்தது, பெரிய சாதனை போல் அவர்களால் பரப்பப்படுகிறது.  பிரதமரை இதற்கு முன் தமிழகத்தில் தமுமுக தலைவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்களும், தேசிய லீக் தலைவரும் எந்த மாநாடும் நடத்தாமலேயே ஜே.எம். ஹாரூண் எம்.பி. மூலம் மிக சுலபமாக சந்தித்திருக்கின்றனர். ஆனால் பிரதமரே தங்களை அழைத்தார் என்று "பில்டப்' யாரும் கொடுக்கவில்லை. இது இவர்களது தரத்தையும், நிறத்தையும் எடுத்துக் காட்டுகிறது!

-செங்கிஸ்கான்.








தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா


யாரையும் மேடையில் ஏற்றுவதில்லை என்று கூறி வந்த தவ்ஹீத் ஜமாஅத்இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டது என்ற வாதம் சிலரால் எடுத்துவைக்கப்படுகிறது. 
இதற்கு உரிய பதிலைச் சொல்வதற்கு முன்னால் இப்படி கேட்பவர்கள் பற்றியும்நாம் சுட்டிக்காட்டும் அவசியம் இருக்கிறது. 
மாநாடு நடப்பதற்கு முன் அனைவரையும் அழைக்க வேண்டும்; எங்களையும்அழைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். பல்வேறு கட்சிகளின்தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்தெளிவுபடுத்தப்பட்டது. அப்போது இந்தக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை.ஏனெனில் மாநாட்டுக்கு மக்கள் வர மாட்டார்கள்; மாநாட்டுக்குப் போகக் கூடாதுஎன்று நாம் பரப்பிய செய்திகளால் தீவுத்திடலில் சமாதி கட்டப்படும் என்று கனவுகண்டார்கள். அதை வெளிப்படையாகவும் சொன்னார்கள். அவர்களுக்குப் பலநாட்கள் தூக்கம் இல்லாமல் செய்யும் அளவுக்கு மாநாடு முஸ்லிம் சமுதாயத்தின்பேராதரவுடன் வரலாற்றுச் சாதனை படைத்ததைப் பார்த்து திகைத்துப்போனவர்கள் மாநாட்டின் நோக்கத்தைத் திசை திருப்பும் வகையில் எதையாவதுஎழுதாவிட்டால் தங்கள் மண்டை வெடித்து விடும் என்று கருதி ஏற்கனவேசரியாகப் புரிந்து வைத்திருந்ததை இப்போது தவறாகச் சித்தரிக்கமுயற்சிக்கிறார்கள். இதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம். 
பிறரை மேடையில் ஏற்றுவது குறித்த தவ்ஹீத் ஜமாஅத் நிலை இவர்களுக்குத்தெரியவில்லை. இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் இது குறித்து எடுத்துள்ளநிலைபாட்டை அறிவதற்கு உரிய முறையில் முயற்சிக்க வேண்டும். இதுவிஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. 
மார்க்கம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் தஹீத் ஜமாஅத் எந்தக் கொள்கையைச் சரிகாண்கிறதோ அந்தக் கொள்கையை ஏற்காத எவரையும் மேடையில்ஏற்றுவதில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு. 
இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 
சமுதாயப் பிரச்சனைக்காக போராடும் போதும் கோரிக்கை வைக்கும் போதும்பிறரை ஏற்றுவது, பிறருக்குப் பேச வாய்ப்பளிப்பது ஆகியவற்றில் கோரிக்கையநிறைவேற்றுபவர்களும் அல்லது அதற்கு உதவியாக இருப்பவர்களும் கடந்தகாலங்களில் தேவைப்பட்டால் மேடையில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்தக்கோரிக்கை குறித்து மாநாடு பொதுக்கூட்டம் நடக்கிறதோ அந்தக் கூட்டத்தில் நான்கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பேன் என்று உறுதியளிக்க விரும்பினால் அதற்குஅனுமதி அளிக்கப்பட்டதுமுண்டு. 
உதாரணமாக சென்னை மண்ணடியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 தந்ததற்காக இப்போது ஓட்டு போடுகிறோம்.அதை ஏழு சதவிகிதமாக ஆக்கினால் அடுத்த சட்டசபை தேர்தலிலும்வாக்களிப்போம் என்று பிஜே பேசினார். அந்தக் கூட்டத்தில் மேடையில் இருந்ததயாநிதி மாறன் இதற்காக முயற்சி செய்ய வேண்டும். அது பற்றி அவர் உறுதிஅளிப்பதாக இருந்தால் அளிக்கலாம் என்று பீஜே குறிப்பிட்டார். தயாநிதி மாறனும்எழுந்து அது சாத்தியமில்லாமல் உள்ளது இருந்தாலும் நான் தலைவரிடம் இதுகுறித்து எடுத்துச் சொல்வேன் என்று கூறினார். அத்துடன் திமுக செய்த இலவசதிட்டங்களைப் பற்றியும் பேசினார். அவர் பேசி முடித்ததும் எழுந்து இது போன்றஇலவசங்கள் எங்களுக்கு முக்கியம் அல்ல. எங்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்புமே முக்கியம் என்று அவரை மேடையில் வைத்துக் கொண்டே பீஜேகூறினார். 
பார்க்க வீடியோ ஆதாரம் 
 
அது போல் தான் இட ஒதுக்கீட்டுக்கான மாநாடு என்பதால்அழைக்கப்பட்டவர்களில் இதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் வந்தால்அவர்களிடம் உறுதி மொழி கொடுக்கச் சொல்ல வேண்டும் என்று தவ்ஹீத்ஜமாஅத் முடிவில் இருந்தது. ஆனால் அழைப்பு கொடுக்கப்பட்டவர்களில்அதிகமானவர்கள் வரவில்லை. வந்த பிரமுகர்களில் ஹாரூன் அவர்கள்நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பல வகையில் உதவ முடியும்நிலையில் இருந்தார். துறைமுகம் ஹாஜா, தேசிய லீக் பஷீர் ஆகியோர் மத்தியஅரசாங்கத்தில் வாதாடும் இடத்தில் இல்லை. எனவே தான் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் இட ஒதுக்கீடுக்காக நான் எல்லா வகையிலும் குரல்கொடுப்பேன். தர்காவாதியாக நான் இருந்தாலும் இட ஒதுக்கீடு கோரிக்கையைஆதரித்ததால் கலந்து கொண்டேன் எனக் கூறினார். அதன் பின்னர் பீஜே எழுந்துஹாரூன் அவர்கள் சொன்னபடி இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் ஓட்டு என்றநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். 
தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு நுணுக்கமான வேறுபாடுகளைக் கவனத்தில்கொண்டு தான் தவ்ஹீத் ஜமாஅதின் நிலைபாடு அமைந்துள்ளது. இடஒதுக்கீடுக்காக கூடிக் கலைவது இதன் நோக்கம் அல்ல. அந்தக் கோரிக்கையைவென்றெடுப்பதற்காக தொடர் முயற்சிகளை தவ்ஹீத் ஜமாஅத் விட்டு விடாது. 
கருணாநிதியோ ஜெயலலிதாவோ மாநாட்டுக்கு வந்து இட ஒதுக்கீடுக்க்காக நாங்கள் முயற்சிப்போம் என்று வாக்குறுதி அளிக்க விரும்பினால் அதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் மாலை சால்வை உள்ளிட்ட விஷயங்களில் சமரசம் செய்யாது !

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

நாளின் துவக்கம் பகல் என்பதற்கு ஆதாரம் உள்ளதா ??



கேள்வி :


புஹாரி 2027. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.  



இது போன்ற இத்திகாப் குறித்த செய்திகள் அனைத்தையும் பார்க்கும் போது நாள் பஜ்ர் இல் ஆரம்பாகிறது என்பதை தான் புறிந்து கொள்ள முடிகிறது. இதே ஹதீஸில் கூட ஒரு ஆண்டில் இருபத்தி ஒன்றாம் இரவின் காலையில் ? தான் வெளியேறுவார்கள் என்றும் வருகிறது. 
நாள் மக்ரிபில் ஆரம்பம் ஆகிறது என்று சொன்னால், இருபத்தி ஒன்றாம் இரவை முடித்து விட்டு தான் வெளியாருகிறார் என்று ஆகும். ஆக 30 நாட்கள் கொண்ட ராமதானில் கூட மீதம் உள்ள நாட்கள் 9 நாள். ஆனால் இருபத்தி ஒன்றாம் இரவை கழித்து விட்டு வெளியேறி பின்னர் மக்களை அழைத்து என்னோடு கடைசி பத்து நாட்களும் இத்திகாப் இருங்கள் என்று சொல்வதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாள்  பஜ்ர் இல் ஆரம்பிக்கும் போது தான் இந்த 10 நாட்கள் என்பது சரியாக இருக்கும்.



பதில் :

நாளின் துவக்கம் குறித்த உங்கள் கருத்து மிகவும் தவறானவை. எந்த ஹதீஸை நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு ஆதாரமாக காட்டுகிறோமோ அதையே பஜர் தான் துவக்கம் என்பதற்கு நீங்கள் ஆதாரமாக காட்டுவது வேடிக்கை !!

நீங்கள் அந்த ஹதீஸை வைத்து மிகவும் குழம்பிப்போய் இருக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது.

அந்த ஹதீஸ் மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பதற்கு எப்படி மிக தெளிவான ஆதாரமாக உள்ளது என்பதை விளக்குவதற்கு முன், உங்கள் நிலைபாட்டில் உள்ள குழப்பத்தை பார்த்து விடுவோம்.

இதே ஹதீஸில் கூட ஒரு ஆண்டில் இருபத்தி ஒன்றாம் இரவின் காலையில் ? தான் வெளியேறுவார்கள் என்றும் வருகிறது. 
நாள் மக்ரிபில் ஆரம்பம் ஆகிறது என்று சொன்னால், இருபத்தி ஒன்றாம் இரவை முடித்து விட்டு தான் வெளியாருகிறார் என்று ஆகும்


நாளின் துவக்கம் மக்ரிப் என்றால் இரவை அடைந்து அந்த இரவின் பகல் என்று சொல்லாமல் அந்த இரவிற்கு பிறகுள்ள பகல் என்று சொல்லியிருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

சரி, உங்கள் நிலை என்ன? நாளின் துவக்கம் பகல் என்பது.
அந்த ஹதீஸில் என்ன வருகிறது? 21 ஆம் இரவை அடைந்ததும் அந்த இரவின் பகலில் வெளியேறுவார்கள்.
அந்த இரவின் பகல் என்பது அந்த இரவுக்கு முந்தைய பகல் என்பது தான் உங்கள் கருத்து என்றால் அது சாத்தியமா??
21 ஆம் இரவை அடைந்த பிறகு, அந்த இரவின் பகலில் வெளியேறினார்கள் என்றால் இதற்கு ஒரே அர்த்தம் தான் இருக்க முடியும் - அந்த இரவை தொடர்ந்து வரக்கூடிய பகல் !
அந்த இரவை அடைந்த பிறகு அந்த இரவுக்கு முன்னுள்ள பகலில் வெளியேற முடியாது!

நாளின் துவக்கம் பகல் என்றால், அந்த இரவை தொடர்ந்து வரக்கூடிய பகல் உங்கள் கொள்கைப்படி 22 ஆம் பகல் தானே தவிர 21 ஆம் பகல் அல்ல.
ஆகவே உங்கள் கொள்கைப்படி உங்கள் வாதம் முரண்!

அடுத்து, அந்த ஹதீஸை பொறுமையாகவும் முழுமையாகவும் படித்தால் அது நாளின் துவக்கம் மக்ரிப் என்பதை தெளிவாக சொல்கிறது என்பதை புரியலாம்.

நபி (ஸல்) அவர்கள் ரமளானின் நடு பத்தில் இதிகாப் இருந்து விட்டு 21 ஆம் இரவை அடைந்ததும் இஹ்திகாபை முடிக்காமல் தொடர்ந்து வரக்கூடிய பகலில் முடித்து விட்டு வெளியேறுகிறார்கள் என்று அந்த ஹதீஸ் சொல்கிறது.

அதாவது நடு பத்து நாட்கள் என்பது இருபதாம் நாளுடன் முடியும்.
ஆகவே இருபத்தி ஒன்றாம் இரவு வந்ததும் அதை முடிக்க எண்ணுகிறார்கள், ஆனால் தொடர்ந்து வரக்கூடிய பகலில் தான் வெளியேறுகிறார்கள் என்று அந்த சஹாபி சொல்கிறார்கள்.

நீங்கள் சொல்வது போல 21 ஆம் இரவுக்கு முந்தைய பகல் என்றால் இது சாத்தியமேயில்லை. ஏனெனில், அந்த ஹதீஸில், 21 ஆம் இரவை அடைந்து விட்டார்கள் என்று வருகிறது அடைந்த பிறகு அந்த இரவிற்கு முந்தைய பகலில் வெளியேற முடியுமா? முடியாது!

21  ஆம் இரவை அடைந்த பிறகு அந்த இரவின் பகலில் வெளியேறினார்கள் என்றால் அந்த இரவு கழிந்து தூங்கி எழுந்ததும் வரக்கூடிய பகலை தான் இது குறிக்க முடியும். அந்த பகலை அந்த இரவின் பகல் என்று தான்  சொல்கிறார்கள். நாளின் துவக்கம் பகல் என்றால் தூங்கி எழுந்ததும் வரக்கூடிய பகல் அடுத்த நாள் ஆகி விடும். அந்த இரவின் பகல் என்று அதை சொல்ல முடியாது.

இது, நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு அந்த ஹதீஸ் சொல்லும் முதல் ஆதாரம்.


ஆனால் இருபத்தி ஒன்றாம் இரவை கழித்து விட்டு வெளியேறி பின்னர் மக்களை அழைத்து என்னோடு கடைசி பத்து நாட்களும் இத்திகாப் இருங்கள் என்று சொல்வதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாள்  பஜ்ர் இல் ஆரம்பிக்கும் போது தான் இந்த 10 நாட்கள் என்பது சரியாக இருக்கும்.

இல்லை !!! இருபத்தி ஒன்றாம் இரவை கழித்து விட்டு வெளியேறிய பின்னர் அவ்வாறு நபி அவர்கள் அழைக்கவில்லை.
இங்கு தான் உங்கள் மொத்த கருத்துக்கும் இன்னொரு மறுப்பு உள்ளது.

இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! 

இருபத்தி ஒன்றாம் இரவை அடைந்த பிறகு தான் அடுத்த பத்து நாட்களுக்கு நபி அவர்கள் அழைப்பு விடுக்கிறார்களே தவிர மறுநாள் காலை வெளியேறியதும் அவ்வாறு அழைக்கவில்லை.
மறுநாள் காலை வெளியேறிய பிறகு இவ்வாறு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுத்திருந்தால் நீங்கள் சொல்வது போல 10 நாள் என்கிற கணக்கு சரியாக வராது தான். ஆனால், அந்த ஹதீஸில், 21 ஆம் இரவை அடைந்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுக்கிறார்கள் என்று தான் உள்ளது. வெளியேறுவது தான் அடுத்த பகலிலேயே தவிர, அழைப்பு விடுப்பது என்பது அந்த இரவில் தான்.
அதாவது, 21 ஆம் இரவை அடைந்தால் அதன் பொருள், 20  நாட்கள் முடிந்து விட்டன. 20 நாட்களை முடித்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுக்கிறார்கள்.

இதன் மூலம் நாளின் முடிவு மக்ரிப் தான் என்பதும் புலனாகிறது. அதோடு, நீங்கள் சொல்லும் கருத்துக்கு மறுப்பும் உள்ளது.

மேலும், 21 ஆம் இரவை அடைந்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை நபி (ஸல்) அவர்கள் விடுக்கிறார்கள். அதை தொடர்ந்து அந்த இரவு மழை பெய்கிறது !!! 
எந்த இரவு? 21 ஆம் இரவு !
21  ஆம் இரவு மழை பெய்ததை தொடர்ந்து வரும் பஜர் தொழுகையில் நபியின் நெற்றியில் களி மண் படுகிறது என்று அந்த சஹாபி சொல்கிறார்.

ஒரு இரவை கடந்த பிறகு வரக்கூடிய பஜர் என்பது உங்கள் கொள்கையின்படி மறுநாள்.
ஆனால், இந்த ஹதீஸில், இரவை 21 ஆம் இரவு என்றும் தொடர்ந்து வரக்கூடிய பகலையும் 21 ஆம் பகல் என்று தான் சொல்கிறார்கள், 22 ஆம் பகல் என்று சொல்லவில்லை  .
இந்த அடிப்படையிலும் நாளின் துவக்கம் மக்ரிப் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து.

வஸ்ஸலாம்.



புதன், 8 ஆகஸ்ட், 2012

ஈசா நபி எதிர் சாட்சியாக இருப்பார்களா?






அஸ்ஸலாமு அலைக்கும்.

வேதக்காரர்கள் அனைவரும் அவரது (ஈசா) மரணத்திற்கு முன் அவரை நம்பிக்கை கொள்வார்கள், மறுமையில் அவர்களுக்கு எதிரான சாட்சியாக அவர் இருப்பார் - 4 :159

மேற்கண்ட வசனத்தை ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்குரிய ஆதாரமாக நாம் வைக்கிறோம். அவரது மரணத்திற்கு முன் வேதக்காரர்கள் (இனி) நம்புவார்கள் என்று எதிர்கால வினையாக வந்திருப்பதால் இனிமேல் ஈசா நபி மீண்டும் வரும்போது நம்புவார்கள் என்பது கச்சிதமாக பொருந்திப்போகிறது என்பது சரி தான்.

ஆனால், அந்த வசனத்தின் பின்பகுதியை கவனித்தால் , முதல் பகுதியை முரணாக்குவது போல உள்ளது. மீண்டும் வருகிற ஈசா நபியை கண்டு, அது நாள் வரை மறுத்துக்கொண்டிருந்தவர்கள் அவரை நபி என்று நம்பி விடுவார்கள் என்று முதல் வசனம் சொல்கிறது. அதாவது அவர்கள் முஸ்லிம்களாக ஆகி விடுவார்கள்.
ஆனால் அவ்வாறு முஸ்லிம்களாக ஆகி விட்ட அந்த வேதக்காரர்களுக்கு எதிராக ஈசா நபி ஏன் மறுமையில் சாட்சி சொல்ல வேண்டும்? இதில் அர்த்தமில்லையே ! என்று சிந்திக்கையில், இந்த இடத்தில் "எதிரான சாட்சி" என்று அனேக மொழியாக்கங்களிலும் மொழிப்பெயர்ப்பு செய்திருப்பது தவறாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

"ஷஹாதுன் அலைஹிம்" என்று வரக்கூடிய அந்த அரபிப்பதத்திற்கு "அவர்களுக்கான சாட்சி" என்பது தான் நேரடி பொருள். இடத்தை பொறுத்து சாதகமான சாட்சி என்றோ பாதகமான சாட்சி என்றோ நாம் சொல்லிக்கொள்ளலாம்  . இந்த இடத்தில் பாதிகமான சாட்சி என்பதை விட சாதகமான சாட்சி என்று மொழியாக்கம் செய்வது தான் பொருந்திப்போகிறது. எனவே "மறுமையில் ஈசா நபி அவர்களுக்கு சாட்சியாக இருப்பார்" என்று மொழியாக்கம் செய்வது தான் சரி.
இந்த மொழியாக்கம் தமிழ் உள்பட எந்த தர்ஜுமாக்களிலும் இருக்காது !

சகோ. பிஜே அவர்களிடமும் இது குறித்து கலந்தாய்வு செய்து அவரது ஒப்புதலும் கிடைத்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

இதை அடிப்படையாக வைத்து ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்கிற கொள்கையுடையவர்களுடன் நாம் விவாதமும் செய்திருக்கிறோம், பார்க்க http://www.nashidahmed.blogspot.com/2012/07/blog-post_8197.html



திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஹனஃபீ மத்ஹபில் இன்று சட்ட நூலாகக் கணிக்கப்படுபவை





1.    ஹிதாயா : இதன் ஆசிரியர் அலீ பின் அபீபக்ர் முர்கீனானீ. இவர் ஹிஜ்ரி 511ல் பிறந்து 593ல் மரணம் அடைந்தார்.
2.    குதூரி : அபுல் ஹஸன் பின் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஜஃபிர் அல் பக்த்தாதீ ஹிஜ்ரி 362-428.
3.    துர்ருல் முக்தார் : அல்லாமா ஹஸ்கஃபீ ஹிஜ்ரி 1025ல் பிறந்து 1088ல் மரணம்.
4.    கன்ஸுத்தகாயிக் : அபுல் பரக்காத் அன்னஸஃபீ மரணம் ஹிஜ்ரி 710.
5.    ஆலம் கீரி : ஒளரங்கஸீப் மன்னரின் காலத்திலுள்ள அரசவை ஆலிம்களால் ஹிஜ்ரி 1118ல் எழுதப்பட்டது.
6.    முன்யத்துல் முஸல்லீ : இமாம் ஹதீதுத்தீன் காஷ்கரீ. மரணம் ஹிஜ்ரி 705.

ஆக எல்லாமே கிட்டத்தட்ட ஹிஜ்ரி 500க்குப் பிறகு எழுதப்பட்டவை. 

சனி, 4 ஆகஸ்ட், 2012

இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்கள்







இஹ்ராமுக்கு பின்னர் ஆண், பெண் இருவருக்கும் பொதுவாக தடை செய்யப்பட காரியங்கள்

  • தலை மற்றும் உடலில் உள்ள முடிகளை அகற்றக்கூடாது    -  (அல்குர் ஆன் 2 :196 ) (புஹாரி 1814 to 1818 )
  • நகங்களை வெட்டக்கூடாது - முஸ்லிம் 3653 
  • நறுமணம் பூசக்கூடாது - புஹாரி 1265 to 1268
  • திருமணம் செய்யக்கூடாது, திருமண ஒப்பந்தம் செய்யக்கூடாது, பிறருக்கு திருமணமும் செய்து வைக்ககூடாது. -  (முஸ்லிம் 2524 )
  • தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது , ஆசையுடன் (இச்சையுடன்) தொடுவது, அணைப்பது, முத்தமிடுவது கூடாது - (அல் குர் ஆன் 2 :197 )
  • பிராணிகளை வேட்டையாடக்கூடாது.  (5 :94 )



ஆண்களுக்கு மட்டும் தடை செய்யப்பட காரியங்கள் 

  • தலையை மறைப்பது கூடாது - புஹாரி 1839
  • தைக்கப்பட்ட ஆடைகளை அணிவது கூடாது - புஹாரி 366



பெண்களுக்கு மட்டும் தடை செய்யப்பட்டவை


  • முகத்தை மறைப்பது கூடாது - புஹாரி 1838
  • கையுறை அணிந்து கைகளை மறைப்பதும் கூடாது - புஹாரி 1838


புதன், 1 ஆகஸ்ட், 2012

இஸ்லாத்திற்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் ஒரு கட்சி !




அஸ்ஸலாமு அலைக்கும்.

தமுமுகவும் அதன் செல்லப்பிள்ளையான மமகவும் திருந்துவார்கள் என்கிற கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்பையும் தவிடு பொடியாக்கும் வண்ணம் இவர்களது சமீபத்திய செயல் அமைந்துள்ளது.
இஸ்லாத்திற்கு எதிரான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் மாபாதக செயலை தலைமை தாங்கி நடத்தி, நரக படுகுழிக்கு தங்களை முன்பதிவு செய்து வருகின்றனர் இவர்கள். இணைப்பை பார்க்கவும்.

அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் என்ன? ஓட்டு கிடைக்கிறதா? அதை மட்டும் பார், என்பது தான் அவர்கள் பைலாவோ என்னவோ..

ஆர்எஸ்எஸ் , சிவசேனா பட்டியலில் இந்த சமுதாயத்தை இது போன்ற நயவஞ்சகர்களிடம் இருந்தும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
புனித ரமளானில் அனைவரும் இதற்காக துஆ செய்யுங்கள்.

வஸ்ஸலாம். 

பெற்றோருக்கு ஜகாத் கொடுக்கலாமா?



கேள்வி :

அஸ்ஸலாமு அலைக்கும் 
பள்ளிவாசலுக்கு ஜகாத் கொடுக்கலாமா?
அநாதை இல்லங்களுக்கு ஜகாத் கொடுக்கலாமா?
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஜகாத் கொடுக்கலாமா?







பதில் :

வ அலைக்குமுஸ்ஸலாம்.

9 :60 வசனத்தில் அல்லாஹ் எட்டு வகையான மக்களுக்கு சகாத் கொடுக்க சொல்கிறான்.
அந்த எட்டில் அடங்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சகாத் கொடுக்கலாம். நமது பெற்றோரோ நமது சகோதரனோ இதில் அடங்குபவர்களாக இருந்தால் அவர்களுக்கும் சகாத் கொடுக்க எந்த தடையும் கிடையாது.

ஆனால், கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், பெற்றோருக்கான உதவியை பொறுத்தவரை அது பிள்ளை என்கிற அடிப்படையில் நமது கடமை! கடமையான ஒரு செயலை சகாத் என்கிற அடிப்படையில் செய்யாமல் நமது சொந்த பணத்தில் இருந்து தான் செய்ய வேண்டும்.
அதாவது, சகாத் என்று சொல்லி அதனடிப்படையில் கொடுப்பது என்பது விரும்பி கொடுக்கிற ஒன்று, இன்னாருக்கு தான் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அப்படி கட்டாயமில்லாத ஒரு காரியமாக பெற்றோருக்கு சகாத் வழங்குதலை நாம் பாவிக்க கூடாது.

புஹாரி 1852 ஹதீஸில், பெற்றோரின் கடனை பிள்ளைகள் தான் அடைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.

அதே போல, அபு தாவூதில் பதிவு செய்யப்பட்ட இன்னொரு ஹதீஸில், நீயும் உன் செல்வங்களும் உன் தந்தைக்கு உரியவனவாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில், பெற்றோருக்கு பொருளுதவி செய்வது என்பது நமக்கு நாமே உதவி செய்து கொள்வது போன்றதாகும். நமக்கு நாமே எப்படி சகாத் கொடுத்துக்கொள்ள மாட்டோமோ அதே போன்று பெற்றோருக்கும் சகாத் என்கிற அடிப்படையிலான உதவியை செய்யாமல், கடமை என்கிற அடிப்படையில் நமது முழு பொருளையும் செலவு செய்ய வேண்டும்.

சகோதரர்களுக்கு அல்லது இன்ன பிற உறவினர்களுக்கு சகாத் கொடுப்பது இதில் அடங்காது, 


பள்ளிவாசலுக்கு கொடுப்பது பற்றி கேட்கிறீர்கள் - தாராளமாக கொடுக்கலாம். அந்த வசனத்தில் உள்ள எட்டு வகையில் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதையும் அல்லாஹ் அனுமதிக்கிறான். பள்ளிவாசல் ஆனாலும் அனாதைகள் இல்லமானாலும் அவை அல்லாஹ்வின் பாதையில் செய்யும் செலவு தான்.

அதே போல, உறவினர்களிலும் அல்லாஹ் சுட்டிக்காட்டியபடி யாசிப்பவர்களோ, அல்லது யாசிக்காத ஏழைகளோ இருந்தால் அந்த உறவினர்களுக்கும் கொடுக்கலாம்.


இது எனது கருத்து, சரி பார்த்துக்கொள்ளவும்..

வஸ்ஸலாம்.