செவ்வாய், 1 ஜனவரி, 2013

மசாலாக்கள் பலவிதம்

மத்ஹப் நூல்களில் உள்ள ஆபாசங்கள் அசிங்கங்கள் பலவற்றை பார்த்து வருவதன் வரிசையில் மேலும் சில அற்புத (?) சட்டங்கள் உங்கள் பார்வைக்கு. குளிப்பு கடமையாகாமல் உடலுறவு செய்து கொள்ள எளிய வழி 

ஆசையை அடக்கிக்கொள்ள ஆணுறுப்பை கைகளால் இறுக பிடித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பிடித்தால் ஆசை அடங்கி விடும். அதன் பிறகு விந்து வெளியேறினால் குளிப்பு கடமையில்லை.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 149மர்ம உறுப்பில் துணியை சுற்றிக்கொண்டு உறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை 
- துர்ருல் முக்தார் பாகம் 2, பக்கம் - 152பல் குச்சியை வைத்து பல் துலக்குவதன் விஞ்ஞான (?) சட்டங்கள் 


நீள வாக்கிலும் படுக்கை வாக்கிலும் பல் துலக்க கூடாது. அவ்வாறு தேய்த்தால் கல்லீரல் வீங்கி விடும்.
முழு கைகளால் பிடிக்க கூடாது, பிடித்தால் மூல வியாதி வந்து விடும்.
பல் குச்சியை சப்பக்கூடாது. சப்பினால் பார்வை குருடாகும்.
குச்சியை செங்குத்தாக தான் வைக்க வேண்டும். படுக்கை நிலையில் வைக்க கூடாது, மீறினால் பைத்தியம் பிடித்து விடும்.
பல் குச்சியினால் பல் தேய்ப்பது மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 106, 107ஏகத்துவத்தை தவிடு பொடியாக்கும் சட்டம் 

 காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் நன்கு உயரமான இடத்தில நின்று கொண்டு பாத்திஹா சூரா ஓதி நபி (ஸல்) அவர்களுக்கு அர்பணிக்க வேண்டும். பின்னர், கிப்லாவை நோக்கி சய்யத் அஹ்மத் இப்னு அரவான் அவர்களிடம் கேட்க வேண்டும். நீங்கள் இதை எடுத்து தரவில்லை என்றால் அவ்லியா என்று இனியும் உங்களை அழைக்க மாட்டேன் என்று கூற வேண்டும்.
ரத்துள் முக்தார் பாகம் 3 - பக்கம் 334நபியின் பெயரால் பொய் 

அத்தஹியாத் ஓதும் பொது அஷ்ஹது லாயிலாஹ.. என்று வருகிற இடத்தில விரலை உயர்த்தி, இல்லல்லாஹ்.. என்று வருகிற இடத்தில மடக்கி விட வேண்டும்.. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 475


இன்னொரு பொய் 

காபிர்களின் தொந்தரவிற்கு பயந்து தான் நபி (ஸல்) அவர்கள் லுஹர் அசர் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதை தடுத்தார்கள்.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 497ஷாபி மத்ஹபை பொய்யாக்கிய ஹனபி சட்டம் 

ஹனபி மத்ஹபின் படி தான் கியாமத் நாளின் போது ஈசா நபி தீர்ப்பு வழங்குவார்கள் 
 - துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 52


குர் ஆனை தரம் தாழ்த்திய சட்டம் 

இந்த பிக்ஹ் சட்டங்களை (மத்ஹப்) கற்பது என்பது குர் ஆணின் சில வசனங்களை கற்பதை விடவும் சிறந்ததாகும்.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 26


மகரமான பெண்கள் என்றால்.. 

திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்களின் முகம், மார்பகங்கள் மற்றும் தொடைக்கு கீழுள்ள கால்கள் ஆகியவற்றை பார்ப்பதில் குற்றமில்லை..
பார்க்கலாம் என்பதால் தொடவும் செய்யலாம்.
- ஹிதாயா பக்கம் 445, 446


குளோனிங் ??

பன்றி அல்லது நாயுடன் ஒரு பெண் உறவு கொண்டு மனித உருவில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் மீது தொழுகை உள்ளிட்ட அனைத்தும் கடமை. ஆனால் அதை வேறு யாரும் தொடக்கூடாது. நிர்பந்தமான நிலையில் தொட்டால் மன்னிப்பு கிடைக்கும்.
பதாகுல் முயீன் பாகம் 1 பக்கம் 94


இமாமின் தகுதிகள்.


முகம் அழகாக இருக்க வேண்டும்.
உயர்ந்த கோலத்தில் இருந்து வந்தவராக இருக்க வேண்டும்.
பணக்காரராக இருக்க வேண்டும்.
உயர்ந்த ஆடை அணிபவராக இருக்க வேண்டும்.
அழகிய மனைவியை பெற்றிருக்க வேண்டும்.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 521அனைத்திற்கும் முத்தாய்ப்பாக...

நபியின் அனுமதி பெற்று அவர்கள் முன்னிலையிலும் அவர்களது தோழர்கள் அபு பக்கர் மற்றும் உமர் (ரலி அவர்களது முன்னிலையிலும் தான் இந்த விளக்கவுரை முழுமைப்பெறும் பணியை செய்தேன் .
- துர்ருல் முக்தார் நூலின் ஆசிரியர் கூறியதாக பாகம் 2, பக்கம் - 152
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக