வியாழன், 3 பிப்ரவரி, 2011

விவாத சவடாலை ஏற்றுக்கொண்ட பிறகும் இழுத்தடிக்கும் ஹிஜ்ரா கமிட்டிக்கு நமது பதில்

JAQH.net admin

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

நாஷித் அவர்களின் சவடால்க்கு பதில்.

நாம் பி.ஜே அவர்கள் எஸ்.கமாலுதீன் மதனீ அவர்களின் சர்வதேச பிறை கொள்கையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதால், எஸ்.கே. யையும் சேர்த்து அழைத்து வரும்படி பி.ஜே அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

//அட கூறு கெட்டவர்களா நாங்கள் ஏன் உங்கள் தலைவர் கமாலுத்தீன் மதினியை சேர்த்து அழைத்து வர வேண்டும்? இதை எழுதும் போது மூளையைக் கழற்றிக் காயப்போட்டு விட்டுத் தான் எழுதினீர்களா? // PJ

எஸ்.கமாலுதீன் மதனீயை பாராட்டும் போது அதே சகோதரர் பி.ஜே அவர்கள் கூறுகெட்டு போய், மூளையைக் கழற்றிக் காயப்போட்டு விட்டா? பாராட்டினார்கள் என்று நாமும் பி.ஜே அவர்களை நோக்கி கேள்வி எழுப்பமுடியும்.

எனவே சர்வதேச பிறைக் கொள்கையை பி.ஜே அவர்கள் ஒப்புக்கொண்டதை நாங்கள் பகிரங்கப்படுத்தியதால், கோபமுற்ற சகோதரர் பி.ஜே அவர்களின் மேற்கண்ட வார்த்தைகள் பயன்படுத்தியதை யாரும் மறைக்க முடியாது.

எனவே நாஷித் போன்றவர்களுக்கு இந்த விவாத ஒப்பந்தத்தில் எந்த பங்கும் கிடையாது. அதனால் விவாதக்குழு என்றெல்லாம் பதிந்து மக்களை திசைதிருப்புவதை விட்டுவிட்டு, பி.ஜே யின் கொள்கையை மட்டுமாவது இணையத்தில் ஒழுங்காக பிரச்சாரம் செய்து வந்தால் சரி. மேலும் யாருடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டுமோ அதை நாங்கள் நன்கறிவோம். ஆகவே சம்மந்தமில்லாத உங்களை போன்றவர்கள் தலையிடாமல் ஒதுங்கியிருப்து நலம்.

நிர்வாகி



JAQH .net admin

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்……
பொய்யர்கள் எதை வேண்டுமானாலும் கூறிக்கொண்டே இருப்பார்கள். நாம் அல்லாஹ் சொன்ன அடிப்படையில் அவனுடைய மார்க்கம் வெற்றி பெற போராட வேண்டும். எப்படி போராட வேண்டும் என்பதற்கும் அல்லாஹ் நமக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளான். எனவே பொய்யர்கள் எப்படி எல்லாம் பொய் பேசுகின்றார்கள் என்று மக்களிடம் இனம் காட்ட வேண்டுமென்பது தான் விவாதம். அது சாதாரண விஷயமல்ல என்பதை புரியுங்கள். அதற்காக பல திட்டங்களை தீட்டி வேண்டியுள்ளது. ஷைத்தான் சாதாரணமானவன் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாதால் அவனை பற்றி உங்களுக்கு பயம் இல்லாமல் உள்ளது. ஷைத்தானை தோற்கடிப்பது தான் நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக அல்லாஹ் கூறுகின்றான்.

எனவே எல்லா விஷயத்திலும் அவன் மனிதர்களின் சிந்தனையை சீர் குலைப்பான். அதை நாம் எப்படி தடுப்பது என்பதை ஆலோசிக்கமால் முடிவெடுக்க முடியாது. எவ்வளவு தீவிரமான அல்லாஹ்வின் அடியார்கள் கூட ஷைத்தானை வீழ்த்துவதற்கு பல வியூங்கள் வகுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது தான் வரலாறு. அதற்கு அடுத்தாற்போல் அவனை வெற்றி கொள்ள அல்லாஹ்வின் கிருபையை நாம் எதிர்பார்த்தே வாழ்பவர்களாக இருக்க வேண்டும்.

பிறை கொள்கையை நாம் பிரச்சாரம் செய்து வருகின்றோம். பிறை நாட்காட்டியை போடுவதை எதிர்த்து யாராவது ஒரு குர்ஆன் வசனத்தையாவது, அலலது ஹதீஸையாவது காட்டியிருந்தால் நீங்கள் குறிப்பிடவும். எனவே விவாதத்திற்கும் நமது பிரச்சாரத்திற்கும் அவர்கள் எந்த வகையிலும் முடிச்சு போட முடியாது. எனவே விவாதம் அல்லாஹ்நாடினால் கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
நிர்வாகி











நமது பதில் :

அலைக்குமுஸ்ஸலாம்..

விவாதத்திற்கு தயாரா? என்று நாம் முதலில் அழைப்பு விடுத்தது போல பேசுகிறீர்கள். விவாதத்திற்கு மௌலவி பிஜே வை அழைத்தது நீங்கள்.
அவர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
நேரடியாக உங்களுக்கும் தவ்ஹீத் ஜமாதிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை எழுதி, நேரடியாக அழைப்பு விடுங்கள் என்பது அவரது கோரிக்கை.

சகோ. கமாலுதீன் மதனி அவர்களது கொள்கையை பிஜே ஏற்றுக்கொண்டார் என்ற உங்களது வடி கட்டிய பொய்யையும் விவாதத்தின் ஒரு அங்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பிஜேவின் வாசகத்தில் சர்வதேச பிறையை அவர் ஆதரித்துள்ளார் என்று உங்களுக்கு புரிகிறது என்பது விபரமற்ற புரிதல். கூறுகெட்டதனமாக ஒன்றை புரிந்தும் கொண்டு அதனால் தான் கமாலுதீன் மதனியையும் அழைத்து வர சொன்னோம் என்று வேறு பேசுகிறீர்கள்.


ஒரு வாதத்திற்கு , பிஜே சர்வதேச பிறையை ஆதரித்தார் என்றே வைத்துக்கொள்வோமே, அதனால் அவர் கமாலுதீன் மதனியை அழைக்க வேண்டும் என்று சொல்வது எந்த அறிவுக்காவது பொருந்துகிறதா?

நாத்திகர்கள் உங்களோடு விவாதம் செய்ய முனைகிறார்கள் என்று வைப்போம். .. அவர்கள் உங்களை நோக்கி, பிஜேவையும் அழைத்து வாருங்கள். நீங்களும் பிஜேவும் கடவுள் உண்டு என்று தானே சொல்கிறீர்கள், ஆகவே ஒத்த கருத்துடைய நீங்கள், அவரை அழைத்து வந்தால் நாங்கள் உங்களுடன் விவாதிக்கிறோம், என்று அவர்கள் கூறினால் அது எவ்வாறு மூடத்தனமோ,கிறுக்குதனமோ, அதற்கு சற்றும் பிசகாமல் இருக்கிறது உங்கள் வாதமும்!!

பலருக்கும் ஒரு விஷயத்தில் ஒத்த கருத்து இருக்கத்தான் செய்யும். மாற்றுக்கருத்தும் இருக்கும். மாற்றுக்கருத்து உடையவர் என்ன செய்ய வேண்டும்? தனது கொள்கைக்கு மாற்றாக கருத்துடைய எவரையும் தனி தனியாக அழைத்து, நாங்கள் உங்களோடு விவாதிக்கிறோம், என்ற பகிரங்க அறைகூவல் விட வேண்டும். தங்கள் கொள்கையை நிலைநாட்டுவது தான் முக்கியமாக கருதப்பட வேண்டுமே அல்லாமல், யாரோடு விவாதிக்கிறோம், அவரது கருத்தை வேறு யாரெல்லாம் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றெல்லாம் பார்க்க தேவையில்லை.

இவையெல்லாம், ""விவாதத்திற்கு அழைத்தது போன்றும் தோற்றமளிக்க வேண்டும், விவாதம் உண்மையில் நடைபெறாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்!"", என்ற எண்ணத்தை தவிர வேறு எதையும் இது போன்ற உங்கள் செயல் வெளிக்காட்டவில்லை!

விவாதத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு மௌனமாகி விடுகிறீர்களே என்று கேட்டால், நாஷித் இதில் சம்மந்தப்பட தேவையில்லை என்கிறீர்கள்.
விவாதத்திற்கு சவால் விட்டு, பின் ஒளிய நினைக்கும் உங்களை வெளிக்கொண்டு வருவதற்கு விவாதக்குழுவில் அங்கத்தினராக வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. நம்மை போன்ற எந்த சாதாரணமானவனும் இதை செய்யலாம்..

பகிரங்க விவாதத்திற்கு அழைத்து விட்டு, அதை ஏற்றுக்கொண்ட பின்னர், ""நாங்கள் திட்டம் தீட்டி வருகிறோம், தயாராகி வருகிறோம், யோசித்துக்கொண்டிருக்கிறோம், விவாதம் என்பது சாதாரண விஷயம் இல்லை, என்றெல்லாம் பேசுவதன் மூலம், மக்களுக்கு உங்கள் மீதுள்ள எண்ணம் எவ்வாறு இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.!

TNTJ பொதுக்குழு


செய்தி வெளியிடப்பட்ட நாள் Sunday, January 30, 2011, 12:54

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில்சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.

இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது.

முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

புதிய மாநில நிர்வாகிகள்

தலைவர் பி.ஜே
பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ்
பொருளாளர் அன்வர் பாஷா
து. தலைவர் அப்துர் ரஹீம்
து. பொதுச் செயலாளர் சைய்யத் இப்ராஹீம்

மாநிலச் செயலாளர்கள்
அப்துல் ஹமீது
சாதிக்
அப்துல் ஜப்பார்
யூசுப் (திருவள்ளூர்)
அஷ்ரஃப்தீன் பிர்தௌசி
மாலிக் (ராம்நாடு)
சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)

பொதுக்குழு தீர்மானம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

2011 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழகம்

1.முஸ்லிம்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பின் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக அரசு சட்டமாக்கியது. ஆனால் இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது முதல் இன்று வரை வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டி அடிப்படையில் 3.5 கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விளம்பரம் செய்யப்படும் போது அந்த விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 ஒதுக்காமல் ஒரு சதவிகிதம் அளவுக்கு ஒதுக்கி பகிரங்கமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதைத் திரட்டி முதல்வரிடம் நாம் கொடுத்து உடனே இவற்றை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடன் அந்தக் குளறுபடிகளைச் சரி செய்வதாக அரசு மூலம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்தனர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின் இரண்டு தடவை துணை முதல்வரைச் சந்தித்து இக்கோரிக்கையை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்க கண்காணிப்பு ஆணைத்தை நேற்று (29.01.11) அமைத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. கண்காணிப்பு ஆணையம் எதிர்காலத்தில் செய்யப்படும் நியமனங்களை மட்டும் கண்காணிக்காமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட காலம் முதல் இது வரை செய்யப்பட்டுள்ள நியமனங்களையும் ஆய்வு செய்யவேண்டும் என்று இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

எனவே முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது, திமுக முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டை சட்டமாக்காமல், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தால் அவர்களை ஆதரிப்பது என்றும், தற்போது நிலைமை இன்னும் தெளிவாகாத காரணத்தால் தேர்தல் நெருக்கத்தில் இன்ஷா அல்லாஹ் மாநில செயற்குழுவைக்கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்ககப்படும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

2. தமிழக அரசின் சமத்துவப் பொங்கல் தமிழக அரசு ஜனவரி 15 ஐ தமிழ் புத்தாண்டாகக் கடந்த 8.2.2008 அன்று அறிவித்து ஆணை பிறப்பித்தது. பொங்கலைக் கொண்டாடுபவர்கள் அந்நாளில் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் வணக்க வழிபாடு செய்வர். பொங்கல் அன்று இது போன்ற வழிபாடு நடத்துவது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களின் நடைமுறை. விருப்பம் உள்ளவர்கள் அதைச் செய்கின்றனர். ஆனால் ஜனவரி 15 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்ததோடு நின்று விடாமல் அனைத்து சமுதாய மக்களையும் அன்றைய தினத்தில் வீடுகளில் விளக்கேற்றுமாறும் வழிபாடு நடத்துமாறும் வலியுறுத்தும் விதமாக தமிழ அரசின் அறிவிப்புகள் அமைந்துள்ளன.

அது மட்டுமில்லாமல் அரசு அலுவகங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் அனைவரும் சமத்துவப் பொங்கல் கொண்டாடுமாறு கட்டளை பிறப்பித்து முஸ்லிம்கள் மீதும் இன்னொரு மதத்தின் நம்பிக்கை தினிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி தமிழக அரசுபொங்கல் பரிசு என்ற பெயரில் அரிசி, வெல்லம் போன்ற பொருட்களை வழங்குகிறது. அவ்வாறு வழங்கும் பையில் சூரியனை வணங்குவது போன்ற ஒரு படத்தை இடம் பெறச் செய்துள்ளது. இது பற்றி சட்டசபையில் நேற்று அமைச்சர் வேலு கூறுகையில் இது எங்கள் சின்னம் அல்ல, பொங்கல் அன்று சூரியனை வணங்குவதை குறிக்கும் சின்னம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசே இது போன்ற செயலை செய்யுமாறு நேரடியாக வலியுறுத்துகின்றது.

அரசு அலுவலகங்களிலும் அன்றைய தினத்தில் வழிபாடு நடத்தப்படுகின்றது.

மத சார்பற்ற ஜனநாயக அரசு, இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் இவ்வாறு கால்நடைகளுக்கும் சூரியனுக்கும் வணக்க வழிபாடு செய்வது முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கையான படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்கு எதிரானதாகும். முஸ்லிம்கள் இது போன்ற வழிபாடுகளில் ஈடுபட வலியுறுத்தும் தமிழக அரசின் செயல் முற்றிலும் ஜனநாயகத்திற்கும் மத சார்பற்ற தன்மைக்கும் எதிரானதாகும்.

தமிழக அரசின் ஜனநாயகத்திற்கும் மத சார்பற்ற தன்மைக்கும் எதிரான இந்த நடவடிக்கையை வண்மையாகக் கண்டிக்கின்றோம் என்பதையும், அரசு இது போன்று செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடறிந்த மூதறிஞருக்கு முஸ்லிம்கள் சூரியனையோ கால்நடைகளையோ வழிபட மாட்டார்கள் என்ற சாதாரண உண்மை கூட எப்படி தெரியாமல் போனது. இஸ்லாம் மதத்துக்கு எதிரான செயலை முஸ்லிம்களும் செய்ய வேண்டும் என்று உத்தரவு இடுவதை சென்ற வருடமும் நாம் கண்டித்து முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அதன் பிறகும் முதல்வர் இவ்வாறு அறிவிப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் ஒரு முறை கண்டிக்கிறது.

3. நடிகர்களுக்கு நிலம்

பாதைகளின் ஓரம் சாரத்தில், கூவத்தின் நாற்றத்தில் குடிசை கட்டிக் கொண்டு மழையிலும் வெயிலிலும் வாடுகின்ற சேரி மக்களைக் கொண்டது தான் தமிழகம். இந்தத் தமிழகத்தில் வன்முறை, ஆபாசம், விபச்சாரம், விரசம் போன்ற தீமைகளின் தொழிற்சாலைகளாகத் திகழ்கின்ற திரைப்படத் துறையினருக்கு, கூத்தாடிகளுக்கு 90 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்துக் கொடுத்து, அதில் வீடு கட்டிக் கொடுக்கும் தமிழக முதலமைச்சரை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அந்நிலத்தைத் திரும்பப் பெற்று வீடில்லாத மக்களுக்கு வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

4. பாபர் பள்ளிபோன்று தொடரும் அக்கிரமம்

பள்ளிவாசல் விஷயத்தில் முஸ்லிம்களில் இரு ஜமாஅத்தார்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டவுடன் காவல்துறையும் வருவாய்த் துறையும் யோர்த்துக் கொண்டு பாபர் மஸ்ஜித்தைப் போன்று இழுத்து மூடுகின்ற அக்கிரமத்தை செய்து வருகின்றன. நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி எஸ்.பி. பட்டணம் பள்ளிவாசலில் இந்த அநியாயத்தை காவல்துறையும் வருவாய்துறையும் நடத்தியது.
இந்த அக்கிரமத்தையும் அராஜகத்தையும் தமிழ அரசு உடனே தடுத்து நிறுத்தும் படி இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கின்றது.

புதுவை அரசு

1. புதுவை மாநில அரசுக்கு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாக புதுவை சட்டமன்றத்தில் புதுவை காங்கிரஸ் அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தைச் சட்டமாக்குவோம் என்றும் ஆந்திராவைப் போன்று புதுவையில் வட்டியில்லா கடன் வழங்குவோம் என்றும் புதுவை காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. ஆனால் 2 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும் அளித்து முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது. அது மட்டுமின்றி ஒட்டு மொத்த புதுவை மாநிலத்தில் இட ஒதுக்கீடு அளிக்காமல் பதுவை காரைக்கால் பகுதியில் மட்டும் தான் இந்த இட ஒதுக்கீடு என்று தகவல்கள் வருகின்றன. அதன்படி பார்த்தால் புதுவை காரைக்காலில் இரண்டு சதம் என்றால் ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் தான் ஆகிறது. ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி முஸ்லிம்களை வஞ்சிக்கும் காங்கிரசின் இந்த துரோகத்தை இந்த பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது

மேலும் வட்டி இல்லா கடன் வழங்குவதாக எழுத்து மூலம் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் புதுவை காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருவதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளதாக மேற்குவங்க அரசு அறிவித்தது. முஸ்லிம் சமுதாயம் இதை வரவேற்று தனது நன்றிகளையும் தெரிவித்தது. ஆனால் அது அறிவிப்போடு நிற்கிறது. அதற்கான எந்த முயற்சியும் செய்வதாக தெரியவில்லை. எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறும் அம்மாநிலத்தில் 25 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்வதைக் கருத்தில் கொண்டு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்குமாறு அம்மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மத்திய அரசு, மாநில அரசு

1. சீர் கெட்டு வரும் சட்டம் ஒழுங்கு

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு கூலிப்படை அட்டகாசம் அதிகரித்தவன்னம் உள்ளண. கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் கடத்தல் அதிகரித்து வருகிறதெனவும், 2007ம் ஆண்டு 1097 பேரும், 2008ல் 1155 பேரும், கடந்த ஆண்டு 1133 பேரும் கடத்தப்பட்டுள்ளனர் என தமிழக காவல்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சட்டங்களும் தண்டனைகளும் சமூக விரோதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தி குற்றங்கள் செய்வதிலிருந்து விலகிப்போக வைக்க வேண்டும். ஆனால் எத்தகைய பயமுமின்றி பிஞ்சுக் குழந்தைகளைக் கொலை செய்தல், கற்பழித்தல் என சமூக விரோதிகள் தொடர்ந்து செயல்படுவது, தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வழங்கும் தண்டனை கடத்தல்காரர்களுக்கு சிறிதளவு கூட பயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை படம் பிடித்து காட்டுகிறது. ஆகையால் இத்தகைய குற்றங்களுக்கு வழங்கும் தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும். அரபு நாடுகளை போன்று சட்டத்தை கடுமையாக்கினால் தான் குற்றங்கள் குறைந்து பொது மக்கள் நிம்மதியாக வாழ முடியும். மக்கள் தம் குழந்தைகளை எவ்வித அச்சமுமின்றி பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்ப முடியும். கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கினால் மட்டுமே சமூக விரோதிகளிடத்தில் பயத்தை ஏற்படுத்த முடியும். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கற்பழிப்பிற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கருத்தை வெளியிட்டிருக்கிறது. எனவே சட்டத்தை இயற்ற வேண்டிய இடத்தினில் இருக்கின்ற மத்திய அரசு இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை என்று சட்டமியற்ற வேண்டும். பொது மக்களின் நலன் என்ற அடிப்படையில் மாநில அரசு இதை வலியுறுத்த வேண்டும்.

2. விலைவாசி உயர்வு

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அநியாய வரிகளே காரணமாக உள்ளன. விவசாயி பாட்டாளி மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அளவில் இது பாதிப்பதால் மத்திய அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவதுடன் பிற நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் பெட்ரோல் டீசலுக்கு வரி விதிப்பதைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3. ஆன்லைன் வியாபாரம்

பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது விலைகள் குறைவதும், உற்பத்தி குறையும் போது விலைகள் அதிகரிப்பதும் இயற்கையாக நடக்கும் நிக்ழ்வு தான். இதற்கு அரசாங்கம் பொறுப்பாகாது என்பது உண்மை என்றாலும் தற்போது விலைவாசி வின்னை முட்டும் அளவுக்கு ஏறியிருப்பதற்கும் மத்திய அரசின் கொள்கை தான் காரணமாகும்.

பொருளைப் பார்க்காமலே உலகில் எங்கோ இருந்து கொண்டு ஆன்லைன் வியாபாரம் மூலம் எல்லாப் பொருள்களையும் முடக்கி வைத்து செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். மத்திய அரசின் அனுமதியும் இதற்கு இருக்கிறது. ஒரு சில பணமுதலைகள் அனைத்துப் பொருள்களையும் ஆன்லைனில் பேரம் பேசி முடக்கி விட்டு தாறுமாறாக விலையை ஏற்றி விற்பனை செய்வதால் தான் தங்கம் முதல் தானியம் வரை விலைவாசி உயர்கிறது. ப.சிதம்பரமும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பணமுதலைகளுக்கு ஆதரவான ஆன்லைன் சூதாட்ட வணிகத்துக்கு உடந்தையாக இருப்பது தான் விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எந்தப் பொருளையும் ஆன்லைன் மூலம் வீற்பதும் வாங்குவதும் முற்றாக தடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. பணக்காரர்களுக்கு ஆதரவான கொள்கை காரணமாக விலைவாசி ஏறுவதற்குக் காரணமான மத்திய அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது

மேலும் பெட்ரோல் விலை ஏற்றம் என்பது இன்னும் பல பொருள்களின் விலை ஏற்றத்துக்கு வழி வகுக்கும் என்பது தெரிந்திருந்தும் மாதத்துக்கு இரண்டு தடவை பெட்ரோல் விலையை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம். 100 ரூபாய் பெட்ரோலுக்கு எழுபது ரூபாய் வரி போட்டு ஒரு பக்கம் மத்திய அரசு கொள்ளை அடிக்கிறது. இன்னொரு பக்கம் நட்டம் எனக் கூறி நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறது. எழுபது ரூபாய் வரி போடா விட்டால் பாகிஸ்தானில் கொடுப்பது போல் 25 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்க முடியும். எனவே பெட்ரோலியப் பொருள் மீது எல்லா வரிகளையும் ரத்து செய்து 25 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களை வெள்ளைக் காரனை விட அதிகம் சுரண்டி பெட்ரோல் விலை உயர்வு மூலம் அனைத்து பொருள்கள் விலையும் ஏறுவதற்குக் காரணமான மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசின் அனைத்து இலவசத் திட்டங்களிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர். இலவச இரண்டு ஏக்கர், இலவச வீடுகள், சமத்துவபுரம் வீடுகள், இலவச வீட்டு மனப்பட்டாக்கள், வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கப்படும் வீடுகள், இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அனைத்திலும் கந்துடைப்புக்காக ஓரிரு முஸ்லிம்களின் புகைப்படம் வெளியிடப்படுகிறது. முஸ்லிம்களின் சதவிகிதத்துக்கும் அவர்களது வறுமை நிலைக்கும் ஏற்ப இவை வழங்கப்படவில்லை என்று இந்தப் பொதுக்குழு குற்றம் சாட்டுகிறது.

அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்குக் கிடைத்தது எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசு

1- பாபர் மஸ்ஜித்

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் நீதிமன்றம் 60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த பாபர் மஸ்ஜித் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை மீள முடியாத அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. அது இந்திய நாட்டின் அரசியல் சட்ட வரம்புகளைத் தாண்டி, இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முரணாக அளிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் வாழ்வுரிமையான வழிபாட்டு உரிமையைப் பறித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது.

பாபர் மசூதி இருந்த இந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இப்படி முடிவு எடுக்க எந்தச் சட்டவிதியும் உரிமையியல் சட்டத்தில் இல்லை. அப்பட்டமாக சட்டம் மீறப்பட்டுள்ளது.

அப்படியே ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் பிறந்திருந்தால் அதற்காக அவர் அந்த இடத்தின் உரிமையாளராவார் என்று இந்தியாவிலும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் சட்டம் இல்லை. எனவே இவர்களின் தீர்ப்பு சட்ட விரோதமானது.

குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அந்த இடத்தில் இதற்கு முன் என்ன இருந்தது என்று தோண்டிப் பார்க்க வேண்டும் என்று இந்தியாவிலோ வேறு எந்த நாட்டிலோ சட்டம் இல்லை. இதையும் அந்த நீதிபதிகள் மீறியுள்ளனர்
தோண்டப்பட்ட இடத்தில் கிடக்கும் பொருளைக் கொண்டு இன்னார் இந்த மாதிரியான கட்டடத்தை இடித்தார் என்று கண்டு பிடிக்கலாம் என்று இந்திய உரிமையியல் சட்டத்தில் சட்ட விதி ஏதும் இல்லை. இதையும் நீதிபதிகள் மீறியுள்ளனர்.

குறிப்பிட்ட இடத்தில் ராமருக்குக் கோவில் இருந்தது என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலையல்ல. அந்த வேலையை நீதிபதிகள் செய்துள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த ராமர் கோவிலை பாபர் இடித்தார் என்று கற்பணையாக முடிவு செய்யும் அதிகாரம் நீதிபதிகளுக்கு இல்லை
ஆவணம் யார் பெயரில் இருந்தது என்பதைப் பார்ப்பது தான் நீதிமன்றத்தின் வேலை. ஆனால் எடுத்துக் காட்டப்பட்ட ஆதாரங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

யாருடைய அனுபவத்தில் இருந்து வருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 1528 முதல் 450 வருடம் முஸ்லிம்களின் அனுபவத்தில் தான் பாபர் மஸ்ஜித் இருந்து வந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் இந்த உண்மையையும் நீதிபதிகள் கண்டு கொள்ளவில்லை.
ஒரு இடம் குறித்து தீர்ப்பு அளிப்பதற்கு ஸ்டேட்டஸ் கோ – அதாவது இப்போது எப்படி இருக்கிறதோ அப்படி நீடிப்பது – என்ற நிலை வழக்குத் தொடுத்த நேரத்தில் உள்ள நிலையைத் தான் குறிக்கும். வழக்குத் தொடுத்த 1949 ல் அது முஸ்லிம்களிடம் தான் இருந்தது. அதை அலட்சியம் செய்து விட்டு இப்போது அது பள்ளிவாசலாக இல்லை என்று கூறியிருப்பது அப்பட்டமான மோசடியாகும்.

1992 வரை அது பள்ளிவாசலாக இருந்தது என்பதும் அது திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதும் உலகறிய நடந்ததாகும். ஆனால் இப்போது பள்ளிவாசல் அங்கே இல்லை என்பதால் அது இந்துக்களுக்குச் சொந்தம் எனக் கூறியிருப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும். பள்ளிவாசல் இடிக்கப்படாமல் இருந்தால் இவர்கள் என்ன தீர்ப்பு சொல்வார்கள்? இடிக்கச் சொல்லி உத்தரவு போடுவார்களா?

இப்படி அடுக்கடுக்கான சட்ட மீறல் செய்து சிறுபாண்மை மக்களுக்கு வரலாற்றில் இது வரை நடந்திராத மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
எனவே சட்ட விரோதமான இத்தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த வழக்கை நாட்டின் உயர் அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உட்படுத்தி சட்டப்படி தீர்ப்பு அளிக்க ஆவண செய்யுமாறு இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து யாருக்கும் அஞ்சாமல் நியாயமான கருத்து தெரிவித்த முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரையும் இந்த அநீதியைக் கண்டித்து குரல் எழுப்பிய நியாயவான்கள், சட்ட வல்லுனர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவரையும் இந்தப் பொதுக்குழு வெகுவாகப் பாராட்டுகின்றது.

அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில் இதை வரவேற்ற திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மற்றும் போலி சமுதாய இயக்கங்களை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற அத்வானி போன்றோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. நீதிமன்றங்களின் மீது இருந்த நம்பிக்கையை இந்தத் தீர்ப்புக்குப் பின் முஸ்லிம்கள் இழந்து விட்டனர். எனவே பாபர் மஸ்ஜிதைப் பூட்டியதற்கும் அதை வழிபாட்டுக்கு திறந்து விட்டதற்கும் பள்ளிவாசல் இடிக்கப்படும் போது தடுக்கத் தவறியதற்கும் பொறுப்பான காங்கிரஸ் கட்சி தனது துரோகச் செயலுக்கு பரிகாரம் தேடும் வகையில் நாடு சுதந்திரம் அடையும் போது யாரிடம் எந்த வழிபாட்டுத்தலம் இருந்ததோ அது அவர்களுக்கே சொந்தம் என்ற சட்ட வரம்புக்குள் பாபர் மஸ்ஜிதையும் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் எல்லா வழக்குகளையும் செயலிழக்கச் செய்து பள்ளிவாசல் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய காங்கிரஸ் அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பாபரி மஸ்ஜித் பாணியில் இனி வேறொரு மஸ்ஜிதில் கை வைப்பதற்கு யார் முயற்சி செய்தாலும் அதே பாணியில் முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணித்து பள்ளிவாசலைக் காக்க வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத்தை இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2. நாடு முழுவதும் தனி இட ஒதுக்கீடு

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் கமிஷன் முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளிலும் அனைத்து மாநிலங்களிலும் பத்து சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்களித்து முஸ்லிம்களின் ஓட்டுக்களை அறுவடை செய்த காங்கிரஸ் நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரை அளிக்கப்பட்ட பின்பும் ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் உறக்கத்தைக் கலைப்பதற்காக 2010 ஜூலை 4 அன்று பதினைந்து லட்சம் முஸ்லிம்கள் திரண்டு நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரயை செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பிரதமரையும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்களையும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து இக்கொரிக்கையை வலியுறுத்தி விளக்கிக் கூறி மனுவாகவும் அளித்தனர். இட ஒதுக்கீடு தருவோம் என்று சொன்ன அவர்கள் இதற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உடனே முஸ்லிம்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தியா முழுவதும் சட்டமாக்க இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

3. கல்வி உதவித் தொகை

சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி, கல்விக் கடன் ஆகியவை சென்ற ஆண்டு அதிகாரிகளின் ஆணவப் போக்காலும் கல்வி நிலையங்களின் அலட்சியப் போக்காலும் பெரும்பாலான முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை. அது போல் நடக்காமல் இருக்க தெளிவான வழிகாட்டுதலை வழங்கி அலைக்கழிக்காமல் முஸ்லிம் சமுதாயம் பயன் பெற தெளிவான வழிகாட்டுதலை அறிவிக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

4. பயங்கரவாதத்தை பாரபட்சமின்றி தடை செய்க

இந்திய நாட்டின் அமைதிக்கும், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக தொடர்ந்து இருந்து வருகின்ற இயக்கங்களின் பட்டியலில் முதலிடம் பெறுபவை ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவார் இயக்கங்கள் தான். மாவோயிஸ்ட்டுகளின் தீவிரவாதத்திற்கு சற்றும் குறையாத இத்தகைய இந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் தான் நம் நாட்டில் நிகழ்ந்த பல குண்டுவெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்டவை என்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழுநேர ஊழியராக பணியாற்றும் சுவாமி அசீமானந்தா நீதிபதியிடம் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் பயங்கரவாதச் செயல்களில் துளியும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்களைக் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டனர் என்று காவி மயமாகிப் போய்விட்ட காவல்துறையும் புலனாய்வு துறையும் கைகோர்த்துக் கொண்டு அவர்களைக் கைது செய்து அப்பாவிகளின் வாழ்க்கையை சிதைத்து விட்டனர். எனவே அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை அளித்து, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஊடகங்களின் வழியாக பகிரங்கமாக அறிவித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட மாநில அரசுகளயும் மத்திய அரசையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஹனீப் என்பவர் ஆஸ்திரேலிய அரசால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் அவர் அப்பாவி என்பதை அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய அரசு அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதுடன. பால கோடி ரூபாய் நட்ட ஈட்டையும் வழங்கியுள்ளது. அந்நிய நாட்டுக்காரருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஆஸ்திரேலிய நாடு நீதி வழங்கும் போது சொந்த நாட்டு மக்களை பொய் வழக்கில் கைது செய்த மத்திய மாநில அரசுகள் அதற்கு மன்னிப்பு கேட்காததுடன் நட்ட ஈடும் வழங்காமல் இருப்பது நாட்டுக்கு அவமானம் என்று இப்பொதுக் குழு சுட்டி காட்டுகிறது. நாட்டில் நிகழ்ந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் முழுமையாக திறந்த மனதுடன் விசாரிக்கும் வண்ணம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு உடனே ஏற்படுத்த வேண்டும். அந்த குழுவில் காவி சிந்தனையுடைய அதிகாரிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை. மகாராஸ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே படுகொலையையும் இந்துத்துவாவினர் தான் செய்திருப்பார்கள் என்பதை திக் விஜய் சிங் வெளியிட்ட தொலைபேசி உரையாடல் நிரூபிக்கிறது. ஆகவே இந்தப் படுகொலையையும் மீண்டும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும். உண்மையை வெளிக்கொணர வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் இந்த விசாரணையை மத்திய அரசு அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

5. பள்ளிவாசலை இடித்த காங்கிரஸ்

தில்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீன் இரயில் நிலையம் அருகிலுள்ள ஜானக்புரி பி பிளாக்கில் உள்ள நூர் மஸ்ஜித் என்ற முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலம் ஒன்றை அரசு நிலத்தில் இருப்பதாகப் பொய்யான காரணமொன்றைக் கூறி கடந்த 12 ஆம் தேதி தில்லி மாநில காங்கிரஸ் அரசு இடித்து தரை மட்டமாக்கி இருக்கிறது. இந்தப் பள்ளிவாசல் புறம்போக்கு நிலத்திலில்லை. மாறாக வக்ப் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் தான் இருக்கிறது என்பதற்கான ஆவணங்களை வக்ப் வாரியம் சமர்ப்பித்த பிறகும் கூட தில்லி மாநில காங்கிரஸ் அரசு மத துவேசத்துடன் நூர் பள்ளிவாசலை இடித்திருக்கிறது. முஸ்லிம்களின் பரவலான எதிர்ப்பால் கலவரமடைந்த தில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் மீண்டும் பள்ளிவாசல் கட்டித்தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதே போன்றதொரு அறிவிப்பைத் தான் பாபர் மஸ்ஜித் இடித்த சமயத்தில் அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களான பள்ளிவாசல்களை இடிப்பதில் காங்கிரஸ்காரர்களும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பள்ளிவாசல் இடிப்பு உறுதிப்படுத்துகிறது. ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு திபியாவாலி என்று அழைக்கப்படும் புராதனச் சின்னமாகத் திகழ்ந்த பள்ளிவாசல் ஒன்றை இடித்தது. இப்போது மறுபடியும் இன்னொரு பள்ளிவாசலை இடித்து பாஜகவுக்கு சமமாக காங்கிரசிலும் காவிச் சிந்தனை பரவியிருக்கிறதென்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் இடிப்பினாலும், அதன் பின்னர் வெளியான பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பினாலும் காங்கிரசின் மேல் கடுமையான அதிருப்தியில் இருக்கின்ற இந்திய முஸ்லிம்களை இந்த பள்ளிவாசல் இடிப்பு இன்னும் அக்கட்சியின் மேலுள்ள வெறுப்பை அதிகமாக்கியிருக்கிறது. இந்த வெறுப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் உட்பட பல மாநிலத் தேர்தல்களில் எதிரொலித்து காங்கிரசின் ஆட்சிக்கட்டில் கனவை நிராசையாக்கி விடுவதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கியிருக்கின்றன. இதற்குப் பிறகும் காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களைச் சீண்டிக் கொண்டிருந்தால் அக்கட்சியை மழையில் கரையும் மணல் கோட்டையைப் போன்று கரைத்து, மத்திய ஆட்சிக் கட்டிலிலிருந்தும் காங்கிரசை அகற்றி விடுவார்களென்பதை காங்கிரஸ் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அரசு நிலத்தில், நடைபாதையில் இருக்கிற வழிப்பாட்டுதலங்களை அகற்ற முடியாத காங்கிரஸ் அரசு காவி உணர்வுடன் முஸ்லிம்களின் சொந்த நிலத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்களைக் குறிவைத்து இடித்ததை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

6. சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரம் உரியோருக்கு வழங்கப்படாமல் அப்படியே திரும்ப அனுப்பப்படுகின்றது. முஸ்லிம்கள் இந்த நிதி கோரி விண்ணப்பிக்கும் போது அந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றே சம்பந்தப்பட்டத் துறையினர் பதிலளிக்கின்றனர். இந்த அநீதியை உடனே தடுத்து நிறுத்தி உரியவருக்கு நிதி கிடைக்க ஆவண செய்யுமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7. வக்ஃபு சொத்துகள்

முஸ்லிம் சமுதாயத்தின் தனவந்தர்கள் அறப்பணிகளுக்காக அர்ப்பணித்துச் சென்ற சொத்துக்கள் வக்பு வாரியத்தின் துணையுடன் தான் சுருட்டப்பட்டுள்ளன. எனவே கிறித்தவ சமுதாயம் எப்படி தனது அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசின் தலையீடு இல்லாமல் தானே நிர்வகித்துக் கொள்கிறதோ அது போல் முஸ்லிம்களின் வக்பு சொத்தை அந்தந்த பகுதி முஸ்லிம்களே நிர்வாகம் செய்யும் வகையில் வக்பு போர்டை முற்றாகக் கலைத்து விட வேண்டும். சில தனியார்கள் வர்த்தக நோக்கத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு உதவும் வகையில் வக்பு வாரிய லட்டர் பேடில் வாரியத் தலைவர் நிதி உதவி கேட்டு செல்வந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். வக்பு வாரியத்தின் சார்பில் இக்கல்லூரி நடத்தப்படுகிறது என்று பொய்யான தகவலை அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். வக்பு வாரியத்தின் பெயரை தனி நபர்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளாக அறியப்படும் தமுமுகவினர் நடத்திய போராட்டத்தில் பேருந்துகள் சேதமாக்கப்பட்டதற்கு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மீது வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிக்கும் தமிழக அரசின் பழிவாங்கும் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய அரசு

8. தொல்லியல் ஆய்வு கழகம்

1948ல் டெக்கானில் தவ்லதாபாத் கோட்டையிலுள்ள ஜும்ஆ மஸ்ஜிதை தொல் பொருள் ஆய்வுக் கழகம் கோயிலாக மாற்றியது. 2003ல் மத்திய பிரதேசம் தார் என்ற ஊரில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கமால் மவ்லா பள்ளிவாசலை இந்துக்கள் வணங்கும் கோயிலாக மாற்றியது.
16ஆம் நூற்றாண்டில் ஷேர்ஷா ஆட்சியில் சூரியில் கட்டப்பட்ட புராண கிலாவுக்குக் கீழ் இந்துக்களின் இந்திர பிராஸா நகரம் இருப்பதாக தொல்பொருள் ஆய்வுக் கழகம் கதை கட்டியது.

இப்படி முஸ்லிம்களின் கோட்டை, கொத்தளங்கள், பள்ளிவாசல்கள், நினைவுச் சின்னங்களுக்கு உள்ளே கோயில் இருப்பதகாகக் கதை கட்டுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டு தொல்பொருள் ஆய்வுக் கழகம் செயல்பட்டு வருகின்றது. பாபரி மஸ்ஜித் பள்ளி விஷயத்தில் அதைக் கோயிலாக மாற்றுவதற்கு இந்தக் கழகம் தான் முழு வேலையையும் செய்து வருகின்றது.

இப்படி மத துவேஷத்தைத் தூண்டி, வகுப்புக் கலவரத்திற்கு வித்திடுகின்ற இந்தத் தொல் பொருள் ஆய்வுக் கழகத்தை மத்திய அரசு உடனே கலைக்கவேண்டும்; அதன் கைவசம் உள்ள 118 பள்ளிவாசல்களை உடனே முஸ்லிம்களிடம் மீட்டித் தர வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

உலகம்

1. துனிஷியா,எகிப்து புரட்சி

துனிஷியாவிலும் எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி வெடித்திருக்கின்றது. இதுவரை இஸ்லாமிய நாடுகளில் இல்லாத தற்கொலை முயற்சிகள் அண்மையில் துனிஷியாவில் தொடங்கி தற்போது அவை எகிப்து, அல்ஜீரியா நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கின்றது.
இஸ்லாமிய நாடான எகிப்தின் ஆட்சி ஃபிர்அவ்னிடமிருந்து மீட்கப்பட்டு மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்நிய சக்திகளிடமிருந்து மீட்கப்பட்டு முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சமுதாயங்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது அடிப்டைக் காரணம் அவர்களிடமிருந்த ஏகத்துவக் கொள்கை தான்.

இந்த ஏகத்துவத்தை மறந்ததால் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள துனிஷியாவில் இதுவரை 23 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய ஜைனுல் ஆபிதீன் என்பவர் நாட்டை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டு விட்டார்.

அதுபோல் ஏகத்துவக் கொள்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட எகிப்தையும் ஃபிர்அவ்னை விடக் கேடாக ஆட்சி செய்கின்ற அதிபர் ஹோஸ்னி முபாரக், கலவரத்தை அடக்குவதற்காக முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், கைது செய்து சிறையிலடைத்தும் கொண்டிருக்கின்றார். இந்தக் கொடுமைகளை நிறுத்தி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஹோஸ்னி முபாரக்கைக் கேட்டுக் கொள்வதுடன் இந்தப் புரட்சி தங்கள் நாடுகளிலும் தொற்றிக் கொண்டு விடுமோ என்று பயப்படுகின்ற இஸ்லாமிய நாடுகள், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, தாங்கள் நாடுகளில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான ஆட்சியை அமைத்துக் கொள்ளும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது. 2. பலஸ்தீன ஆக்கரமிப்பு

பலஸ்தீன ஆக்கிரமித்து அந்நாட்டின் மக்களை அகதிகளாக்கி அவர்களையும் அன்றாடம் அழித்து தனது ஆக்கிரப்பை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலை வன்மையாக கண்டிப்பத்துடன் அந்நாட்டுடன் தனது உறவை இந்தியா உடனே துண்டித்துக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொழுக் குழு கேட்டுக் கொள்கின்றது.

அல்லாஹ் கீழ் வானத்தில் இறங்குகிறானா?

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பதையும், அவன் அர்ஷிலிருக்கிறான் என்பதும் கீழ் வானத்தில் இறங்குகிறான் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது அல்ல என்பதையும் குர் ஆன் ஹதீஸ் ஒளியில் அறிந்து கொள்ள இந்த ஆய்வுக்கட்டுரையை படிக்கவும்..

http://onlinepj.com/kolkai-vilakkam/allah_uruvamatravana/

யாருடைய முடிவை வரவேற்கிறீர்கள்..?

------




TNTJ&TMMK.jpg

காரி உமிழ தகுதியான மம கட்சி தீர்மானம்

அஸ்ஸலாமு அலைக்கும்

மம கட்சி பொதுக்குழு தீர்மானம் : அதிமுக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு பல்வேறு அம்சங்களில் மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகின்றது. இந்த அரசை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கூட்டணி வெற்றிபெற பாடுபடுவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.


கடந்த 2006 ஆம் ஆண்டு, சட்டசபை தேர்தலின் போது, கருணாநிதிக்கு வால் பிடித்துக்கொண்டிருந்த இவர்கள், தவ்ஹீத் ஜமாத்தினர் அதிமுகவை ஆதரித்த போது, என்னென்ன கோஷங்களையும் விமர்சனங்களையும் எழுப்பினார்கள் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்..

பாசிச சிந்தனையாளர் ஜெயலலிதா, நரேந்திர மோடிக்கு விருந்தளித்த ஜெயலலிதா, தீய சக்தி ஜெயலலிதா, முஸ்லிம் விரோத ஜெயலலிதா, என்றெல்லாம் இதே மாமா கட்சியினர் கோஷம் விளித்ததை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்! அத்தகைய பாசிச, தீய சக்தியின் வெற்றிக்கு தான் இவர்கள் பாடுபட போகிறார்களாம்!



இவை அனைத்தையும் மறந்து விட்டவர்களுக்காக, முன்னர் இந்த சந்தர்ப்பவாத கூட்டம் அதிமுக விற்கு எதிராக வைத்த விமர்சனங்கள் அனைத்தும் விரைவில் மீண்டும் இங்கு பட்டியலிடப்படும் , இன்ஷா அல்லாஹ்..

அரசியல் என்னும் சாக்கடையில் நீந்திக்கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத "ராமதாசுகளாக" நாங்களும் மாறி விட்டோம் என்று, அனைவரும் காரி உமிழும் வகையில் வெளிப்படையாக இவர்கள் அறிவித்திருப்பதை கவனியுங்கள்..

கேவலமான அரசியல் நிகழ்த்துவது யார்?

அரசியல் என்பதே சமுதாய நலன் என்றிருந்த காலம் மலையேறி, பணம் புகழ் சம்பாதிக்கும் கேந்திரமாக இன்றைய அரசியல் சூழல் ஆகி விட்ட நிலையில், அதற்கு நாங்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று கூறி புறப்பட்ட இவர்கள், சமுதாய நலன் என்று பேசுவதே வெட்கக்கேடானது..

அடிப்படையில் ஒன்றை இந்த சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்..

ஒரு முஸ்லிம் என்பவனுக்கு கொள்கை இருக்க வேண்டும்.. கொடுத்த வாக்கின் படி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.. இந்த அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட சமூக அக்கறை இருக்க வேண்டும்.
இந்த மூன்றும் ஒருங்கே நிரம்பிய ஒருவனே சமுதாய தொண்டாற்ற வேண்டும்..

மேலே நாம் குறிப்பிட்ட அளவுகோல்களில் ஒன்றை கூட பெற்றிருக்காத இந்த தமுமுகவினர், சமுதாய நலன் காக்க அரசியலில் நுழைகிறோம் என்று பிதற்றுவது, சமுதாய நலனையும் அதன் தன்மானத்தையும் அடகு வைக்கும் செயலே தவிர, காப்பாற்றும் செயல் அல்ல!
தங்களது தன்மானத்தையே அடகு வைப்பவர்களிடம் சமுதாயத்தின் தன்மானத்தை பற்றிய அக்கறையை நாம் எதிர்ப்பார்க்க கூடாது.

சமுதாய அக்கறை கொண்டவர்களை மேலே நாம் குறிப்பிட்ட அளவுகோல்களை கொண்டு அலசுவதாக இருந்தால் துவக்கம் முதலே அலசிப்பார்க்கலாம்..

  • ஏகத்துவக் கொள்கையும் அதன் பிரசாரமும் சமுதாய தொண்டாற்றுவதற்கு குறிக்கே நிற்கிறது என்று பேசியவர்கள் சமுதாய நலனை பேணுபவர்களா?

  • தங்களுக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் வந்து விட்டது என்று ஒடுக்கப்பட்ட நம் சமூகத்தினர், வரலாறு அதுவரை கண்டிராத எழுச்சியுடன் முகமலர்ந்த நேரத்தில், எந்த நிலையிலும் எந்த அரசியல் பதவியையும் நாம் பெற மாட்டோம், இறுதி வரை மக்களுடன் மக்களாக உழைத்துக்கொண்டே இருப்போம் என்று வாக்கு கொடுத்தார்களே, இன்று அந்த வாக்கின் படி நிற்காமல் சமூகத்தை வஞ்சிதவர்கள் சமூக நலனை பற்றி பேசுவதா?

  • இந்த சமுதாய மக்களையும், சமுதாயத்திற்காக குரல் கொடுப்பவர்களையும் இழிவு படுத்தும் நோக்கில், தமிழக அரசியல் கட்சிகளுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தார்களே, அது தான் சமுதாய நலனா?

  • அடிமை சாசனம் எழுதும் அளவிற்கு அவர்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் விதங்களிலும், தவறுகளை கண்டிக்காதவர்களாகவும், காட்சி தருகிறார்களே, அது தான் சமுதாய நலனா?

  • சமுதாயத்திற்காக அரசியல் கட்சிகள் என்ன செய்கிறது என்பதை கண்டு கொள்ளாமல், தங்கள் கட்சிக்காக என்ன செய்கிறது என்பதை மட்டும் அலசுவது தான் சமுதாய நலனா?

  • துவக்கத்தில், கலைஞரின் வாலை பிடித்து விட்டோம் என்பதற்காக, இட ஒதிக்கீடு தரும் அதிகாரம் கலைஞருக்கு இல்லை, நாங்கள் டில்லி செல்கிறோம், என்று உலக மகா புளுகு ஒன்றை புளுகினார்களே, அது தான் சமுதாய நலனை காக்கும் லட்சணமா?

  • கலைஞர் இட ஓதிக்கீட்டில் துரோகம் இழைத்த போதும் கூட, அதை சப்பை கட்டு கட்டி நியாயப்படுதினார்களே, அந்த ஈன செயல் தான் இவர்களின் பார்வையில் சமுதாய நலனா?

  • கலைஞர் இரண்டு தருகிறார் என்பதற்காக, அவருக்கு வால் பிடித்து, இப்போது அவர் தரவில்லை என்பதற்காக அம்மா பக்கம் செல்கிறார்களே, இவர்கள் தங்கள் சுய நலனை கவனித்தார்களா சமுதாய நலனை கவனித்தார்களா?

  • பிஜே அதிமுக வை ஆதரித்தார் என்ற ஒற்றை காரணத்திற்காகவே அதிமுகவை விமர்சனம் செய்து கண்டித்தவர்கள், இன்றைக்கு அதே ஆதிமுக வின் வெற்றிக்காக பாடு படுவோம் என்று அறிவிப்பது கேவலமில்லையா? இத்தகைய கேவலமான செயலை செய்தும் கூட சமுதாய நலனில் இவர்கள் அக்கறை காட்டுபவர்கள் என்று மக்கள் நம்பி விடுவார்களா?

  • ஆரம்ப காலத்தில், சமுதாய மக்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற வக்கில்லாமல் இன்று வாரியம், MP பதவி, MLA பதவி என்று சபலப்படுகிறார்களே, இவர்களா சமுதாய நலனை காப்பவர்கள்?

  • வெறும் இயக்கம் நடத்திக்கொண்டிருந்த பொழுதே சுனாமி வசூல், பித்ரா வசூல் என்று சமுதாய மக்களிடம் இருந்து பிடுங்கி தின்றார்களே, இவர்களா பதவிக்கு வந்த பின்னர் சமுதாய மானம் காப்பார்கள்?

காசுக்கும், சீட்டுக்கும் வேண்டி கட்சிகளிடம் பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள் கேவலமான அரசியல் நடத்துகிறார்களா? அல்லது சமுதாயதிற்காகவும், அதன் முன்னேற்றதிற்காகவும் மட்டும் பேரம் பேசுபவர் கேவலமான அரசியல் செய்பவரா?
விமர்சனம் செய்வதற்கென்ற அடிப்படை தகுதியாவது உங்களுக்கு இருக்கிறதா?
கேவலத்தை பற்றி யார் யாரை நோக்கி பேசுவது?

ஏகத்துவம் தமிழகத்தில் வளரவே கூடாது என்ற கொள்கையை உயிர் மூச்சாக கொண்டு, வெறும் வாரியப்பதவியை வைத்துக்கொண்டே ஏகத்துவவாதிகளுக்கு இவர்கள் செய்த அட்டூழியங்களை பட்டியலிட்டால் இவர்கள் சமுதாய நலனை காப்பவர்களா அல்லது சமுதாய துரோகிகளா? என்பதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.. அத்தகைய பட்டியல் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்..

இந்த கருவை, அது கருவாக இருக்கும் போதே அழித்து விட வேண்டுமே அல்லாமல், வளர விடுவது நம் சமூகத்திற்கும், இஸ்லாமியக்கொள்கைக்குமே நாசக்கிருமியாய் மாறி விடும்..

மேலே உள்ளவற்றுக்கும், சமுதாயம் சார்பாக நாம் அடுத்தடுத்து வைக்கப்போகின்ற பல பல கேள்விகளுக்கும் முறையான பதிலை சொல்லி, நாங்கள் கேவலமான அரசியல் செய்யவில்லை என்று தமுமுகவினர் நிரூபிக்க தயாரா?
இதற்கு தயாராகாதவரை, இந்த சமுதாயத்தின் எந்த அங்கீகாரமும் இவர்களுக்கு இனி கிடைக்காது இன்ஷா அல்லாஹ்!

மானம் காப்பார்களா? மானமிழந்து நிற்பார்களா?

சென்ற பாராளுமன்ற தேர்தலில் ம.ம. கட்சி என்ற மனிதநேய மக்கள் கட்சியினர் கொடுத்த பில்டப்புகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். நாங்கள் கைதேர்ந்த அரசியல்வாதிகள் என்பதை தங்களது பில்டப்புகள் மற்றும் புருடாக்களின் வாயிலாக நிரூபித்தனர்.

ஆம்! தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிதற்கு இவர்கள் கூறிய காரணங்களைப் பட்டியல் போட்டால், சிரிப்பு தாங்க முடியாது. அது ஒரு பெரிய காமெடி ஷோ. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் அவர்கள் ஆடிய காமெடி ஷோ பற்றி உணர்வு வாசகன் என்ற முறையில் உங்களிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

ம.ம. கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம்:
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற்காகத் தான் ம.ம.க.வே தொடங்கப்பட்டுள்ளது என்று தங்களது அதிகாரப்பூர்வ இதழில் அறிவித்தனர்.

இரண்டு எம்.பி சீட் பெறுவது தான் சமுதாய மானம் காப்பதாம்!

ஒரு எம்.பி சீட்டைக் கொடுத்து முஸ்லிம்களைத் திராவிட அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருவதாகவும், இந்தத் தேர்தலில் ஒரு எம்.பி சீட்டை வாங்கிக் கொண்டு மானம் இழக்க மாட்டோம் என்றும், இரண்டு எம்.பி சீட் வாங்கி சமுதாயத்தின் மானத்தைக் காபோம் என்றும் தங்களது அதிகாரப்பூர்வ இதழில் சூளுரைத்தனர்.

முதல் கட்டம்:
நாங்கள் அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளிலிருந்து ஏதாவது மூன்று தொகுதிகள் தேவை என ம.ம.க. சார்பில் தி.மு.க விடம் கேட்கப்பட்டுள்ளதுஎன்று முதலில் அறிவித்தனர்.

இரண்டாம் கட்டம்:
பூஜ்யத்திலிருந்து புறப்பட்டு ஒரு தொகுதி என்ற நிலையிலேயே திமுக தரப்பு நின்றது. ம.ம.க. குழுவினர், ‘இரண்டு தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபாவும்என்ற நிலைக்கு வந்தனர். கடைசியாக, ‘இரண்டு தொகுதிகள் தந்தால் சரிஎன்ற மனநிலைக்கு ம.ம.க. தரப்பு மனதளவில் தயாராக இருந்தது. தங்கள் பலத்திற்கேற்ப குறைந்தது 2 தொகுதிகளைத் தாருங்கள் என்று தான் ம.ம.க. கேட்டது. அடிமை அரசியலை விட தன்மான அரசியலே முக்கியம் என்ற நிலையில் ம.ம.க.வும் உறுதி காட்டியது என்று இரண்டாம் கட்டமாக அறிவித்தனர்.

மூன்றாம் கட்டம்:
ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும், சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும்என்றும், ம.ம. கட்சியின் மகத்துவம் கருதி காங்கிரஸே தங்களுக்கு தி.மு.க வழங்கும் தொகுதியில் ஒரு தொகுதியை விட்டுத் தரும் என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து சொன்னார்கள் என்று மூன்றாம் கட்டமாக அறிவித்தனர்.

அத்தோடு மட்டுமில்லாமல் தங்களை நூற்றுக்கணக்கான அமைப்புகள் ஆதரிப்பதாகச் சொல்லி ஒரு நீண்ட…… பட்டியலையும் வெளியிட்டனர்.
பட்டியல் விபரம்:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமி, தேசிய லீக் (நிஜாமுதீன்), கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் பேரவை, AIOBC, இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம், தமிழ் மீனவ விடுதலை வேங்கைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம், தமிழக உரிமை இயக்கம், அருந்ததியர் நல அமைப்பு போன்ற அமைப்புகளும் மற்றும் பல்வேறு அரசு சாரா அமைப்புகள், சங்கங்கள் ஆகியவை மனித நேய மக்கள் கட்சியை ஆதரித்துள்ளன. இவற்றில் பல அமைப்புகள் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
ஆக இவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்கின்றார்கள் என்று இந்த ம.ம. கட்சிக்காரர்களே அறிவித்துள்ள நிலையில் இப்போது இவர்களது நிலை குறித்து நாம் ஆய்வுசெய்வோம்.

பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற்காகத் தான் ம.ம.க.வே தொடங்கப்பட்டுள்ளது என்றும், ஒரு தொகுதியைப் பெறுவது தன்மானத்திற்கு இழுக்கு என்றும், சமுதாயத்தின் மானம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என்பது தான் இவர்களது வாதம். மேலும், சமுதாயத்தின் மானம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான், அதாவது இரண்டு எம்.பி சீட்டுக்கள் வேண்டும் என்பதற்காகத் தான் கீழ்க்கண்ட மாபெரும் தியாகங்களை(?) செய்ததாக பட்டியலிட்டனர்.

1.வக்புவாரியப் பதவியை துச்சமாக மிதித்து தூக்கி எறிந்தோம்
2. சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியைத் தர காங்கிரஸ் தாயாராக இருந்தும் அதையும் துச்சமாக மிதித்து தூக்கி எறிந்தோம்.
3. யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியையும் காங்கிரஸ் தரப்பில் தரத் தயாராக இருந்தும் அதையும் துச்சமாக மிதித்து தூக்கி எறிந்தோம்.
4.ஒரு தொகுதியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஆற்காடு வீராசாமி எங்களது கையைப் பிடித்து கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சினார். நாங்கள் ஏற்கவில்லை. எங்களுக்கு சமுதாயத்தின் மானம் தான் முக்கியம். ஒரு தொகுதியை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக நின்றோம்.
(என்னங்க! இவுங்க விடுகின்ற புரூடாவுக்கு ஒரு அளவில்லையா? எனக் கேட்டு மனதுக்குள்ளே சிரிப்பு வருதா? அது தான் ம.ம. கட்சிங்கிறது)
இத்தனை புரூடாக்களும் எதற்கென்றால், நாங்கள் மானம் காத்து நான்கு தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றோம் என்பதற்காகத் தானாம்.

18 தொகுதிகள் தராவிட்டால், கூட்டணியை விட்டுவெளியேறி மானம் காக்க வேண்டும்”:

இவர்கள் ஏற்கனவே சொன்ன கணக்குப் பிரகாரம் 3பாரளுமன்ற தொகுதிகள் இவர்களுக்குத் தேவை. மூன்று தொகுதிகள் இல்லாவிட்டாலும் இரண்டு தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபாவும் தேவை. அப்போது தான் சமுதாயத்தின் மானம் காக்கப்படும். இல்லாவிட்டால் நமது இஸ்லாமிய சமுதாயம் மானமிழந்து நடுத்தெருவில் நிற்கும்(?). எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் நமது சமுதாயத்தின் மானத்தைக் காக்க வேண்டும் என்றால் 3 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு இணையான சட்டமன்ற தொகுதிகளை இவர்கள் பெற்றாக வேண்டும்.

ஒரு பாராளுமன்றத் தொகுதி = ஆறு சட்டமன்ற தொகுதிகள்.

அதாவது ஆறு சட்டமன்ற தொகுதிகள் இணைந்தது தான் ஒரு பாராளுமன்றத் தொகுதி.

அப்படியானால், இவர்கள் தி.மு.க விடம் கேட்ட பிரகாரம் இவர்களது அசுர பலத்தை(?) கருத்தில் கொண்டு அதிமுகவில்,
மூன்று பாராளுமன்றத் தொகுதி X ஆறு சட்டமன்ற தொகுதிகள் = 18 சட்டமன்றத் தொகுதிகள்.

அதாவது மூன்று பாராளுமன்றத் தொகுதிகளுக்கு நிகரான பதினெட்டு சட்டமன்றத் தொகுதிகளை இவர்கள் பெற வேண்டும்.
ஆக, இவர்கள் கேட்ட மூன்று பாராளுமன்றத் தொகுதிகளுக்கு இணையான பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளை இவர்கள் அதிமுக கூட்டணியில் பெற்றால் தான் சமுதாயத்தின் தன்மானம் காப்பாற்றப்படுமே அல்லாமல், அதற்குக் குறைவான தொகுதிகளை வாங்கிக் கொண்டு இவர்கள் பல்லிலித்துக் கொண்டு கூட்டணியைத் தொடர்ந்தால் இவர்களுக்கு மானமில்லை என்று இவர்களே தங்களது நெற்றியில் எழுதி ஒட்டியதாகத் தான் மக்கள் இவர்களை காரித் துப்புவார்கள். இவர்கள் குறிப்பிட்டது போல சமுதாயத்தின் மானமும் கப்பலேறிவிடும்.

அதிமுக கூட்டணியில் இவர்கள் பதினெட்டு தொகுதிகளுக்கு குறையாமல் வாங்கி தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போது தான் சமுதாயத்தின் தன்மானம் காப்பாற்றப்பட்டு, அவர்களது மானமும் கப்பலேறாமல் இருக்கும். அப்படி அதிமுக பதினெட்டு சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க மறுத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டு தன்மானத்தை நிலை நாட்டுவார்கள் என்று நம் சமுதாய மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ம.ம.கட்சியினர் 18 தொகுதிகளுக்குக் குறைவாக அதிமுக ஒதுக்கினால் அதைப் புறக்கணித்து விடுவதாக முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது போல் அதற்கு நிகராக 24 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்டு மானம் காத்தே தீருவது என்று உறுதியான முடிவு செய்து விட்டதகவும் 24 வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு:
நாங்கள் போட்டியிட்ட தொகுதியில் எல்லோரும் எங்களது சின்னத்தில் தான் பொத்தானை அமுக்கினார்கள். ஆனால், அது வேறு சின்னத்தில் விழுந்து விட்டது. எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். அப்படி வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வந்தால் தான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம் என்று அதன் பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் ஒரு தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதிபடத் தெரிவித்திருந்தார். மின்னனு எந்திரங்களைப் பயன்படுத்தி வரக்கூடிய தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றால் தங்களது கொள்கை உறுதியை வெளிப்படுத்தி தேர்தலைப் புறக்கணிப்பார்கள் என்று நாம் பலமாக நம்புகின்றோம். ஏனென்றால் இவர்கள் தான் கொள்கையில் ரொம்ப உறுதி(?)யனவர்களாச்சே!

கடைசியாக வந்த செய்தி:

அதிமுக அணியில் இவர்களது கொள்கை உறுதி காரணமாக, 15தொகுதிகள் வரை தருவதாகவும், இவர்கள் இன்னும் மூன்று தொகுதிகளை சேர்த்து 18 தொகுதிகள் தந்தால் தான் கூட்டணியில் நீடிப்போம். எங்களுக்கு சமுதாய மானம் தான் முக்கியமே தவிர, சீட்டுக்கள் முக்கியமல்ல என்று உறுதியாக நிற்பதாகவும், அப்படி அதிமுக தலைமை கூடுதலாக மூன்று இடங்களை ஒதுக்கி 18தொகுதிகளை தரமறுக்கும்பட்சத்தில் 24தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக அவர்களிடத்திலிருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உணர்வு வாசகர் மன்றம்