வெள்ளி, 1 ஏப்ரல், 2011

கீழே விழுந்தாலும் மீசையில்...

அஸ்ஸலாமு அலைக்கும்..

பிறையை கண்ணால் பார்க்க தேவையில்லை, முன்கூட்டியே கணித்து காலண்டர் அடித்துக்கொள்ளலாம் என்ற அபத்தமான கொள்கையை மக்களிடையே பரப்பி வந்த ஹிஜ்ரா கமிட்டி என்ற ஒரு கூட்டம் , சில மாதங்களுக்கு முன்னர் இது சம்மந்தமாக பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை நேரடி விவாதத்திற்கு அழைத்தது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அவர்களின் அழைப்பை ஏற்று, நேரடியாக தலைப்பையும், ஒப்பந்த தேதியையும் குறிப்பிட்டு தலைமைக்கு எழுதுங்கள் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கேட்டுக்கொண்ட நிலையில், இன்றைய தினம் வரை அதற்குரிய வேலையில் இறங்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர் இந்த ஹிஜ்ரா கமிட்டி கூட்டம்.

இதனிடையே, தொடர்ந்து இவர்களது கொள்கை எந்த அளவிற்கு அடிப்படையற்ற , குர் ஆன் ஹதீசுடன் மோதக்கூடிய வகையில் உள்ளன என்பதை பல சந்தர்ப்பங்களில் மக்களிடம் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டன என்பதும் அனைவரும் அறிந்ததே.. நேரடி விவாதத்திற்கு இவர்கள் தயாராகிற போது, அத்தனை அபத்தங்களும் அவர்கள் முன்னிலையில் தோலுரித்துகாட்டப்படும் நிலையில் தயாராக இருந்தன.

இந்நிலையில், இவற்றை அறிந்து கதிகலங்கியதாலோ என்னவோ, இறுதியாக இவர்கள் விடுத்த அறிக்கையில், "தாங்கள் நேரடி விவாதத்திற்கு தவறுதலாக பிஜேவை அழைத்து விட்டோம் எனவும், தாங்கள் நேரடி விவாதத்திற்கு தயாரில்லை" என்பதையும் மிக வெளிப்படையாக, எந்த வெட்கமும் இன்றி மார்ச் 29 அன்று அறிவித்தனர்.

அது குறித்து விளக்கமாக அறிய இங்கே சொடுக்கவும்..
http://onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/vivathika_thayarillayam/


இவர்களுடைய வெட்கமற்ற செயல் இவ்வாறு விளக்கப்பட்ட நிலையில், ""கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டுகிறதா பாருங்கள் !"", என்று ரீதியில், இவர்கள் இன்னும் மின்னஞ்சல் மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், சமுதாயத்தில் இதை விடவும் அவமானப்பட்டவர்கள் யாராக இருக்க முடியும்?

இதன் பிறகு இவர்கள் எழுதியுள்ளதை பாருங்கள்..

நேயர் நாஷித் அவர்கள் உண்மையாளர் என்றால் எழுத்து மூலமான வாதத்திற்கு நாம் வர மாட்டோம் என்று எங்காவது கூறியிருந்தால் நீரூபிக்கட்டும்
- ஹிஜ்ரா கமிட்டி - ஏப்ரல் 1st


நேரடி விவாதத்திற்கு நீ அழைத்தாயே, இன்று அந்த அழைப்பை நீயே வாபஸ் பெற்றுக்கொண்டு ஓடுகிறாயே ?, என்று கேட்டால் இவர்கள் கேட்பது.. , ""நேரடி விவாதத்தில் வராமல் தானே ஓடினோம், எழுத்து விவாதத்திலிருந்து நாங்கள் ஓடினோமா??""""

அட வெட்கங்கெட்டவர்களா! சமாளிப்பு என்று கேள்விப்பட்டிருக்கிறோம், அதற்காக, இந்த அளவிற்கா???? சுபுஹானல்லாஹ்!!

சரி, எழுத்து விவாதத்திலிருந்து இவர்கள் ஓடவில்லையா? அதிலிருந்தும் ஓடினார்கள்..!!! தொடர்ச்சியாக நம்முடன் மின்னஞ்சல் மூலமாக எழுத்து விவாதத்தில் ஈடுபட்டு, இறுதியில் நாம் முன்வைத்த எந்த ஒரு கேள்விக்கும் பதிலை சொல்லாமல் ஓடிய இவர்கள், அப்போது ஓடியதற்கு கூறிய காரணாம் - "நாங்கள் பிஜெவுடன் நேரடி விவாதத்திற்கு தயாராகி விட்டோம், இதோ ஒப்பந்தம் போட போகிறோம், ஆகவே இனி, நாஷித் போன்றோருடன் விவாதிக்க மாட்டோம்", என்பதாகும்.

முதலில் இருந்து எழுத்து விவாதத்தை மீண்டும் துவங்கலாம், அதற்குரிய ஒப்பந்தத்தை நாம் இருவருமே போட்டுக்கொள்ளலாம், என்று நான் மீண்டும் கேட்டுக்கொண்டு, எப்படியாவாது இவர்கள் நம் கேள்விகளுக்கு பதிலை சொல்லி விட்டால் போதும் என்ற நப்பாசையில் மீண்டுமொரு முறை எழுத்து விவாதத்திற்கு அழைத்தேன். பார்க்க : ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு இறுதி அழைப்பு
அதற்கும் மசியாமல், ""நாங்கள் பிஜே உடன் நேரடி விவாதத்திற்கு போக போகிறோம், இதோ போய் விட்டோம், இதோ நாளைக்கே அறிவிப்பு வந்தாலும் வரும், அடுத்த வாரமே ஒப்பந்தம்"", என்ற ரீதியில் "பில்ட்-அப் " கொடுத்து ஓட்டம் எடுத்தனர், என்பதையெல்லாம் இங்கு நினைவுப்படுத்துவது பொருத்தமானது.

அவர்களே விடுத்த சவடாலான நேரடி விவாதத்திற்கு இப்போது தயாரில்லை என்றும் அறிவித்து, எழுத்து விவாதத்திலும் வராமல் ஓட்டமெடுத்து விட்டு, இப்போது வாய் கிழிய பேசுவது யார்? என்பது, அவர்களே சொல்லியுள்ளது போல சிந்தனைவாதிகளுக்கு போக போக அல்ல, இப்போதே தெரிந்து விட்டது..


சுய மரியாதை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தந்த உயரிய பண்பு.. அதில் கடுகளவை கூட கொண்டிராமல் செயல்பட்டு வரும் இவர்களை போன்றோரை நாம் என்னவென்று சொல்ல?

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியையும், கொள்கை உறுதியையும் தர வேண்டும்..அன்புடன்,
நாஷித் அஹமத்

தொடர்புக்கு : + 91 99527 82646
السلام عليكم ورحمة الله وبركاته

fromHCI
toanaithuthowheethsagotharargal@googlegroups.com,
muslimmails@googlegroups.com
ccNashid Ahmed ,
Noushath Ali Muhammed
date1 April 2011 14:06
subjectRe: ATS அறிந்து கொள்ளுங்கள் : இவர்கள் தான் ஹிஜ்ரா கமிட்டியினர் !!!!!
mailed-bygmail.com
Signed bygmail.com

hide details 14:06 (37 minutes ago)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................

அன்பான குழும சகோதர சகோதரிகளே!

நேயர் நாஷித்தின் பேசியும், எழுத்து பூர்வமான விவாதத்திற்கு பி.ஜே யை ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை போலும்,

அல்லது, நேயர் நாஷித் தீவிரமாக யோசித்து எழுத்துமூல இணையத்தள விவாத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டால், பி.ஜே அவர்களுக்கு பேச்சுகலையில் மக்களை குழப்புவது போன்று எழுத்தில் குழப்ப முடியாது என்பதை புரிந்து கொண்டு திசைதிருப்ப முயற்சிக்கின்றாரோ என நினைக்க தோன்றுகின்றது.

யாராவது ஒரு இழையில் ஒரு கருத்தை கொண்டு விவாத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் அதை யாரும் முழுமையாக அவர்களே சிந்தித்து புரிந்து கொள்ள கூடாது என்பதற்காக உடனடியாக தனிஇழையில் ஒரு தலைப்பிட்டு எழுத ஆரம்பித்து பேசுவார். அதைத்தான் இப்போதும் செய்துள்ளார். அது நேயர் நாஷிதிற்கு கைவந்த கலைதான்.

எனவே அவர் கூறியவார்த்தையின் அடிப்படையில் தான் நாம் கீழே அவருக்கும் குழுமத்திற்கும் எழுதியிருந்தோம்.

நேயர் நாஷித் அவர்கள் உண்மையாளர் என்றால் எழுத்து மூலமான வாதத்திற்கு நாம் வர மாட்டோம் என்று எங்காவது கூறியிருந்தால் நீரூபிக்கட்டும். இல்லையேல் அவர் கீழ்கண்ட வாறு எழுதியதை பொய்யாகத்தான் எழுதினேன் என ஒப்புக்கொள்ளட்டும்.

//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.............
இணையத்தளத்தில் செய்திகளை படித்து சிந்திக்கும் அன்பான சகோதர சகோதரிகளே!
நாஷித் கூறுவது போல் கூறிவிட்டால் அது நேர்மையாக இருக்கும் என சொல்லியுள்ளார்.
//நேரடி விவாதத்திற்கு எங்களால் வர இயலாது, நாங்கள் தெரியாமல் பிஜேவை அழைத்து விட்டோம், என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு, இணையத்தின் மூலம் விவாதிக்க அழைப்பு விடுத்தால் அதில் ஒரு நேர்மை இருக்கும்.//Nashid Ahmed
எனவே நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடிவிவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்.
எனவே நமது பகிரங்க விவாதத்தை இணையத்தில் எழுத்து மூலமாக வைத்துக்கொள்வோம்.
அதற்கான சட்டதிட்டங்களை இரு தரப்பும் சேர்ந்து எழுதியபின் அதை சரிபார்த்து இருதரப்பும் ஒப்புக்கொண்டு விவாதத்தை ஆரம்பிக்கலாம்.
எனவே எழுத்து மூலமான சட்டதிட்டங்களை பி.ஜே முதலில் எழுதி அனுப்பினால் அதுவே சரியாக இருந்தால் அப்படியே ஏற்றுக்கொண்டு விவாதத்தை ஆரம்பித்துவிடலாம்.
எனவே நேயர் நாஷித் அகமது அவர்கள் இப்போதாவது எழுத்து மூலமான விவாத்திற்கு பி.ஜேயுடன் பேசி நேர்மையாக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவாரா அல்லது ஓடி ஒழிந்து கொள்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.//HCI

எழுத்து மூலமாக விவாதிப்போம் என்று கூறுவது ஓடி ஒழிவதா? கழுத்தை கொடுத்தாலும் எழுத்தை கொடுக்காதே என்பார்கள். நாங்களோ எழுத்தை கொடுக்க தயாராக உள்ளோம் என கூறிய பிறகும் நேயர் நாஷித் நாங்கள் ஓடி ஒழிவது போல் திரித்து எழுதியுள்ளார். எனவே யார் ஓடி ஒழியப்பார்க்கிறார்கள் என்பது சிந்தனைவாதிகளுக்கு போகப் போகப் புரியும்.

இப்படிக்கு
நிர்வாகி
இந்திய ஹிஜ்ரி கமிட்டிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக