சனி, 25 அக்டோபர், 2014

சஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது?


சஹாபாக்கள் கொண்டிருந்த ஈமானை நாம் கொண்டிருக்கும் ஈமானோடு ஒப்பிடவே முடியாது. நம்மை விடவும் ஆயிரம் மடங்கு அதிக இறை நம்பிக்கை அவர்களிடம் மிளிர்ந்தது.
அதன் வாயிலாக, மார்க்க சட்டங்களாக அவர்கள் அறிந்து வைத்திருப்பவற்றை செயல்படுத்துவதில் அவர்கள் காட்டிய ஆர்வமும் உத்வேகமும் கூட நம்மை விட பல மடங்கு அதிகம் !
ஆனால், மார்க்க சட்டங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா? என்று பார்த்தால் இல்லை என்பது தான் பதில். 
இல்லையென்று சொல்வதில் எந்த கண்ணியக்குறைவும் இல்லை.
சஹாபாக்கள் வாழ்ந்த காலம் என்பது அந்த அளவிற்கு வெறுமையான காலம்.
பிறை பார்த்து விட்டோம், இனி என்ன செய்வது? என்று கேட்பதற்காகவே ஒரு சஹாபிக் கூட்டம் ஒரு நாள் பயணப்பட்டிருக்கிறது.
மார்க்கத்தில் ஒரேயொரு சட்டத்தை அறிய பல மைல் தூரம் பயணப்படுவார்கள் என்றால் அவ்வாறு பயணப்படாத பலருக்கு அந்த சட்டம் தெரிந்திருக்காது என்பது நிதர்சன உண்மை.
நுபுவத்தின் கடைசி காலங்களில் கூட தொழுகையில் செய்யும் ருக்கூஹ்வின் போது கைகளை தொடைகளுக்கிடையில் வைத்தவாறு தொழுத சஹாபி இருந்தார்.
நபி (சல்) அவர்களின் மரணத்திற்கு பிறகும் கூட, மூன்று முறை சலாம் சொல்லியும் பதில் கிடைக்கவில்லையென்றால் அன்னியரின் வீட்டு வாசலில் நின்று கொண்டேயிருக்காமல் திரும்பி சென்று விட வேண்டும் என்கிற சட்டத்தை மிகப்பெரிய சஹாபியான உமர் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இது தான் உண்மை, இதை சொல்வதால் சஹாபாக்களை இழிவுப்படுத்தியதாக ஆகாது. அவர்கள் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது.
அவர்களை சிலாலித்துப் பேசும் இறைவன் கூட, அவர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் என்று கூறவில்லை, அவர்கள் கொண்டிருந்த தக்வாவையும் இறை நம்பிக்கையையும் மட்டும் தான் சிலாகிக்கிறான்.
சஹாபாக்களை மதிப்போம் , ஆனால் பின்பற்ற மாட்டோம் என்று செய்யப்படுகிற பிரச்சாரத்தின் அடித்தளம் இது தான் என்பதை நாம் புரிய வேண்டும்.
வஹி மட்டுமே பின்பற்றத்தக்கது !
சஹாபாக்களிடம் அல்லாஹ் பேச மாட்டான், வஹி அருள மாட்டான், நபியின் மரணத்திற்கு பிறகு அவர்கள் செய்யும் தவறுகளை திருத்தவும் மாட்டான் !!

சூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா??


சூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா??

அல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா?


ஒரு காரியத்தை சுட்டிக்காட்டி, இதை நீங்கள் கற்றுக் கொள்ளாதீர்கள் என்று சொல்லும் அல்லாஹ்,
அவ்வாறு சொல்லி விட்டு, அதை நீங்கள் செய்தால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் பலிக்கும் என்று சொல்வானா?
சூனியத்தை கற்பதும், கற்றதன் அடிப்படையில் செய்வதும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியம்.
அதனால் தான் அதை கற்காதீர்கள் என்று சொல்கிறான்.
கற்பதே குஃப்ர் என்றால் அதை செய்து அதனால் ஏற்படும் விளைவுக்கு அல்லாஹ் துணை நிற்பானா?
அவ்வாறு நம்பினால், ஷிர்க்கிற்கு அல்லாஹ் துணை நின்றான் என பொருளாகும் என்கிற ரீதியில் சிந்தித்தாலும் சூனியத்தை மெய்ப்பிக்க அல்லாஹ் துணை செய்ய மாட்டான் என்று புரியலாம்.
சூனியம் அல்லாத கணவன் மனைவி பிரித்தலை தான் நான் நாடினால் செய்வேன் என்று அல்லாஹ் இவ்விடம் கூறுகிறானே தவிர சூனியத்தை அல்ல.
அல்லது சூனியம் என்கிற இணை வைப்பை தான் சொல்கிறான் என்று மீண்டும் அடம்பிடிப்பார்கள் என்றால் இணை வைத்தலை அல்லாஹ் என்றைக்கும் உண்மைப்படுத்த மாட்டான் என்பதற்கு மற்றொரு சான்றை தருகிறோம்.
அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். 'அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?' (6:80)
இந்த வசனத்தில், சிலை வணங்கிகள் இப்ராஹீம் நபியிடத்தில் தங்கள் சிலைகளை அவர்கள் உடைத்ததால் ஆத்திரப்பட்டு இந்த சிலை உமக்கு தீங்கு செய்யும் என்று கூறினார்கள். அதற்கு மறுப்பு சொன்ன இப்ராஹிம் நபி, இந்த சிலை ஒன்றும் எனக்கு தீங்கு செய்யாது, என் இறைவன் நாடினாலே தவிர எதுவும் எனக்கு தீங்கீழைக்காது என்று சொன்னார்கள்.
இந்த வசனத்தின் படி, சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அதனால் இப்ராகிம் நபிக்கு தீங்கிழைக்க முடியாது என்று இவர்கள் சொல்வார்களா?
அல்லது அல்லாஹ் நாடினால் சிலைகள் தீங்கு செய்யும் என்கிற கருத்து வரும் என்று கூறுவார்களா??
சிலைக்கு சக்தி இருப்பதாக நம்புகிறவர்களிடம் அல்லாஹ் நாடினால் தான் தீங்கு செய்ய முடியும் என்று சொன்னால் தீங்குகள் அல்லாஹ்வால் தரப்படுகிறதே தவிர சிலைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அர்த்தம்.
சூனியத்திற்கு தீங்கு செய்யும் சக்தி இருப்பதாக நம்புகிறவர்களிடம், அல்லாஹ் நாடினால் தான் தீங்கு செய்ய முடியும் என்று சொன்னால் தீங்குகள் அல்லாஹ்வால் தரப்படுகிறதே தவிர சூனியத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அர்த்தம்.
எப்படி பார்த்தாலும் சூனியத்தின் மூலம் எதையும் செய்ய முடியாது, அல்லாஹ் அவ்வாறு நாட மாட்டான் என்பது தெளிவு !

கசப்பான உண்மை !


மத்ஹபின் இமாம்கள் எழுதியவற்றை நாம் விமர்சித்தால் பதிலுக்கு அவர்கள் பிஜெவை விமர்சிப்பார்கள்.
சூஃபிகளின் பெரும் பெரும் ஜுப்பாக்களை நாம் விமர்சித்தால் பதிலுக்கு அவர்கள் பிஜெவை விமர்சிக்கிறார்கள்.
கப்ர் வணங்கிகள் கடவுளாக போற்றும் அவ்லியாக்களை நாம் விமர்சனம் செய்யும் போதும் பதிலுக்கு அவர்கள் திட்டுவது பிஜெவை தான்.
கிறித்தவ மதத்தையும் பைபிளின் லீலைகளையும் பற்றி பேசுகிற போதும் அதற்கு பதில் என்கிற பெயரில் கிறித்தவ க்கூட்டம் கையில் எடுப்பதும் பிஜெவை திட்டுவது என்கிற ஆயுதத்தை தான்.
இன்னும், ஹிந்து மதத்தை பற்றி கேள்வி கேட்டாலும் சரி, காதியானி மதத்தைப் பற்றி கேட்டாலும் சரி, அனைவரும் அட்சரம் பிசகாமல் ஏசுவது பிஜெ என்கிற மனிதரை தான் !
ஏகத்துவக் கொள்கை தவிர்த்து வேறெந்த கொள்கையின் பால் சென்றாலும் அங்கே சாமானியன் என்றொரு பிரிவும் அவர்களால் கண்மூடித்தனமாக பின்பற்றப்படும் தலைமைத்துவம் என்கிற பிரிவும் நிச்சயமாக இருக்கும்.
அந்த தலைமைத்துவம் என்பது சில சித்தாந்தங்களில் வழிகாட்டி , சிலர் பார்வையில் இறைவனுடன் தொடர்பில் இருப்பவர், சிலருக்கு அது இறைவனின் அவதாரம், இன்னும் சிலருக்கோ அது தான் இறைவன் !
இந்த வட்டத்தை விட்டும் தாண்டிய எந்த கொள்கையும் உலகில் இல்லை, நபி (சல்) அவர்கள் கொண்டு வந்த இந்த ஏகத்துவக் கொள்கையை தவிர..
அதன் காரணமாக தான் ஏகத்துவவாதிகளுக்கு குர்ஆன் ஹதீஸ் தவிர வேறு தலைமை இல்லை, வேறு வழிகாட்டுதல் இல்லை.
இந்த கூட்டங்கள் யாரை நபிக்குரிய அந்தஸ்துடனும் இறை தன்மை கொண்டவராகவும் போற்றுகின்றனரோ அவர்களுக்கெல்லாம் சமமான அறிவை கொண்ட, அல்லது அவர்களையும் விஞ்சக்கூடிய மார்க்க ஞானத்தை பெற்றிருக்கக்கூடிய பிஜெ போன்று அறிஞர்கள் இன்றளவும் ஏகத்துவவாதிகளுக்கு ஒரு சாமானியனாகவே தென்படுவதற்கு அவர்கள் கொண்டிருக்கும் சத்தியக் கொள்கை ஒன்றே காரணம் !
ஒரு வேளை சகோ. பிஜெ இவர்கள் சார்ந்திருக்கும் கொள்கையை கொண்டவராக இருந்திருந்தால், அவர் இன்று ஒரு நபியாகவோ, கடவுளின் அவதாரமாகவோ அல்லது கடவுளாகவோ தான் நம்பப்பட்டிருப்பார் என்பதே நாம் உணர வேண்டிய கசப்பான உண்மை !
அவருக்கு நேர்வழியை அல்லாஹ் வழங்கியதன் மூலமும் அதே நேர்வழியை கொண்ட லட்சக்கணக்கான மக்களைக் கொண்ட சமூகமாக இந்த சமுதாயத்தை அல்லாஹ் உருவாக்கியதன் மூலமாகவும் நம் அனைவருக்கும் அல்லாஹ் பெரும் கிருபை செய்திருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் !!

சலஃபுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு




சகோ. பிஜெவின் சவாலை தாமாக ஏற்க முன்வராமல் ஓட்டமெடுக்கும் சலஃபு கூட்டத்திற்கு நாம் உதவ முன் வருகிறோம்.
அம்மன் அருள் பெற்ற, 36 வித்தைகளை கற்ற, காலடி மண், நீர், தலை முடி போன்றவை இருந்தால் எவருக்கும் செய்வினை வைக்கலாம் என்று கூறுகிற,
ஜோதிட திலகர், ஜோதிட மருத்துவர், டாக்டர் கருணாநிதி குருஜி அவர்களை தொடர்பு கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ஜைனுல் ஆபிதீனின் 50 லட்சம் சவாலைப் பற்றி சலஃபுகள் எடுத்து சொல்லுங்கள்.
இவர் ஜோதிட செம்மல், ஜோதிட கலானிதி, ஜோதிட சுடர்,ஜோதிட திலகம் என பல பட்டங்கள் பெற்றவர் என்று இவரைப் பற்றிய முன்னுரையில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(திலகரின் ஆற்றலை முழுமையாக தெரிந்து கொள்ள அன்னாரின் பேட்டி அடங்கிய கீழ்காணும் இரண்டு காணொளிகளை பார்க்கவும்.)

இவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் 00919442182976
மற்றும் 00918903018916.
தொடர்பு கொண்டு ஐம்பது லட்சப் பரிசை உடனே தட்டி செல்லுமாறு கூறுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
முடிந்தால் உங்களுக்குள் ஒப்பந்தமிட்டு ஐம்பதில் 20 லட்சத்தை நீங்கள் சுருட்டிக் கொண்டாலும் சகோ. பிஜேவுக்கு ஆட்சேபனையெதுவும் இருக்காது என்பதையும் கூறிக் கொள்கிறோம்.
அரிய வாய்ப்பு... சுவாமி குருஜியும் மிஸ் பண்ணிடாதீங்க, சலஃபியும் மிஸ் பண்ணிடாதீங்க !!
அல்லாஹ் நாடினால் இவர் வைக்கும் சூனியம் பலிக்கவும் செய்யலாம், ஐம்பது லட்சத்தை சுருட்டவும் செய்யலாம்..
உம்ம்.. புறப்படுங்கள்.. 

அறிவை வணங்கும் சலஃபிகள்


புஹாரியில் பதிவாகியுள்ள எல்லா செய்திகளும் சரியானவை தான் என்று, புஹாரி இமாமை மனித தன்மைக்கு அப்பாற்பட்டவராய் நம்புகிற கூட்டத்தாரிடம்
புஹாரியில் உள்ள முரண்பாடுகள், தவறான வரலாற்று குறிப்புகள் என பல சான்றுகளை அடுக்கிய பிறகும் அவர்களது தவறான நம்பிக்கையை விட்டும் வெளியேற மறுக்கின்றனர்.
புஹாரியிலும் தவறான‌ செய்திகள் உண்டு என்பதற்கு சான்றாக கீழ்காணும் ஹதீஸை தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் முன்பே சுட்டிக்காட்டியிருந்தனர்.
அம்ர் பின் மைமூன் என்பார் கூறியதாவது : அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன். அறிவிப்பவர் : அமர் பின் மைமூன் நூல் : புகாரி (3849)
இந்த செய்தி பொய்யானது, இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லவே இல்லை என்பது தான் நியாய உணர்வுள்ள ஒருவரது பதிலாக இருக்க வேண்டும்.
ஆனால், புஹாரி நூலை குர்ஆனுக்குரிய அந்தஸ்த்துடன் காணும் இவர்கள், இதற்கு கூட சப்பை கட்டு கட்டி முட்டு கொடுக்கத்தான் முயற்சிக்கின்றனர் என்பது வியப்பான ஒன்று.
இதன் அறிவிப்பாளரான அப்ர் பின் மைமூன் சஹாபியல்ல, அவர் நபி இவ்வாறு சொல்வதாகவும் சொல்லவில்லை என்று ஒரு பதிலை சொல்கிறார்கள்.
இதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். அவர் சஹாபியல்ல, அவர் நபி சொல்வதாகவும் சொல்லவில்லை.
ஆனால், இது நமது கேள்விக்கான பதிலாக அமையுமா??
அவர் சஹாபி இல்லை என்றால் சஹாபியுடன் தொடர்பில்லாத‌, வேறு வேறு நபர்கள் அறிவிக்கும் செய்திகளும் புஹாரியில் உண்டு என்கிற முடிவை தான் இதிலிருந்து பெறலாமே தவிர, இவர் சஹாபி இல்லை என்பதால் இந்த செய்தி உண்மை செய்தி தான் என்று கூறி விட முடியுமா?
இவர் நபி கூறுவதாக சொல்லவில்லை என்றால் நபி சொன்னதாக ஒரு பொய்யை இவர் சொல்லவில்லை என்கிற முடிவுக்கு வேண்டுமானால் வரலாமே தவிர, இது பொய்யே இல்லை என்று சொல்ல முடியுமா?
ஆக, இவையெல்லாம் இந்த ஹதீஸை நியாயப்படுத்த உதவாது.
இது போக‌, இந்த சம்பவம் உண்மையில்லை, இது அமர் பின் மைமூனின் கற்பனை என்று இமாம்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள், ஆகவே இதை அவரது கற்பனை, அவர் கண்ட கனவு என்பதாக புரிய வேண்டும் என்று ஒரு பதிலை சொல்கிறார்கள்
இவர்கள் தங்கள் கொள்கைக்கு ஆதரவாக பேசுகிறார்களா அல்லது நமக்கு பாயின்ட் எடுத்து தருகிறார்களா என்று நமக்கு புரியவில்லை.
காரணம், இது உண்மையாக நடந்திருக்காது, இது அவரது கற்பனை என்பது தான் நமது வாதம்.
கற்பனையை கூட உண்மை செய்தியாக அவர் அறிவிக்கிறார், அதையும் புஹாரி இமாம் பதிவு செய்திருக்கிறார்கள் என்கிற‌ வகையில் கற்பனைகளும் பொய்யான செய்திகளும் கூட புஹாரி நூலில் இருக்கத்தான் செய்கிறது என்பது தான் நமது அடிப்படை வாதமே !
நமது வாதத்திற்கு பதில் கொடுக்கிறேன் என்று கூறி, நமக்கு ஆதரவாய் தான் பேசி வருகிறார்கள் என்பது ஒரு பக்கம்..
அத்துடன், இது எனது கற்பனை தான் என்றோ, நான் கனவில் கண்ட சம்பவம் தான் இது என்றோ அம்ர் பின் மைமூன் சொல்கிறாரா? என்றால் இல்லை.
அவர் அவ்வாறு சொல்லாத போது இப்படித்தான் இந்த ஹதீஸை புரிய வேண்டும் என்று இவர்களாக தங்கள் புத்திக்கு முன்னுரிமை கொடுத்து இந்த ஹதீஸுக்கு முட்டுக்கொடுப்பதை காண்கிறோம்.
அறிவுக்கு எட்டவில்லை என்றால் ஹதீஸை நிராகரிக்கலாமா? தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வை வணங்காமல் தங்கள் அறிவைத்தான் வணங்குகிறார்கள் என்று நம்மை விமர்சனம் செய்யும் இவர்களை நோக்கி
நாம் இதே கேள்வியை கேட்கிறோம்,
ஹதீஸில் இல்லை என்றாலும் அதை கற்பனை என்று தான் விளங்க வேண்டும் என்று இவர்களது புத்திக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு ஹதீஸை நியாயப்படுத்துவது மட்டும் சரியா?
தங்கள் அறிவை வணங்குவது சரியா?
இப்படி தான் இமாம்கள் விளக்கமளிக்கிறார்கள் என்று கூறி இமாம்களை வணங்குவது சரியா?

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

சூனியம் : அரங்கம் அதிரும் ஐந்து காட்சிகள்



காட்சி 1 :  இருக்கு ஆனா இல்ல..

ஏகத்துவவாதி : சூனியம் என்பதே பொய், அதால எதையும் செய்ய முடியாது

சலஃபி : இல்ல, சூனியம்னு ஒரு வித்தை இருக்கு, அதால அற்புதங்கள செய்ய முடியும்.

ஏகத்துவவாதி : அப்படியா? அப்படின்னா எனக்கு செஞ்சு காட்டு பாப்போம்

சலஃபி : செஞ்சு காட்டுன்னெல்லாம் கேக்கக் கூடாது. அல்லாஹ் இருக்கான்னு சொன்னா கண்ணால காட்டுன்னா கேப்போம்?

ஏகத்துவவாதி : அல்லாஹ் இருக்கான்னா, அவன காட்டுனா தான் நம்புவேன்னு சொல்ல தேவையில்ல.. அவன பாக்காமலேயே அவன் இருக்கிறதா ஒரு முஸ்லிம் புரிஞ்சு தான் வெச்சிருக்கான்.
அல்லாஹ்வ பாக்காமலேயே நம்புறது எப்படின்னு குர் ஆன் நமக்கு பல இடங்கள்ல சொல்லி தருது.

ஆனா ஒரு செயலுக்கு அற்புத சக்தி இருக்குன்னு சொன்னா அத பாக்காம எப்படி புரிஞ்சுக்குறது? 
பாக்காமலேயே புரிகிற விதமா சூனியத்துல என்ன இருக்கு? அதயாவது சொல்லு.

சலஃபி :  அல்லாஹ் சொல்லிட்டான்னா நம்பிட வேண்டியது தான். செஞ்சு காட்டினாத்தான் நம்புவேன்னு சொல்றது குஃப்ரான பேச்சு.

ஏகத்துவவாதி : அப்படியா? அப்படின்னா, நபி (சல்) அவர்கள், சிலைகளை எனக்கெதிரா சூழ்ச்சி செய்ய வை பாப்போம்னு சொன்னதும் குஃப்ரான பேச்சு தானா?
சிலைக்கு சக்தி இருந்தா எனக்கெதிரா சூழ்ச்சி செய்யுன்னு இப்ராஹிம் நபி கேட்டதும் குஃப்ர் தானா?

சலஃபி : அது வந்து.... அது..... (அய்யோ ஒண்ணும் மண்டைல வர மாட்டேங்குதே)
ஆஹ்.... சூனியத்த செய்தா காஃபிராகி விடுவான். ஆகவே செய்து காட்டக் கூடாது (ஹப்பாடா தப்பிச்சேன்..)

ஏகத்துவவாதி : சூனியத்த செஞ்சா காஃபிராகி விடுவான்னு அல்லாஹ் எங்க சொல்றான்?

சலஃபி : இதோ 2:102 வசனத்துல சொல்றானே..

ஏகத்துவவாதி : அது சூனியத்த பத்தியே பேசல.. சரி அப்படியே வெச்சுக்குவோம். அங்கே சூனியத்த செய்தா காஃபிராகி விடுவான்னு இருக்கா அல்லது சூனியத்த கற்றுக் கொண்டா காஃபிர்ன்னு இருக்கா?

சலஃபி : கற்றுக் கொண்டா காஃபிருன்னு இருக்கு.

ஏகத்துவவாதி : நா ஒண்ணும் உன்ன கத்துக்க சொல்லலையே.. ஏற்கனவே கத்துகிட்டிருந்தா தானே செய்ய முடியும்? அப்படி ஏற்கனவே கத்து காஃபிராகி போயிருப்பானே அந்த காஃபிர் எனக்கு வந்து அத செஞ்சு காட்டட்டும்னு தானே கேக்குறேன்?
நீ காட்டின வசனப்படியே செய்யப்போறவன் ஏற்கனவே காஃபிராக ஆனவன் தானே ?

சலஃபி : (இதுவும் போச்சா..) இல்ல இல்ல.. அதெல்லாம் முடியாது, சூனியம் செய்றது குஃப்ர்.. சூனியம் செய்றது குஃப்ர்.

ஏகத்துவவாதி : சரி சரி அழுவாத.. தண்ணிய குடி..



காட்சி 2 : ஆகாசத்துல கோட்ட‌


சலஃபி : ஒரு வேள பிஜெ தற்கொலை செஞ்சுகிட்டா சூனியத்த நம்புவீங்களா?

ஏகத்துவவாதி : நடக்காத விஷயங்கள பத்தி இப்படி கேட்பதே குஃப்ரான பேச்சு.
கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல. பிஜெ தற்கொலை பண்ணிக்க மாட்டார்ங்கிறது 100 சதவிகிதம் உண்மை !

சலஃபி : அப்படின்னா உங்களுக்கு பயம், எங்க சூனியத்த நம்ப வேண்டி வந்துருமோன்னு.. அதான் இப்படி சமாளிக்கிறீங்க..

ஏகத்துவவாதி : உனக்கு நேரம் போகாம கற்பனை பண்ணிகிட்டு உளற்ரதுக்கெல்லாம் பதில் சொல்லலைன்னா சமாளிக்கிறேன்னு அர்த்தமா?
அப்படின்னா இந்த கேள்விக்கு நீ பதில் சொல்லு.
ஒரு வேள இன்னைக்கி சாயத்திரம் ஈஸா நபி வானத்துல இருந்து இறங்கி வந்து நான் தான் கடவுள்னு சொன்னா கிறிஸ்த்தவம் உண்மைன்னு நீ ஒத்துக்குவியா?

சலஃபி : அது..... அது எப்படி...

ஏகத்துவவாதி : என்னய்யா தந்தியடிக்கிற.. போய் பிள்ளைங்கள படிக்க வை போ..

சரி, அப்படின்னா நீ என்ன சொல்ல வற்ர? பிஜெ தற்கொலை செய்யவும் வாய்ப்பிருக்குங்கிறியா?

சலஃபி : அல்லாஹ் நாடுனா நடக்காதா?

ஏகத்துவவாதி : அல்லாஹ்வின் அர்ஷை இங்கே கொண்டு வருகிறேன்னு சொல்லி ஒருத்தன் சூனியம் செய்றான், அவன் செய்ற சூனியம் வெற்றி பெறுமா?

சலஃபி : அதெப்படி அர்ஷை கொண்டு வர முடியும்?

ஏகத்துவவாதி : ஏன்? அல்லாஹ் நாடுனா அர்ஷ் இங்க வராதா??

சலஃபி : ??? (என்னாயா எப்படி கொண்டு போனாலும் கோல் போடுறான்)



காட்சி 3 : ஆதாரமா? அதெல்லாம் கேக்கப்படாது


ஏகத்துவவாதி : சூனியத்தால கை காலையெல்லாம் முடக்கலாமா? ஒருவரது உயிரை கூட எடுக்கலாமா?

சலஃபி : ஆமா

ஏகத்துவவாதி : என்ன ஆதாரம்?

சலஃபி : அல்லாஹ் குர் ஆனுல கணவன் மனைவி பிரிக்கலாங்கிறான், மூசா நபி காலத்துல பிர் அவ்ன் கூட்டம் கயிற பாம்பா மாத்துனாயிங்க, அப்புறம் புஹாரியில நபிக்கு மனக்குழப்பம் உண்டாக்கப்பட்டுத்துன்னு வருது....

ஏகத்துவவாதி : சரி, நான் கை கால முடக்க ஆதாரம் கேட்டேன்.. அதுக்கு காட்டு..

சலஃபி : அது வந்து..... வந்து.. அது.. (என்ன இவ்வளவு ஜெர்க் ஆகுது..)

அது.. அப்படியான கலை முன்னாடி இருந்துச்சு, ஆனா இப்போ இல்ல.. !
(எப்படி தப்பிச்சேன் ! )


ஏகத்துவவாதி : சரி, அப்படியான கலை முன்னாடி இருந்துச்சுங்கிறதுக்கு என்ன ஆதாரம்?


சலஃபி : அதான் கணவன் மனைவிய பிரிக்கிறது, மூசா நபி வரலாறு எல்லாம் சொல்றேனே..

ஏகத்துவவாதி : அட வெளெக்கெண்ணெ.. அத தானய்யா அப்போல இருந்து சொல்ற.. கை கால முடக்குற கலை அந்த காலத்துல இருந்துச்சுங்கிறதுக்கு ஆதாரத்த காட்டு..

சலஃபி : அது வந்து.....

ஏகத்துவவாதி : சரி அது போகட்டும்.. இப்போ அழிஞ்சு போச்சுங்கிறியே.. அதுக்காவது ஆதாரத்த காட்டுவியா இல்ல அதுவும் காத்துல கோட்ட கட்டுறது தானா?

சலஃபி : என்ன பெரிய அறிவாளித்தனமா பேசுறே? சூனியம் இப்போ இல்லைல்ல..? அப்போ அழிஞ்சு போச்சுன்னு தானே அர்த்தம்?

ஏகத்துவவாதி : அப்போ ஒரு விஷயம் இப்போ இல்லைன்னா அது அழிஞ்சு போச்சுன்னு தான் எடுத்துக்கணுமா?

எரும மாடு இப்போ வானத்துல பறக்காது தானே? அப்போ, இந்த கலை ஒரு காலத்துல எல்லா எரும மாட்டுக்கும் இருந்துச்சு, இப்போ அது அழிஞ்சு போச்சுன்னு சொல்லிக்கலாமா?

சலஃபி : (என்னயா இப்படி குண்டக்கா மண்டக்கானு கேகுறான்..)

இருய்யா ..கொஞ்சம் டயம் குடுய்யா யோசிக்கறேன்..

ஏகத்துவவாதி : சரி இதுக்கு யோசிக்கிறது இருக்கட்டும்..

நீ தான் எல்லாத்துக்கும் அல்லாஹ் நாடுனா நடக்கும், அல்லாஹ் நாடுனா நடக்கும்ன்னு சொல்லிட்டு திரியிறியே.. அழிஞ்சு போன சூனியத்தை மீண்டும் உயிர்ப்பிச்சு அதன் மூலம் அற்புத நிகழ அல்லாஹ்வுக்கு நாட முடியாதா?
அப்படி மட்டும் அல்லாஹ் நாட மாட்டான்னு ஏன் சொல்றீங்க?
இல்லாத சூனியத்தின் மூலமா செய்றதுக்கு அல்லாஹ்வால முடியாதுன்னு நம்புற பலகீனமான ஈமான தான் இவ்வளவு நாளா வெச்சிருந்தீங்களா?

சலஃபி : ( இவனுங்ககிட்ட வாய் குடுத்து ஒழுங்கா வீடு போய் சேர்ந்த மாதிரி தான்)



காட்சி 4  : புஹாரின்னா எங்களுக்கு அல்லாஹ்வாக்கும்

புஹாரி ஹதீஸ்ல சூனியம் இருக்குன்னு சொல்லப்பட்டிருக்கு. நாங்க முஸ்லிம், அதனால நாங்க புஹாரி, முஸ்லிம் ஹதீஸ நம்புறோம். நீங்கல்லாம் காஃபிர்.. அதான் ஹதீஸ மறுக்குறீங்க..

ஏகத்துவவாதி : ஹதீஸ் கிதாபுல ஒண்ணு சொல்லப்பட்டிருந்தாலே அது சரின்னு ஆயிடாது.

சலஃபி : எல்லா ஹதீஸயும் நாங்க சொல்லல.. புஹாரி, முஸ்லிம் மாதிரி ஹதீஸ்ல இருக்குற எந்த ஹதீஸையும் மறுக்கக் கூடாது.. மறுப்பவன் காஃபிர்.

ஏகத்துவவாதி : அப்படியா.. அப்படின்னா தஜ்ஜாலுக்கு எந்த கண் ஊனம்னு நீ சொல்லு பாப்போம்..

சலஃபி : ஒரு கண் ஊனம்னு வருது

ஏகத்துவவாதி : ஒரு கண் ஊனம்னு வந்தா ஒண்ணு வலது கண்ணா இருக்கும் அல்லது இடது கண்ணா இருக்கும், சரி தானே?

சலஃபி : ஆமா

ஏகத்துவவாதி : முஸ்லிம் ல ஒரு இடத்துல வலது கண்ணு ஊனம்னு ஹதீஸ் இருக்கு, இன்னொரு இடத்துல இடது கண்ணுன்னு இருக்கு.. ஒண்ணு சரின்னா இன்னொண்டு தப்புன்னு தான் அர்த்தம்.
முஸ்லிம் ஹதீஸ எப்படி தப்புன்னு சொல்றதுன்னு சொல்லி இரண்டையும் ஏத்துப்போமா??

சலஃபி : ??

ஏகத்துவவாதி : மக்காவில ரசூலுல்லாஹ் வாழ்ந்தது 10 வர்ஷம்னு ஒரு இடத்துல  புஹாரி பதிவு செஞ்சிருக்காரு.. இன்னொரு இடத்துல 13னு சொல்றாரு.. இரண்டுல ஒண்ணு சரி, ஒண்ணு சரின்னா இன்னொண்ணு தவறு !
புஹாரிலயும் தவறான ஹதீஸ் இருக்கத்தான் செய்யுது 

சலஃபி : சரி, அதெல்லாம் போகட்டும்.. இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்

சூனியம் உண்மைன்னு நம்புறது ஷிர்குன்னு சொன்னா புஹாரி இமாம் அத பதிவு செஞ்சிருக்காங்களே, அவங்க அத உண்மைன்னு நம்பாமலா பதிவு செஞ்சிருப்பாங்க? அப்படின்னா புஹாரி இமாம் முஷ்ரிக்கா?

ஏகத்துவவாதி : சகுனம் என்பது கிடையாதுன்னு ரசூலுல்லாஹ் சொன்னதா ஒரு ஹதீஸ புஹாரி இமாம் பதிவு செஞ்சிருக்காரு.. அதே புஹாரி இமாம் இன்னொரு இடத்துல சகுனம் இருக்குன்னும் பதிவு செஞ்சிருக்காரு..
சகுனத்த நம்புறது ஷிர்க்.
அப்படியிருக்கும் போது இத நம்பாமலா புஹாரி இமாம் பதிவு செஞ்சிருப்பாரு?
அப்போ சகுனத்த நம்புன புஹாரி இமாம் முஷ்ரிக்குன்னு நீ சொல்லுவியா?

சலஃபி : ??????

சரி, என்னதான் இருந்தாலும், அறிவிப்பாளர் வரிசைப்படி அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தானே, அதை மறுத்தா எப்படி உங்கள நாங்க முஸ்லிம்னுக்கு சொல்லுவோம்?

ஏகத்துவவாதி :

அப்படியா அப்படின்னா, அதிகமான பேருக்கு முரணா குறைவான நபர்கள் ஒரு செய்திய அறிவிச்சா, அவங்க பலமான அறிவிப்பாளர்களா இருந்தாலும் அத ஏத்துக்க கூடாதுன்னு ஹதீஸ் உசூலுல்ல ஒரு விதி இருக்கே, அது பத்தி எதாவது உனக்கு தெரியுமா? அதுக்கு ஷாத் வகைன்னு சொல்லுவாய்ங்க..

சலஃபி : ??


காட்சி 5 : மறுபடியும் மொதல்ல இருந்தா?????


சலஃபி : எல்லாம் கிடக்கட்டும்.. மணிகண்டன் என்பவன் ஒரு போலி சூனியக்காரன். அவனுக்கும் பிஜெவுக்கு ஏதோ ரகசிய ஒப்பந்தம் நடந்திருக்கு.. 
அதனால இதுல அவன் தோக்குறது ஒண்ணும் ஆச்சர்யமில்ல‌

ஏகத்துவவாதி : 

சரி அவன் போலின்னே வெச்சுகுவோம்.. நீ தான் மூச்சுக்கு முன்னூறு வாட்டி அல்லாஹ் நாடுனா சூனியம் ஜெயிக்கும், அல்லாஹ் நாடுனா சூனியம் ஜெயிக்கும்னு சொல்லிட்டு திரியுறியே.. அல்லாஹ் நாடுனா போலி சூனியக்காரனால ஜெயிக்க முடியாதா என்ன?
அப்படி மட்டும் ஏன் நம்ப மாட்டேங்குற? உன் ஈமானோட லட்சணம் இது தானா?

சலஃபி : ??

ஏகத்துவவாதி : அது போகட்டும், அவன் போலின்னு நீ சொன்னா, அப்போ நிஜ சூனியக்காரன் ஒருத்தன நீ கூட்டிகிட்டு வாயேன்..
நீ ஒருத்தன கூட்டிகிட்டும் வர மாட்டே.. தானா வந்த ஒருத்தன போலின்னு வேற‌ சொல்லுவே..

ஒண்ணு நீ செய்.. அல்லது செய்றவன வேடிக்கையாவது பாரு..

ஆட்டோட "......."யும் வேணும், ஆட வெட்டவும் கூடாதுன்னா எப்படி??


சலஃபி : இல்ல.. சூனியம் செய்றது குஃப்ர்..நாங்க செய்ய மாட்டோம்..


அடேய் மறுபடியும் முதல்ல இருந்தா???  இப்படி எத்தன பேருடா கெளம்பியிருக்கீங்க?


                   (சலஃபு கூடாரம் காலியாகிறது.. காட்சிகளும் நிறைவடைகின்றன‌)

                                                              --முற்றும்--