ஞாயிறு, 4 நவம்பர், 2012

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் யார்??


இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பதிவு எண் 84/2010

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்ற அறிமுகத்துடன் இந்த இணைய தளம் உங்களை வரவேற்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாக்கர் நீக்கப்பட்டதை அனைவரும் அறிவீர்கள்.

தொடர்ந்து பாலியல் சேட்டைகள், பண மோசடி ஆகிய காரணங்களுக்காக அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரால் ஆதாயம் அடைந்தவர்களும், தவ்ஹீத் ஜமாஅத்தைச் சொந்த ஆதாயங்களுக்காக இனி மேல் பயன்படுத்த முடியாது என்று நம்பிக்கை இழந்தவர்களும் ஜமாஅத்துக்குத் துரோகம் செய்ததால் அவர்களும் கண்டறியப்பட்டு தூக்கி எறியப்பட்டனர்.

இயக்கம் கண்டதே தவறு

இவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளில் கருத்து வேறுபாடு கொண்டு நீங்கிச் சென்றிருந்தால் இவர்கள் ஒரு இயக்கம் ஆரம்பிக்க தார்மீக உரிமை உண்டு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்படும் வரை நூறு சதவிகிதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையில் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிக் கொண்டு இருந்தனர். தங்களின் கெட்ட செயலுக்காகத் தான் தாங்கள் நீக்கப்பட்டுள்ளோம் என்பது அவர்களுக்கும் தெரியும். உலகுக்கும் தெரியும்.

நாம் ஒரு தவறு செய்து மாபெரும் இயக்கத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி விட்டோம், நம்மை உயர்ந்த இடத்தில் வைத்திருந்த மக்களின் நம்பிக்கையை நாம் சீர்குலைத்து விட்டோம். நம்மை நம்பி பணம் கொடுத்த மக்களுக்கு  துரோகம் செய்து விட்டோம் என்ற உறுத்தல் இருந்திருந்தால் பாக்கர்  தனியாக தனக்காக ஒரு இயக்கம் ஆரம்பித்திருக்கக் கூடாது. 

பீஜேயும் பாக்கரும் அலாவுத்தீனும் அனவர் பாஷாவும் அன்று தமுமுகவில் இருந்து விலகினார்கள். விலக்கப்படவில்லை. தவ்ஹீத் பிரச்சாரம் எங்களுக்கு முட்டுக்கட்டை என்று அன்றைய தமுமுக நிர்வாகிகள் சொன்னார்கள். எழுதியும் தந்தார்கள்.
பார்க்க ஆதாரம்

எனவே கொள்கை அடிப்படையில் அவர்கள் பிரிந்ததால் ஒரு இயக்கம் ஆரம்பிக்கும் அவசியமும் உரிமையும் அவர்களுக்கு இருந்தது. இது போன்ற எந்த அவசியமும் தார்மீக உரிமையும் இல்லாமல் பாக்கர் இயக்கம் ஆரம்பித்ததே அடிப்படையில் தவறாகும்.

தனது செயலுக்கு வருந்தி தனக்குத் தானே தண்டனை கொடுத்து சில காலம் ஒதுங்கி இருந்து தன்னைத் திருத்திக் கொண்டு ஒரு இயக்கம் ஆரம்பிக்கும் அவசியம் ஏறப்ட்டுள்ளது என்று சமுதாயம் நம்பும் வேளையில் இயக்கம் ஆரம்பித்தால் கூட அதை ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் தங்களுக்கு ஒரு பதவி இருந்தால் தான் பணம் வசூலிக்க முடியும்; இந்த சமுதாயத்தில் நிறைய அப்பாவி செல்வந்தர்கள் உள்ளனர். அவர்களிடம் வசூலிப்பதற்காக மட்டுமே இவர்கள் இயக்கம் கண்டனர். 

தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் குழப்பம்

அப்படி ஒரு இயக்கம் ஆரம்பிக்கிறார்கள் என்றால் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரைப் பயன்படுத்தினால் மக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தான் நினைப்பார்கள் என்று தெரிந்திருந்தும் அந்தப் பெயரில் இந்தியாவைச் சேர்த்து மக்களை ஏமற்றுவதில் எங்களை மிஞ்ச முடியாது என்று காட்டியது பச்சை அயோக்கியத் தனம்.

பீஜேயும் தவ்ஹீத் சகோதரர்களும் தமுமுகவில் இருந்து விலகிய போது இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைக்கலாம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற சங்கம் என்று பெயர் வைக்கலாம் என்று சிலர் அப்போது கூறினார்கள்.

நாம் வேண்டாம் என்று உதறித் தள்ளிய ஒரு இயக்கம் நமக்கு வேண்டாம். அந்த இயக்கத்தின் சாயல் கூட நமக்குத் தேவை இல்லை. அந்த இயக்கம் தான் என்று மக்களை மதி மயங்கச் செய்யும் எந்தப் பெயரும் வேண்டாம். நாம் பின்னர் வளர்ந்து விட்டால் எங்கள் இயக்கம் போல் மக்களை ஏமாற்றி வள்ர்ந்து விட்டனர் என்று பிரச்சாரம் செய்யும் நிலைமை வேண்டாம். தமுமுக வின் வாடை கூட அடிக்காத ஒரு பெயரில் இயங்குவோம் என்று அன்றைய தவ்ஹீத் பிரச்சாரகர்கள் வலியுறுத்தினார்கள். பெயரைக் கொண்டு வளர்க்காமல் கொள்கையைக் கொண்டு வளர்ப்போம் என்று அப்போது முடிவு செய்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று செயல்படுவோம் என்று முடிவு செய்தனர்.

ஆனால் பாக்கரிடம் அந்த தார்மீக நெறி கடுகளவும் இல்லை. தவ்ஹீத் ஜாமாஅத் என்ற பெயரைச் சொன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் என்று மீடியாக்களும் அப்பாவிகளும் நம்புவார்கள் என்பதே இவரது மோசடித் திட்டமாக இருந்தது.

செயல்பாட்டிலும் மோசடி

அது மட்டும் இல்லாமல் அவர்கள் தங்களின் செயல்பாட்டிலும் மோசடி செய்தனர்.  நம்முடைய சகோதரர்கள் மக்களிடம் பித்ரா வசூலிக்கச் சென்ற போது இப்போது தானே உங்கள் இயக்கத்தில் இருந்து ஃபித்ரா வாங்கிச் சென்றனர் என்று மக்கள் கூறலானார்கள். கடைசியில் விசாரித்தால் மேற்படி கூட்டம் தான் இந்த வேலையைச் செய்தனர் என்பது தெரிய வந்தது.

இரத்ததானம் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களில் இவர்கள் இது போல் அயோக்கியத்தனம் செய்தனர்.

கெட்ட செயலுக்கும் கெட்ட கொள்கைக்கும் தவ்ஹீத் முலாம்

சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டது, தர்காவுக்கு போனால் காபிரா என்று தொலைக் காட்சியில் பகிரங்கமாகப் பேசியது, கப்ரு வனங்கிகளின் தலைவார் ஷேக் அப்துல்லா ஜமாலிக்கு ஆதரவு அளித்தது, தவ்ஹீதை ஒழிக்க 19 இயக்கத்தை உருவாக்கியது அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்தால் தப்பா எனக் கேட்டது, அனாச்சரங்கள் நடக்கும் திரும்ண நிகழ்ச்சிகளில் தவ்ஹீதின் பெயரால் கல்ந்து கொண்டது என அத்தனையையும் தவ்ஹீத் ஜமாஅத் பெயரிலேயே இந்தக் கொள்கையற்ற கும்பல் அரங்கேற்றினார்கள்.

தவ்ஹீத் என்றால் கப்ரு வணக்கம் என்று ஆக்கி விடுவார்கள் என்ற அளவுக்கு இவர்கள் தரம் தாழ்ந்து போனார்கள்.

செருப்பின் அடியில் மக்கா படம் போட்டு டென்மார்க் கயவர்கள் இஸ்லாத்தைச் சீண்டியதற்கும் தவ்ஹீத் பெயரைப் போட்டு இவர்கள் நடந்து கொள்ளும் முறைக்கும் பெரிய வித்தியாசம் நமக்குத் தெரியவில்லை.

ஒரு சிறந்த இயக்கத்தின் பெயரில் குழப்பம் விளைவிக்கிறார்களே நம் உயிரினும் மேலான தவ்ஹீத் கொள்கையை இழிவு படுத்துகிறார்களே என்று ஏராளமான கொள்கைச் சகோதரர்கள் கவலை தெரிவித்தனர்.

அது மட்டும் இல்லாமல் இவர்கள் இப்படிச் செயல்படுவதற்கு இந்தியாவில் சங்கம் நடத்தும் சட்டப்படி பதிவு செய்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் பதிவு செய்தால் அதற்கு முழுமையான கணக்கு வழக்குகள் பராமரிக்க வேண்டும். எனவே பதிவு செய்யாமலே தான் கள்ள இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

யாராவது இந்த ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரையும் பதிவு செய்ய வேண்டும் என்று பாக்கர் நீக்கப்படுவதற்கு முன் முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வளவுக்கும் பிறகு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று செயல்படுவதாக் இருந்தால் இதை யாராவது பதிவு செய்துள்ளார்களா? ஏற்கனவே இது பற்றி பேசப்பட்டுள்ள போது இதற்காக யாராவது முயற்சிப்பார்களே என்ற குறைந்த பட்ச பொது அறிவும் இவர்களுக்கும் மழுங்கி விட்டது.

ஆனால் நாங்கள் அப்போதே இதற்கான முயற்சியில் இறங்கி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை சட்டப்படி சங்கப்பதிவு சட்டப்படி பதிவு செய்து விட்டோம்.. ஆனாலும் நாம் அதை சில காரணங்களுக்காக வெளிப்படுத்தாமல் இருந்தோம்.

இனியும் இவர்களை விடக் கூடாது என்பதால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரை பாக்கரைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் முடிவு செய்தோம்.

இந்திய தவ்ஹித் ஜமாஅத் பதிவு எண் 84/2010 என்பது நமது பதிவு எண்ணாகும். இந்தப் பெயரில் யாரும் சங்கம், இயக்கம் அவைத்துக் கொள்வது சட்ட விரோதமாகும்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக