சனி, 17 நவம்பர், 2012

இறைவனை நம்புவது எப்படி ?






அல்லாஹ் தனித்தவன் 

"அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!  (அல்குர்ஆன் 112:1)

அல்லாஹ் தேவைகளற்றவன். (அல்குர்ஆன் 112:2)

அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:4)



அர்ஷ்
 என்றால் என்ன? 


அர்ஷ் என்பது அவனுடைய மிகப் பிரம்மாண்டமான ஆசனமாகும்.
”ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! (அல்குர்ஆன் 23:86)

அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். (அல்குர்ஆன் 2:255)
அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள். (அல்குர்ஆன் 69:17)


அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்று உன்னிடம் யாராவது கேட்டால் நீ அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் எவ்வாறு அமர்வது அவனுக்குத் தகுதியானதோ அந்த விதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று கூறவேண்டும்

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள் சான்றாக உள்ளன. பின்வரும் வசனங்களி­ருந்தும் ஹதீஸி­ருந்தும் அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும், (அல்குர்ஆன் 67:16.)

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5).

நபி(ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்தி­ருக்கிறான் என்று கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ர­)
நூல் : முஸ்லிம்  (836)

அல்லாஹ் தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று கூறுவது கூடாது. இவ்வாறு கூறுவது இஸ்ôத்திற்கு மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ் தான் அர்ஷில் இருப்பதாகக் கூறிய பிறகு அதற்கு மாற்றமாக நம்பிக்கை கொள்வது கூடாது


அல்லாஹ்வின் தோற்றம்

இறைவன் உருவமற்றவன் என்று கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.
அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது, அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள்.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22,23)

மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அவனைப் பற்றி எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாது வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து நானே உங்கள் இறைவன் என்று கூறுவான்.
அறிவிப்பவர் :  அபூஸயீத் அல்குத்ரீ(ர­)
நூல் : புகாரீ (7439)


இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான் :
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)



அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?

நாம் அல்லாஹ் அர்ஷில் எவ்வாறு அமர்வது அவனுக்குத் தகுதியானதோ அவ்விதத்தில் அமர்ந்திருக்கிறான் எனக்கண்டோம். ஆனால் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் பொறுமையாளர்களுடனும் (2 53) இறையச்சமுடையவர்களுடனும் ( 2 194 ) இறைநம்பிக்கையாளர்களுடனும் ( 8  19)  நன்மையான காரியங்கள் செய்பவர்களுடனும் (16 127)  மேலும் 5 12  57 4 ஆகிய வசனங்களில் அனைத்து மக்களுடனும் அல்லாஹ் இருப்பதாகக் கூறுகிறான்.

அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்பதின் கருத்து நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நம்முடைய ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதாகும். 

இதனை பின்வரும் வசனத்தின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும். 

அல்லாஹ் மூஸா ( அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்கதளையும் ஃபிர்அவ்னிடம் சென்று சத்தியத்தைக் கூறுமாறு அனுப்பும் போது
”அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 20:46)

அதாவது இறைவன் நாம் செய்பவைகளைப் பார்ப்பதின் மூலமும் நாம் சொல்பவைகளை கேட்பதின் மூலமும் நம்முடன் இருக்கிறான்.
இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதன் கருத்து அவன் நம்மைக் கண்காணித்து நாம் செய்யும் செயல்களை பாதுகாத்து வைத்துக் கொள்வான் என்பதாகும்.


அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா?

இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது !

அல்லாஹ் கூறுகிறான் :
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். (அல்குர்ஆன் 6:103)
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ”என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். அதற்கு (இறை வன்) ”என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்” என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது ”நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” எனக் கூறினார் (அல்குர்ஆன் 7:143)

நபி(ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா? என்று கேட்கப்பட்டபோது அவனோ ஒளியானவன் நான் அவனை எப்படிப் பார்க்கமுடியும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ர­)
நூல் : முஸ்லிம்  (261)


மறுமையில் நல்லடியார்கள் இறைவனைக் காண்பார்கள்.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22,23)

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் சிலர் அல்லாஹ்வின்தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் ஆம்! காண்பீர்கள். மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரையொருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மேகமே இல்லாத பவுர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவினைப் பார்ப்பதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டனர். மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் முண்டியடித்துச் செல்லாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் முண்டியடிக்க மாட்டீர்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ர­)
நூல் : புகாரீ (4581)


காஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்படுவார்கள்
.

அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 83:15)


அழகிய திருநாமங்கள்


அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள்
”அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவ னுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று (முஹம்மதே!) கூறுவீராக! உமது பிரார்த் தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெது வாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக! (அல்குர்ஆன் 17:110)


ஆஷுரா நோன்பு






       தமிழகத்தில்  முஹர்ரம் தலைப்பிறை முடிவு செய்யப்பட்டதன்  அடிப்படையில், வருகிற  நவம்பர் 24 மற்றும் 25  (2012) ஆகிய  தேதிகளில்  நோன்பு வைப்பது சுன்னத்.


"நபி (ஸல்) அவர்கள் மதினா வந்த போது யூதர்கள் ஆஷுரா நோன்பு நோர்ப்பதைக்கண்டார்கள். இது என்ன நாள்? என்று கேட்டார்கள். இது மூசா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றிய நாள். கொடியவன் பிர் அவுன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாள். அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நோன்பு நோற்கிறோம், என்று பதிலளித்தார்கள்.
(உங்களை விட) நான் மூஸாவுக்கு அதிகம் நெருக்கமானவன், என்று கூறி விட்டு, அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்கும் படி கட்டளையிட்டார்கள்."" 
நூல் : புஹாரி 

(மற்றொரு அறிவிப்பில், ஆஷுரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம், விரும்பியவர்கள் விட்டு விடலாம், என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே இது சுன்னத் தான்.  கட்டாயம் இல்லை என்பதை அறியலாம்)


ரசூல் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தது முஹர்ரம் பத்தாம் நாளில் என்றாலும், ஒரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு வைத்து யூதர்களுக்கு மாறு செய்வேன், என்று கூறியுள்ளார்கள்.
அந்த அடிப்படையில் இரு தினங்களுமே சுன்னத்தான நோன்பை வைப்பதற்கான நாள் தான் என்பதை அறியலாம்.  
ஆதாரம் : புஹாரி 1917  

ஆஷுரா நோன்பு வைப்பது கடந்த ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

நூல் : முஸ்லிம் 1977  

செவ்வாய், 6 நவம்பர், 2012

தொழுகை நடத்த தகுதியற்ற பள்ளிகள் !






தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! அல்குர்ஆன் 9:107, 108


மேற்கண்ட வசனத்தில் நபியவர்களுடைய காலத்தில் ஏகத்துவ வாதிகளுக்கெதிராக முனாஃபிக்கீன்கள் கட்டிய ஒரு பள்ளிவாசலைப் பற்றித் தான் அல்லாஹ் பேசுகிறான். முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியைப் பற்றி அல்லாஹ் நான்கு காரணங்களைக் கூறுகிறான்.

1. முஃமின்களுக்குத் தீங்கு இழைத்தல்
2. ஏக இறைவனை மறுத்தல் 
3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல்
4. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரிவோருக்குப் புகலிடம்

இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.
இந்த நான்கு காரணங்களும் எந்தெந்தப் பள்ளிகளில் காணப்படுகின்றதோ அவற்றைக் கட்டியவர்கள் அதனைப் பள்ளிவாசல் என்று சொல்லிக் கொண்டாலும் அவை இறைவனின் பார்வையில் இறையாலயமாகாது. இப்படிப்பட்ட பள்ளிகளில் உண்மையான முஸ்லிம்கள் சென்று தொழுவதும் தகாது.

இன்று நம் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்றதா என்று பார்ப்போம்.

1. முஃமின்களுக்குத் தீங்கிழைத்தல்

நபிகள் நாயகம் காலத்தில் பள்ளிவாசல் என்பது மக்களின் துயர் துடைக்கும் மையமாக விளங்கியது. பசியால் வாடுபவர்களும், படுப்பதற்கு இடமில்லாதவர்களும், பிணியால் அவதிப்படுவோரும், துயரங்களுக்கு உள்ளானவர்களும் நாடி வரும் இடமாகப் பள்ளிவாசல் தான் இருந்தது. ஆனால் இன்றோ வயிற்றுச் சோறுக்கு வழியில்லாதவன் கூட பள்ளிக்கு வரி கட்டவில்லையென்றால் அவனுக்கு அடக்கம் செய்ய இடம் கிடையாது என்று அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் நபிவழியின் பிரகாரம் விரலசைத்து, நெஞ்சில் கைகட்டி தொழுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பெண்களுக்குப் பள்ளிவாசல்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. மஃரிப் உடைய முன் சுன்னத் போன்ற தொழுகைகள் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நபி வழியின் பிரகாரம் சப்தமிட்டு ஆமீன் கூறுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பள்ளியில் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் படிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

தன்னைப் பெற்ற தந்தைக்கு மகன் ஜனாஸா தொழுவிப்பதற்குப் பள்ளிவாசல் நிர்வாகிகள் கதவடைக்கின்றனர். சத்தியக் கருத்துகளை உள்ளது உள்ளபடி பள்ளியில் எடுத்துரைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. நபிவழியின் பிரகாரம் வரதட்சணை வாங்காமல் அனாச்சாரங்களை ஒழித்து செய்யப்படும் திருமணங்களுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்படுகிறது. பதிவுப் புத்தகம் தர மாட்டோம் என்று மிரட்டப்படுகின்றனர்.
வரதட்சணை வாங்கினாலும் பள்ளிக்குப் பங்கு தரவேண்டும் என்று ஜமாஅத்துகள் விதி வகுத்துள்ளன. வரதட்சணைத் திருமணங்கள் பள்ளிவாசல் இமாம், முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் முன்பாகவே பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன.

பள்ளிவாசல்களுக்குக் கோடிக் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் மக்களிடம் பணம் கறப்பதில் தான் பள்ளிகள் போட்டியிடுகின்றனவே தவிர யாருக்கும் எந்த உதவியும் இன்றைய பல பள்ளிகளில் காண முடிவதில்லை.  இவ்வாறு பல விஷயங்களில் பள்ளிவாசல்கள் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இடமாகத் தான் உள்ளனவே தவிர நபிகள் நாயகம் காலத்தில் இருந்த ஒரு நிலையை சில பள்ளிகளில் தவிர மற்றவற்றில் காண முடிவதில்லை.

2. இறை நிராகரிப்பு

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் 72:18

மேற்கண்ட வசனத்திற்கு நேர் எதிராகப் பல பள்ளிவாசல்கள் இணைவைப்புக் காரியங்களின் கோட்டைகளாகத் திகழ்கின்றன.  பள்ளிவாசல்களுக்குப் பெயர் வைக்கும் போதே நாகூராண்டவர் பள்ளிவாசல், முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்று இறைவனல்லாத ஆண்டவர்களுக்காகத் தான் பள்ளிவாசல்களே கட்டப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவர் எங்கும் வருவார் என்ற குஃப்ரான நம்பிக்கையில் தான் பல பள்ளிகளுக்கு இவருடைய பெயரைச் சூட்டுகின்றனர்.

இறைவனுடைய அடிமைகளை எல்லாம் இறைவனாகப் பாவித்து ஓதப்படுகின்ற கேடுகெட்ட மௌலிது குப்பைகள் பள்ளிவாசல்களில் தான் அரங்கேற்றப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவரை ஆயிரம் முறை அழைத்தால் விரைந்து வருவார்; அழைப்பிற்குப் பதில் தருவார் என்ற நரகத்து வரிகளை உள்ளடக்கிய யாகுத்பா, சுப்ஹான மௌலிது, நாகூர் ஆண்டவர் மௌலிது, ஸலாத்துன் னாரிய்யா போன்ற பல குப்பைகள் பள்ளிவாசல்களில் கொட்டப்படுகின்றன. பள்ளிவாசல்களுக்குள்ளேயே கப்ருகள் கட்டப்பட்டு வணக்க வழிபாடுகள் செய்யப்படுகின்றன. 

மேலும் பள்ளிவாசல்களோடு இணைந்ததாக பள்ளிவாசல் காம்பவுண்டிற்குள் அட்டாச்டு தர்ஹாக்களும் இணைந்துள்ளன. மேலும் தாயத்து தகடுகள், பில்லி, சூனியம், பால்கிதாப் பார்த்தல், போன்ற இன்னும் பல இணை கற்பிக்கும் காரியங்கள் அனைத்தும் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. இவ்வாறு பல பள்ளிகள் இறை நிராகரிப்பின் தளங்களாகத் தான் திகழ்கின்றன. இந்த இரண்டாவது காரணமும் பல பள்ளிகளில் நிதர்சனமாக, தெளிவாகவே காணப்படுகிறது.

3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல்

பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் மையமாகும். ஆண்டியும், அரசனும், கருப்பனும், வெள்ளையனும் சமம் என்றுரைக்கும் இடம் தான் பள்ளிவாசல். ஆனால் இத்தகைய பள்ளிவாசல்கள் தான் முஃமின்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் இடங்களாக நமக்கு மத்தியில் காட்சியளிக்கின்றன. நான்கு மத்ஹபுகளின் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் எங்கள் பள்ளிக்குள் வரக் கூடாது என்று போர்டு மாட்டி வைத்திருப்பதே பிரிவினைக்கு முதல் சான்றாகும். சமுதாயத்தில் ஏற்படும் எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் கூட தீர்த்து விடலாம். 

ஆனால் இந்த ஷாஃபி, ஹனஃபி பிரச்சினை கியாமத் நாள் வரை தீராத பிரச்சினையைப் போன்றும், ஜாதிப் பிரிவினைகளைப் போன்று பிறக்கும் போது ஒட்டிக் கொண்டு பிறக்கின்ற ஒரு பிரிவினையாகி விட்டது. இன்றைக்கும் கூட பல ஊர்களில் ஷாஃபியாக்கள்  மற்றும் ஹனஃபியாக்களுக்கு மத்தியிலான திருமண உறவுகள் மிக அரிதாகவே நடைபெறுகின்றன. பள்ளிவாசல்கள் உருவாக்கப்படும் போது இது ஷாஃபி பள்ளி இது ஹனஃபி பள்ளி என்று பிரிவினையின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரே பள்ளியில் குறுக்காகச் சுவர் வைக்கப்பட்டு ஷாஃபிகள் ஒரு புறமும், ஹனஃபிகள் ஒரு புறமும் தொழுது வருகின்றனர். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற பெரும் மதரஸாக்களிலெல்லாம் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைப் போன்று ஷாஃபி மாணவர்கள் ஒரு புறமும் ஹனஃபி மாணவர்கள் ஒரு புறமும் மிகவும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

கஃபாவில் கூட பல ஆண்டுகளாக நான்கு முஸல்லாக்கள் விரிக்கப்பட்டிருந்தன. தவ்ஹீதின் ஆட்சி வந்த பிறகு தான் அவையனைத்தும் ஒன்றாக்கப்பட்டன. அனைத்து ஆலிம்களும் ஷாஃபி ஹனஃபி பிரிவினை தான் சரி என்றே பள்ளிவாசல்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.
இமாம் ஷாஃபியின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் அபூ ஹனீஃபாவின் மிகச் சிறந்த ஒரு மார்க்கத் தீர்ப்பை ஷாஃபியானவன் பின்பற்றினால் அவன் நரகவாதியா? இமாம் அபூ ஹனீஃபாவின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் ஷாஃபி அவர்களின் மிகச் சிறந்த மார்க்க ரீதியிலான கருத்துக்களை ஹனஃபியானவன் பின்பற்றினால் அவன் நரக வாதியா?

இதற்கெல்லாம் இந்தப் பிரிவினை ஆலிம்கள் பதில் கூறத் தயாரில்லை. இப்படிப்பட்ட இந்த மத்ஹப் பிரிவினைகளின் உலைக்களங்களாகத் தான் இன்றைய பல பள்ளிகள் திகழ்கின்றன. இப்படிப்பட்ட பள்ளிகள் உண்மையான முஸ்லிம்கள் தொழுவதற்குத் தகுதியானதா? என்பதை உண்மை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

4. அல்லாஹ்விற்கும் தூதருக்கும் எதிராகப் போர் புரிபவர்களுக்குப் புகலிடம்


இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். அல்குர்ஆன் 9:17, 18

மேற்கண்ட வசனங்கள் இணை கற்பிப்பவர்கள் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வது கூடாது என்பதைத் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல் நிர்வாகிகள் 1. அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர்களாகவும் 2. தொழுகையை நிலை நாட்டுபவர்களாகவும் 3. ஸகாத்தை நிறைவேற்றுபவர்களாகவும். 4. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவராகவும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஆனால் இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளின் நிலைகளை நாம் பார்க்கும் போது இதற்கு நேர்மாற்றமாகத் தான் உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் தர்ஹா வழிபாடு, தாயத்து தகடுகள், மௌலிதுகள் போன்ற அனைத்து இணை கற்பிக்கும் காரியங்களுக்கும் குத்தகைதாரர்களாகத் திகழ்கின்றனர். இவையனைத்தையும் பள்ளி வாசல்களில் இவர்கள் தான் அரங்கேற்றுகின்றனர்.

மேலும் இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யக்கூடிய வட்டி மூசாக்கள், வரதட்சணையை ஆதரிக்கும் இமாம்கள், முத்தவல்லிகள், கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகள், லாட்டரி வியாபாரிகள், கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள், பள்ளிவாசலை சீட்டாட்டத்திற்கும், பொழுது போக்கிற்கும் பயன்படுத்தி விட்டுப் பாங்கு சொன்னவுடன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறக் கூடியவர்கள், அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கக்கூடிய அரசியல் புரோக்கர்கள், பெண்களைப் பலவந்தமாக அடையக் கூடிய காமவெறியர்கள், விபச்சாரம் செய்யக் கூடியவர்கள், மது அருந்தக் கூடியவர்கள் ஆகியோர் தான் இன்றைக்குப் பல பள்ளிவாசல் நிர்வாகிகளாகக் காட்சி தருகின்றனர். மேலே சுட்டிக்காட்டப்பட்ட காரணங்களிலும் அல்லது சொல்லப்படாத இன்னும் பல தீய காரணங்களிலும் ஒன்றோ இரண்டோ அல்லது இதற்கு அதிகமான விஷயங்களோ இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் காணப்படாமல் இல்லை. இவற்றை வெளிப்படையாகவே பலர் செய்து வருகின்றனர். இப்படி இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, இறைவனுக்கெதிராக யுத்தம் செய்கின்றவர்களுக்குப் புகலிடமாகத் தான் பல பள்ளிகள் திகழ்கின்றன.

இது போன்ற பள்ளிகள் உண்மையான முஃமின்கள் நின்று வணங்குவதற்குத் தகுதியானவை கிடையாது என்பது தான் முதலில் நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இறைவனின் பிரகடனமாகும். !!





ஞாயிறு, 4 நவம்பர், 2012

இறந்தவரின் பொருட்டால்...




அஸ்ஸலாமு அலைக்கும்


கப்ரு வணங்கிகள் இறந்தவரின் பொருட்டால் கேட்பதை கப்ரு ஜியாரத் என்று கூறுகின்றனர். உண்மையில் கப்ரு ஜியாரத்தின் நோக்கத்தை பார்ப்பதற்கு முன்னால் இறந்தவரின் பொருட்டால் கேட்பது சரியா என்று பார்ப்போம்.

கப்ரு வணங்கிகளில் மூன்று வகையினர் உள்ளனர்.

முதலாவது வகையினர் :

அவ்­லியாவே என்னுடைய நோயைப் போக்குங்கள், எனக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தாருங்கள். என்று நேரடியாக கப்ரில் அடங்கியிருப்பவர்களிடமே கோரிக்கை வைப்பார்.

இரண்டாவது வகையினர்;

அவ்லி­யாவே அல்லாஹ்விடம் வாங்கித்தாருங்கள் என்று கேட்பார்கள். இவர்கள் நாம் நேரடியாகக் கேட்டால் அல்லாஹ் தரமாட்டான். இந்தச் சமாதியில் இருப்பால் கேட்டால் அல்லாஹ் உடனடியாகத் தருவான் என நம்பிக்கை வைத்துள்ளனர்.
மூன்றாவது வகையினர் :
அல்லாஹ்வே இந்த அவ்­லியாவின் பொருட்டால் என்னுடைய நோயைப் போக்குவாயாக. என்னுடைய நாட்டத்தை நிறைவேற்றுவாயாக என்று கேட்கின்றனர். அதாவது அவ்­யா இவர் பேசுவதை கேட்கவும் மாட்டார். பார்க்கவும் மாட்டார். மாறாக இறந்து போனவரின் பொருட்டால்  அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் கட்டாயம் தருவான் என நம்புகின்றனர்.
இதில் முதல் வகையினரை கப்ரு வணங்கிகளில் ஒரு பிரிவினரே காஃபிர்கள் என்று கூறுகின்றனர். இதனால் நாம் முதல் வகைக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை.
மாறாக அவ்­லியாக்களின் பொருட்டால் கேட்டால் அல்லாஹ் தருவான் என்று நம்பலாமா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

அல்லாஹ்வை நாம் இறைநம்பிக்கை கொள்ளும் போதே அவன் நாடியதைச் செய்பவன் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். அல்லாஹ் யாருக்காகவும் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் அல்லாஹ்வுக்கு கிடையாது.
 
யாராவது ஒருவன் இறைவன் இன்னாருக்காக கடமைப்பட்டுள்ளான். இன்னாரின் பொருட்டால் கேட்டால் இறைவன் தந்தாக வேண்டும் என்று கூறினால் அவன் இறைவன் நாடியதைச் செய்பவன் என்ற பண்பை மறுத்த காஃபிராவான்.

 
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் பிரார்த்திக்கும்போது ''இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! நீ நினைத்தால் எனக்குக் கருணை புரிவாயாக!'' என்று கேட்க வேண்டாம். (மாறாக) பிரார்த்திக்கும்போது (இறைவனிடம்) வரியுறுத்திக் கேளுங்கள். ஏனெனில், இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.இதை அபூஹுரைரா (ர­ரி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம்  (52020


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ''இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக'' என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 6339)


ஏனெனில், இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
என்ற நபிகள் நாயகத்தின் சொல் நாம் இறைவன் மீது எவ்வாறு நம்பிக்கை வைத்து அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

ஒருவன்  இறைவா இந்த அவ்­லியாவின் பொருட்டால் எனக்குத் தருவாயாக என்று கேட்டாலும், நாம் கேட்டால் அல்லாஹ் தரமாட்டான் அவ்லி­யா கேட்டால்தான் அல்லாஹ் தருவான் என்று நம்பினாலும் அவன் அந்த அவ்­லியா அல்லாஹ்வை நிர்பந்திக்க முடியும் என்று நம்புகிறான். அல்லாஹ் அந்த அவ்லியாவிற்காக கடமைப்பட்டுள்ளான்
நாம் அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்டால் நமக்குத்  தராத அல்லாஹ் அந்த அவ்­லியா நமக்காக அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் அவருக்காக நமக்குத்தரவேண்டிய தர்மசங்கடத்திற்குள்ளாகிறான் என்றே கருதுகிறார்.
இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்கள் நிச்சயமாக இறைவனை மறுத்த இணைûவ்பாளர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


மேலும் அல்லாஹ்வின் பண்புகளில் மிக முக்கியமான ஒன்று தன்னுடைய அருளை தான் நாடியோருக்கு வழங்குவதாகும். அவ்­யாவின் பொருட்டால் கேட்டால் தருவான் என்று நம்புவது அல்லாஹ்வின் மேற்கண்ட பண்பிற்கு எதிரானதாகும்.

அல்லாஹ் நாடியோ ருக்கு மட்டும் தனது அருளை வழங்கு வான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.  ( 2 : 105)
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (11 : 107)

''அருள், அல்லாஹ் வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்'' என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.. தான் நாடியோருக்கு தன் அருளை அவன் சொந்தமாக்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (3 : 73/ 74)

இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப் பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (5 : 54)

நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். நன்மை செய்தோரின் கூ­யை வீணாக்க மாட்டோம். (12 : 56)

ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான் (14 : 11)

இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (57 : 21)

வேதமுடையோர் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் தாம் சக்தி பெற மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக (உங்களுக்கு அருள் புரிந்தான்.) அருள் அல்லாஹ்வின் கையில் உள்ளது. தான் நாடியோருக்கு அவன் அதைக் கொடுப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (58 : 29)
 

இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (62 : 4 )

மேற்கண்ட வசனங்களி­ருந்து இறைவனை யாருக்கும் கடமைப் பட்டவன் அல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
கப்ரு வணங்கிகள் இறந்தவரின் பொருட்டால் கேட்டால் இறைவன் தருவான் என்று நம்புவதால் அவர்கள் இறைவன் தன் அல்லாத ஒருவருக்கு கடமைப்பட்டவன் என்று தங்கள் செயல்களால் நிரூபிக்கின்றனர். எனவே இறந்தவரின் பொருட்டால் கேட்கும் கப்ரு வணங்கிகள் இணைவைப்பாளர்களே.


கப்ரு ஜியாரத் என்பது மறுமை சிந்தனைக்காகத்தான்!!. இறந்தவரின் பொருட்டால் கேட்பதற்கு அல்ல.!!!
அபூஹுரைரா (ரரி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர் களும் அழுதனர். அப்போது அவர்கள், ''நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.  எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள். (முஸ்­ம் 1777)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள் . அது மறுமையை ஞாபகமூட்டும்
அறிவிப்பவர் : அபூ குரைரா (ர­) இப்னுமாஜா (1558)

உண்மையான இறைநம்பிக்கையாளர்களுக்கு குர்ஆன் ஹதீஸ போதுமானதாகும். 
நாங்கள் மத்ஹபு இமாம்கள் கூறினால்தான் நம்புவோம் எனக்கூறும் கப்ரு வணங்கிகளுக்கு இதோ மத்ஹபு இமாம்களின் கூற்றுக்ள்.


 
அல்லாஹ்வின் பொருட்டால் தவிர பிரார்த்தனை செய்வது வெறுப்பிற்குரியதாகும்.  இறைவா உன்னிடம் இன்னாரின் பொருட்டால் கேட்கிறேன். அல்லது உன்னுடைய மலக்குமார்களின் பொருட்டால்  அல்லது உன்னுடைய நபிமார்களின் பொருட்டால் கேட்கிறேன் என்று கூறுவது கூடாது. ஏனெனில் படைப்பினங்களுக்காக அல்லாஹ்வின் மீது எந்தக் கடமையும் இல்லை.
நூல் : ஹனஃபி மத்ஹபின் இஹ்தியார் என்ற நூல்  பாகம் : 4 பக்கம் : 175)
 


இறைவா இன்னாரின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறுவது கூடாது. அவ்வாறே உன்னுடைய நபிமார்களின் பொருட்டால், உன்னுடைய அவ்­யாக்களின் பொருட்டால் உன்னுடைய தூதர்களின் பொருட்டால் கஅபாவின் பொருட்டால் மஷ்அருல் ஹராமின் பொருட்டால் என்று கேட்பது கூடாது. ஏனெனில் படைப்பினங்களுக்காக அல்லாஹ்வின் மீது எந்தக் கடமையும் இல்லை. மேலும் அல்லாஹ் அவன் மீது எத்தகைய நிர்பந்தமும் இல்லாமல் தன்னுடைய அருளை தான் நாடியோருக்கு வழங்குகிறான்
றீல் : ஹனஃபி மத்ஹபின் அல்பஹ்ருர் ராயிக் பாகம் : 8 பக்கம் : 235)

அரசியல் கூத்தாடிகள் யார்?




அரசியல் என்பதே சமுதாய நலன் என்றிருந்த காலம் மலையேறி, பணம் புகழ் சம்பாதிக்கும் கேந்திரமாக இன்றைய அரசியல் சூழல் ஆகி விட்ட நிலையில், அதற்கு நாங்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று கூறி புறப்பட்ட இவர்கள், சமுதாய நலன் என்று பேசுவதே வெட்கக்கேடானது..

அடிப்படையில் ஒன்றை இந்த சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்..

ஒரு முஸ்லிம் என்பவனுக்கு கொள்கை இருக்க வேண்டும்.. கொடுத்த வாக்கின் படி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.. இந்த அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட சமூக அக்கறை இருக்க வேண்டும்.
இந்த மூன்றும் ஒருங்கே நிரம்பிய ஒருவனே சமுதாய தொண்டாற்ற வேண்டும்..

மேலே நாம் குறிப்பிட்ட அளவுகோல்களில் ஒன்றை கூட பெற்றிருக்காத இந்த தமுமுகவினர், சமுதாய நலன் காக்க அரசியலில் நுழைகிறோம் என்று பிதற்றுவது, சமுதாய நலனையும் அதன் தன்மானத்தையும் அடகு வைக்கும் செயலே தவிர, காப்பாற்றும் செயல் அல்ல!
தங்களது தன்மானத்தையே அடகு வைப்பவர்களிடம் சமுதாயத்தின் தன்மானத்தை பற்றிய அக்கறையை நாம் எதிர்ப்பார்க்க கூடாது.

சமுதாய அக்கறை கொண்டவர்களை மேலே நாம் குறிப்பிட்ட அளவுகோல்களை கொண்டு அலசுவதாக இருந்தால் துவக்கம் முதலே அலசிப்பார்க்கலாம்..

  • ஏகத்துவக் கொள்கையும்  அதன் பிரசாரமும் சமுதாய தொண்டாற்றுவதற்கு குறிக்கே நிற்கிறது என்று பேசியவர்கள் சமுதாய நலனை பேணுபவர்களா?

  • தங்களுக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் வந்து விட்டது என்று ஒடுக்கப்பட்ட நம் சமூகத்தினர், வரலாறு அதுவரை கண்டிராத எழுச்சியுடன் முகமலர்ந்த நேரத்தில், எந்த நிலையிலும் எந்த அரசியல் பதவியையும் நாம் பெற மாட்டோம், இறுதி வரை மக்களுடன் மக்களாக உழைத்துக்கொண்டே இருப்போம் என்று வாக்கு கொடுத்தார்களே, இன்று அந்த வாக்கின் படி நிற்காமல் சமூகத்தை வஞ்சிதவர்கள் சமூக நலனை பற்றி பேசுவதா?

  • இந்த சமுதாய மக்களையும், சமுதாயத்திற்காக குரல் கொடுப்பவர்களையும்  இழிவு படுத்தும் நோக்கில், தமிழக அரசியல் கட்சிகளுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தார்களே, அது தான் சமுதாய நலனா?

  • அடிமை சாசனம் எழுதும் அளவிற்கு அவர்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் விதங்களிலும், தவறுகளை கண்டிக்காதவர்களாகவும், காட்சி தருகிறார்களே, அது தான் சமுதாய நலனா?

  • சமுதாயத்திற்காக அரசியல் கட்சிகள் என்ன செய்கிறது என்பதை கண்டு கொள்ளாமல், தங்கள் கட்சிக்காக என்ன செய்கிறது என்பதை மட்டும் அலசுவது தான் சமுதாய நலனா? 

  • துவக்கத்தில், கலைஞரின் வாலை பிடித்து விட்டோம் என்பதற்காக, இட ஒதிக்கீடு தரும் அதிகாரம் கலைஞருக்கு  இல்லை, நாங்கள் டில்லி செல்கிறோம், என்று உலக மகா புளுகு ஒன்றை புளுகினார்களே, அது தான் சமுதாய நலனை காக்கும் லட்சணமா? 

  • கலைஞர் இட ஓதிக்கீட்டில் துரோகம் இழைத்த போதும் கூட, அதை சப்பை கட்டு கட்டி நியாயப்படுதினார்களே, அந்த ஈன செயல் தான் இவர்களின் பார்வையில் சமுதாய நலனா?

  • கலைஞர் இரண்டு தருகிறார் என்பதற்காக, அவருக்கு வால் பிடித்து, இப்போது அவர் தரவில்லை என்பதற்காக அம்மா பக்கம் செல்கிறார்களே, இவர்கள் தங்கள் சுய நலனை கவனித்தார்களா சமுதாய நலனை கவனித்தார்களா?
  • பிஜே அதிமுக வை ஆதரித்தார் என்ற ஒற்றை காரணத்திற்காகவே     அதிமுகவை விமர்சனம் செய்து கண்டித்தவர்கள், இன்றைக்கு அதே ஆதிமுக வின் வெற்றிக்காக பாடு படுவோம் என்று அறிவிப்பது கேவலமில்லையா? இத்தகைய கேவலமான செயலை செய்தும் கூட சமுதாய நலனில் இவர்கள் அக்கறை காட்டுபவர்கள் என்று மக்கள் நம்பி விடுவார்களா?

  • ஆரம்ப காலத்தில், சமுதாய மக்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற வக்கில்லாமல் இன்று வாரியம், MP பதவி, MLA பதவி என்று சபலப்படுகிறார்களே, இவர்களா சமுதாய நலனை காப்பவர்கள்?

  • வெறும் இயக்கம் நடத்திக்கொண்டிருந்த பொழுதே சுனாமி வசூல், பித்ரா வசூல் என்று சமுதாய மக்களிடம் இருந்து பிடுங்கி தின்றார்களே, இவர்களா பதவிக்கு வந்த பின்னர் சமுதாய மானம் காப்பார்கள்?

காசுக்கும், சீட்டுக்கும் வேண்டி கட்சிகளிடம் பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள் கேவலமான அரசியல் நடத்துகிறார்களா? அல்லது சமுதாயதிற்காகவும், அதன் முன்னேற்றதிற்காகவும் மட்டும் பேரம் பேசுபவர் கேவலமான அரசியல் செய்பவரா?
விமர்சனம் செய்வதற்கென்ற அடிப்படை தகுதியாவது உங்களுக்கு இருக்கிறதா?
கேவலத்தை பற்றி யார் யாரை நோக்கி பேசுவது?

ஏகத்துவம் தமிழகத்தில் வளரவே கூடாது என்ற கொள்கையை உயிர் மூச்சாக கொண்டு, வெறும் வாரியப்பதவியை வைத்துக்கொண்டே  ஏகத்துவவாதிகளுக்கு இவர்கள் செய்த அட்டூழியங்களை பட்டியலிட்டால் இவர்கள் சமுதாய நலனை காப்பவர்களா அல்லது சமுதாய துரோகிகளா? என்பதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.. அத்தகைய பட்டியல் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்..
இந்த கருவை, அது கருவாக இருக்கும் போதே அழித்து விட வேண்டுமே அல்லாமல், வளர விடுவது நம் சமூகத்திற்கும், இஸ்லாமியக்கொள்கைக்குமே நாசக்கிருமியாய் மாறி விடும்.. 

மேலே உள்ளவற்றுக்கும், சமுதாயம் சார்பாக நாம் அடுத்தடுத்து வைக்கப்போகின்ற பல பல கேள்விகளுக்கும் முறையான பதிலை சொல்லி, நாங்கள் கேவலமான அரசியல் செய்யவில்லை என்று தமுமுகவினர் நிரூபிக்க தயாரா?
இதற்கு தயாராகாதவரை, இந்த சமுதாயத்தின் எந்த அங்கீகாரமும் இவர்களுக்கு இனி கிடைக்காது இன்ஷா அல்லாஹ்!


ஹதீஸ்கள் அவசியமா?





நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களி­ருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர்.

(அல்குர்ஆன் 3:164)

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.
(அல்குர்ஆன் 53:2,3)

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
(அல்குர்ஆன் 16:44)

இவ்வசனத்தில் திருக்குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
முதலாவது வழி, வாசிப்பவர்கள் அவர்களே சிந்தித்து விளங்கிக் கொள்ளுதல்.
இரண்டாவது வழி, யார் வேதத்தைக் கொண்டு வந்தாரோ அந்தத் தூதர் தந்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் விளங்குதல்.

திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்தால் கணிசமான வசனங்கள் எந்த விளக்கமும் தேவைப்படாமல் மேலோட்டமாக வாசிக்கும் போதோ, அல்லது கவனமாக சிந்திக்கும் போதோ விளங்கி விடும். 
ஆனால் சில வசனங்கள் எவ்வளவு தான் சிந்தித் தாலும் நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் சரியாக விளங்காது.

முஹம்மதே! உமக்கு வேதத்தை அளித்தது, நீர் விளக்குவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் தான் என்று இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.

திருக்குர்ஆனுடன் நபிகள் நாயகத்தின் விளக்கம் தவிர்க்க இயலாதது என்பதற்கு வலுவான சான்றாக இவ்வசனம் திகழ்கிறது.



இந்திய தவ்ஹீத் ஜமாஅத் யார்??






இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பதிவு எண் 84/2010

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்ற அறிமுகத்துடன் இந்த இணைய தளம் உங்களை வரவேற்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாக்கர் நீக்கப்பட்டதை அனைவரும் அறிவீர்கள்.

தொடர்ந்து பாலியல் சேட்டைகள், பண மோசடி ஆகிய காரணங்களுக்காக அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரால் ஆதாயம் அடைந்தவர்களும், தவ்ஹீத் ஜமாஅத்தைச் சொந்த ஆதாயங்களுக்காக இனி மேல் பயன்படுத்த முடியாது என்று நம்பிக்கை இழந்தவர்களும் ஜமாஅத்துக்குத் துரோகம் செய்ததால் அவர்களும் கண்டறியப்பட்டு தூக்கி எறியப்பட்டனர்.

இயக்கம் கண்டதே தவறு

இவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளில் கருத்து வேறுபாடு கொண்டு நீங்கிச் சென்றிருந்தால் இவர்கள் ஒரு இயக்கம் ஆரம்பிக்க தார்மீக உரிமை உண்டு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்படும் வரை நூறு சதவிகிதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையில் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிக் கொண்டு இருந்தனர். தங்களின் கெட்ட செயலுக்காகத் தான் தாங்கள் நீக்கப்பட்டுள்ளோம் என்பது அவர்களுக்கும் தெரியும். உலகுக்கும் தெரியும்.

நாம் ஒரு தவறு செய்து மாபெரும் இயக்கத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி விட்டோம், நம்மை உயர்ந்த இடத்தில் வைத்திருந்த மக்களின் நம்பிக்கையை நாம் சீர்குலைத்து விட்டோம். நம்மை நம்பி பணம் கொடுத்த மக்களுக்கு  துரோகம் செய்து விட்டோம் என்ற உறுத்தல் இருந்திருந்தால் பாக்கர்  தனியாக தனக்காக ஒரு இயக்கம் ஆரம்பித்திருக்கக் கூடாது. 

பீஜேயும் பாக்கரும் அலாவுத்தீனும் அனவர் பாஷாவும் அன்று தமுமுகவில் இருந்து விலகினார்கள். விலக்கப்படவில்லை. தவ்ஹீத் பிரச்சாரம் எங்களுக்கு முட்டுக்கட்டை என்று அன்றைய தமுமுக நிர்வாகிகள் சொன்னார்கள். எழுதியும் தந்தார்கள்.
பார்க்க ஆதாரம்

எனவே கொள்கை அடிப்படையில் அவர்கள் பிரிந்ததால் ஒரு இயக்கம் ஆரம்பிக்கும் அவசியமும் உரிமையும் அவர்களுக்கு இருந்தது. இது போன்ற எந்த அவசியமும் தார்மீக உரிமையும் இல்லாமல் பாக்கர் இயக்கம் ஆரம்பித்ததே அடிப்படையில் தவறாகும்.

தனது செயலுக்கு வருந்தி தனக்குத் தானே தண்டனை கொடுத்து சில காலம் ஒதுங்கி இருந்து தன்னைத் திருத்திக் கொண்டு ஒரு இயக்கம் ஆரம்பிக்கும் அவசியம் ஏறப்ட்டுள்ளது என்று சமுதாயம் நம்பும் வேளையில் இயக்கம் ஆரம்பித்தால் கூட அதை ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் தங்களுக்கு ஒரு பதவி இருந்தால் தான் பணம் வசூலிக்க முடியும்; இந்த சமுதாயத்தில் நிறைய அப்பாவி செல்வந்தர்கள் உள்ளனர். அவர்களிடம் வசூலிப்பதற்காக மட்டுமே இவர்கள் இயக்கம் கண்டனர். 

தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் குழப்பம்

அப்படி ஒரு இயக்கம் ஆரம்பிக்கிறார்கள் என்றால் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரைப் பயன்படுத்தினால் மக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தான் நினைப்பார்கள் என்று தெரிந்திருந்தும் அந்தப் பெயரில் இந்தியாவைச் சேர்த்து மக்களை ஏமற்றுவதில் எங்களை மிஞ்ச முடியாது என்று காட்டியது பச்சை அயோக்கியத் தனம்.

பீஜேயும் தவ்ஹீத் சகோதரர்களும் தமுமுகவில் இருந்து விலகிய போது இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைக்கலாம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற சங்கம் என்று பெயர் வைக்கலாம் என்று சிலர் அப்போது கூறினார்கள்.

நாம் வேண்டாம் என்று உதறித் தள்ளிய ஒரு இயக்கம் நமக்கு வேண்டாம். அந்த இயக்கத்தின் சாயல் கூட நமக்குத் தேவை இல்லை. அந்த இயக்கம் தான் என்று மக்களை மதி மயங்கச் செய்யும் எந்தப் பெயரும் வேண்டாம். நாம் பின்னர் வளர்ந்து விட்டால் எங்கள் இயக்கம் போல் மக்களை ஏமாற்றி வள்ர்ந்து விட்டனர் என்று பிரச்சாரம் செய்யும் நிலைமை வேண்டாம். தமுமுக வின் வாடை கூட அடிக்காத ஒரு பெயரில் இயங்குவோம் என்று அன்றைய தவ்ஹீத் பிரச்சாரகர்கள் வலியுறுத்தினார்கள். பெயரைக் கொண்டு வளர்க்காமல் கொள்கையைக் கொண்டு வளர்ப்போம் என்று அப்போது முடிவு செய்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று செயல்படுவோம் என்று முடிவு செய்தனர்.

ஆனால் பாக்கரிடம் அந்த தார்மீக நெறி கடுகளவும் இல்லை. தவ்ஹீத் ஜாமாஅத் என்ற பெயரைச் சொன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் என்று மீடியாக்களும் அப்பாவிகளும் நம்புவார்கள் என்பதே இவரது மோசடித் திட்டமாக இருந்தது.

செயல்பாட்டிலும் மோசடி

அது மட்டும் இல்லாமல் அவர்கள் தங்களின் செயல்பாட்டிலும் மோசடி செய்தனர்.  நம்முடைய சகோதரர்கள் மக்களிடம் பித்ரா வசூலிக்கச் சென்ற போது இப்போது தானே உங்கள் இயக்கத்தில் இருந்து ஃபித்ரா வாங்கிச் சென்றனர் என்று மக்கள் கூறலானார்கள். கடைசியில் விசாரித்தால் மேற்படி கூட்டம் தான் இந்த வேலையைச் செய்தனர் என்பது தெரிய வந்தது.

இரத்ததானம் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களில் இவர்கள் இது போல் அயோக்கியத்தனம் செய்தனர்.

கெட்ட செயலுக்கும் கெட்ட கொள்கைக்கும் தவ்ஹீத் முலாம்

சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டது, தர்காவுக்கு போனால் காபிரா என்று தொலைக் காட்சியில் பகிரங்கமாகப் பேசியது, கப்ரு வனங்கிகளின் தலைவார் ஷேக் அப்துல்லா ஜமாலிக்கு ஆதரவு அளித்தது, தவ்ஹீதை ஒழிக்க 19 இயக்கத்தை உருவாக்கியது அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்தால் தப்பா எனக் கேட்டது, அனாச்சரங்கள் நடக்கும் திரும்ண நிகழ்ச்சிகளில் தவ்ஹீதின் பெயரால் கல்ந்து கொண்டது என அத்தனையையும் தவ்ஹீத் ஜமாஅத் பெயரிலேயே இந்தக் கொள்கையற்ற கும்பல் அரங்கேற்றினார்கள்.

தவ்ஹீத் என்றால் கப்ரு வணக்கம் என்று ஆக்கி விடுவார்கள் என்ற அளவுக்கு இவர்கள் தரம் தாழ்ந்து போனார்கள்.

செருப்பின் அடியில் மக்கா படம் போட்டு டென்மார்க் கயவர்கள் இஸ்லாத்தைச் சீண்டியதற்கும் தவ்ஹீத் பெயரைப் போட்டு இவர்கள் நடந்து கொள்ளும் முறைக்கும் பெரிய வித்தியாசம் நமக்குத் தெரியவில்லை.

ஒரு சிறந்த இயக்கத்தின் பெயரில் குழப்பம் விளைவிக்கிறார்களே நம் உயிரினும் மேலான தவ்ஹீத் கொள்கையை இழிவு படுத்துகிறார்களே என்று ஏராளமான கொள்கைச் சகோதரர்கள் கவலை தெரிவித்தனர்.

அது மட்டும் இல்லாமல் இவர்கள் இப்படிச் செயல்படுவதற்கு இந்தியாவில் சங்கம் நடத்தும் சட்டப்படி பதிவு செய்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் பதிவு செய்தால் அதற்கு முழுமையான கணக்கு வழக்குகள் பராமரிக்க வேண்டும். எனவே பதிவு செய்யாமலே தான் கள்ள இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

யாராவது இந்த ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரையும் பதிவு செய்ய வேண்டும் என்று பாக்கர் நீக்கப்படுவதற்கு முன் முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வளவுக்கும் பிறகு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று செயல்படுவதாக் இருந்தால் இதை யாராவது பதிவு செய்துள்ளார்களா? ஏற்கனவே இது பற்றி பேசப்பட்டுள்ள போது இதற்காக யாராவது முயற்சிப்பார்களே என்ற குறைந்த பட்ச பொது அறிவும் இவர்களுக்கும் மழுங்கி விட்டது.

ஆனால் நாங்கள் அப்போதே இதற்கான முயற்சியில் இறங்கி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை சட்டப்படி சங்கப்பதிவு சட்டப்படி பதிவு செய்து விட்டோம்.. ஆனாலும் நாம் அதை சில காரணங்களுக்காக வெளிப்படுத்தாமல் இருந்தோம்.

இனியும் இவர்களை விடக் கூடாது என்பதால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரை பாக்கரைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் முடிவு செய்தோம்.

இந்திய தவ்ஹித் ஜமாஅத் பதிவு எண் 84/2010 என்பது நமது பதிவு எண்ணாகும். இந்தப் பெயரில் யாரும் சங்கம், இயக்கம் அவைத்துக் கொள்வது சட்ட விரோதமாகும்.,

ஜமாலியின் முரண்பாடுகள் தொகுப்பு !






(யூடியுப் புறக்கணிப்பு முடிவை ஒட்டி கீழ்காணும் லிங்குகளை வேறு இணையதளத்திற்கு மாற்றம் செய்து தர சகோதரர்கள் முயற்சிக்கவும்)

பார்த்து பார்த்து ரசிக்கலாம் வாங்க வாங்க

பதிலளிக்கப்படாத கேள்விகள்!!…….!!

மத்ஹபும் ஒப்பந்தத்தில் உள்ளதுதான்

10 வருஷமா கேட்டாலும் எங்களுக்கு பதில் தெரியாது?

விபச்சாரத்திற்கு மதுஹபுகள் வழங்கும் தண்டனைகள்……

விபச்சாரத்தை தூண்டும் தலாக் சட்டம்

ஹதீசிலிருந்து தான் மத்ஹபா?

இறைவன் எங்குமிருக்கிரானா? தனக்குத்தானே முரண்பட்ட ஜமாலி

ஹதீசுகளை மறைத்து அர்த்தத்தை திரிவு படுத்தும் ஜமாலி….

ஜமாலியின் சில்லறை வாதங்கள்……

கராமத்தா? கப்சாவா?…….

பதிலளிக்க முடியாமல் பம்மிய ஜமாலி……….

யூசுப் நபியை கேவலப்படுத்தும் தப்சீர்கள்………

தப்(f)சீரா? தகவலா?

ஊமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்யலாம்……….!!!!!?

மத்ஹப் ஹஜ் சட்டங்கள்…….

குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு ஆதாரம்…..

ஜமாலி கண்டுபிடித்த மாபெரும் குற்றம்

வேண்டுமென்றே காத்துவிட்டு தொழுகையை முடிக்கலாம்……..

தனக்குத்தானே தானே முரண்பட்ட ஜமாலி……

மேடையேருவதற்கே தகுதி இல்லாத ஜமாலி

எது பித்அத் குழ(ப்)ம்பிய கோமாளி…..

சிறுமியை சீரழித்தால் தண்டனை இல்லை

20 வருஷ கர்ப்பிணியா? உலக அதிசயமா? உளறிய அதிசயமா?

தமிழ் முஸ்லிம்களிடையே ஒரு வரலாற்றுப்பதிவு

எங்களுக்குத்தான் பதில் தெரியாதுன்னு தெரிஞ்சுகிட்டு ஏன் கேக்குறீங்க?

ஆணுக்கு கூடும் பெண்ணுக்கு கூடாதாம்..

ஊமைக்கு தண்டனை இல்லை

மதுஹப் ஆபாசங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும் to watch Full Debate as play list click here http://www.youtube.com/view_play_list?p=E16E30C52D82341D



நக்கீரனுக்கு எதிராக வழக்கு போட வேண்டியது தானே?





கேள்வி :

இதற்கு பதிலளிக்க பிஜே என்ன செய்திருக்க வேண்டும். இவர்கள் கூறியதை கோர்ட்டில் நிரூபிக்க வாய்ப்பளிப்பதற்காக அவர்கள் மீது வழக்கு தொடுப்பேன் என்றல்லவா கூற வேண்டும். ஏன் நக்கீரன் மீது பாய்ச்சல்?


குமுதம் பத்திரிக்கையில், சம்மந்தப்பட்ட பொய்யர், பிஜே மீது அவதூறு சொல்கிறார். அந்த அவதூறோடு  சேர்த்து, பிஜேயின் மறுப்பும் இணைத்தே   அந்த கட்டுரையில் வெளியானது.
திருவிடைசெரி சம்பவம் என்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு சம்பவம்.
முஸ்லிம்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் ஒரு சம்பவம். 
இத்தகைய தருணத்தில், முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேட்டி  எடுத்தால் நல்ல விளம்பரம் தேடலாம் என்பது தான் குமுதத்தின் நோக்கமே தவிர, எந்த தலைவரையும் மட்டம் தட்டும் நோக்கில்லை.

இரு பக்க கருத்தையும் வெளியிட்டிருக்கிறது.


நக்கீரனில், பிஜேயின் மறுப்பு இல்லை.
என்றோ நடந்து முடிந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பத்திற்கு பிஜே தான் காரணம் என்று ஒருவர் சொன்னால், அதில் பிஜேயின் பங்கு என்ன என்பதை விசாரிக்காமலும் , அவரது கருத்தை அறிந்து அதையும் சேர்த்து வெளியிடாமலும் , அவதூறை மட்டும் வெளியிட்டிருப்பதற்கு , பிஜே என்ற நபர் மீது இவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியே காரணம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வழக்கு யார் மீது போட வேண்டும் என்று தீர்மானிப்பது சம்மந்தப்பட்டவரின் முடிவே தவிர, மூன்றாம் நபர் அறிவுறுத்துவது நியாயமாகாது.

இரண்டு சம்பவங்களிலும் சம்மந்தப்பட்டவர் பிஜே என்ற வகையில், முடிவெடுக்கும் உரிமை அவரிடம் உள்ளது.

அந்த மூவர் மீது வழக்கு போடவில்லையே என்று மிகவும் வருத்தப்படும் சகோ. பீர் அவர்களே, அந்த மூவரை பகிரங்க விவாதத்தில் சந்திக்க தயார் என்று பிஜே அறிவித்திருக்கிறாரே, அதற்கு அழைத்து வர முயற்சியுங்கள்.

வழக்கு போடுவதும், விவாதத்திற்கு அழைப்பதும் இரண்டுமே உண்மையை அறிய உதவும். வழக்கிற்கு பயந்து பின்வாங்கியவனும், விவாத்திற்கு வராமல் பின்வாங்கியவனும் பொய்யன் தான்  என்று அளவிட போதுமான காரிணிகள் தான்.


இங்கு எழுதியதை போல அந்த மூவருக்கும், விவாதத்திற்கு வரும்படி அழையுங்கள்.


ஒருவர் இன்னொருவர் மீது குற்றம் சுமத்தி விட்டதாலேயே, இருவரையும் இனி நம்பக்கூடாது என்று முடிவெடுப்பது முட்டாள்தனமானது.
குற்றம் சுமத்துபவர் அக்குற்றத்தை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அப்போது தான் குற்றம் சுமத்தியவர் உண்மையாளர் என்றும் சுமத்தப்பட்டவர் பொய்யர் என்றும் தெரிய வரும்.

அது அல்லாமல், எவரோ மூன்று பேர், ஒருவரை நோக்கி, நீங்கள் தான் குண்டு வைத்தீர்கள் என்று வெறும் வாயளவில் சொல்லி விட்டால், ஆஹ.. பார்த்தீர்களா, சொல்லி விட்டார்கள், இனி பிஜேயை நம்பக்கூடாது, என்று கூப்பாடு போடுவது வடி கட்டிய முட்டாள் தனமே தவிர வேறில்லை.

உங்களை நோக்கி நான், ஊழல்வாதி என்று குற்றம் சுமத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். "பார்த்தீர்களா, குற்றம் சுமத்தி விட்டார்கள், இனி நாஷித்தையும் நம்ப வேண்டாம், பீரையும் நம்ப வேண்டாம், கோர்டுக்கு செல்லலாம், என்று உங்கள் குடும்பத்தினர்  முடிவு செய்வார்களா ? அவ்வாறு செய்வது தான் சரி என்று தான் நீங்களும் கூறுவீர்களா? அல்லது குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை நாஷிதிடம் கேட்டுப்பெறுங்கள் என்று வலியுறுத்துவீர்களா?

குற்றம் சுமத்தியவர் அக்குற்றத்தை நிரூபிக்க திராணி பெற்றவராக இருந்தால் நிரூபிக்கட்டும்.. அதை செய்யாதவரை, அவர்களே பொய்யர்கள்!! 

அது பேராசிரியராக இருந்தாலும் சரி, குண்டு வெடிப்பில் கைதானவர்களாக இருந்தாலும் சரி!!

நீங்கள் பிஜே அனுதாபிகளின் தலைவராக இருந்தால், அந்த மூன்று பேரிடமும் , பேராசிரியரிடமும் அவர்களின் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை அவர்களிடம் சென்று கேளுங்கள்.

இல்லை, பேராசிரியரின், மற்றும் அந்த மூவரின் அனுதாபி தான் நீங்கள் என்றால், அந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை தந்து விட்டு பிஜேயிடம் கேள்வி கேளுங்கள்.

இரண்டையும் செய்யாமல், (அல்லது செய்யும்படி வற்புறுத்தாமல்) குழுமத்தில் வசை பாடி திரிவது அவதூறை பரப்பிய பொய்யர்களில் நீங்களும் ஒருவர் என்ற கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படும்.