புதன், 1 பிப்ரவரி, 2012

இறுதி நபித்துவத்தை மறுப்போர் வெளியிட்ட நோட்டீசுக்கு பதில்


அஸ்ஸலாமு அலைக்கும்..

நோட்டீசில், இறுதியான நபி முஹம்மது (sal) தான் என்பதற்கு ஆதாரம் தர முடியுமா? என்று கேட்கப்பட்டுள்ளது..

ஆதாரங்களை குறித்துக்கொள்ளவும்..

திருக்குர் ஆன் 7 :158 - மனித குலம் முழுவதற்கும் நான் தான் தூதர் என்று முஹம்மது நபியை அல்லாஹ் சொல்ல சொல்கிறான்.

திருக்குர் ஆன் 25 :1 - அகிலத்தில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கை செய்வதற்காகவே இந்த குர் ஆன் தரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வேதமும் அந்தந்த சமுதாய மக்களுக்கு மட்டும் வழி காட்ட இறக்கியிருந்த அல்லாஹ், குர் ஆனை மட்டும், அகிலத்தார் அனைவருக்காகவும் தந்துள்ளதாக சொல்கிறான்.
ஆகவே, மிர்சா குலாம் என்பவனும் பொய்யன், அவன் வேதம் என்று கொண்டு வந்ததும் பொய் !!

திருக்குர் ஆன் 34 :28 - மனித குலம் அனைவருக்கும் எச்சரிக்கை செய்வதற்காக முஹம்மத் நபியை அல்லாஹ் அனுப்பியதாக சொல்கிறான்.
அவர்களுக்கு முன் சென்ற எந்த நபியையும் மனித குலம் முழுமைக்காகவும் அல்லாஹ் அனுப்பவில்லை!முஹம்மது நபிக்கு முன் சென்ற எல்லா நபிமார்களையும் ஒவ்வொரு சமுதாய மக்களுக்காக மட்டுமே அனுப்பினான். முஹம்மது நபியை குறித்து சொல்லும் போது மட்டும், அகிலத்தார் அனைவருக்காகவும் அனுப்பினேன் , என்கிறான். மனித குலம் குலம் முழ்மைக்கும் நபியாக ஒருவரை அனுப்பி விட்ட பிறகு, இன்னொரு நபியை அல்லாஹ்வே அனுப்பினால், தனது வார்த்தைக்கு அல்லாஹ்வே முரண்பட்டு விட்டான் என்கிற பயங்கரமான கருத்து வந்து விடும். அத்தகைய பயங்கரத்தை சர்வ சாதாரணமாக செய்கிறார்கள் இந்த மிர்சா குலாம் அபிமானிகள்!


அடுத்து, ஹாத்தம் நபி குறித்து வரக்கூடிய ஹதீஸை வைத்து நோட்டீஸ் வெளியிட்டுள்ளார்கள்.,
(புஹாரி 3535 )
ஹதீஸை முழுமையாக படிக்காத, அரபி தெரியாத பாமரர்களை ஏமாற்றும் நோக்கில் நோட்டீஸ் வெளியிட்டாலும், ஹதீஸ் உண்மையில் சொல்வது என்ன என்பது விபரமுள்ளவர்கள் அறிகிறார்கள்.

ஹாத்தமு நபி என்றால் இவர்கள் சொல்வது போன்று சிறப்பு வாய்ந்த அர்த்தம் கொடுக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஹாத்தமு நபி என்பதற்கு இறுதி நபி என்கிற அர்த்தமும் இருக்கத்தான் செய்கிறது.
இப்போது, எந்த அர்த்தம், இந்த context உடன் ஒதுப்போகுமோ, அந்த அர்த்தத்தை தான் கொடுக்க வேண்டும்!

context என்ன என்பதை அறிந்தால், இவர்கள் ஹதீஸை எந்த அளவிற்கு திரிக்கிறார்கள், தங்கள் வாதத்தை நிறுவுவதற்காக எப்படி எல்லாம் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவாகும்.

அந்த ஹதீஸில் என்ன வருகிறது தெரியுமா?

இந்த உலகில் தோன்றிய எல்லா நபிமார்கள் குறித்தும், என்னை குறித்தும் ஒரு உதாரணத்துடன் விளக்கவா? என்று கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஒரு உதாரணம் சொல்கிறார்கள் - அது தான் இந்த புஹாரி 3535 ஹதீஸ்.

என்ன உதாரணம்?

அழகான ஒரு கட்டிடம் இருக்கிறது.. பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது. ஆனால், ஒரே ஒரு இடத்தில் ஒரு செங்கல் வைப்பதற்கு மட்டும் சிறு இடம் ஓட்டையாக உள்ளது.
இப்போது, அந்த அழகான கட்டிடம் தான் எனக்கு முன் சென்ற எல்லா நபிமார்களும். ஒரு செங்கல் வைக்க இடமிருக்கிறது என்று சொன்னேனே, அந்த ஒரு செங்கல் தான் நான்!!!!!!!

சுபுஹானல்லாஹ் ! எவ்வளவு தெளிவான வார்த்தைகள்!!!! இதிலேயே நமக்கு புரிகிறது, முஹம்மது நபி தான் இறுதி நபி என்பது.

ஆனால், இதை சொல்லி விட்டு, அதன் தொடர்ச்சியாக அவர்களே சொல்கிறார்கள் (அதே புஹாரி 3535 ஹதீஸ்), நான் தான் ஹாத்தம் நபி!!!!!!

இந்த இடத்தில் சிறப்பான நபி என்று அர்த்தம் வருமா இறுதி நபி என்று வருமா? என்பதை எந்த சிறு பிள்ளையிடம் கேட்டாலும் சொல்லும் !


அடுத்து, முஸ்லிம் 812 இல் பதிவான ஹதீஸ்..

(ஹதீஸின் கருத்து..)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள், ஆறு விஷயங்களின் காரணமாக நான் மற்ற நபிமார்களில் இருந்து தனித்து விளங்குகிறேன்.

குறைந்த வார்த்தைகளைக்கொண்டு நிறைவாக பேசுவது, குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போது கூட எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்ப்படுத்தியது போன்று நான்கு சிறப்புகளை சொல்லி விட்டு ஐந்தாவதாக என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
நான் இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் நபி !!!!!!

ஆறாவதாக என்ன சொல்கிறார்கள் தெரியுமா? நான் முத்திரையிடப்பட்ட நபி !!!!

ஆக, உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இவர்கள் நபியாக இருப்பது என்பது, வேறெந்த நபிக்கும் கிடைக்காத சிறப்பு!!

அதோடு சேர்த்து தமக்கு அல்லாஹ் முத்திரை இட்டு விட்டான் என்று , அதை ஆறாவது சிறப்பாக கூறுகிறார்கள்.

இந்த முத்திரைக்கு கூட, context புரியாததால், சிலர் ""சிறப்பு"" என்று அர்த்தம் கொடுப்பார்கள். அது, எந்த அளவிற்கு தவறான அர்த்தம் என்பதை இந்த ஹதீஸை படிக்கும் எவருக்கும் புரிய முடியும்.

அல்லாஹ் என்னை சிறப்பாக்கி உள்ளான், அதுவே எனது சிறப்பு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அது பொருளற்றதாகி விடுகிறது.

அல்லாஹ் என்ன இறுதி நபியாக்கி விட்டான், அதுவே எனது சிறப்பு என்று கூறுவது மிகவும் பொருத்தமாகி விடுகின்றது.
தவிர, ஐந்தாம் சிறப்புடன் இதை ஒப்பிட்டு பார்த்தாலும் , இறுதி நபித்துவத்தை தான் சிறப்பு என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாக விளங்கும் .


அடுத்து, புஹாரி 3249

(ஹதீஸின் கருத்து)

இஸ்ரவேல் சமுதாயத்தினரை பொறுத்தவரை, அவர்களிடையே தோன்றிய ஒரு நபி இறந்து விட்டால், உடனே வேறொரு நபி வந்து, அந்த இடத்தை நிரப்பி விடுவார், ஆனால், எனக்கு பின் வேறு நபி இல்லை, நான் தான் இறுதியாக இருக்கிறேன்.. சில கலிபாக்கள் மட்டும் வருவார்கள்!!


இவ்வளவு தெளிவான வாசகங்களை கொண்டு நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கும் போது, இதற்க்கெல்லாம் எந்த பதிலையும் சொல்லாமல், எவனோ ஒரு பொய்யன் எழுதிய ஒரு புளுகு மூட்டையை வேதம் என்றும் அவனை நபி என்றும் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறது இந்த சமூகம்.

மிர்சா குலாம், எதை வேதம் என்று சொன்னானோ , அது எந்த அளவிற்கு பொய்களையும் புளுகுகளையும் கொண்டிருக்கிறது என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் நம்மால் தர முடியும் !

மேலே உள்ள மிக தெளிவான குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்கு பதில் சொல்லாமல் வேறெந்த விளக்கமும் இவர்களது கொள்கையை நிறுவாது!!


வஸ்ஸலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக